“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு
தொடுகடல் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர்……”
என்ற காரிகிழார் பாட்டின் வழி அறிய முடியும், நம் தமிழ்நாட்டு மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னன் இமயவரம்பன் என்ற ஒருவன் முடிசூடி அரசாண்டவன் . இமயம் வரை சென்று தன் கொடியை நாட்டிய தால்தான் இப்பெயர் பெற்றான். இமயவரம்பன் பாண்டியர் காலத்துக்கு முற்பட்டவன் .
பூதத்துவ நூலின்படி இமயமலை கடலிலிருந்து வெளிவந்து 5 கோடி ஆண்டுகள் ஆகிறது. இமயமலை தோன்றுவதற்கு முன் விந்திய மலைத் திபேத்து இரண்டுக்கும் இடையில் கடல் இருந்தது. விந்திய மலை தொடங்கி குமரி சமுத்திரம் வரை ஒரே நாடாக இருந்தது. இப்பகுதி தமிழகம் என தமிழர்கள் பெயர் வைத்திருந்தனர் .
தமிழர், ஆரியர் (காக்கேசியர்கள்), அவுணர் (மங்கோலியர்கள்), நிருதர (ஆப்பிரிக்கர்கள்), அரக்கர்கள் (அமெரிக்கர்கள்) என்பர் . இப்படி இருந்த மனிதர்கள் அவர்கள் இருந்த இடத்தில் தங்களின் தொழில் அடிப்படையில் 18 வகுப்பினராக பிரிந்தார்கள். அதில் சேரர் , சோழர் , பாண்டியர் , ஒளியர் எனவும் பலவகையும் . தொழில் அடிப்படையில் நாவிதன், குயவன், வண்ணன், ஒச்சன் என பலவகையும் உண்டாகி வாழ்ந்து வந்தார்கள்.
நாம் அறிந்த வகையில் சேரர், சோழர், பாண்டியர், ஒளியர் போன்றவர்கள் முடிசூடி தமிழ்நாட்டை மட்டும் அல்லாது இமயம் வரை சென்று ஆண்டனர். இவ்வகையில் இவர்கள் வில், புலி, மீன், எருது போன்ற கொடிகளை தங்கள் அடையாள சின்னமாக மாற்றினர் . இமய மலை ,விந்திய மலை இடையில் இருந்த கடல் வற்றி நிலமானது அப்போது மனிதர்கள் தங்களின் இருப்பிடமாகக் அதனை மாற்றிக் கொண்டனர். சிந்து நாடு, கசமார் நாடு,கங்கை நாடு, இயம நாடு, பூதர் நாடு எனப் பிரித்து மக்கள் வாழத் தொடங்கினர். பல ஆண்டுகள் கழித்து சேரமன்னன் இமயம் வரை இடைப்பட்ட நாட்டை வென்று தனது வில் கொடியை நாட்டினான் . இமயத்தில் சேர நாட்டவர்களைக் குடி புகுத்தினான். வானர்கள் எனப்பட்ட சீனர்களை நேப்பாளத்தில் வென்று வில் கொடியை நாட்டியதியால் வானவரம்பன் எனப்பட்டான்.
இவன் கி.மு 30,000-ல் தென் மதுரையை அரசாண்ட நிலந்தரு திருவிற் பாண்டியன் காலத்துக்கும் முற்பட்டவன் என அறியமுடிகிறது. இமயமலையை வென்றால் இமயவரம்பன் என்ற பட்டமும் வானவர் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சீனர்களை வென்றதால் வானவரம்பன் என்ற பட்டமும் பெற்றான். நீவார் என்னும் பிரிவு உடைய நேபாளத்தார் சேரர்களின் பழக்க வழக்கங்களைக் காண்பது மூலம் அறியலாம் என்கிறார் டாக்டர் புக்கான்ன் ஆமில்டன் மற்றும் கர்னல் கர்க்பார்ட்டிரிக்.
சேர நாட்டார் இமயமலையில் குடியேறியதால் சோழர்கள்,பாண்டியர்கள், மாறி மாறி இமயம் வரை சென்று அரசாண்டனர். போகப்போக காந்தர்வ நாடும் காமரூப நாடும் தமிழர் ஆட்சிக்கு உட்பட்டது. இதனைத் தான் காரிக்கிழார் “பனிபடு நெடுவரை வடக்கும்” என்று தமிழ்நாட்டுக்கு வட எல்லை இமய மலை என்றும் பாடியுள்ளார் . ஆரியர்களின் இருக்கு என்ற வேதத்தில் கி.மு 9000 ஆரியர் வருகைக்கு முன்னரே தமிழர்கள் வடநாடுகளில் முழுவதும் பரவினர் என்று பாதிரி ஹீராஸ் என்பவர். “இந்திய சரித்திரக் காங்கிரஸ்”- 10வது கூட்டத்தில் வட நாடுகளில் உள்ள தமிழ் குடிகள் என்ற தலைப்பில் கிபி1947-ல் பம்பாயில் பேசியுள்ளார்.
முதன் முதலான இமயவரம்பன் :
இருக்கு வேதத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் குடிகளாகிய பறவர, மீனவர், பானியர், அணிலர், சிவையர், கோழியர், நாகர், வானர்ர், வில்லர், கருடர் முதலிய எல்லோரையும் தாசர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்விருக்கு வேதத்திலேயே தாசர்கள் எல்லாம் இரும்புக் கதவுகள், கருங்கல் ,செங்கல் ,கொண்டு கட்டப்பட்ட மதில் சுவர்கள் கோட்டைகள் சுகாதாரத்துடன் அமைக்கப்பட்ட நகரங்கள் எனவும் , உயர் மாடங்கள் 100 அரண்மனைகள் எனவும் பலவாறு சிறப்புடனும் இருந்தார்கள் . அது மட்டுமல்லாது அவர்களின் பெண்கள் நல்ல ஆடை ஆபரணங்கள் பாலில் தலை குளித்தல் என்று கூறப்படுகிறது. இந்த ஆரியர் வருகை வரும் முன்னரே தமிழர்கள் அந்த வடநாட்டில் நல்ல ஆட்சியும் வளர்ச்சியும் கொண்டு உள்ளனர். மூவேந்தர்கள் மாறி மாறி அரசாண்டாலும் இந்த குடிகளுக்கும் முதன்முதலாக அரசனானவன். இமயவரம்பன் வானவரம்பன் என்ற ஒரு சேரானே ஆவான்.
பல தொழில்நுட்ப வளர்ச்சிகள் இல்லாத காலத்துக்கு முன்னரே மனிதர்கள் நல்ல நாகரிகம், கலை நுட்பம் போன்றவற்றில் பெரிதும் கைதேர்ந்து உள்ளனர் என்பது சேரர்களின் வழி அறியமுடிகிறது. தன் நாடு மட்டுமல்லாது ஒரு சேர மன்னன் இமயம் வரை சென்று தனது கொடியை நாட்டியது தமிழ் மரபுக்குச் சிறப்பு சேர்ப்பதாகும்.