தமிழ்ப் பண்பாட்டில் பெளத்தம்

400

‘தமிழ்ப் பண்பாட்டில் பெளத்தம்’ என்ற தலைப்பிலேயே, சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.

Add to Wishlist
Add to Wishlist

Description

பெளத்தம் குறித்து அறிந்துகொள்ள நினைப்போருக்கும், ஆய்வில் ஈடுபடுவோருக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டி.

இந்தியாவில் வேர்விட்டு, உலகம் முழுவதும் அன்பையும் அஹிம்சையையும் போதிக்கும் வகையில் கிளைகளை பரப்பி பரந்து விரிந்துள்ளது பெளத்த மதம்.

தமிழ்ப் பண்பாட்டிலும் பெளத்தம் பெரியதோர் இடம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பெளத்தம் பரவுவதற்கு முக்கிய காரணம் தொன்மையும் பெருமையும் வாய்ந்த தமிழும், தமிழர்களுமே என்பதை நிரூபிக்கும் வகையிலான கட்டுரைகளைக் கொண்டுள்ளது இந்நூல்.

‘தமிழ்ப் பண்பாட்டில் பெளத்தம்’ என்ற தலைப்பிலேயே, சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.

இரட்டைக் காப்பியங்களில் – பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில்- ஆத்திசூடியில்- பிரபந்த இலக்கியங்களில் பெளத்தம், இந்துக்கலையின் முன்னோடி பெளத்தக் கலையே, பெளத்தம் – சமணம்- வள்ளுவம் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. அவற்றில் ஆறு ஆங்கிலக் கட்டுரைகளும் அடங்கும்.

அசோகர் காலம் தொடங்கி அயோத்திதாசர், கவிஞர் தமிழ்ஒளி உள்ளிட்டோரின் வழியாக இன்றுவரை தமிழகத்தில் பெளத்தம் எவ்வாறு நிலைகொண்டுள்ளது என்பது கட்டுரைகளின் வழியே வெளிப்படுகிறது.

பெளத்தம் குறித்து அறிந்துகொள்ள நினைப்போருக்கும், ஆய்வில் ஈடுபடுவோருக்கும் இந்நூல் சிறந்த வழிகாட்டி.

தமிழ்ப் பண்பாட்டில் பெளத்தம் (பன்மொழிக் கருத்தரங்க ஆய்வுக் கட்டுரைகள்) – (தொகுப்பு) முனைவர்கள் பிக்கு போதிபாலா, க. ஜெயபாலன், உபாசகர் இ. அன்பன்; பக். 389; ரூ. 400

Additional information

Weight0.5 kg