திருக்குறள் நெறி விளக்கக் கட்டுரைகள் -புலவர் ச.தியாகராசன்; முனைவர் தி. தாமரைச்செல்வி

200

திருக்குறள் குறித்த நூலாசிரியரின் பல்வேறு ஆய்வுகள், வானொலி உரைகள் அடங்கிய தொகுப்பு. திருக்குறள் பற்றி பிற நாட்டவர் தெரிவித்துள்ள கருத்துகள், திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள மொழிகள், மொழிபெயர்ப்பாளர்கள், திருக்குறள் தொடர்களைக் கையாண்டு எழுதப்பட்ட பிற நூல்கள், திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் என ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன

Add to Wishlist
Add to Wishlist
Guaranteed Safe Checkout
Extra Features
  • Book will be shipped in 3 - 7 days.
  • Secure Payments
  • To order over phone call 978606 8908
  • Worldwide Shipping
  • If the book is out of stock, you will be refunded.

திருக்குறள் குறித்த நூலாசிரியரின் பல்வேறு ஆய்வுகள், வானொலி உரைகள் அடங்கிய தொகுப்பு. திருக்குறள் பற்றி பிற நாட்டவர் தெரிவித்துள்ள கருத்துகள், திருக்குறள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள மொழிகள், மொழிபெயர்ப்பாளர்கள், திருக்குறள் தொடர்களைக் கையாண்டு எழுதப்பட்ட பிற நூல்கள், திருக்குறளுக்கு வழங்கும் வேறு பெயர்கள் என ஏராளமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ‘வள்ளுவரும் பாரதியும்’ என்ற கட்டுரையில், திருவள்ளுவர் வகுத்த வழியில் மகாகவி பாரதி நடைபோட்டதை பல்வேறு குறட்பாக்களையும், பாரதியின் பாடல்களையும் ஒப்பிட்டு நிரூபிக்கிறார் நூலாசிரியர். எடுத்துக்காட்டாக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்’ என்ற குறட்பா காட்டும் உண்மையை, ‘சாதிகள் இல்லையடி பாப்பா- குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்ற பாடலில் சொல்கிறார் பாரதி. தலையாயவை, அரிது, இனிது, செயல், விடல், அறம் என வள்ளுவர் கையாண்ட சொற்கள் இடம் பெற்ற திருக்குறள்களை தொகுத்துத் தந்திருப்பது ஆய்வுச் சுரங்கம். பெண்ணின் பெருமை பேசும் குறட்பாக்கள், திருக்குறள் அணிகள், திருக்குறள் நடைகள், திருவள்ளுவர் காட்டும் அறிவு என ஆழ்கடலில் ஆழ்ந்து முத்துகளை அள்ளித் தந்துள்ளார் நூலாசிரியர். வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிவகுத்துத் தந்துள்ளார் வள்ளுவர். அவற்றை, திருக்குறள் நெறி விளக்கக் கட்டுரைகள் பகுதியில் வள்ளுவர் வாழ்க்கை வழிகாட்டி, செய்ந்நன்றி, ஊழ் போன்ற தலைப்புகளில் நூலாசிரியர் விளக்கியிருப்பது சிறப்பு. மாணவர்களுக்கும், திருக்குறள் ஆய்வாளர்களுக்கும் இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.

Weight0.25 kg