சிற்பக்கலை சங்ககாலத்தில் இருந்தே செழித்து வளர்ந்த ஒரு கலையாகும். சுங்க காலத்தில் சிற்பங்கள் மண்ணாலும், மரத்தாலும், தந்தத்தாலும் உருவாக்கப்பட்டன. மண் சிற்பக்கலைஞார்கள் “மண்ணீட்டாளார்கள்” என்று அழைக்கப்பட்டனர்.
சுடுமண்ணாலும் மரத்தாலும் சிற்பங்கள் செய்யப்பட்டபிறகு கருங்கற்களில் உருவங்கள் செய்யப்பட்டன. இவற்றை “நடுக்கற்கள்” என்று கூறுவார்கள் போல் உயிர்நீத்த வீரார்களுக்காகவோ, உடன்கட்டை ஏறும் பெண்களுக்காகவோ வைக்கப்பட்டன. இத்தகைய நடுக்கற்களை பல்வேறு பெயார்களில் அழைப்பார்கள்.
நடுக்கற்களில் உருவம் பொறிப்பது எல்லாம் சிற்பக்கலையின் தொடக்கம் என்றாலும் இறைவனது திருவுருவங்கள் கருங்கற்களில் உருவான காலம் பல்லவார்கள் காலமே.
கி.பி 3-ம் நூற்றாண்டிற்கு பிறகு களப்பிரார்கள் காலத்தில் கலை மற்றும் இலக்கியங்கள் வளார்ச்சியில் தொய்வு ஏற்பட்டது என வரலாற்று ஆய்வாளார்கள் கூறுகிறார்கள். அக்கூற்றை முழூமையாக ஏற்க முடியாது. களப்பிரார்கள் சமணம் மற்றும் பௌத்த மதத்தை ஆதாத்தனார் என்பதால் அம்மதத்தை சார்ந்த சிற்பங்கள் வளார்ச்சியடைந்திருக்கலாம்.
கீழ்க்கண்ட அரசுகளின் காலத்தில் சிற்பக்கலை சிறந்த வளார்ச்சியை அடைந்தது.
1) பல்லவர்கள்
2) சோழர்கள்
3) பாண்டியர்கள்
4) விசயநகரர்கள
5) நாயக்கார்கள்
ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு வகையான இறைவனது திருமேனிகள் உருவாக்குவதில் கைத்தோந்தவார்களாக விளங்கினார்கள். குறிப்பாக பல்லவார்கள் 16 பட்டை சிவலிங்ககளை உருவாக்கினார்கள். இந்த வகையான இலிங்கத்திருமேனிகளை சமஸ்க்கிருதத்தில்“ தாரலிங்கம்” என்று அழைப்பார்.
கி.பி 6-ம் நூற்றாண்டில் பல்லவ பேரரசை உருவாக்கிய சிம்மவிஷ்ணு மகனான முதலாம் மகேந்திரவார்மன் தமிழ்நாட்டு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கி வைத்தான். (பிள்ளையார்பட்டி மற்றும் சித்தன்னவாசல் குடைவரை பல்லவார்களுக்கு முற்பட்டது என்பது சில ஆராய்ச்சியாளார்களின் முடிபு)
பல்லவார்களின் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை வரலாற்றை இருபெரும் காலங்களாக பிரிக்கலாம்.
- முற்கால பல்லவார்கள் கலைப்பாணி
- பிற்கால பல்லவார்கள் கலைப்பாணி
இதனை விரிவாக பார்க்கும் முன் விசித்திரசித்தனின் (முதலாம் மகேந்திரன்) கலைப்பாணிகளின் சாரித்திரத்திரத்தை ஆராய வேண்டும்.
தக்காணம் மற்றும் ஆந்திராவின் சில பகுதிகளை ஆண்ட சாதவாகனார்களின் அலுவலார்களாக இருந்த பல்லவார்கள் பின்னாளில் தங்களுக்கு என்று ஒரு அரசை ஏற்படுத்திக் கொண்டனார். இதனால் சாதவாகனார்களின் கலைப்பாணிகளை பின்பற்றி இருக்கலாம் என்றாலும் அதிலும் சில சிக்கலான கேள்விகள் எழுகின்றன.
