முன்னாள் வலையல் வியாபாரிகளான லம்பாடியர்
சிந்துசமவெளியையும் தமிழகத்தையும் இணைத்த ஓர் குழு. தமிழகத்தின் வட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலைகளின் அடிவாரங்களில் வாழும் லம்பாடியர் எனும் மலையின மக்கள் 30 குடிகள், 15 குடிகள் என வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் தளி, பென்னாகரம் ஆகிய இடங்களிலும், பெரியார் மாவட்டத்தில் நாயக்கர் தண்டா, (போமியா தண்டா) தேவலாந்தண்டா, புதுத்தண்டா, புருவந்தண்டா…