செங்குந்தர் வரலாற்று ஆவணங்கள் – புலவர் செ. இராசு

Guaranteed Safe Checkout
Extra Features
  • புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
  • தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 978606 8908
  • Worldwide Shipping
  • புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அதற்கான பணம் உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

பழங்கால வரலாற்றைத்‌ தொகுக்க உதவும்‌ பல சானறுகளில்‌ கல்வெட்டுகள்‌ மிக முக்கியமானவை, கல்லில்‌ வெட்டப்பட்ட எழுத்துக்களைக்‌ கல்வெட்டுகள்‌ என்று கூறுகிறோம்‌. கல்லில்‌ எழுத்துக்களைப்‌ பொறித்தால்‌ அவை அழியாமல்‌ நிலைத்து நிற்கும்‌ என்பதை முன்னோர்‌ கண்டனர்‌.

“நல்லார்‌ ஒருவர்க்குச்‌ செய்த உபதேசம்‌

கல்மேல்‌ எழுத்துப்போல்‌ காணுமே”

“இளமையில்‌ கல்வி சிலையில்‌ எழுத்து” என்ற தொடர்கள்‌ இதனை விளக்கும்‌.

கல்வெட்டுகள்‌ பெரும்பாலும்‌ கோயிலுக்குக்‌ கொடுத்த கொடைச்‌ செய்திகளைக்‌ கூறுகின்றன. அக்கொடைகள்‌ இவ்வுலகப்‌ புகழுக்கும்‌, மறு உலகப்‌ புண்ணியத்திற்கும்‌ கொடுக்கப்பட்டவை. ஆனால்‌ அவைகள்தாம்‌ நம்முடைய பண்டை வரலாற்றைக்‌ கூறும்‌ ஆதாரங்களாகத்‌ திகழுகின்றன.

இக்கல்வெட்டுகளை ஆதாரமாக வைத்து அரச மரபின்‌ வரலாறுகள்‌ சில எழுதப்பட்டுள்ளன. ஆனால்‌ சமுதாய வரலாறு எதுவும்‌ முறையாக இன்னும்‌ எழுதப்‌ பெறவில்லை. சமுதாய வரலாறு எழுதப்படும்‌ பொழுதுதான்‌ ஒரு நாட்டின்‌ வரலாறு முழுமையடையும்‌, அவ்வகையில்‌ செங்குந்தர்‌ சமுதாயத்தின்‌ வரலாற்றைத்‌ தொகுக்க உதவும்‌ கல்வெட்டுகளும்‌, செப்பேடுகளும்‌ இங்கு தொகுத்து ஒரு தொகுப்பாக அளிக்கப்படுகின்றன. தமிழகம்‌ முழுவதும்‌ பரவியுள்ள ஒரு சில தொன்மையான சமூகங்களில்‌ செங்குந்தர்‌ சமூகம்‌ முதலிடம்‌ பெறுகிறது. கடந்த 1100 வருடங்களுக்கு முன்னே பிற்காலச்‌ சோழ, பாண்டியப்‌ பேரரசுகள்‌ எழுச்சி பெறும்போது அதற்கு முதற்காரணமாக விளங்கிய போரப்படைகளில்‌ பெரும்பங்காற்றியது செங்குந்தர்‌ சமூகம்‌, நாயன்மார்கள்‌, ஆழ்வார்கள்‌ முயற்சிகளின்‌ காரணமாக பக்தி இயக்கம்‌ பெருகிக்‌ கோயில்கள்‌ உருவாகி வளர்ந்த போது அதைக்‌ கட்டிக்‌ காத்த சமூகம்‌ செங்குந்தர்‌ சமூகம்‌. உழவுக்கு அடுத்தபடியாகப்‌ பெரும்‌ அளவில்‌ நடந்த நெசவுத்‌ தொழிலில்‌ ஈடுபட்டு, மக்கள்‌ மானம்‌ காக்க உடை அளித்ததுடன்‌ தறிக்கடமை, தறிஆயம்‌, தறிக்காணம்‌, தறிக்காசு, நூல்‌ஆயம்‌ முதலிய பல்வேறு வரிகள்‌ மூலம்‌ அரசின்‌ செல்வ வளத்திற்கும்‌ காரணமாக இருந்தது செங்குந்தர்‌ சமுதாயம்‌. இவற்றை இந்த ஆவணங்கள்‌ மூலம்‌ அறிகின்றோம்‌.