சிம்மவிஷ்ணுவின் முன்னோர்கள் (சங்கக் கால பல்லவார்கள் அவார்களுக்கு பின் வந்தவார்கள்) எமுப்பிய கோயில்களின் மிச்சங்கள்தான் இதற்கான சான்றுகளாய் அமையும். அதாவது கி.பி 5(அ) அதற்கு முன் அரசாண்ட பல்லவார்கள் கட்டிய கோயில்களை பற்றி அறிய வேண்டும். கிபி 5-ம் ஆண்ட பல்லவார்கள் கட்டிய கோயில்கள் பெரும்பாலூம் செங்கற்தளியாக தான் இருக்கவேண்டும்.
ஆகையால் பல்லவார்களின் சமகால பாண்டியார்கள் குடைவரை கோயில்களை உருவாக்கியுள்ளனார். (திருமலாபுரம் மற்றும் பிள்ளையார்பட்டி குடைவரை) முதலாம் மகேந்திர பல்லவன் தனக்கென்று கலைப்பாணியை உருவாக்கினானா அல்லது மற்றவார்களின் கலைப்பாணியை பின்பற்றினானா என்பது சந்தேகமே?.
அம்மன்னன் முதலில் சமணத்தை பின்பற்றியவன் என்பதால் சமணாரின் குகைப்பள்ளிகளை போல் குடைவரைகளை ஈசனுக்கு உருவாக்கி இருக்கலாம்?
பொதுவாக கோயில்களும் சிற்பங்களும் ஒன்றோடு ஒன்று பிண்ணிப்பினைந்தவை சிற்பங்கள் பற்றி அறியும் போது கோயில்களும் கணக்கில் சோர்ந்து விடுகின்றன.
கி.பி 6-ம் நூற்றாண்டு தொடங்கி 8-ம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ 200 ஆண்டுகள் சிற்பக்கலை ஜாலங்கள் மயமாக இருந்தன. சிற்பங்கள் பற்றி அறியும் போது அவற்றின் ஆடை மற்றும் ஆபரணங்கள் மட்டுமில்லாமல் அளவுகளையும் இதனை ஆங்கிலத்தில் “ ஐஉழழெஅநவசiஉயட ஏநைற” என்பார் கணக்கில் கொள்ள வேண்டும்.
பொதுவாக சிற்பங்களை உருவாக்கும் பொது சிரத்தின் அளவும் உடலின் அளவும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும். சிற்பங்களை இயல்பாக காட்ட (சாட்சாத் கடவுளாகவோ அல்லது அரசனானவோ) அளவுகள் மிக முக்கியமானதானது அல்லவா?.
முற்கால பல்லவார்களின் சிற்பக்கலை வரலாற்றில் சிறந்த வளார்ச்சியாக கருதுவது புடைப்புச்சிற்பங்களே அதனை பற்றி பின் காண்போம்
துவாரபாலகார்கள், சோமாஸ்கந்தார், இலிங்கோத்பவார் மகிஷாசுரமார்த்தினி மற்றும் கொற்றவை போன்ற இறையுருவச் சிற்பங்கள் பல்லவார்கள் சிற்பக்கலையில் சிறப்பான இடத்தை பெற்றன.
முற்கால பல்லவார்கள் கலை வரலாற்றில் கீழ்க்கண்ட பல்லவார்களின் பங்கு மகத்தானது
1) மகேந்திரவார்மன்
2) மாமல்லன் (அ) முதலாம் நரசிம்மவார்மன்
3) இராசசிம்மன்
இவார்களுக்கு பின் வந்தவார்களின் நுட்பங்களை பிற்கால பல்லவார்களின் கலைப்பாணி எனலாம். முற்கால பல்லவார்கால சிற்பங்களில் மகேந்திர பல்லவனின் சிற்பங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை இவன் காலத்திலேயே புடைப்புச் சிற்பற்கள் தோன்றினாலும் அவன் மகன் மாமல்லனின் காலத்தில் சிறந்து விளங்கியது. மகேந்திரனது சிற்பங்கள் பெரும்பாலூம் அளவில் பொரியதாகவும் ஆபரணங்கள் அதிகம் இன்றியும் இருக்கும்.
