கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நமது வரலாற்றுக் காலத்தைக் காட்டும் கண்ணாடிகள். கல்வெட்டுகள் பெரும்பாலும் நிலக்கொடைகளையும் தானங்களையும் கோவில் திருப்பணிகளையும் குறிப்பிடுவதாக இருந்தாலும், அவற்றில் அக்காலச் சமுதாயம், பொருளாதாரம், நீதி முறைகள், அரசர்களின் வம்சாவளி, அவர்கள் மேற்கொண்ட போர்கள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களும் காணப்படுகின்றன. இவை, அக்காலத்தைப் பற்றிய ஒரு சுவையான சித்திரத்தை அளிக்கின்றன. சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களுடைய ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளில் இருந்தும் செப்பேடுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. மேன்மேலும் தமிழ் வரலாற்றை ஆராய வரலாற்று ஆர்வலர்களுக்கு இந்நூல் ஒரு தொடக்கமாக இருக்கும். எஸ். கிருஷ்ணன் – கணினித் துறையில் பணிபுரியும் கிருஷ்ணன் வரலாற்று ஆர்வலர். கல்வெட்டு ஆராய்ச்சியிலும் தமிழ் எழுத்துரு ஆராய்ச்சியிலும் ஆர்வமுள்ளவர். தமிழகத்தைப் பற்றிய வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார், ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்திருக்கிறார். நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் இணையத்திலும் தமிழக, தென்னிந்திய வரலாறு பற்றித் தொடர்ந்து எழுதிவருகிறார்.
சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் – எஸ்.கிருஷ்ணன்
₹170
கல்வெட்டுகளும் செப்பேடுகளும் நமது வரலாற்றுக் காலத்தைக் காட்டும் கண்ணாடிகள். கல்வெட்டுகள் பெரும்பாலும் நிலக்கொடைகளையும் தானங்களையும் கோவில் திருப்பணிகளையும் குறிப்பிடுவதாக இருந்தாலும், அவற்றில் அக்காலச் சமுதாயம், பொருளாதாரம், நீதி முறைகள், அரசர்களின் வம்சாவளி, அவர்கள் மேற்கொண்ட போர்கள் ஆகியவற்றைப் பற்றிய விவரங்களும் காணப்படுகின்றன. இவை, அக்காலத்தைப் பற்றிய ஒரு சுவையான சித்திரத்தை அளிக்கின்றன. சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களுடைய ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளில் இருந்தும் செப்பேடுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன.
Extra Features
- புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
- தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
- Worldwide Shipping
- புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Weight | 0.25 kg |
---|