ஏறக்குறைய 50 ஆண்டுகள்‌ கடந்த என்‌ கல்வெட்டுப்‌ பயணத்தில்‌ நான்‌ முயன்று படித்த முதல்‌ கல்வெட்டே செங்குந்தர்‌ சமூகக்‌ கல்வெட்டுத்தான்‌. 1953-1955 ஆம்‌ ஆண்டுகளில்‌ ஈரோடு செங்குந்தர்‌ உயர்நிலைப்பள்ளியில்‌ படித்த நான்‌ 1959-1963 ஆண்டுகளில்‌ அங்கு தமிழா சிரியராகவும்‌ பணிபுரிந்தேன்‌.

அப்போது அப்பள்ளியின்‌ மதிப்பியல்‌ தலைமையாசிரியராகப்‌ பணியாற்றிய இருமொழிச்‌ சொற்கொண்டல்‌ ஐயா திரு.எஸ்‌.மீனாட்சி சுந்தரனார்‌ அவர்கள்‌, தாம்‌ ஆசிரியப்பயிற்சி பெறுமுன்‌ ஈரோடு வ.உ.சி. பூங்காவில்‌ மேற்பார்வையாளராகப்‌ பணிபுரிந்ததாகவும்‌, அங்குள்ள பாறையில்‌ ஒரு கல்வெட்டு இருந்ததாகவும்‌ போய்ப்‌ பார்த்து விபரம்‌ கூறுக என்று கூறினார்கள்‌, அன்று மாலையே சென்று பார்த்தேன்‌.

“௨ விப வருஷம்‌ கார்த்திகை மாதம்‌ புண்ணிய காலத்தில்‌

சந்திரமதி முதலியார்‌ மடத்திற்கு விட்ட புன்செய்‌ நிலம்‌ இதுக்கு

அகிதம்‌ செய்தார்‌ கங்கைக்கரையில்‌ காராம்பசுவைக்‌

கொண்ண தோஷத்திலே போவாராகவும்‌”

என எழுதப்பட்டிருந்தது. ஐயா அவர்கள்‌ மிகவும்‌ மகிழ்ந்து அதை நாளிதழ்களுக்குச்‌ செய்தியாகவும்‌ அறிவித்துவிட்டார்கள்‌. இரண்டு நாள்‌ கழித்து,

“கங்கைக்‌ கரையில்‌ காராம்‌ பசுவைக்‌ கொன்ற பாவம்‌!

ஈரோடு கல்வெட்டில்‌ சாபம்‌”

என்ற தலைப்பில்‌ இதழில்‌ செய்தி வெளியானது. செங்குந்தர்‌ உயர்நிலைப்பள்ளித்‌ தமிழாசிரியர்‌ வித்துவான்‌ செ.இராசு அதை ஆய்வு செய்ததாகவும்‌ எழுதியிருந்தது. நான்‌ அன்று அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இன்று கல்வெட்டு ஆய்வாளராக அறியப்பட்டு அத்துறையில்‌ ஓரளவு தடம்‌ பதித்துள்ள எனக்கு அந்த நிகழ்ச்சியே தொடக்கமாகவும்‌, தூண்டுகோலாகவும்‌ அமைந்தது என்பதை நான பல சந்தர்ப்பங்களில்‌ கூறியுள்ளேன்‌.

பின்‌ என்‌ கல்வெட்டுப்‌ பயணம்‌ தொடர்ந்தபோது கிடைத்த கல்வெட்டுகளில்‌ செங்குந்தர்‌ சமுதாயம்‌ பற்றிய கல்வெட்டுகளைத்‌ தனித்‌ தொகுப்பாக வைத்துக்‌ கொண்டேன்‌. நான்‌ செங்குந்தர்‌ உயர்நிலைப்பள்ளியில்‌ பணியாற்றியபோது ஈரோடு கோட்டை திருத்தொண்டீசுவரர்‌ திருக்கோயில்‌ திருப்பணி நடைபெற்றுக்‌ குடமுழுக்கு விழா 1961ஆம்‌ ஆண்டு மிகச்‌ சிறப்பாக நடை.பெற்றது.

