தென்னிந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறானது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். துங்கபத்திரை – கிருஷ்ணாபேராறுகளுக்கு தெற்கில் உள்ள தென்னிந்திய பெரும்பகுதியில், நம் தென்னாட்டு கலாச்சாரமும், சமயங்களும், அரசியல் முறைகளும் அழிந்துவிடாமல் நிலைபெற்றிருக்க விஜயநகரப் பேரரசு தோன்றியதே காரணம் எனக்கூறலாம். கி.பி 1336 –ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட விஜயநகரம் 1565- ஆம் ஆண்டு வரை வளர்ந்து, ஹொய்சளர்கள், காகதீதியர்கள், சோழர்கள், பாண்டியர்கள் போன்ற அரச வம்சங்களால் ஆளப்பட்ட நிலப்பகுதியை, தன்னிடத்தே கொண்டு பெரும் புகழ் உடைய பேரரசாக விளங்கியது.
இப்பெரும் பேரரசை சங்கமர், சாளுவர், துளுவர், ஆரவீட்டு வம்சத்தினர் என்ற நான்கு அரச குலத்தவர்கள் சிறப்பு மிக்க வகையில் ஆட்சிபுரிந்து வந்தனர். சங்கம வம்சத்தை சேர்ந்த ஹரிஹரர், புக்கர் என்ற இரு சகோதரர்களும் மாதவ வித்யாரண்யர் என்ற சிருங்கேரி சங்கராச்சாரியாரின் உதவியோடு விஜய நகரம் என்ற பெரும் நகரை அமைத்தனர். பின்னர் சாளுவ வம்சத்தினரும், துளுவ வம்சத்தினரும் இப்பேரரசை பேணிக் காத்து வந்தனர்.
துளுவ வம்சத்து பேரரசர் கிருஷ்ணதேவராயர் உடைய ஆட்சியில் இப் பேரரசு மிக உன்னத நிலையை அடைந்திருந்தது. சதாசிவராயருடைய ஆட்சிக் காலத்தில் தக்காணத்து இஸ்லாமிய அரசர்கள் ஒன்று சேர்ந்து இப்பேரரசின் செயல் வீர்ரான இராமராயரை தலை கோட்டை எனுமிடத்தில் தோல்வியுறச்செய்து, விஜயநகரத்தை அழித்து அவள் முறைக்கு ஆளாக்கினர். ராமராயருக்கு பிறகு அவருடைய தம்பி திருமலைராயரும், அவருக்குப் பின் வந்தோரும், விஜய நகரத்தை விட்டு நீங்கி பெனுகொண்டா, திருப்பதி, சந்திரகிரி, வேலூர் போன்ற இடங்களை தங்களுடைய தலைநகராக அமைத்துக்கொண்டு தென்னிந்தியாவை ஆட்சி புரிந்தனர். இவ்வரசர்கள் ஆரவீட்டு வம்சத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களில் கடைசி மன்னர்களாகிய மூன்றாம் வேங்கடபதி தேவராயரும், மூன்றாம் ஸ்ரீரங்கராயரும் சந்திரகிரியில் ஆட்சி புரிந்தபோது. 1639 ,1642 ஆம் ஆண்டுகளில் இப்போதைய தமிழ்நாட்டின் தலைநகரமாக சிறப்புக்கு இருக்கும், சென்னை நகரம் அமைந்துள்ள நிலப்பகுதியே, ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியாருக்கு அளித்தனர். ஆகையால் விஜயநகரப் பேரரசு மறைந்துவிட்ட பிறகு, இந்திய வரலாற்றில் பேரரசின் நினைவுச் சின்னமாக சென்னை மாநகரம் விளங்குகிறது என்று கூறலாம்.
ஆதாரங்கள் வழி அறியப்படும் விஜயநகர வரலாறு
. இப் பேரரசின் வரலாற்றை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய இராபர்ட் சிவெல் என்ற அறிஞர் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். இவர் கூறும் வரலாற்றில் விஜய் நகரமானது ஒரு மறைந்து போன பேரரசு என்று கூறுகிறார். விஜயநகரப் பேரரசை பற்றிய ஆராய்ச்சி செய்வதற்கும் நூல்கள் எழுதுவதற்கு ஏராளமான வரலாற்று ஆதாரங்களும் வசதிகளும் உள்ளன.
அவைகளில்
1. தொல்பொருள் ஆராய்ச்சி ஆதாரங்கள் ,
2.. இலக்கிய ஆதாரங்கள்
. என இரு வகையுண்டு. தொல்பொருள் ஆராய்ச்சி ஆதாரங்கள், செப்பேடுகள் கல்வெட்டுகள் என்றும், கட்டடங்கள், கோவில்கள், அரண்மனைகள், வெற்றித் தூண்கள், கல், செம்பு, பித்தளை போன்ற உலோகங்களால் ஆன உருவங்கள் என்றும், தங்கம், வெள்ளி, செம்பு முதலியவற்றால் செய்யப்பட்ட நாணயங்கள் என்றும் மூன்று வகையாக பிரிக்கலாம். இருப்பினும் மூவகையான ஆதாரங்களில் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் மிகுந்த துணை புரிகிறது.
செப்பேடுகளும், கல்வெட்டுகளும் தென்னிந்தியக் கல்வெட்டுத் பகுதிகளில் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை ஒரு விதமான அரச வம்சங்களின் கல்வெட்டுக்கள் உடன் கலந்தும், காலவரையறை இன்றியும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்திகா எபிக்கிராபியா, கர்நாடக தேசத்து எபிக்கிராபியா என்ற தொகுதிகளில் காணப்படும் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் விஜயநகர வரலாற்றிற்கு பெரும் உதவியாக உள்ளன.
தென்னிந்திய கல்வெட்டு. தொகுதிகள் பதின்மூன்று பகுதிகளாக உள்ளன. இவற்றில் காணப்படும் விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள்,வட மொழி, கன்னடம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் வரையப்பட்டுள்ளது.
சில குறிப்பிடத்தக்க விஜயநகர அரசர்களின் கல்வெட்டுக்கள்
- முதலாம் ஹரிஹரர் தேவருடைய பாகபள்ளி செப்பேடுகள்.
- பித்திர குண்டா செப்பேடுகள்.
- சிரவணபெலகோலாவில் காணப்படும் ராமானுஜர் கல்வெட்டு.
- முதலாம் ஹரிகரன் உடைய கோமல் சாசனம்
- கிருஷ்ணதேவராயர் உடைய ஹம்பி கல்வெட்டு
- கிருஷ்ணதேவராயர் உடைய போர் செயல்களை குறிப்பிடும் அமராவதி கல்வெட்டு.
- மங்களகிரி, கொண்ட வீடு முதலிய இடங்களில் காணப்படும் வெற்றித் தூண் கல்வெட்டு.
- அச்சுத தேவராயர் உடைய கடலாடி செப்பேடுகள்.
- விருபண்ண உடையாருடைய ஆலம்பூண்டி செப்பேடுகள்.
எபிகிராஃபியா கர்நாட்டிகா என்னும் கல்வெட்டு தொகுதியில் இருந்து மைசூர் நாட்டில் விஜயநகர ஆட்சி பரவி இருந்தது நம்மால் அறிய முடிகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தோ இஸ்லாமிகா எனும் கல்வெட்டு தொகுதியில் பாரசீக, அரபிக் மொழிகளில் காணப்பெறும் கல்வெட்டுக்களும் பெரிதும் துணை செய்கிறது.
