Description
கண்முன்னே எத்தனையோ வன்மங்கள் நிகழ்கின்றன. கண்ணவிந்துதான் வாழ்ந்து வருகிறோம். காலங்காலமாய் ஆட்டம் போடும் அதிகாரத் தத்துப்பிள்ளைகளின் கொட்டம் அடங்கவில்லை. இந்த நொடியில் கூட அதிகாரத்திலுள்ள யாரோ ஒருவன் கையூட்டு பெறலாம்.. ஒரு பாலியல் வன்கொடுமை நிகழலாம். ஓர் ஆணவக்கொலை அரங்கேறலாம். பாதகம் செய்பவரைக் கண்டால்..எனக் கற்பித்தவாறே பாதுகாப்பான இடம் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம்