வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள் – பதிவுகள், குறிப்புகள், செய்திகள், மேற்கோள்கள்

370

Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

வரலாற்றுத் தரவுகளில் அகம்படியர்கள் – பதிவுகள், குறிப்புகள், செய்திகள், மேற்கோள்கள்

தொகுப்பு: இரா.உமாமகேஸ்வரி அரசு

 

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

1. அகம்படியர். அகமுடையார் பெயர் வடிவங்கள்.

2. அகம்படியர் விளக்கம்.

3. சேரநாட்டில் அகம்படியர்கள்.

4. இலங்கையில் அகம்படியர்கள்.

5. அகம்படியரில் காணப்படும் உட்பிரிவுகள் மற்றும் பட்டங்கள்.

6. அகம்படியரில் காணப்படும் அரசமரபினர்கள்.

7. போர் மரபும், வேளாண் (துளுவ/தொழுவ) பரிணாமமும்.

8. கல்வெட்டுகளில் அகம்படியர்கள்.

9. சாசனங்களில் அகம்படியர்கள்.

10. அகராதிகளில் அகம்படியர், அகமுடையார்.

11. பின்நாளைய வளர்ச்சிக்கான முந்தைய அடித்தளம்.

12. குலத்தெய்வங்கள்.

13. அகமுடையார் பழக்க வழக்கங்கள்.

14. சகோதரத்துவமும் சகவாழ்வும்.

15. கனத்ததோர்/கணத்ததோர் அகமுடையார்.

16. வலங்கை வகைப்பாடு.

17. அகம்படியர் தொடர்பான பாடல்கள்.

18. அகம்படியர் தொடர்பான குறிப்புகள்.

19. அகமுடையார், வரலாற்றில் அடைந்த வளர்ச்சி,

20. துணைநூல் பட்டியல்.

 

இந்திய தமிழக சூழலில் மானிடவியல், சமூகவியல், வரலாறு ஆகியவற்றில் இனம், இனம் தொடர்பான செயல்பாடுகள். இவற்றை எடுத்துரைத்து தமிழிலும், ஆங்கிலத்திலும் பல்வேறு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. சிலை எழுபது, ஏரெழுபது,ஈட்டி எழுபது என்று தொடங்கி பின்பு பல்வேறு சமூகங்களுக்கான நூல்கள் பலவாறு எழுதப்பெற்றுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில் எழுதப்பெற்ற மாவட்ட கெஜட்டியர்கள் (District Gazetteers) அந்தந்த மாவட்டங்களில் உள்ள குலங்களைப் பற்றிச் சிற்சிலக் குறிப்புகளைத் தந்துள்ளது. திரு. எட்கர் தர்ஸ்டன் அவர்களின் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் (Castes and tribes of southern india) न प ाल का அடங்கிய நூல் தென்னிந்தியா முழுவதுக்குமான பல்வேறு இனங்களைப்பற்றிய செய்திகளை விரிவுபடுத்தித் தருகிறது.

காலனிய சூழலில், குறைவான வசதிகளைக் கொண்டு மிகப்பெரிய இனஇயல் நூலாக எழுதப்பட்டுள்ள அந்நூல் பின்னர் எழுந்த மானிடவியல், இனவியல் தொடர்பான பல்வேறு நூல்களுக்கு ஆதாரமாக அமைந்தது. இந்தப் பின்னணியில் அகம்படியர் தொடர்பான ஆய்வு நூல்களும் குறிப்பிட்டச் செய்திகளைத் திரும்பக் கூறுவதாக அமைந்ததே தவிர விரிவானதாக ஏதும் அமைந்திடவில்லை.

அகம்படியர் அல்லது அகமுடையார். துளுவ வேளாளர் பற்றிய பல்வேறு அறிஞர்களின் நூல்களில் குறிப்புகளாகவும், மக்கள் தொகை கணக்கெடுப்புகளில் சிற்சில பதிவுகளாகவும், இதழ்களில் வெளிவந்த ஆய்வுக் கட்டுரைகளில் நேரடியான அல்லது மறைமுகமான செய்திகளாகவும், இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை. தென்னிந்தியக் கல்வெட்டுத்தொகுதிகள், எபிகிராபிகா இன்டிகா. புதுக்கோட்டைச் சமஸ்தான கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் வெளியீடுகள், கல்வெட்டு, ஆவணம் போன்ற இதழ்கள் ஆகியனவற்றில் இடம் பெற்றுள்ள பதிவுகளின் வழி அகம்படியர்களின் வரலாற்றினை முழுமையாகத் தொகுக்கும் அளவிற்குச் சான்றாதாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் அகம்படியர் அல்லது அகமுடையார் தொடர்பான வரலாறுகள் இதுவரை முழுமையாகத் தொகுப்பதற்கான எவ்வித முயற்சியும் நடைபெறவில்லை. அதற்கானதேவையும் அவர்களுக்கு ஏற்படவில்லை என்றே இதுநாள்வரை கருதி வந்தனர். ஆனால் சூழல் அப்படிப்பட்ட தேவைகளை உணர்த்தியுள்ளது.