தொல்பொருள் சின்னங்கள்
துங்கபத்ரா நதியின் தென்கரையில் காணப்படும், விஜயநகரத்தின் அழிவுச் சின்னங்களை அந்நகரத்தின் வரலாற்று காட்சி சாலை என்றே கூறலாம். ஹம்பியில் உள்ள விருபாட்சர் கோவிலும், விஜயநகரத்தின் மதில் சுவர்களும், இடிபட்ட அரண்மனைகளும், நீர்ப்பாசனக் கால்வாய்களும், சைவ வைணவ கோவில் கோபுரங்களும், விஜயநகரத்தின் பழம் பெருமையை எடுத்துக் காட்டுகிறது. பெனுகொண்டா, சந்திரகிரி, வேலூர், செஞ்சி முதலிய இடங்களில் காணப்படும், கோட்டைகளும், கோட்டை சுவர்களும் இவர்களின் கட்டடக்கலையை பற்றி சிறப்பாகக் கூறுகிறது.
திருப்பதி, காஞ்சி, திருவண்ணாமலை, சிதம்பரம், திருவரங்கம், மதுரை முதலிய இடங்களில் விஜயநகர அரசர்கள் அமைத்த கோவில்கள், கோபுரங்கள், கல்யாண மண்டபங்கள் போன்றவை விஜயநகரப் பேரரசின் நிலைபெற்றிருந்த கோவில் அமைப்புகள் பற்றி இன்றும் கூறிக் கொண்டே இருக்கிறது. ஹம்பியில் உள்ள வித்தளர் கோவில், கிருஷ்ணர் கோவில், ராமர் கோவில், விருபாட்சர் கோயில் முதலான பேரரசர்களின் கலை ஆர்வத்தை பெரிதும் விளக்கிக் காட்டுகிறது இவ்வமைப்புகள்.
இக்கோவில்கள், கோபுரங்கள், மண்டபங்கள் போன்றவை காணப்படும் உருவச்சிலைகள், விஜயநகரப் பேரரசின் மன்னர்கள், மக்கள் முதலியோருடைய சமயத்தையும், கலை ஆர்வத்தையும் மிக நுண்ணிய தன்மையோடு காட்டுகிறது. முழுவராகன், அரைவராகன், கால்வராகன், பணம்முதலிய நாணயங்கள் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தது. தார் என்ற நாணயம் வெள்ளியினாலும் செம்பினாலும் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நாணயங்களின் மீது பொறிக்கப்பட்ட உருவங்களும், எழுத்துக்களும் அக்காலத்திய சமுதாயத்தின் சமயம், பொருளாதாரம் போன்றவற்றை ஆய்வதற்கு உதவி செய்கிறது. இந்த நாணயங்கள் மீது பொறிக்கப்பெற்ற வட மொழி, கன்னடம், தெலுங்கு, தமிழ் எழுத்துக்களில் இருந்து, அவை வழக்கத்தில் இருந்த இடம், விஜயநகரப் பேரரசின் எல்லைகள் போன்றவை நன்கு அறியக்கூடும். இந்த நாணயங்களை லேன்பூல், நெல்சன் ரைட் ரிச்சாடுபர்ன், ஹீல்ட்ஷ்,எலியட் முதலியோர் வரிசையாக வரிசைப்படுத்தி உள்ளனர்.
இலக்கிய ஆதாரங்கள்
. இவ்விலக்கிய ஆதாரங்கள் உள்நாட்டு இலக்கியங்கள், வெளிநாட்டில் இலக்கியங்கள் என இருவகையாக பிரிக்கலாம். உள்நாட்டு இலக்கிய ஆதாரங்கள் வடமொழி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டு உள்ளது. இந்த இலக்கியங்கள் பேரறிஞர் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களால் துவங்கப்பட்டது. இவை விஜயநகர வரலாற்று ஆதாரங்கள் என்ற நூலில் நாம் காணலாம்.
வடமொழி வரலாற்று ஆதாரங்கள்(எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார்)
மதூர் விஜயம் அல்லது கம்பராய சரிதம்: இந்த நூல் குமார கம்பணன் அவருடைய மனைவி கங்காதேவி என்ற அரசியால் அரசியல் எழுதப்பட்டதாகும். இது இதிகாச முறையில் எழுதப்பட்ட குமார கம்பணர் படைவீட்டு ராஜ்ஜியத்தை ஆண்ட சம்புவராய மன்னனையும், மதுரையை ஆட்சி புரிந்த சுல்தானையும் வென்று, தமிழ்நாட்டில் விஜயநகரப் பேரரசு பரவிய வரலாற்றை கூறுவதாகும். இதிகாச முறையில் எழுத பெற்றிருந்த போதிலும் தென்னிந்திய வரலாற்றில் மிக துணைசெய்யும் வரலாற்று நூலாகும்.
சாளுவ அப்யூதயம்: இது வட மொழியில் செய்யுள் வடிவில் சாளுவ நரசிம்மர் உடைய ஆஸ்தான கவி ஆகிய ராஜநாகத்தின் திண்டிமன் என்பவரால் எழுதப்பட்டது. சாளுவ நரசிம்மனின் முன்னோர்களுடைய வரலாற்றையும், சாளுவ நரசிம்மர் குமார கம்பண உடையார் தமிழ் நாட்டின் மீது படையெடுத்த போது அவருக்கு செய்த உதவியை பற்றி தெளிவாக கூறுகிறது.
இராமப்யூதயம்: சாளுவ நரசிம்மனால் ராமாயண சாரமாக எழுதப்பட்ட இந்த நூல் இவருடைய முன்னோர் வரலாற்றையும், குமாரகம்பணருக்கு செய்த உதவியையும், திருவரங்கம் கோயிலுக்கு சாளுவ நரசிம்மர் செய்த தான தருமத்தையும் பற்றி கூறுகிறது.
பிரபன்னாமிர்தம்: அந்தனராயர் என்பவரால் எழுதப்பட்ட இந்த வடமொழி நூல் திருவரங்கம் கோயிலை பற்றிய வரலாறு ஆகும். இது அரங்கநாதர் உடைய உருவ சிலைக்கு இஸ்லாமியர் உடைய படையெடுப்பால் ஏற்பட்ட துன்பங்களையும், பின்னர் செஞ்சியில் ஆளுநராகிய கோபனாரியர் என்பவர் செஞ்சியில் இருந்து திருவரங்கத்திற்கு சென்று அரங்கநாதர் உடைய உருவ சிலையை மீண்டும் தாபனம் செய்ததை பற்றியும் கூறுகிறது.
மாதவ்ய தாது விருத்தி: இவ்விரண்டு வடமொழி நூல்களும் சாயனாச்சாரியாராலும், மாதவ வித்யாரண்யர், என்பவராலும் முறையே எழுதப்பட்டன. மாதவ்யதாது விருத்தியைச் சாயனாச்சாரியார்,உதயகிரி மகராஜ்ய மகாமண்டலீஸ்வரனும் கம்பராயனுடைய மகனுமாகிய இரண்டாம் சங்கமனுக்கு அர்ப்பணம் செய்துள்ளார்.
வேதபாஷ்யம் என்ற நூல் முதலாம் புக்கராயனுடைய அமைச்சராகிய மாதவ்வித்தியாரண்யர் என்பவரை பற்றியதாகும்.