1961ஆம்‌ ஆண்டு திருப்பணியை முன்னின்று நடத்திய பெருமக்களில்‌ ஒருவராகிய திரு.வி.அர்த்தனாரி முதலியார்‌ அவர்கள்‌ அக்கோயில்‌ கல்வெட்டுகளைப்‌ படித்து விளக்கம்‌ கூறுமாறு என்னிடம்‌ கேட்டுக்‌ கொண்டார்கள்‌.

ஒரு கோயில்‌ கல்வெட்டுகளை முழுமையாக ஆய்வு செய்த முதல்‌ நிகழ்ச்சியும்‌ அதுதான்‌. அது எனக்கு ஒரு பயிற்சிக்களமாக அமைந்தது. 1976 ஆம்‌ ஆண்டு ஈரோடு செங்குந்தர்‌ உயர்நிலைப்பள்ளியில்‌ “தென்னிந்திய செங்குந்தர்‌ சமூக கைத்தறி, மாதர்‌ மாநில மாநாடு” நடைபெற்றது. அம்மாநாட்டு மலரில்‌ நாமக்கல்‌ மாவட்டம்‌, இராசிபுரம்‌ வட்டம்‌, பழந்தின்னிப்பட்டிக்‌ கிராமத்தில்‌ அலைவாய்கிரிமலைச்‌ சாரலில்‌ உள்ள செங்குந்தர்கட்குரிய குகையீசர்‌ மடத்தில்‌ நான்‌ படித்த செப்பேடு பற்றிக்‌ கட்டுரை ஒன்று எழுதினேன்‌. அத்துடன்‌ அப்பள்ளி விளையாட்டு மைதானத்தில்‌ அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில்‌ செங்குந்தர்‌ சமூகம்‌ தொடர்பான கல்வெட்டுச்‌ செய்திகள்‌, செப்பேட்டுச்‌ செய்திகள்‌ பலவற்றைக்‌ காட்‌ சிப்படுத்தியிருந்தேன்‌.

மாநாட்டிற்குச்‌ சிறப்பு அழைப்பாளராக வருகைபுரிந்த சென்னைப்‌ பல்கலைக்கழகத்‌ தமிழ்த்துறையின்‌ அப்போதைய தலைவர்‌ முனைவா சி. பாலசுப்பிரமணியம்‌ அவர்கள்‌ அதைப்‌ பார்வையிட்டு என்‌ முயற்சியைப்‌ பாராட்டி அக்குறிப்புக்கள்‌ அனைத்தையும்‌ பதிவு செய்து கொண்டார்கள்‌. தொடர்ந்து அம்முயற்சியில்‌ ஈடுபடுமாறும்‌ வேண்டிக்‌ கொண்டார்கள்‌, சந்திக்கும்‌ போது நினைவூட்டியும்‌ வந்தார்கள்‌.

மதுரையில்‌ தென்னிந்திய செங்குந்தர்‌ மகாசன சங்க 18ஆவது மாநில மாநாடு 1995 ஆம்‌ ஆண்டு நடைபெற்ற போது மலர்ப்பொறுப்பை ஏற்றிருந்த முனைவர்‌ அழகேசன்‌ அவர்கள்‌ வழியாக என்னிடம்‌ “கல்வெட்டில்‌ கைக்கோளர்‌” என்ற கட்டுரையைப்‌ பெற்று வெளியிடச்‌ செய்தவர்கள்‌ தலைவர்‌ ஜெ.சுத்தானந்தன்‌ அவர்கள்‌ ஆவார்கள்‌. பல சந்தர்ப்பங்களில்‌ இப்பணியைத்‌ தொடருமாறு வேண்டிக்‌ கொண்டார்கள்‌. சில நிகழ்ச்சிகளில்‌ அதுபற்றிய அறிவிப்பையும்‌ செய்தார்கள்‌.

தமிழகத்தின்‌ அனைத்து மாவட்டங்களிலிருந்தும்‌, பாண்டிச்சேரி, ஆந்திர மாநிலங்களிலுமிருந்து கிடைத்த 211 கல்வெட்டுகள்‌ இத்தொகுப்பில்‌ அடங்கியுள்ளன. முறைப்படி கள ஆய்வு செய்து தொகுத்தால்‌ இன்னும்‌ பல கல்வெட்டுகள்‌ கிடைக்கக்‌ கூடும்‌. இக்கல்வெட்டுகளில்‌ செங்குந்தர்‌ சமூகம்‌ பற்றிய பல அரிய வரலாற்றுச்‌ செய்திகள்‌ அடங்கியுள்ளன. அவற்றுள்‌ ஒரு சில இங்கு தொகுத்துக்‌ கொடுக்கப்பட்டுள்‌ளன.