தொண்டமானார் குருமூர்த்தி என்பவரால் எழுதப்பட்ட “அகம்படியர் மரபு விருத்தாந்தம்,மூவரசர் குல விளக்கம்” என்ற நூல் பற்றிய மேற்கோள் குறிப்புகள் சில நூல்களில் காணப்படுகிறது. ஆனால் அந்நூல் கிடைத்திடவில்லை. அதேபோல் துளுவ வேளாளர் பற்றிய நூல்களும் வந்துள்ளது. முனைவர் திருமதி ஆர்.பத்மினி அவர்களின் “துளுவவேளாளர் தோற்றம் மற்றும் வரலாறு” என்ற முனைவர் பட்ட ஆய்வேடும். செல்வி வெ.அ.நாகரத்தினம் அவர்களின் “கோவை மாவட்ட அகமுடையார் (தேவர்) குலமரபும் பண்பாடும்” என்ற முனைவர்பட்ட ஆய்வேடும் அண்மைக் காலங்களில் வெளிவந்தவையாகும் .

தேவர்முரசு ஆண்டியப்பத்தேவர் அவர்களின் “அகமுடையார் வரலாறு.” வழக்கறிஞர் திரு.புலமை வேங்கடாசலம் வன்னியர் எழுதிய “அகமுடையார் வரலாறு”. மறையூர் திரு.வீராச்சாமி அகமுடையார் எழுதிய “அகமரபும் ஆதிக்குடியும்” போன்ற நூல்கள் பாராட்டத்தக்க முன்முயற்சிகள் ஆகும் .

இதுமட்டுமல்லாமல், சில தனிநபர்களின் முன் முயற்சியால் பல்வேறு வரலாற்று நூல்கள் மற்றும் தரவுகள் சேகரித்தல். நவீன இணைய வசதிகளைப் பயன்படுத்துதல் போன்றவை முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வகையில் அகமுடையார் அரண் திரு.சோ.பாலமுருகன் குறிப்பிடத்தகுந்தவர். Arpi em (www.agamudayarotrumai.com) என்ற இணையதளம் பல்வேறு தொல்லியல் சான்றுகளை வெளியிட்டது.

வரலாறு. மானிடவியல், தொல்லியல், சமூகவியல் மற்றும் இலக்கியம் ஆகிய பிரிவுகளில் அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட அகம்படியர் தொடர்புடைய தரவுகள் இங்கு தொகுத்தளிக்கப்படுகிறது. இது அகமுடையார் தொடர்பான முழுமையான வரலாற்று நூல் அல்ல. அறிஞர்களின் முடிவுகளை வகைப்படுத்தி ஆய்வு நோக்கில் முறையான தகவல்களை மட்டும் தொகுத்து அளித்துள்ளேன்.

காலத்தால் பின்னோக்கிச் செல்லச்செல்ல ஏதோ ஓர் புள்ளியில் அல்லது மூலத்தில் பல்வேறு சமூகங்கள் ஒன்றுபடுகின்றன அல்லது எதிர்காலத்தை நோக்கிய பரிணாம வளர்ச்சியில் சமூக, பொருளாதார, வாழ்வியல் மற்றும் புவியியல் காரணிகளால் ஒன்றிலிருந்து மற்றொன்றாக சமூகங்கள் பிரிகின்றன என்ற மானிடவியல். சமூகவியல் கருத்தாக்கத்தை உள்வாங்கியே இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்நூலில் அகம்படியர் அல்லது அகமுடையார் இனத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட பெயர் வடிவங்கள் நடைமுறையில் உள்ளதை உரிய சான்றாதாரங்கள் கொண்டு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தொல்லியல் மற்றும் இலக்கிய அகராதிகள் தரும் பொருள் விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. அகம்படியர் என்பதற்கான விளக்கத்தை அறிஞர்களின் பார்வையின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது.

கேரளா மற்றும் இலங்கையில் உள்ள அகம்படியர் பற்றிய தரவுகள் எம்மாதிரியான முடிவுகளைத் தருகின்றது என்பதுடன், அகமுடையார்களிடம் காணப்படும் உட்பிரிவுகள், பட்டப்பெயர்கள் போன்றவற்றை, உரிய துணைநூல்கள் வழி சொல்லப்பட்டிருக்கிறது.

போர்மரபிலிருந்து வேளாண் தொழில் நோக்கிய சமூக நகர்வும், அகம்படிய போர்மரபுப் பின்னணியில் எழுந்த அரசுகள், அத்துடன் கல்வெட்டுகள். சாசனங்களில் நிலை கொண்டுள்ள அகம்படிய இன வரலாற்றுநாயகர்கள் ஆகியன சுருக்கமாக உரிய ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. குலத்தெய்வ வழிபாட்டு முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை பெரும்பகுதி வாய்மொழி ஆதாரங்களின் அடிப்படையிலேயே அளிக்கப்பட்டுள்ளது.

கனம் மற்றும் கணம் சார்ந்து கனத்ததோர் அகம்படியர் என்பதற்கான தோற்றுவாய்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வரலாற்றில் அகம்படியர்கள் ぴあ சமுதாயத்திரனரோடு கொண்டுள்ள இணக்கமான உறவையும், சக சமுதாயத்தினரால் அகமுடையார்கள் அடைந்த நலன்களும், சகோதரத்துவத்தின் அவசியமும் இறுதியில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பண்பாட்டு நிலையில் அகம்படியர்களின் பழக்க வழக்கங்கள். எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

சமூக வரலாறுகள் நூல்பிடித்தது போன்ற குறிப்பிட்ட எல்லைக்குள் எழுதிடமுடியாது. பூமிக்கு மேல் இலைகளோடும் கிளைகளோடும் இடைவெளியில் தெரியும் மரங்கள் பூமிக்கு கீழ் வேர்களோடு வேர்களாக பின்னியுள்ளது. அதுபோல்தான் மானிடம் சார்ந்த இனங்களின் வரலாறும்.

Weight0.500 kg