Description
பத்து ஆய்வுக் கட்டுரைகளை உள்ளடக்கிய இந்நூல் சங்க இலக்கியங்களை வாசிக்கின்றபோது ஏற்படும் அற்புத அனுபவங்களின் புரிதல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தின் கருத்துகளைப் பன்முக நோக்கில் திறனாய்வு செய்கிற பொழுது பழந்தமிழ் இலக்கியமான சங்கப் பனுவல்களில் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை மிகுதியாகக் காணமுடிகிறது. அவற்றை நவீன வாசிப்புக்கு உட்படுத்தி புதிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் வளர்த்தெடுக்க முடியும் என்பதை இக்கட்டுரைகளில் காணலாம்.






