நானார்த்த இரத்தின மாலை: இது இரண்டாம் ஹரிஹரர் உடைய தானைத் தலைவராகிய இருக்கப்ப தண்டநாதர் என்பவரால் இயற்றப்பட்டது. நாராயண விலாசம் என்ற வடமொழி நாடகம் உதயகிரி விருப்பண்ண உடையாரால் எழுதப் பெற்றுள்ளது. இந்நாடகத்தின் ஆசிரியராகிய விருப்பண்ண உடையார் தம்மை தொண்டைமண்டலம், சோழ, பாண்டிய மண்டலங்களுக்கு ஆளினர் என்றும், இலங்கை நாட்டை வென்று வெற்றித் தூண் நாட்டியவர் என்றும் கூறியுள்ளார்.
கங்கா தாசப் பிரதாப விலாசம்: கங்காதரன் என்பவரால் இயற்றப்பட்ட வடமொழி நாடகத்தின் முகவுரையில் இரண்டாம் தேவராயர் உடைய மகனாகிய மல்லிகார்ஜுனர், பாமினி சுல்தானும் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தபோது, அவர்களை எதிர்த்து நின்று எவ்விதம் வெற்றி பெற்றார் என்பது பற்றி விரிவாகக் கூறப்படுகிறது இந்த நூலில்.
அச்சுதராயர் அப்யூதயம்: இந்த வடமொழி நூல் ராஜநாத திண்டிமன் III என்ற ஆசிரியரால் இயற்றப் பெற்றது ஆகும். இந்த நூலில் துளுவ வம்சத்து தலைவனாகிய நரச நாயக்கருடைய வரலாறும், அவருடைய மக்கள் வீர நரசிம்மன் கிருஷ்ண தேவராயர் அச்சுதராயர் முதலிய அரசர்களுடைய பிறப்பு, வளர்ப்பும் போன்றவைகளோடு, அச்சுத தேவராயர் பற்றியும் மிக விரிவாக கூறப்பட்டுள்ளது. இவரின் ஆட்சி பெருமை முழுவதும் உணர்ந்து கொள்வதற்கு இந்நூல் பெரிதும் துணை செய்யும். சோழநாட்டிலும், மைசூர் நாட்டிலும், அச்சுத தேவராயர் அடைந்த வெற்றிகளையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வரதாம்பிகா பரிணயம்: இவ் வடமொழி நூல் உரை நடையிட்ட செய்யுள் வகையான சம்பு காவியமாக திருமலாம்பாள் என்ற ஆசிரியை எழுதப்பட்டதாகும். துளுவ வம்சத்து நரச நாயக்கர் உடைய வெற்றிகளையும், நரச நாயக்கர் உடைய குடும்ப வரலாற்றையும், அச்சுத தேவராயருக்கும் வரதாம்பாளுக்கும் நடந்த திருமணம் பற்றியும் மிக விரிவாக கூறுகிறது. அச்சுததேவனுடைய அமைச்சர்கள் ஆகிய சாலகராஜா திருமலை தேவர்களுடைய வரலாறும், வேங்கடாத்ரி என்ற தேவராயர் மகனுடைய வரலாறு கூறப்பட்டுள்ளது.
ஜம்பாவதி கல்யாணம் – துக்க பஞ்சகம்: இந்த வடமொழி நாடகம் பேரரசர் கிருஷ்ண தேவராயரால் எழுதப்பட்ட, ஹம்பி விருபாட்சர் ஆலயத்தில் வசந்த உற்சவ நாளில் மக்களுக்கு நடித்துக் காட்டப்பட்டது. பஞ்சகம் என்ற ஐந்து வடமொழி செய்யுள்கள் பிரதாபருத்திர கஜபதி, அரசருடைய மகளாகிய துர்கா என்கிற ஜகன்மோகினி என்னும் அரச குமாரி எழுதப்பட்டது என கருதப்படுகிறது. கிருஷ்ணதேவராயர் ஜெகன்மோகினியை மணந்து கொண்ட போதிலும் சில எதிர்பாராத ஏதிக்களினால் ஆரம்பத்தில் தனித்து வாழ நேர்ந்தது. தன்னுடைய தனிமையை நினைத்து ஆறுதல் அளித்துக்கொள்ள இச்செய்யுள் செய்ததாக அறியமுடிகிறது.
தெலுங்கு நூல்கள்
பில்லா லமரி பீனவீரபத்திரர் எழுதிய ஜெய்மினி பாரதம்: இன்நூல் பீனவீரபத்திரர் என்பவரால் நரசிம்மனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டு எழுதப்பட்டதாகும். அபியூதயம் என்னும் நூலைப் போல், சாளுவ நரசிம்மனின் முன்னோர் ஆகிய சாளுவமங்கு தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசோடு இணைத்துக் கொள்வதற்கு சம்புவாயர்களையும்,மதுரை சுல்தான்களையும் வென்று அடக்கிய செய்திகளைப் பற்றிக் கூறுகிறது. திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமானுக்கு அறுபதினாயிரம் மாடப் பொன்களை தானம் செய்ததை கூறுகிறது.
ஆசாரிய சுத்தி முக்தாவளி: இந்நூல் திருவரங்கம் திருக்கோவிலின் வரலாற்றைப் பற்றிக் கூறும் தெலுங்கு நூலாகும். திருவரங்கத்தின் மீது இஸ்லாமியர் படை எழுச்சியையும், அரங்கநாதர் உருவச்சிலையை வைணவர்கள் எவ்விதம் காப்பாற்றினார் என்பதை பற்றி விரிவாகக் கூறி தேவரடியார் ஒருத்தி, திருவரங்கம் கோயிலை காப்பாற்றுவதற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்த வரலாறு பற்றி விரிவாக விவரிக்கிறது.
கிரீட பிரபாம்: இது வடமொழியில் எழுதப்பட்ட பிரேமா பிரதம் என்னும் நூலின் தெலுங்கு மொழி பெயர்ப்பாகும். இரண்டாம் தேவராயர் காலத்தில் வினுகொண்ட கோட்டையின் ஆளுநராக இருந்த வினுகொண்ட வல்லவராயர் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூலின் ஏழாவது செய்யுளில் இந்நூலாசிரியரின் முப்பாட்டன் சந்திரன் என்பார், கர்நாடக அரசன் முதலாம் புக்கராயரிடம் அமைச்சராக அலுவல் பார்த்ததாக கூறப்படுகிறது. வல்லபராயருடைய சிற்றப்பன் லிங்கன் என்பவர் இரண்டாம் ஹரிஹரனுடைய சேனைத் தலைவராக இருந்தார். இந்த லிங்கன் உடைய சகோதரனாகிய திப்பன் நவரத்தின கருவூலத்திற்கு தலைவராக அலுவல் பார்த்தார். வல்லபராயர் திரிபுராந்தகர் என்பாருடைய மகன் என்பதும் வினுகொண்ட நிலப்பகுதிக்கு ஆளுநராகவும், நவரத்தின கருவூல அதிகாரியாகவும் அலுவல் பார்த்தார் என்பதும் விளங்குகிறது.
ராம சாம்ராஜ்யமும்: இந்த நூல் வெங்கையா என்பவரால் எழுதப்பட்டது, ஆரவீட்டு புக்க தேவனுடைய மூதாதை சோமதேவ ராஜா என்பவருடைய செயல்களை விவரித்துக் கூறுகிறது. சோமதேவனுடைய மகன் ராகவேந்திரன்; இவருடைய மகன் ஆரவீட்டு நகரத்தின் தலைவனாகிய தாடபின்னமன்; இவருடைய மகன் ஆரவீட்டுபுக்கன் என்பதால் நரசிம்மனுடைய சேனைத்தலைவர் எனும் செய்தி இந்நூலில் விளக்கம் பெறுகிறது.