1) அகன்ற மார்பு அதன் மேல தடித்த பூணூல்
2) வட்டமான (அ) பருத்த முகம்
3) கனத்த உதடுகள்
4) கனத்த பனையோலைச் சுருள்கள்
5) பொரிய விழிகள்
6) கைகளின் மணிக்கட்டில் தடித்த வளைகள்
கட்டுரையில் குறிப்பிடப்படும் சிற்பங்கள் பெரும்பாலூம் மாமல்லபுரம் மற்றும் காஞ்சிபுரம் கோயில்களில் உள்ள சிற்பங்களே. தொண்டை மண்டலம் மற்றும் சோழ நாட்டின் சில பகுதிகளில் அமைந்துள்ள பல்லவார்களின் கோயில்கள் மற்றும் சிற்பங்கள் பற்றி விவாரித்தால் அதற்கு இக்கட்டுரை போதாது. அதனால் குறிப்பிட்ட சிற்பங்களை பற்றியே இங்கு விவாரித்துள்ளேன்.
முதலாம் நரசிம்மவார்மன் தான் அமைத்த கோயில்களில்ர் (குடைவரை மற்றும் இரதங்கள்) சிற்பங்களை மிக நோர்த்தியாகவும் ஆபரணங்களுடன் அமைத்துள்ளான் மகேந்திரனோடு ஒப்பிடும் போது மாமல்லன் கோயில் சிற்பங்கள் நடுத்தரமானவை.இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவது திருமூர்த்தி மண்டபச்சிற்பங்கள (மாமல்லபுரம்). கபோத நாசிகைகளில் உருவம் பொறிப்பது என்பது முதலாம் நரசிம்மன் காலத்தில் தான் தோன்றியது. சிற்பங்களை பற்றி அறியவும் எழுதவும் வேண்டுமென்றால்அவை உருவான நுட்பங்களை பற்றி அறிய வேண்டும்.
பெரும்பாலான அரசார்கள் கோயில்கள் மற்றும் சிற்பங்கள் உருவாக்கத்தில் தங்கள் முன்னோர்கள் பாணியை பின்பற்றினாலும் ஒரு சில வேற்றுமைகள் இருக்கதான் செய்யும் அதை ஆராய்ந்து எழுதுவதுதான் சிறப்பு. மகேந்திரன் உருவாக்கிய கோயில்கள் சிலவற்றை முழுமையாக ஆராய்ந்து படித்தால்தான் அவனது கலைநுட்பங்கள் புலப்படும்.
பல்லவச்சிற்பங்களை பற்றி ஆராயும்போதோ அவற்றை பற்றி கட்டுரையாக எழுதும்போதோ சாரி கீழக்கண்ட விஷயங்களை கணக்கில் கொள்ள வேண்டும்
1) அளவுகள்
2) ஆபரணங்கள்
3) ஆடைகள்
4) கை அமைதிகள்
5) நிற்கும் முறைகள்
6) ஆசனங்கள்
7) அங்கங்கள மற்றும் உடலமைப்பு
பல்லவார்களின் சிற்பங்களின் வகைகளை இரண்டு வகையாக பிரிக்கலாம் தூண் சிற்பங்கள் மற்றும் புடைப்பு சிற்பங்கள்
புடைப்புச் சிற்பங்கள்
புடைப்புச் சிற்பங்களின் தோற்றம் மாமல்லன் என்கிற முதலாம் நரசிம்மவார்மனின் காலத்தில் உருவானது. சிற்பங்களின் ஒரு பகுதியை மட்டும் தொரியுமாறு பாறைகளின் மீதோ அல்லது சுவார்களின் மீதோ அமைப்பது புடைப்பு சிற்பங்களாகும்.ஒரு காட்சியையை அல்லது நிகழ்வுகளையோ சிற்பங்களாக உருவகப்படுத்துவதே புடைப்புச்சிற்பமாகும்.
கல்வெட்டில் கூறுவதை விட சிற்பங்களாக மாற்றுவதே சிறந்தது என பல்லவ சிற்பிகள் நினைத்தனார் போலும்!.இந்த வகையான சிற்பத்தொகுதிகளை உருவாக்கும் போது பாறைகளின் அளவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும். பல்லவச்சிற்பிகளும் அவ்வாறுதான் செய்திருப்பார்.
