தலித் சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒரு எளிய மனிதனின் கால் நூற்றாண்டுகால வாழ்க்கைப்பாட்டை எவ்வித ஒப்பனையும் பாசாங்குகளும் இல்லாமல் விவரிக்கும் இப்படைப்பு தமிழின் ஆகச்சிறந்த நாவல்களில் ஒன்று.
சிலுவை எனும் தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை மட்டுமல்லாது அந்தந்த கால வரலாற்றை அரசியலை, பண்பாட்டுப் பழக்கவழக்கங்களை விரித்துரைக்கும் இந்நாவல் அவன் வாழ்வில் சந்திக்கும் ஏமாற்றம், புறக்கணிப்பு, அவமானம், தோல்வி, வெறுமையென பெரும்பகுதி, வாழ்தலின் நெருக்கடிகளையே பேசுகிறது.
அபூர்வமான இத்தன்வரலாற்றுப் படைப்பு நவீனத்தமிழிலக்கியப் பெருமிதங்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாகும்.