வராக புராணம்: இது நந்தி மல்லையா, கண்ட சிங்கை என்ற இரண்டு புலவர்கள் சேர்ந்து ஏற்றிய தெலுங்கு செய்யுள் நூலாகும். இது சாளுவ நரசிம்ம னுடைய சேனைத் தலைவனாகிய நரச நாயக்கர் அர்ப்பணம் செய்யப்பட்டது. இந்த இரு அரசியல் தலைவர்களுடைய வீரச் செயல்களும், குடி வழிமரபு இந்நூலில் கூறப்படுகிறது. மேலும் நரச நாயக்கர், ஈசுவர நாயக்கருடைய மகன் என்பதும் அவர் உதயகிரிக், கண்டிக் கோட்டை, பெனுகொண்டா, பங்களூர், நெல்லூர்,பாகூர், நரகொண்ட, ஆமூர், ஸ்ரீரங்கப்பட்டினம் முதலிய இடங்களை தம்முடைய வாளின் வன்மையால் பிடித்தார் என்பது அறியமுடிகிறது.
நரசிம்மர் உடைய ஆணையின் படி பேதண்ட கோட்டை என்ற பீடார் நகரத்தின் மீது படையெடுத்து கண்டுக்கூர் எனும், இடத்திற்கு அருகில் இஸ்லாமிய குதிரைப் படைகளை வென்று வாகை சூடினார். ஈஸ்வரர் நாயக்கருடைய மகன் அரச நாயக்கருக்கு வரலட்சுமி கல்யாணம், நரசிம்ம புராணம் எனும் தெலுங்கு நூல்கள் அர்ப்பணமாக செய்யப்பட்டன. மானுவா,பீடார்,மாகூர் முதலிய நாட்டுத் தலைவர்கள் நரச நாயக்கர் உடைய பெருமையை புகழ்ந்தனர்.
நந்தி திம்மண்ணாவின் பாரிஜாத பகரணமும்: தெலுங்கு நூலான இது கிருஷ்ணதேவராயருக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. கிருஷ்ணதேவராயர் உடைய தகப்பன் அரச நாயக்கருக்கும் அவருடைய பாட்டன் ஈசுவர நாயக்கரும் புகழ்ந்து பேசப்படுகின்றனர். ஈஸ்வர நாயக்கர் இலக்காம்பாள் என்பவளை மணந்து நரச நாயக்கரை பெற்றார். இது சாளுவ நரசிம்மருக்கு உதவியாக இருந்து சங்கம வம்சத்து இறுதி அரசனை வென்று, விஜய நகரத்தை கைப்பற்றிய சாளுவ புரட்சியைப் பற்றி கூறுகிறது. மாளவிக் என்ற இடத்தில் இஸ்லாமியர்களை வென்றதையும் சோழநாடு, மதுரை, ஸ்ரீரங்கப்பட்டினம் ஆகிய இடங்களை வென்றதை பற்றியும் குறிப்பிடுகிறது. நரச நாயக்கருக்குத் திப்பாமாள், நாகம்மாள் என்ற இரு மனைவியர் இருந்தனர். இவ்விரு மனைவியர்கள் மக்கள் வீரநரசிம்மர், கிருஷ்ண தேவராயர் ஆவர்.
ஆமுக்த மால்யதா: கிருஷ்ண தேவராயரால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் இந்த நூல், இணையற்ற தெலுங்கு பிரபந்தம் ஆகும். கலிங்க நாட்டின் மீது படையெடுத்துச் சென்ற பொழுது, விஜயவாடாவில் சில நாட்கள் தங்கியிருந்த பிறகு ஆந்திர மதுசூதனனை சேவிப்பதற்கு, ஸ்ரீகாகுளத்திற்குச் சென்று ஏகாதசியன்று விரதம் இருந்ததாகவும், அன்றிரவு நான்காவது சாமத்தில், மகாவிஷ்ணு அவருடைய கனவில் தோன்றி ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வாருடைய வளர்ப்பு மகளான ஆண்டாளின் திவ்ய தரிசத்தை தெலுங்கு மொழியில் பிரபந்தமாக எழுதும்படி ஆணை இட்டதாக இந்த நூலில் கூறப்படுகிறது. தமிழினுடைய ஆஸ்தான கவிகள் கூறுகின்ற முறையில் கிருஷ்ணதேவராயர் தம்முடைய முடிவுகளை தொகுத்துக் கூறியுள்ளார். கொண்ட வீடு என்னும் இடத்திற்கு புறப்பட்டு வேங்கி, கோதாவரிநாடு, கனக கிரி, பொட்னூர் போன்ற இடங்களை கைப்பற்றி கடகம் என்ற நகரை முற்றுகையிட்டனர். பிரதாபருத்ர கஜபதியை வென்று சிம்மாத்திரி-பெட்னூர் எனுமிடத்தில் வெற்றித்தூண் நிறுவினார். பிரதாப ருத்ரன் கஜபதியின் உறவினர் ஒருவனையும், அவருடைய மகன் வீரபத்திரன் என்பவனையும் கொண்ட வீடு என்னும் இடத்தில் சிறைப்படுத்தியதும் இதில் கூறப்படுகிறது. சிம்மாசலத்தில் நரசிம்மரை வணங்கிய பிறகு வெற்றி தூண் நிறுவியது மீண்டும் ஒருமுறை கூறப்பட்டுள்ளது.
இராய வாசகமு: இது இலக்கணம் இல்லாத தெலுங்கு மொழியில் விஸ்வநாத நாயக்கர் என்ற ஆளுநருக்கு ,அவருடைய தானபதியால் கிருஷ்ண தேவராயர் சிவசமுத்திரத்தை ஆண்ட உம்மத்தூர்த் தலைவனை வென்ற பின்னர், ஸ்ரீரங்கபட்டணத்தில் கோவில் கொண்டுள்ள ஆதிரங்க நாயகரை வணங்கி இக்கேரி வழியாக, இராய்ச்சூர்,முதுகல் ஆதங்கி,அதவானி, முதலிய இடங்களுக்குச் சென்று அவைகளை கைப்பற்றினார். பின், பீஜப்பூர்,கோல்கொண்டா,பீடார் ஆகிய மூன்று நாட்டு சுல்தான்களோடு கிருஷ்ணா நதிக்கரையில் நடந்த போரில் வெற்றி பெற்றுக் கிருஷ்ணா நதியை கடந்து பிரதாபருத்திர கஜபதுயையும், அவருடைய பதினாறு மகாபத்திரர்களையும் போரில் வென்று,சிம்மாத்திரியில் வெற்றித்தூண் நாட்டில் பின்னர் கஜபதி அரசருடன் சமாதானம் செய்து கொண்டதைப் பற்றியும் இந்நூலில் கூறப்படுகிறது.
வித்யாரண்யர் கால ஞானம்- வித்யாரண்யர் விருத்தாந்தம்: இந்த இரண்டு தெலுங்கு நூல்களும். பின்னர் நடக்கப்போவதை முன்கூட்டியே ஆருடன் சொல்வதைப் போன்று விஜயநகர அரசர்கள் உடையவர் முறையைப் பற்றிக் கூறுகின்றன. கல்வெட்டுகளிளும் செப்பேடுகளிளும் கூறப்பட்ட வரலாற்று செய்திகள் இவற்றில் காணப்படுகிறது.
கர்னல் மெக்கன்சி என்பவரால் சேகரிக்கப்பட்ட மெகன்ஸி கையெழுத்து பிரதிகள் கிராமிய கவுல்கள் என்றும், கைபீதிகள் என்றும் பெயர் பெறுகின்றன. இவற்றில் விஜயநகர வரலாற்றை பற்றிய அரசியல், சமயம், சமூகம், பொருளாதாரம் பற்றிய செய்திகள் காணப்படுகிறது.