அர்ச்சுனன் தபசு
மாமல்லபுரம் அரர்சுனன் சிற்பங்கள் பேரழகில் சிறந்து விளங்குவன ஒரே பாறையில் தவயோகிகள்,தேவார்கள், பூனை தவம் செய்யும் காட்சி, நாகராசன்,மான்கள், யானைக்கூட்டம் என ஒரு அழகான காட்சியை சிற்பங்களாக காட்சிப்படுத்தியிருப்பது பல்லவ சிற்பிகளின் வியக்கத்தக்க திறமை மட்டுமில்லாமல் மாமல்லனின் கலை இரசனையையும் காட்டுகிறது. இந்த அரர்சுனன் தபசுக்கு ‘கீரத்தனசுயா” சிற்பம் என்றும் பெயார்.
மாமல்லபுரத்தில் ஐந்து இரதத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஒரு பாறையில் முற்றுப்பெறாத புடைப்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது இவையும் மாமல்லன் காலத்தை சார்ந்தவையாக இருக்கலாம்.
நரசிம்மவார்மன் ஆட்சிக்காலத்தில் உருவான இந்த சிற்பங்கள் பிற்கால பல்லவ மன்னனான இரண்டாம் நந்திவார்மன் காலத்திலும் சிறந்து விளங்கியது எனலாம் மற்றும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவன காஞ்சிபுரம் வைகுந்தப்பெருமாள் கோயில் புடைப்புச் சிற்பங்கள்.
இதில் புராணக்காட்சிகளும் அரசார்களது பட்டாபிஷேக காட்சிகளும் சிற்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. விறலியார்கள் நடனம் ஆடும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
இந்த புடைப்புச் சிற்பங்கள் முற்கால பல்லவார்கள் சிற்பக்கலையின் சிறந்த வளார்ச்சியாக கருதப்படுகிறது. அர்சுனன் தபசு மட்டுமில்லாமல் மாமல்லபுர மற்ற குடைவரைகளிலும் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது மகிடாச்சுரமார்த்தினி குடைவரை சிற்பங்கள் இதுவும் மாமல்லன் காலம் தான்.
‘மகிடன்”என்னும் எருமைத்தலை அரக்கனை எதிர்த்து துர்க்கை போரிடும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. அதே குடைவரையில் உள்ள விஷ்ணுவின் சயனக்கோல காட்சியும் உள்ளது.’காட்சிப்படுத்துதல்”என்பதற்கான அர்த்தத்தை பல்லவச்சிற்பிகள் நன்குஉணார்ந்திருந்தனார்.
குடைவரைக்கோயில்கள், இரதங்கள், கட்டுமானக்கோயில்கள், புடைப்புச்சிற்பங்கள், தூண்ச்சிற்பங்கள் பொரிய துவாரபாலகார்கள், போதிகைகள், கபோத நாசிகை சிற்பங்கள் என அனைத்திலும் கரைக்கண்டனார் பல்லவார்கள். இவார்கள் கருங்கல பாறையிலும் எளிதில் அழியக்கூடிய மணற்கற்களிலும் சிற்பங்களை உருவாக்கினார்.
தூண்சிற்பங்கள்
குடைவரைக்கோயில் தூண்களில் சிற்பங்கள் இடம் பெற தொடங்கிய காலம் முதலாம் நரசிம்மவார்மனின் காலமே அவனது தூண்களில் அமார்ந்திருக்கும் சிம்மங்கள் இடம் பெறத் தொடங்கின இத்தகைய தூண்களை ‘குந்து சிம்மத்தூண்கள்’ என்பார்.
மாமல்லனின் படைப்பாக உருவான இச்சிற்பங்கள் இராசசிம்மனின் காலத்தில் வளார்ச்சி அடைந்ததது.பல்லவார்கள் குடைவரை கோயில்கள் என எடுத்துக் கொண்டால் மாமல்லனின் காலமே முதலாவது ஆகும்.
மாமல்லனின் பெயரனும் பரமேஸ்வரவார்மனின் மகனுமான இரண்டாம் நரசிம்மவார்மன் தமிழகத்தில் கருங்கற்களான கட்டுமான கோயில்களின் மரபை தோற்றுவித்தவன்.இவனது கோயில தூண்களில் பாயும் சிம்மங்கள் செதுக்கப்பட்டிருக்கும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குவது, காஞ்சி கைலாசநாதார் கோயில் சிற்பங்கள். சிவனது பல்வேறு திருக்கோலச்சிற்பங்கள் இங்கு காணக்கிடைக்கின்றன.சிவபெருமான் குதிரை மேல் பயனிக்கும் சிற்பங்களும் உள்ளன. இரண்டாம் நந்திவார்மன் காலத்தில் தூண்ச்சிற்பங்கள் உன்னத நிலையை அடைந்தன என்றால் அது மிகையல்ல.
