Description
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை செய்ய இமய மலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்து பிறகு, வேத நெறிப்படி கண்ணகிக்கு ஆலயம் எழுப்பி பிரதிஷ்டை செய்வித்தான் என்பதைச் சிலப்பதிகாரம் குறித்த அத்தியாயத்தில் காணலாம்.
சிலப்பதிகாரம் ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்பாக எழுந்தது என்பதை இந்த நூலில் தெரிவித்திருக்கிறேன். தமிழகத்துத் திருக்கோயில்களில் விக்கிரக பிரதிஷ்டை வேத நெறிப்படி 1800 ஆண்டுகளுக்கு முன்பாகவே நடந்தது என்ற செய்தி இங்கே உறுதி ஆகிறது.
இந்த நூலில் தொல்காப்பியம் ஆரம்பித்து, சங்கக் கால, இடைக்கால், பிற்கால தமிழ் இலக்கியங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வம் என்ற நான்கு வேதங்களை ஏற்றுப் போற்றுவதை எடுத்துக்காட்டுகளை மட்டுமின்றி, அவற்றை வழங்கியவர்களது சுருக்கமான வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.




