தமிழ், கன்னட இலக்கிய வரலாற்று ஆதாரங்கள்:
மதுரை தல வரலாறு: இந்த நூல் இலக்கியம் அல்லாத கொச்சைத் தமிழால் எழுதப்பட்டது. உக்கிரப் பெருவழுதி என்ற பாண்டிய அரசன் காலம் முதல் கொண்டு கி.பி 1800 ஆம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட அரசர்களின் பெயர்களைத் தொகுத்து கூறுகிறது. மதுரை சுல்தான்கள் உடைய ஆட்சியைப் பற்றியும் குமார கம்பணன் எவ்வாறு சுல்தானிடமிருந்து கைப்பற்றி கோவில்களையும், மக்களையும் ஆட்சி புரிந்தான் என்பது பற்றியும் கூறுகிறது.
பின்னர் விசுவநாத நாயக்கர் மதுரையில் ஆட்சி , மேற்கொண்டிருந்த காலத்திற்கு முன்பு விஜயநகர மகாமண்டலேசுவரர்களின் பெயர்களையும், அவர்களுடைய ஆட்சி ஆண்டுகளையும், பிரபாவதி ஆண்டுகளிலும், சகாப்தத்திலும், தொகுத்து கூறப்படுகிறது. தமிழில் எழுதப்பட்ட இந்நூலை திரு. சத்தியநாத ஐயர் தாம் எழுதிய மதுரை நாயக்கர் வரலாற்றில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார். இது தமிழ்நாட்டு விஜயநகர வரலாற்றை எழுதுவதற்கு மிகவும் பயன்தரும் நூலாகும்.
கோயிலொழுகு: இந்த தமிழ்நூல் திருவரங்க கோயிலின் வரலாற்றை பற்றி மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டதாகும். இந்த நூலில் திருவரங்க பெருங்கோயில் இஸ்லாமிய படையெடுப்பால் எவ்வித இன்னல்கள் அடைந்தது என்பதை பற்றியும், அரங்கநாதர் உடைய உருவ சிலையை இஸ்லாமியர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்கு, வைணவ தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் கூறுகிறது. பிள்ளை லோகாச்சாரியார், வேதாந்த தேசிகர் முதலியோர் சைவ வைணவ சமயத்தை பாதுகாக்க மேற்கொண்ட முயற்சிகளையும், இதன் வழி அறியமுடிகிறது.
கொங்குதேச ராசாக்கள் –கொங்கு மண்டல சதகம்: இந்த இரண்டு தமிழ் நூல்களும் கொங்கு நாட்டை ஆண்ட அரசர்களைப் பற்றிக் கூறும் நூலாகும். இவை கொங்கு நாட்டை குமார கம்பண்ணன் வென்று விஜயநகர அரசன் நிலைநாட்டிய பிறகு துளுவ வம்சத்து சதாசிவராயர் ஆட்சி வரையில். கொங்கு நாட்டில் ஆட்சி புரிந்த விஜயநகர மகாமண்டலேசுவரர் பற்றியும், பேரரசர்களைப் பற்றியும் விவரித்து கூறுவதோடு அக்காலத்திய சமய, சமூக பொருளாதார நிலைகள் பற்றியும் கூறுகின்றன.
கர்நாடக ராஜாக்கள் -சவிஸ்தார சரிதம்: இந்த வரலாற்று நூல் டெய்லர் என்பவர் சேகரித்த ‘கேட்டலாக் ரெய்சான்’ எனும் தொகுப்பில் மூன்றாவது பகுதியில் உள்ளதாகும். இது நாராயணக் கோனார் என்பவரால் எழுதப் பெற்று செஞ்சி கோட்டையின் வரலாற்றை கூறுவதாகும். இந்நூலின் படி தொண்டை மண்டலத்தில் சமாதானத்தை நிலை நாட்டுவதற்காக கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் வையப்ப நாயக்கர், துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர், விஜயராகவ நாயக்கர், வெங்கடப்ப நாயக்கர் என்ற நான்கு தலைவர்களின் கீழ் பதினாயிரம் வீரர்கள் கொண்ட பெரும் சேனை ஒன்று அனுப்பப் பட்டது, என்பதும் இத்தலைவர்கள் தமிழ்நாட்டை செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என்ற மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து மூன்று நாயக்கர் தானங்கள் அமைத்தனர் என்பதும் தெரிய முடிகிறது.
இங்கு கூறப்பட்டவை மட்டுமல்லாது, தனிப்பாடல் திரட்டு என்ற நூலில் காணப்படும் சிறு வெண்பாக்களும், ஹரிதாசர் இயற்றிய இருசமய விளக்கம் என்ற நூலும், இரட்டைப் புலவர்களால் இயற்றப்பட்ட ஏகாம்பர நாதர் உலாவும், வில்லிபுத்தூராரின் பாரதமும், இராமப்பய்யன் அம்மானை என்ற பிரபந்தமும், விஜயநகர வரலாற்று ஆதாரங்களை கருத்தில் கொள்ள முடிகிறது. இவரால் எழுதப்பட்ட சாசனம் தமிழ் கவிதைகள் எனும் நூல் மிக உதவியாக உள்ளது.
கேலடி நிருப விஜயம் என்னும் கன்னட நூல், செய்யுளும் உரைநடையும் கலந்து லிங்கண்ணா என்பவரால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டதாகவும். இது இக்கேரி(பெட்னூர்) நாயகர்களுடைய வரலாற்றையும் கர்நாடக பிரதேசத்தில் பீஜப்பூர் சுல்தான்களுடைய ஆட்சி பரவிய வரலாற்றையும் கூறுகிறது. அது மட்டுமல்லாது மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை. வேலு கோட்டி வம்சாவளி, குமார ரமணகாதை,வைத்ய வல்லபம், சங்கீத சூரியோதயம், சரஸ்வதி விலாசம் என்ற நூல்களும் விஜயநகர வரலாற்றிற்கு துணை செய்கிறது.
இஸ்லாமிய வரலாற்று நூல்கள்
பாமினி ராஜ்ஜியத்தின் வரலாறானது விஜயநகர வரலாற்றோடு மிகவும் தொடர்பு கொண்டதாகும். இந்த இரண்டு அரசுகளின் வரலாறுகளை தக்காண- தென்னிந்திய வரலாறு எனக் கூறுவது பொருத்தமாகும். பாமினி ராஜ்ஜியத்தின் வரலாற்றை பற்றி இஸ்லாமி என்பவர் எழுதிய ஃபூட்டு –ஸ்-சலாட்டின் பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. கி.பி 1327 ஆம் ஆண்டு தன்னுடைய தகப்பன் சிப்பாசலார் இஸ்லாமி என்பவருடன் டெல்லியிலிருந்து தெளலதாபாத்திற்கு (தேவகிரி) வந்து முதல் பாமினி சுல்தானாகிய அலாவுதீன்ஹாசன் கங்கை பாமினியிடம் அலுவலில் அமர்ந்தார்.