வீரஞ்செறிந்த படையினர்‌

கி.பி. 10ஆம்‌ நூற்றாண்டுத்‌ தொடக்கம்‌ முதல்‌ தெரிஞ்ச

கைக்கோளப்படை, ஆமட்டம்‌ தெரிந்த கைக்கோளப்‌ படை, மூத்த சமக்கட்டான ஆமட்டம்‌ தெரிந்த கைக்கோளப்படை, இளைய சமக்கட்டான ஆமட்டம்‌ தெரிந்த கைக்கோளப்படை, கைக்கோளப்‌ பெரும்படை, குதிரைச்‌ சேவகர்‌, வில்லிகள்‌ போன்ற பல படைப்பிரிவில்‌ கைக்கோளர்கள்‌ குறிக்கப்‌ பெறுகின்றனர்‌. ஒரு பிரிவினர்‌ சேனைக்‌ கைக்கோளர்‌ என்றே

அழைக்கப்பட்டனர்‌.

தெரிஞ்ச கைக்கோளப்படை (தெரிந்த)

1. “அபிமான பூஷணத்‌ தெரிந்த கைக்கோளரில்‌ நம்பியாரூரன்‌ ராசாதித்தப்‌ பெருமாள்‌” (திருநெல்வேலி)

2. “அபிமான பூஷணத்‌ தெரிந்த கைக்கோளரில்‌ சோறன்‌ பெரியாண்டான்‌ சயசிங்கதேவன்‌” (திருநெல்வேலி)

3. “அபிமான பூஷணத்‌ தெரிந்த கைக்கோளரில்‌ கணபதி அழகனான களப்பாளன்‌” (திருநெல்வேலி)

4. “அபிமான பூஷணத்‌ தெரிந்த கைக்கோளரில்‌ மீனவன்‌ மாராயன”‘ (திருநெல்வேலி)

த, “அபிமான பூஷணத்‌ தெரிந்த கைக்கோளரில்‌ கேசவன்‌ ஆதித்தனான விசயராயர்‌” (தச்சனூர்‌, மதுரை மாவட்டம்‌)

6. “அருமொழி தேவத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ கற்றளி பட்டாலகன்‌” (திரிபுவனம்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌)

7. “ஆதித்தத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ அயனடி நெருப்படை” (திருவையாறு, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌)

8. “ஆதித்தத்‌ தெரிந்த கைக்கோளரில்‌ சங்கயன்‌ ஒற்றி” (திருவாவடுதுறை, நாகை மாவட்டம்‌)

9. “கண்டராதித்தத்‌ தெரிந்த கைக்கோளரில்‌ காரி நொளம்பன”

10. “கண்டராதித்தத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ பிச்சனான யெங்கு அரையன்‌” (கும்பகோணம்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌)

11. “கரிகாலசோழத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ காளி கற்றளி” (உடையார்குடி, கடலூர்‌ மாவட்டம்‌)

12. “கரிகாலசோழத்‌ தெரிந்த கைக்கோளரில்‌ அரையன்‌” (மயிலாடுது

நாகை மாவட்டம்‌)

13. “கோதண்டராமத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ தேசவலவன்‌ சூரியன்‌”

(உடையார்குடி, கடலூர்‌ மாவட்டம்‌)

“சமரகேசரித்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ கூத்தன்‌ நிகளங்கன்‌” (திருவிடைமருதூர்‌, தஞ்சை மாவட்டம்‌)

“சமரகேசரித்‌ தெரிந்த கைக்கோளரில்‌ மல்லன்‌ அரையன்‌” (திருவிடைமருதூர்‌, தஞ்சை மாவட்டம்‌)

“சிங்களாந்தகத்‌ தெரிந்த கைக்கோளரில்‌ முத்தி திருவீரணன்‌’ (கும்பகோணம்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌)

“சிங்களாந்தகத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ பலதேவன்‌ பனையன்‌” (உடையார்குடி, கடலூர்‌ மாவட்டம்‌)

