பண்டைத் தமிழர் பண்பாடு | பக்தவத்சல பாரதி

420

Add to Wishlist
Add to Wishlist

Description

சங்க இலக்கியம் தமிழரின் தொன்மை, பெருமை, அடையாளம். இதைக் கீழடி நாகரிகம் பேசுகிறது. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறது அது.

இந்தத் தொன்மையிலிருந்து நாம் காணவேண்டிய கண்திறப்புகளைப் பற்றிப் பேசுகிறது இந்த நூல்.

சங்ககால மக்களின் வாழ்வியல் தனித்துவமானது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை யாவற்றிலும் அவர்கள் வாழ்ந்தார்கள்; ஐந்திணைகளிலும் பண்பாட்டை வளர்த்தார்கள்.

சங்க காலத்தில் சாதி இல்லை; ‘குடி’ இருந்தது. பெண்கள் விவசாயம் செய்தார்கள், தேன் வெட்டினார்கள், கள் வார்த்தார்கள். கொடிச்சி ‘பாதீடு’ செய்தாள். ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என்பது அக்கால உறவுமுறை: அம்மாவும் அப்பாவும் இல்லை. பழையோளை வணங்கினார்கள். இவை யாவற்றையும் இந்த நூலில் சமூக அறிவியலாக்கி இருக்கிறார் மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி.

இதைப் பண்டைத் தமிழரின் வாழிடங்கள், சமூக அமைப்பு, குடும்பம், திருமணம், உறவுமுறை, ஐந்திணைப் பொருளாதாரம், வழிபாடு, சமயம், சடங்குகள், கலைகள், உணவு, போர், வீரயுகம், பாணர், ஆரியமாதல் என வெவ்வேறு தலைப்புகளில் விவரிக்கிறார் நூலாசிரியர்.

மனித குலத்தின் வரலாறு சங்க இலக்கியத்தில் குவிந்து கிடக்கிறது. அதை இந்தப் புத்தகம் ஒரு புதிய தடத்தில் வெளிச்சமிடுகிறது; மானிடவியலாக உரக்கப் பேசுகிறது. தன் வகைமையில் இதுவே முதல் நூல்.

தமிழரின் அடையாளத்தை அறிவியலாக்கி இருப்பதே இந்த நூலின் சாதனை என்று கூறினால், அது மிகையல்ல. இதுவே இந்த நூலை நீங்கள் மட்டுமல்ல, உங்களுடைய நண்பரும் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

Additional information

Weight0.25 kg