ஒரு திராவிடப் புதிர்’ – நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபணு வரலாறு – இராம. பிச்சப்பன்

600

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆராய்ச்சித் தகவல், மதுரை அருகே ஜோதி மாணிக்கம் என்ற கிராமத்தில் வசிக்கும் விருமாண்டி என்பவர், 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து கடற்கரை வழியே வந்து இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வழித்தோன்றல் என்பது. இந்தக் கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவரான ஓய்வுபெற்ற உயிரியல் துறை பேராசிரியரான இராம. பிச்சப்பன் எழுதியுள்ள நூல் இது. செட்டிநாட்டில் நகரத்தார் சமூகத்தில் பிறந்த 174 பேரின் டி.என்.ஏ. மாதிரிகளை எடுத்துக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நகரத்தார் மரபணு வரலாற்று ஆய்வு, இவர்கள் எவ்வாறு தனிச் சமூகமாகப் பரிணமித்திருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

page no :304

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆராய்ச்சித் தகவல், மதுரை அருகே ஜோதி மாணிக்கம் என்ற கிராமத்தில் வசிக்கும் விருமாண்டி என்பவர், 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து கடற்கரை வழியே வந்து இந்தியாவில் குடியேறிய முதல் மனிதனின் வழித்தோன்றல் என்பது. இந்தக் கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவரான ஓய்வுபெற்ற உயிரியல் துறை பேராசிரியரான இராம. பிச்சப்பன் எழுதியுள்ள நூல் இது. செட்டிநாட்டில் நகரத்தார் சமூகத்தில் பிறந்த 174 பேரின் டி.என்.ஏ. மாதிரிகளை எடுத்துக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நகரத்தார் மரபணு வரலாற்று ஆய்வு, இவர்கள் எவ்வாறு தனிச் சமூகமாகப் பரிணமித்திருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. செட்டி நாட்டு மக்கள் வசிக்கும் ஊர்களைக் கொண்டு பரவலைப் பற்றி விவாதிக்கும் ஆசிரியர், பெருவாரியான ஊர்களில் பிள்ளையார்பட்டி நகரத்தார் குடும்பங்களின் விரிவாக்கம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். நகரத்தார் மக்களில் எல்1ஏ மரபணு பெரும்பான்மையாக இருக்க, இவர்கள் அனைவரும் ஒரு தந்தை பிள்ளை வாரிசுகள் எனக் கொள்ள வேண்டும்; என்றால் இவர்கள் அனைவரும் எவ்வாறு வெவ்வேறு கிளைகளாகப் பரிணமித்தனர் என்பது கேள்விக்குறி எனக் குறிப்பிட்டுத் தொடர்ந்து ஆராய்கிறார் ஆசிரியர். நூல் நெடுகிலும் தரப்படுகிற ஆய்வுத் தகவல்கள் யாவும் உள்ளபடியே ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்திவிட முடியாத புதிராகத்தான் திராவிடத்தைக் காட்டுகிறது. 50 ஆண்டுகால அறிவியல் பயணத்தில் தாம் அறிந்தவற்றை அனைவரும் அறியத் தருவதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர். மனிதனின் தோற்றம், மக்கள்தொகைப் பரவல் போன்ற அதிக கவனம் குவிக்கப் பெறாத, ஆனால், சமூக அறிவியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை நூல் சிறப்பாக விவாதிக்கிறது. தமிழில் வெளிவந்துள்ள ஆழ்ந்து கற்க வேண்டிய நூல்.

Additional information

Weight0.25 kg