“சுந்தரசோழத்‌ தெரிஞ்ச கைக்கோளப்படை” (சோமூர்‌, கரூர்‌ மாவட்டம்‌)

“தானதொங்கத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ அரையன்‌ கேயவிடங்கன்‌'” (உடையார்குடி, கடலூர்‌ மாவட்டம்‌)

“தானதொங்கத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ தேவன்‌ இராசாதித்தன்‌” (கும்பகோணம்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌) “தானதொங்கத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ புருஷோத்தமன்‌” (சோமூர்‌, கரூர்‌ மாவட்டம்‌)

பிராந்தகன்‌

“பராந்தகத்‌ தெரிஞ்ச கைக்கோளப்படை” (சோமூர்‌, கரூர்‌ மாவட்டம்‌) “பராந்தகத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ ஆச்சன்‌ பலதேவன்‌” (உடையார்குடி, கடலூர்‌ மாவட்டம்‌)

“மதுராந்தகத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ கோயில்‌ நிலாவஞ்சி” (திருச்சேலூர்‌, தஞ்சாவூர்‌ மாவட்டம்‌).

“பாண்டிகுலாசனித்‌ தெரிஞ்ச கைக்கோளப்படை” (சோமூர்‌, கரூர்‌ மாவட்டம்‌)

“பார்த்திபசேகரத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ அய்யன்‌ வேம்படியான” (திருவெண்காடு, நாகை மாவட்டம்‌)

“விக்கிரமசோழத்‌ தெரிந்த கைக்கோளரில்‌ (திருநெய்த்தானம்‌, தஞ்சை மாவட்டம்‌)

மல்லதாங்கி”

“வீரசோழத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ கடிகாவன்‌ கள்ளான்‌”

(கும்பகோணம்‌, தஞ்சை மாவட்டம்‌)

29. “வீரசோழத்‌ தெரிஞ்ச கைக்கோளரில்‌ குமரன்‌ தூதுவன்‌” (கும்பகோணம்‌, தஞ்சை மாவட்டம்‌)

30. “வீரசோழத்‌ தெரிந்த கைக்கோளப்படை” (சோமூர்‌, கரூர்‌ மாவட்டம்‌)

பிறபடைகள்‌

1. “ஆமட்டம்‌ தெரிந்த கைக்கோளப்படை நேரிய கங்கன்‌” (அன்னூர்‌,

கோவை மாவட்டம்‌)

2. “ஆமட்டம்‌ தெரிந்த கைக்கோளப்படை சேனாபதி தனபாலன்‌” (அன்னூர்‌, கோவை மாவட்டம்‌)

3. “ஆமட்டம்‌ தெரிந்த கைக்கோளப்படை ஆண்டான்‌” (அன்னூர்‌, கோவை மாவட்டம்‌)

“மூத்தசமக்கட்டான ஆமட்டம்‌ தெரிந்த கைக்கோளப்படை” – ்‌ உ, . ச . “இளைய சமக்கட்டான ஆமட்டம்‌ தெரிந்த கைக்கோளப்படை.”

“திருமடை விளாகத்துக்‌ குதிரைச்‌ சேவகரில்‌ பெருமாள்‌ போத்தன்‌”

க த்‌ ப று

“கைக்கோளர்‌ குதிரைப்படை வீரரில்‌ பெரியான்‌ ஆண்டான்‌ பிள்ளை” (களந்தை, கோவை மாவட்டம்‌)

“கைக்கோளப்‌ பெரும்படை” (திருவிடைமருதூர்‌)

9. “மூத்தவாள்‌ பெற்ற கைக்கோளர்‌ தேவடி வித்யாபரன்‌” (உடையார்‌ குடி, கடலூர்‌ மாவட்டம்‌)

10. “மூத்தவாள்‌ பெற்ற கைக்கோளரில்‌ அரையன்‌ வேங்கடவன்‌” (உடையார்குடி, கடலூர்‌ மாவட்டம்‌)

சிலா படைத்தலைவர்‌, சேனாபதிகள்‌ என அழைக்கப்பட்டுள் ளனர்‌. அகப்பரிவாரம்‌, வேளம்‌ முதலியவற்றின்‌ காவலையும்‌ மேற்கொண்டு ள்ளனர்‌. மூவகைப்படை என்ற குறிப்பும்‌ ஓரிடத்தில்‌ காணப்படுகி