இலக்கிய ஆய்வாளரான தொ.மு.சி.ரகுநாதன், தாகூர் நூற்றாண்டு சமயத்தில் எழுதிய இந்நூல் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. கங்கையைத் தாகூருக்கும், காவிரியைப் பாரதிக்கும் உவமையாக்கியுள்ள ரகுநாதன், இரு மகாகவிகளையும் அரசியல், பொருளாதாரம், மனிதநேயம், உலகம் குறித்த புரிந்துணர்வு ஆகிய அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்துள்ளார். செல்வந்தர் குடும்பத்தைச் சார்ந்த தாகூரும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த பாரதியும் அவரவர் சூழலுக்கேற்ப தனித்த ஆளுமைகளாகியிருப்பதை ஆதாரங்களுடன் நூலாசிரியர் நிறுவுகிறார். தாகூரையும், பாரதியையும் ஒரேசமயத்தில் அறிந்துகொள்ள உதவும் நூல்.