1358 ஆம் ஆண்டு தம்முடைய வரலாற்று நூலை எழுதத் தொடங்கி 2 ஆண்டுகள் அதை எழுதி முடித்தார். பர்தூசி என்பவர் பாரசீக மொழியில் இயற்றிய ஷாநாமா என்ற நூல் அமைப்பைப் பின்பற்றிய, டெல்லி சுல்தானிய வரலாற்றை முகமது பின் துக்ளக்கின் ஆட்சி ஆண்டு வரையில் எழுதி இருக்கிறார். தக்காணத்திலும், தென் இந்தியாவிலும் முகமது துக்ளக்கின் ஆட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணங்களை விளக்கி பாமினி ராஜ்யம் தோன்றிய வரலாற்றை விவரித்துள்ளார். தக்காணத்திலும், தென்னிந்தியாவிலும் இஸ்லாமிய ஆட்சி பரவியதன் தன்மையையும், முதல் பாமினி சுல்தான் உடைய குணநலன்களையும், செயல்களையும் பற்றி இந்நூல் நூலில் நாம் அறிய முடியும்.
பெரிஷ்டாவின் வரலாற்று நூல்:
பாரசீக நாட்டில் பிறந்த பெரிஷ்டா , தனது 12 ஆவது வயதில் தன் தந்தையுடன், 1582 ஆம் ஆண்டு ஆமது நகரத்திற்கு வந்தார். ஆம் அது நகரத்து இளவரசர் ஒருவருக்கு இவருடைய தந்தை ஆசிரியராக வேலை பார்த்தார். இவர் தந்தை இறந்தபிறகு பெரிஷ்டா ஆமது நகரத்துச் சேனையில் சேர்ந்து போர்த் தொழிலில் ஈடுபட்டார். இவர் ஷியா வகுப்பை சார்ந்த முஸ்லிம் என்ற காரணத்தினால். ஆமது நகரத்தைவிட்டு பீஜப்பூர் சுல்தானிடம் இவர் அலுவல் வேலை பார்த்தார். பின்னர் வாளெடுத்துப் போர் புரிவதை விட்டு வரலாற்று ஆசிரியர் தொழிலை கைக்கொண்டார். பிஜெப்பூர் இப்ராஹீம் அடில்ஷாவும், ஷா நவாஸ்கான் என்பவருக்கு ஊக்கமளித்து. வரலாற்றுக்குள் எழுதும்படி துணை செய்தனர்.
கி.பி 1606 ஆம் ஆண்டிலும் 1610 ஆம் ஆண்டிலும் முடிவு பெற்று இருவேறு முறையில் பெரிஷ்டாவின் வரலாறு நூல் காணப்படுகிறது. இந்த இரண்டு நூலும் பிற்சேர்க்கையில் அதிகமாக காணப்படுகிறது. 1831 ஆம் ஆண்டு மேஜர் ஜெனரல் பிரிக்ஸ் இந்நூல் ஒன்றில் சில செய்திகளை குறைத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிப்பித்தார். ஸ்காட் என்பவரும் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். டப்படாபா, பெரிஷ்டா ஆகிய இருவருடைய வரலாற்று நூல்களும், தக்காணத்து பாமினி அரசர்களுக்கும், விஜயநகர மன்னர்களுக்கும், இடையே நிலவிய அரசியல் உறவை விரிவாக விவரிக்கிறது.
சுமார் 35க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை ஆராய்ச்சி செய்தும் 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களைக் கொண்டும். தம்முடைய நூலை எழுதியதாக பெரிஷ்டா கூறுகிறார். இவர் இஸ்லாமிய சமயத்தில் இஸ்லாமிய அதிகாரிகளிடமும் மிகுந்த பற்று உள்ளவர். ஆதலால், இவ்விரண்டு பெருமைகளையும் மிகுந்து கூறுகிறார். அதிலேயே கவனம் செலுத்தினார். வரலாற்று உண்மையை கூறுவதே தம்முடைய நோக்கம் என இவர் கூறிய போதிலும், பாமினி சுல்தான்கள் உடைய குறைகளை மறைத்து, நிறைகளை மட்டுமே போற்றுகிறார். இந்திய- தக்காண- இஸ்லாமி அரசர்களின் செயல்களை புகழ்ந்து பேசுவதில் சாமத்தியமானவர் ஆவார்.
விஜயநகர மன்னர்கள் பாமினி சுல்தான்களுக்கு அடங்கி, ஆட்சி செய்து கப்பம் கட்டுவார்கள் என்று இஸ்லாமிய சமயத்தை ஆதரித்தும் கூறுகிறார். பாரபட்சமின்றி உண்மையைக் கூறும் பழக்கத்தை விட்டு, ஒரு தலை பட்சமாக இவர் எழுதியுள்ளார். இருப்பினும் மற்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் உடன் ஒப்பிடும் பொழுது, பெரிஷ்டாவின் பல வரலாற்று உணர்வு சிறந்ததாகத் தெரிகிறது. தென் இந்தியாவின் நில அமைப்பைப் பற்றியும், இடங்களின் பெயர்களையும், இன்னார்தாம் அரசுரிமை வகித்தார்கள் என்பதையும், இந்நூலில் அறிய முடியவில்லை. விஜயநகர மன்னர்கள் சேனைத் தலைவர்களாகவும், சேனைத்தலைவர்களை மன்னர்களாகவும், பாவித்து வரலாற்றை குழப்பியுள்ளார். விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் என்று கூறி, கிருஷ்ணதேவராயர் உடைய பெருமை கூறாது விட்டார். டபடாபாவின் வரலாறும், பெரிஷாவின் வரலாறும் ஒன்றுக்கொன்று உதவியாக உள்ளது.
புர்ஹானி மாசீர்:
இந்த நூலானது அலிபின் அஜீஸ்-உல்லா டபடாபா என்பவரால் எழுதப்பட்டது. இந்நூல் ஆசிரியர் இராக் நாட்டில் சிம்மின் என்ற இடத்தில் பிறந்தவர். கோல்கொண்டா குத்ப்ஷாகி அரசர்களிடம் முதலில் அலுவல் பார்த்து, 1580–இல் நால்துர்க்கம் என்ற கோட்டை முற்றுகையில் போர்த் தொழிலில் ஈடுபட்டார். பின்பு ஆமது நகரத்தில் நைசாம் ஷாஜி அரசர்களுடைய அரசியலில் பங்கு பெற்றார். இரண்டாவது புர்ஹான் நைசம்ஷாவின் ஆட்சியில் புர்ஹானி- மா- சீர் என்ற வரலாற்று நூலை எழுதத் தொடங்கினார்.
இந்த நூல் குல்பர்காவிலும், பீடாரிலும் ஆண்ட பாமினி அரசர்களுடைய வரலாற்றையும், ஆமது நகரத்து நைசாம் ஷாஹியருடைய வரலாற்றையும், 1596 ஆம் ஆண்டு வரை விவரிக்கிறது. ஜே.எஸ். கிங் என்பவர் இந் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இவர் விஜயநகர பேரரசிற்க்கும், பாமினி ராஜ்யத்திற்க்கும் நடைபெற்ற போர்களை இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் நடைபெற்ற போர்களாக கருதியுள்ளார் .விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தானுக்கு அடங்கி கப்பம் கட்டுவார்கள் என்றும் “ நகரத்தில் இடம் பிடித்துக் கொள்வதற்கு தகுதியுள்ளவர்கள்” என்றும் இவர் கூறுகிறார். 1487 ஆம் ஆண்டு மூன்றாவது பாமினி சுல்தான் காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்ததை இவர் மிகை படக் கூறுகிறார். ஆனால் பெரிஷ்டாவை போல பல நம்பகத் தக்கதாக செய்திகள் கூறவில்லை.
