மதுரை முற்றுகை -ஆர்.வெங்கடேஷ்

800

மதுரையைத் தலைநகராகக் கொண்டு புகழ், வலிமையுடன் திகழ்ந்த பாண்டியப் பேரரசு உச்சம் பெற்றிருந்த காலத்தை மையப்படுத்தி விறுவிறுப்பான வீரஞ்செறிந்த வரலாற்றுப் புதினமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு ஆசைநாயகி மூலம் பிறந்த வீரா, பட்டத்து இளவரசி மூலம் பிறந்த சுந்தரன் என இரண்டு வாரிசுகளுக்கும் இடையே அரியணையைக் கைப்பற்றுவதில் ஏற்படும் போட்டி ஒருபுறம். மதுரையை வென்று, கோயில்களை அழித்து, பாண்டியப் பேரரசில் குவிந்துகிடக்கும் செல்வங்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தில்லியிலிருந்து பெரும்படையுடன் வரும் அலாவுதீன் கில்ஜியின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியான மாலிக் காபூர் மறுபுறம் என இரண்டு கதைக் களங்களும் தனித்தனியே விவரிக்கப்படுகின்றன

Page: 712

Add to Wishlist
Add to Wishlist

Description

மதுரையைத் தலைநகராகக் கொண்டு புகழ், வலிமையுடன் திகழ்ந்த பாண்டியப் பேரரசு உச்சம் பெற்றிருந்த காலத்தை மையப்படுத்தி விறுவிறுப்பான வீரஞ்செறிந்த வரலாற்றுப் புதினமாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு ஆசைநாயகி மூலம் பிறந்த வீரா, பட்டத்து இளவரசி மூலம் பிறந்த சுந்தரன் என இரண்டு வாரிசுகளுக்கும் இடையே அரியணையைக் கைப்பற்றுவதில் ஏற்படும் போட்டி ஒருபுறம். மதுரையை வென்று, கோயில்களை அழித்து, பாண்டியப் பேரரசில் குவிந்துகிடக்கும் செல்வங்களைக் கைப்பற்றும் நோக்கத்துடன் தில்லியிலிருந்து பெரும்படையுடன் வரும் அலாவுதீன் கில்ஜியின் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியான மாலிக் காபூர் மறுபுறம் என இரண்டு கதைக் களங்களும் தனித்தனியே விவரிக்கப்படுகின்றன. இவ்விரு கதைக் களங்களும் ஒன்றையொன்று சந்திக்கும் பகுதியும், அதன் பிறகான நிகழ்வுகளும் உலுக்கியெடுக்கும் உச்சகட்ட சாகச அனுபவங்கள் நிறைந்ததாக இருக்கின்றன. மாலிக்காபூரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சம்பவங்கள் காதல், சோகம், வீரம் ஆகியவற்றின் கலவையாக மிகச் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. பாண்டியப் பேரரசு, விக்கிரமனின் புரட்சி, சுல்தான் அலாவுதீன் கில்ஜி, மாலிக் காபூரின் இறுதி நிமிடங்கள், மங்கோலியப் படையெடுப்பு, ஹொய்சாளர்கள், இலங்கையை மையப்படுத்திய போர் நிகழ்வுகள் உள்ளிட்ட பகுதிகள் நாவலின் விறுவிறுப்புக்கு துணை நிற்கின்றன.

Additional information

Weight0.25 kg