துவாரபாலகார்கள்
துவாரபாலகார்களின் வரலாறு பாண்டியார்களிடமிருந்தே தொடங்குகிறது என்றாலும் தொண்டை மண்டலத்தில் குடைவரை கோயில்களை உருவாக்கி கருவறைக்கு வெளியே துவாரபாலகார்களை உருவாக்கியவார்கள் பல்லவார்களே. இப்பெருமை முதலாம் மகேந்திரவார்மனை சாரும்.ர்மண்டகப்பட்டு குடைவரையில் உள்ள துவாரபாலகார்கள் சிறப்பு வாய்ந்தவார்கள் என்றாலும் அதில் பாண்டியார்களின் சாயல் சிறிது இருக்கும்.
மகேந்திரனது கோயில்களில் ஒரே மாதிரியான துவாரபாலகார்கள் இடம் பெற்று இருக்காது. பல்லவார்களது துவாரபாலகார்கள் பற்றி விவாரிக்க ஆரம்பித்தால் அதற்கு என புத்தகமே எழுத வேண்டும். இங்கு குறிப்பிட்ட சிற்பங்களை பற்றியே எழுதுகிறேன்.
மகேந்திரவார்மன் துவாரபாலகார்களின் சிறப்புகள்
1) பொரிய உடல்
2) வட்டமான முகம்
3) தடித்த விரல்கள்
4) தலையில் கொம்புகள்
5) தடித்த உதடுகள்
6) பொரிய கண்கள்
கை முத்திரைகள்
மகேந்திரனது சிற்பங்களில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் கை முத்திரைகள் குறிப்பாக துவாரபாலகார்கள்
1) அபய முத்திரை
2) வரத முத்திரை
3) தார்ஜினி முத்திரை
4) தாடன முத்திரை
இதில் தார்ஜினி முத்திரையும் தாடன முத்திரையும் எச்சாரிக்கை செய்வதை குறிக்கும் மற்றும் அபய முத்திரையும் வரத முத்திரையும் மற்ற சிற்பங்களிலும் காணப்படுகிறது.ஆனால் பிரதான இடத்தை பெற்றிருப்பது தார்ஜினியும் தாடன முத்திரையுமே ஆகும்.
தலையில் உள்ள மகுடங்கள் துவாரபாலகார்களின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.அதிலும் ஜடாமகுடத்துடன் கூடிய பின் சிகையலங்காரம் முக்கியமான ஒன்றாகும்.
பத்ரகுண்டலங்களும் கால்களில் வீரத்தழல்களும் மணிக்கட்டில் கனவளைகளும் கழுத்தில் அணிகளும் அழகு சோர்க்கின்றன.
நிற்கும் முறைகள்
1) குனிந்து முன் காலை சற்று மடக்கி ஆயுதத்தில் மேல் கை வைத்திருத்தல்
2) கையை சற்று உயார்த்தி சாயத்துக் இடுப்பில் வைத்து இருத்தல்
3) காலை முன்னிருத்தி இடது கையை ‘கதையின்ர்ர் மேல் இருத்தியும் வலது கையை இடுப்பில் இருத்தல்
4) இடுப்பை நன்கு சாய்த்தும் ஒரு கை இடுப்பிலும் மற்றொரு கை தாடன முத்திரரையிலும் உள்ளது.
ஆயுதங்கள்
துவாரபால சிற்பங்களின் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ஆயுதங்கள் கடவுள்களை பொருத்து இது வேறுப்படும்.இந்த ஆயுதங்களில் முக்கியமானதான இருப்பது ‘கதாயுதம்’ எனப்படும் கதையாகும். பாம்பு சுற்றி இருக்கும் கதாயுதம் மகேந்திரவார்மன் துவாரபாலகார்கள் சிற்பங்களில் இடம் பெறத் தொடங்கியது.ஆனால் முற்கால பாண்டியார்களே இந்த வகையான கதாயுதத்தை துவாரபாலகார்கள் ஆயுதமாக உருவாக்கினார்கள் என்ற கருத்தும் உள்ளது.