அயல் நாட்டு வரலாற்றாசிரியர்கள் – வழிப்போக்கர்கள்:
இபன்பதூதா எனப்படும் மொரோக்கோ நாட்டினர் தான், மேலை நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த வரலாற்று ஆசிரியர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். சமய நூல்களிலும், நீதி நூல்களிலும் பேரறிஞராக இருந்தார். மற்றவர்களைவிட வரலாற்று உண்மைகளை கூறுவதில் மிகுந்த அறிஞர். தென்னிந்தியாவின் துறைமுகங்கள், வியாபாரப் பொருட்கள், மக்களுடைய பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தெளிவாக கூறுவார். மதுரை சுல்தான்கள் ஆட்சியை பற்றி பல உண்மைகள் கூறியுள்ளார். 1443 ஆம் ஆண்டு ஷாருக் நகரத்திலுள்ள தைமூர் மன்னனுடைய மகனாகிய ஷாருக் என்பவரால் கள்ளிக் கோட்டையில் அரசாண்ட சாமோரினுக்கு தூதுவராக அனுப்பப்பட்டார்.
அதுமட்டுமல்லாது இரண்டாம் தேவராயர் இவரை விஜய நகரத்திற்கு அனுப்பி வைக்கும்படி சாமோரினுக்கும் உத்தரவிட, அவரும் மங்களூர்,போலூர் முதலிய இடங்களை கடந்து 1443 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் விஜய நகரத்துக்கு வந்தார். விஜய நகரம் அமைந்திருந்தது பற்றிய அவருடைய கூற்றுக்கள் வியக்கத் தக்கதாகும். நான் இதுவரையில் இந்த நகரத்தை போல வேறு ஒரு நகரத்தை கண்களால் பார்த்தது , செவியால் கேட்டதுமில்லை 7 மதில்களால் சூழப்பட்ட பெரிய நகரம் ஆகிய விஜய நகரம் விளங்குகிறது, என்று அவர் குறிப்பிடுகிறார்.
மகாநவமி அல்லது தசரா உற்சவத்தை நேரில் கண்டு விவரிக்கிறார். அரசருடைய மற்ற அதிகாரத்தையும், அரசன் அந்தணர்களிடம் வைத்திருந்த அன்பையும் கூறுகிறார். விஜயநகரத்தின் மக்கள் வாழ்க்கையும், இயற்கையும், அரசியல் முறைகளையும், மற்ற பகுதிகளையும் இவர் அழகாக போற்றி எழுதுகிறார்.ஆர்மூஸ் நகரத்திலிருந்து விஜய நகரத்துக்கு வந்து வாழ்ந்த சில வியாபாரிகள் அப்துல் ரசாக்கின் மீது பொறாமை கொண்டு. விஜயநகரப் பேரரசிடம் கோள்மூட்டி விட்டதால், இவர் நகரத்தைவிட்டு விலக வேண்டியது ஆகிவிட்டது. 1443 ஆம் ஆண்டு விஜய நகரத்திலிருந்து மங்களூருக்கு சென்று, பின்னர் அடுத்த ஆண்டில் அங்கிருந்து பாரசீகம் சென்றுவிட்டார். R.H மேஜர் என்பவர் எழுதிய 15ஆம் நூற்றாண்டில் இந்தியா என்ற நூலில் இருந்து அப்துல் ரசாக் எழுதிய குறிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
விஜயநகர ஆட்சி தோன்றிய சில ஆண்டுகளுக்கு முன்பு, தென் இந்தியாவிலிருந்து வந்த ஐரோப்பியர்களில் ஃபரயர் ஓடரிக் போர்டினான் என்பவர் முக்கியமானவர். இவர் கி்பி 1321 ஆம் ஆண்டு இந்திய நாட்டிற்கு வந்து மலையாள கடற்கரையோரமாக பயணம் செய்து. இலங்கை தீவை சுற்றிப் பார்த்துவிட்டி, சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள சாந்தோம் பகுதிக்கு வந்தார். இந்திய மக்களுடைய பழக்க வழக்கங்களை நேரில் கண்டவாறு எழுதியுள்ளார். விஜயநகரப் பேரரசு அமைவுற்று சிறப்படைந்த காலத்தில், போர்த்துக்கல் நாட்டினரும் இந்தியாவிற்கு வியாபாரத்தை தேடிவந்தனர்.
அவர்களைப் பின்பற்றி பல போர்த்துக்கீசியர், இத்தாலியர் முதலியோர் தென்னிந்தியாவுக்கு வந்தனர். அவர்களில். 1420– 21 ஆம் ஆண்டுகளில் முதலாம் தேவராயர் காலத்தில், நிக்கோலோ காண்டி என்ற இத்தாலியர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இத்தாலியிலிருந்த செல்வர்களின் குடும்பத்தை சேர்ந்த இவர், டமாஸ்கஸ் நகரத்தில் தங்கி இருந்து பாரசீகம், தென்னிந்தியா, இலங்கை, சுமத்ரா, ஜாவா முதலிய நாடுகளில் பயணம் செய்தார். 25 ஆண்டுகள் வரையில் வெளிநாடுகளில் தங்கி இருந்து, பின்னர் 1444 ஆம் ஆண்டு வெனிஸ் நகருக்கு திரும்பினார்.
தம்முடைய பிரயாண குறிப்புகளை போப்பாண்டவரின் காரியதரிசிக்கு குறிப்பிட்டு அனுப்ப. அவர் குறிப்புகளை இலத்தின் மொழியில் எழுதி வைத்திருந்தார். அக்குறிப்புகளில் நிக்கோலோ காண்டி கம்பேயா துறைமுகத்தை பற்றியும், விஜயநகரத்தில் கிடைத்த நவரத்தினங்கள், மக்கள் பின்பற்றிய சககமனம், உற்சவங்கள், வியாபாரம், நாணயங்கள் போன்றவை பற்றி குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செயிண்ட் தாமஸ் உடல் அடக்கமான இடத்தைப் பற்றியும் எழுதியுள்ளார்.
அதேனேஷியஸ் நிகிடின் என்ற ரஷ்ய நாட்டு வியாபாரி 1470 ஆம் ஆண்டிலிருந்து சில ஆண்டுகள் வரை தக்காணத்தில் தங்கியிருந்தார். செளல் என்ற துறைமுகத்தில் இறங்கி பானிமி வழியாக பயணம் செய்தார். பின்பு பீடார் நகரத்தில், பாமினி அரசர்களுடைய அரசவை, சேனை, மக்கள் நிலைமை போன்றவற்றை விவரித்துள்ளார். விஜயநகரத்தை பற்றியும் அவர் கேள்வி பட்டவை பற்றியும் எழுதியுள்ளார்.
16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து வீரநரசிம்மர், கிருஷ்ணதேவராயர், ராமராயர் முதலிய பேரரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் தென்னிந்தியாவில் போர்த்துகீசியர்கள், தங்களுடைய வியாபார ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இதனால் போர்த்துகீசிய வியாபாரிகளும் கிறிஸ்துவ சம்ப்போதகர்களும் விஜயநகரப் பேரரசில் தங்கி இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. போலோனா நகரத்து வார்த்திமா என்னும் பிரமுகர் 1502 முதல் 1508 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பயணம் செய்து தன்னுடைய அனுபவங்களை தெளிவாக எழுதினார். கோவா, கள்ளிக்கோட்டை ஆகிய இடங்களைப் பற்றியும் விஜயநகரம், விஜயநகர பேரரசை பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1510 ஆம் ஆண்டில் ஆல்புகர்க் என்பவரால் கிருஷ்ணதேவராயர் உடைய சபைக்கு தூதராக அனுப்பப்பட்ட லூயி என்ற சமய போதகர், கிருஷ்ணதேவராயர் உடைய அரசியல் தந்திரங்களை பற்றி எழுதியுள்ளார். 1500 முதல் 1516 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் வியாபாரத்திற்க்காக வந்த, துவார்த்தே பார் போசா 1502 ஆம் ஆண்டு கண்ணனூர் பாடசாலையில் வியாபாரியாகவும், துபாஷியாகவும் வேலை பார்த்தார். அவர் எழுதிய குறிப்புகள் விஜயநகரப் பேரரசு சமூக நிலை பற்றியதும், மக்கள் வாழ்க்கை பற்றியதும் ஆகும். துவாரகாவின் குறிப்புகள் லாங்வொர்த் டேம்ஸ் என்பவரால் இரு பகுதியாக பதிக்கப்பட்டுள்ளது.
