இருண்ட காலமா?

350

கடந்த இருபதாண்டுகளில் வெளிப்பட்டுள்ள கல்வெட்டு, அகழாய்வுச் சான்றுகளும் இலக்கியம், கல்வெட்டுகள், செப்பேடுகள் சார்ந்த நுண்ணாய்வுகளும் இருண்டகாலப் பார்வையில் 250 – 550க்கு இடைப்பட்ட காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிய உதவும் சான்றுகளை இனங்காண்பதே இருண்டகாலம் புத்தகம்.

Add to Wishlist
Add to Wishlist

Description

பொதுக்காலம் 250வரை சங்க காலமாக வரையறுக்கப்பட்ட நிலையில் அதில் தொடங்கி, முதல் மகேந்திரவர்மப் பல்லவரின் பாட்டனார் நான்காம் சிம்மவர்மரின் ஆட்சிக்காலமான பொ.கா 550 வரையிலான 300 ஆண்டுக் காலத்தை வரலாற்றாசிரியர்கள் பலர் இருண்டகாலமெனத் திரையிட்டு மூடியமைக்கு அக்கால கட்டத்தே போதுமான சான்றுகளும் பல்துறைப் புலமையோடு சான்றுகளை ஒருங்கிணைக்கும் பார்வையும் இல்லாமையே காரணம் எனலாம்.

கடந்த இருபதாண்டுகளில் வெளிப்பட்டுள்ள கல்வெட்டு, அகழாய்வுச் சான்றுகளும் இலக்கியம், கல்வெட்டுகள், செப்பேடுகள் சார்ந்த நுண்ணாய்வுகளும் இருண்டகாலப் பார்வையில் 250 – 550க்கு இடைப்பட்ட காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிய உதவும் சான்றுகளை இனங்காண்பதே இருண்டகாலம் புத்தகம்.

Additional information

Weight0.5 kg