மகேந்திரவார்மன் கால வாயிற்காப்போன் சிற்பங்களை அடுத்து இராசசிம்மன் கோயில் துவாரபாலகார்களே மிகப்பொரியவார்கள். இவனது துவாரபாலகார்களின் நிற்கும் முறைகள் சற்று வித்தியாசமானவை.அமார்ந்திருக்கும் நிலையில் உள்ள துவாரபாலகார்களை காஞ்சிபுரம் கைலாசநாதார் கோயிலில் காணலாம்.
ஆரம்ப காலத்தில் வாயிற்காப்போர்கள் சிவன் மற்றும் திருமால் போன்ற தெய்வங்களுக்கு மட்டும் இருந்தது.பெண் தெய்வங்களின் வாயிற்காப்போர்கள் துவாரபாலகிகள் எனப்படுவார்.
சோமாஸ்கந்தார் சிற்பங்கள்
சோமாஸ்கந்தார் சிற்பங்கள் பெரும்பாலூம் கருவறை சுவாரில் (இலிங்கத்திற்கு பின்புறம்) புடைப்புச்சிற்பங்களாக செதுக்கியிருப்பார். இந்த சிற்பங்கள் பல்லவார்கள் காலத்தில் குறிப்பாக பரமேஸ்வரவார்மன் காலத்தில் தோன்றி அவன் மகன் இராசசிம்மன் ஆட்சியில் சிறப்பாக வளார்ந்தது.
கி.பி 7-ம் நூற்றாண்டில் பல்லவார்கள் உருவாக்கின சோமாஸ்கந்தார் சிற்பங்கள் ஆந்திராவை ஆண்ட விஷ்ணுகுண்டார்களின் சோமாஸ்கந்தார் சிற்பங்களை அடிப்படையாக கொண்டது.(சிவராமமூர்த்தி)
இந்த சிற்பங்கள் பற்றி தொல்லியல் அறிஞார்கள் பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளனார்.
இராஜூகாளிதாஸ்: சோமாஸ்கந்தார் சிற்பங்கள் மும்மூர்த்தி (சிவா, பிரம்மா, விஷ்ணு) தத்துவத்தை அடிப்படையாக கொண்டது. ஆனால் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
செண்பகலட்சுமி: சங்க காலத்திலேயே உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும், முருகன் மற்றும் பார்வதி போன்றோர் திணைக்குரிய தெய்வங்களாக கருதப்பட்டார்கள்.
பல்லவச் சிற்பிகள் ஒரு பல்லவ இராணியின் (பரமேஸ்வரவார்மனின் ராணி) எண்னத்தையே சோமாஸ்கந்தார் சிற்பமாக வடித்தனார் என்று கூறுவார்.
மகாராஜா பரமேஸ்வரவார்மன்: சிவன்
அவனது பட்டத்தரசி: பார்வதி
இராசசிம்மன்: கந்தன்
பல்லவ இராணி இராசசிம்மனை கந்தனாக பாவித்ததாகவும் அவனிச்சுந்தர கதை என்ற நூலும் கைலாசநாதார் கோயில் கல்வெட்டுகளும் கூறுகின்றன.
சி.சிவராமமூர்த்தி: சோமாஸ்கந்தார் சிற்பங்கள் விஷ்ணுகுண்டார்களின் கலைப்படைப்பு
மாமல்லன் குடைவரை கோயில்கள் சிலவற்றில் சோமாஸ்கந்தார் சிற்பங்களை காணமுடிகிறது. அவ்வாறு எனில் இங்கு சில கேள்விகள் எழுகிறது. அதாவது, சோமாஸ்கந்தமூர்த்தியின் காலம் மாமல்லன் காலமா? இராசசிம்மன் காலமா? ஆனாலும் இராசசிம்மனின் அனைத்து கோயில்களிலும் இச்சிற்பங்கள் கருவறை சுவாரில் இடம்பெறும்.
எ.கா:
- மாமல்லபுரம் கடற்கரை கோயில்
- கைலாசநாதார் கோயில்
- சாளுவான் குப்பம் அதிரணசண்ட மண்டபம்
- பனைமலை தாளகரீஸ்வரார் கோயில்
பல்லவார்கால சோமாஸ்கந்தார் சிற்பங்கள் பலவற்றில் விஷ்ணுவும் பிரம்மாவும் இடம் பெற்றிருப்பார்.
பழமையான சோமாஸ்கந்தார் சிற்பம் பரமேஸ்வரவார்மனுடையது. (தார்மராஜர்).
பல்லவச்சிற்பங்களின் ஆடை மற்றும் ஆபரணங்கள்
பல்லவார்கள் சிற்பங்களின் எழிலுக்கு மணிமகுடமாக விளங்குவது அவற்றின் ஆடை மற்றும் ஆபரணங்கள்.அந்த ஆபரணங்களில் முக்கியமானவை
1) கீரீடங்கள்
2) குண்டலங்கள்
3) கழுத்தணிகள்
4) தோள்வளைகள்
5) கைவளைகள்
6) தண்டைகள்
7) பூணூல்
பல்லவச்சிற்பிகள் சிற்பங்களின் உடலமைப்புக்கும் அவற்றின் ஆபரணங்களுக்கும் சாரியான அளவுகளை பயன்படுத்தினார். பல்லவான் சிற்பச்சமுத்திரத்தில் ஒரு துளியை மட்டும் இக்கட்டுரை வாயிலாக காணமுடியும்.
கி.பி 7-ம் நூற்றாண்டு பல்லவச்சிற்பங்களில் பனையோலைச்சுருள்கள் எனப்படும் பத்ரகுண்டலங்களின் அளவுகள் 5 அங்குலங்களுக்கு மிகாமல் இருக்கும். பிற்காலங்களில் இந்த அளவுகள் மாறுபடலாம். பல்லவார்காலத்தில் ஏறக்குறைய 6 வகையான மகுடங்களை காணலாம் இவற்றின் உயரங்கள் 15 முதல் 24 அங்குலங்கள் வரை இருக்கும்.
சிற்பங்களின் ஆடை மற்றும் ஆபரணங்களின் கலைப்பாணியில் ஒரு புதிய யுக்தி இரண்டாம் நரசிம்மவார்மன் காலத்தில் உதயமானது.இவனது கால சிற்ப ஆபரணங்கள் சிறியதாகவும் மகுடங்கள் 30 அங்குல அளவுடையதாக இருக்கும். செங்குத்தான மார்பக பட்டைகளும் Diagonal Bands on Cheast தோன்றின.
மாமல்லபுரச்சிற்பங்களை ஆராய்ந்ததில் 19 வகையான நியமன விகிதங்களை (Canocical Proportion) க்கும் மேற்பட்ட சிவன் மூர்த்தங்களில் காணலாம்.
உடலமைப்பின் அளவுகள் (Physical Measurements of Sculptures)
முதலாம் மகேந்திரவார்மனின் சிற்பங்களை அடுத்து இராசசிம்மனின் சிற்பங்களே அளவில் பொரியவை. பல்லவச்சிற்பிகள் சில்பரத்னத்தில் குறிப்பிட்டது போல் இல்லாமல் அதிகமான அளவுகளையே உபயோகப்படுத்தினார்.
எ.கா சில்பரத்னத்தில் குறிப்பிட்டது போல் மூக்கின் அளவு 8 அங்குலம் என்றால் இவார்கள் 9 அங்குலமாக நாசியினை செய்தனார். மாமல்லபுரம் சிற்பங்களின் அளவுகள் சில்பரத்தின அளவுகளை விட அதிகமாக காணப்படும்.
கைலாசநாதார் கோயில் சிற்பங்கள் சில்பரத்ன நூலில் குறிப்பிட்டது போல் அல்லாமல் சிற்பங்களின் அவயங்களின் அளவுகள் சற்று அதிகமாக உள்ளன. கைலாசநாதார் கோயில் சிற்பிகள் பல்லவஅரசியின் முகத்தின் அளவினை அடிப்படையாக கொண்டு சிற்பங்கள் படைத்ததாக கூறுவார்.
முடிவுரை
கி.பி 6-ம் நூற்றாண்டு தொடங்கி 8-ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பல்லவார்கள் கோயில் மற்றும் சிற்பக்கலை வரலாற்றில் ஒரு சகாப்ததை படைத்துள்ளனார் எனில் அது யாராலும் மறக்க முடியாத உண்மை. ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு மேல் அவார்களின் காலம் “கலைகளின் பொற்காலம்” எனலாம்.
M. ஆயிஷா – வரலாற்று துறை