மேலே கூறப்பட்டவைகைகளை தவிர, இராபர்ட் சிவெல் எழுதிய மறைந்து பேரரசு என்ற நூலில் போர்த்துகீசிய மொழியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டது. விஜயநகர வரலாற்றை எழுத டாமிங்கோஸ்,பெர்னோ நூனிஸ் என்ற இருவர் வரலாறும் மிகவும் துணை செய்தது். இவ்விரண்டு வரலாற்று குறிப்புகளையும், பெரிஷ்டாவின் நூலிலும், இராபர்ட்டின் மறைந்த பேரரசு நூலையும் எழுதியுள்ளார். பின்னர் விஜய நகரத்தை பற்றி ஆராய்ச்சி நூல்கள் எழுதிய கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள்,ஷீராஸ் பாதிரியார், வெங்கட்டராமணய்யா முதலியோர் இவருடைய கூற்றுகளை மறுத்தும், ஒப்புக் கொண்டும் தங்களுடைய ஆராய்ச்சிகள் எழுதியுள்ளனர்.
பீயஸ் எழுதிய குறிப்புகள் கிருஷ்ணதேவராய வாழ்க்கை, தோற்றம், வெற்றிகள், நற்குணங்கள், பண்புகள் முதலிவற்றை பற்றியும் நேரில் கண்டு எழுதப்பட்டுள்ளது. நகரத்தின் அமைப்பு, கோவில்கள், அரண்மனைகள், அரசவை, காரியாலயங்கள் போன்றவை தெளிவாக நேரில் கண்டது போல எழுதியுள்ளது. நூனிஸ் என்பவர் எழுதிய வரலாற்றில் விஜயநகரம் தோன்றுவதற்கு காரணமாக இருந்த இஸ்லாமிய படையெடுப்புகள், சங்கம வம்சத்தின் தோற்றம், மாதவாச்சாரியாரின் பேருதவி, சாலுக்கிய நரசிம்மன், நரச நாயக்கர், கிருஷ்ணதேவராய முதலியவர்களின் பெருமைகள் போன்றவற்றை விளங்குகிறது. 1565 ஆம் ஆண்டு நடந்த தலைக்கோட்டைப் போருக்குப் பிறகு விஜய நகரத்துக்கு வந்த, சீசர் பிரடெரிக் என்ற போர்த்துக்கீசியர் அழிந்த நிலையில் இருந்த விஜயநகரத்தின் பெருமை பேசுகிறது. இது போன்ற பல ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது.
விஜயநகரஅரசு தோன்றுவதற்கான அரசியல்சூழல்:
விஜயநகரப் பேரரசு ஆனது தென்னிந்தியாவில் 1336 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தென்னிந்திய சமயங்கள், கோவில்கள், கலாச்சாரங்கள் போன்றவை பாதுகாப்பதற்காக ஏற்பட்டது என பல அறிஞர்கள் கூறுகிறார்கள். தென்னிந்திய அரசுக்கும் சமூகத்திற்கும் எவ்வித துன்பம் ஏற்பட்டது என்பதை பற்றி அறிந்து கொள்ளக் வேண்டும். இந்த விஜயநகரப் பேரரசு தோன்றுவதற்கு முன், துங்கபத்திரை நதிக்கு வடக்கே விந்தியமலைகள் வரை, இந்தியாவின் மேற்குப்பகுதியில் தேவகிரி தலைநகரை மராட்டிய தலைவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். தக்காணத்தின் கிழக்குபகுதி வாரங்கல் தலைநகரை காகதீயர்கள் ஆட்சி செலுத்தினர்.
தேவகிரி யாதவத் தலைவனாகிய ராமச்சந்திர தேவனும் வாரங்கலில் இரண்டாம் பிரதாப ருத்ரதேவன் ஆட்சி புரிந்தனர். துங்கபத்திரை நதிக்கு தெற்கே துவாரசமுத்திரத்தை தலைநகராகக் கொண்ட ஹொய்சாள வம்சத்து அரசர்களும், கிழக்கு பகுதியில் மதுரை வீரத்தவளப்பட்டணம் முதலிய நகரங்களில் பாண்டிய அரசர்களும் ஆட்சி செய்தனர். இந்த நான்கு அரசர்களும் ஒருவருக்கு ஒருவர் போரிட்டுக் கொண்டு ஒற்றுமை இன்றி இருந்ததாலும், தகுந்த முறையில் தங்களுடைய நாடுகளை பாதுகாக்க தவறி விட்டதாலும், வடக்கே டெல்லி நகரத்தை கைப்பற்றிய ஒரு சுல்தானிய பேரரசை நிலைநாட்டிய இஸ்லாமியர்கள் உடைய படையெடுப்புகளுக்கு ஆளாக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இவர்களின் படையெடுப்புக்குப் பின்னர், பல போர்களும், கொள்ளைகளும் நடத்தப்பட்டது. கி.பி 1296 ஆம் ஆண்டு அலாவுதீன் கில்ஜி தேவகிரியின் மீது படை எடுத்தார். ராமச்சந்திர தேவனுடைய செல்வங்களையெல்லாம் கொள்ளை அடித்துக் கொண்டு பின்பு டெல்லி சுல்தானாக பதவியேற்றார். 1309 ஆம் ஆண்டு தம்முடைய சேனைத்தலைவர் மாலிக்கபூர் என்பவரை, பெரியதொரு சேனையோடு அனுப்பி வாரங்கல் நாட்டை கொள்ளையடிக்கும்படி ஆணையிட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து 1311 ஹோய்சள நாட்டு தலைநகரமாகிய, துவார சமுத்திரம் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டது. சமுத்திரத்தில் சிலகாலம் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு, பின்பு பாண்டிய நாட்டின் மீது மாலிக்காபூர் படையெடுத்தார்.
அந்தச் சமயத்தில் மாறவர்மன் குலசேகர பாண்டியன் உடைய மகனாகிய, சுந்தரபாண்டியனும், வீரபாண்டியனும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்தனர். வீரதவளப்பட்டணம் என்ற ஊர் வீரபாண்டியனுடைய தலைநகரமாக இருந்தது. இதை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் பீர்துல் என்று அழைத்தார்கள். துவார சமுத்திரத்திலிருந்து திருச்சிக்கு அருகிலுள்ள வீரதவளப்பட்டணத்திற்கிச் செல்லும் வழியில், பல இந்துக் கோவில்களையும் மாலிக்கபூர் கொள்ளையடித்ததாக தெரிய வருகிறது. பரானி, வாசாப் என்ற இரண்டு வரலாற்று ஆசிரியர்கள், மரகதபுரி என்ற இடத்தில் இருந்த கோயிலை கொள்ளையடித்ததாக கூறுகிறார்கள். இந்த மரகதபுரியை சில வரலாற்று ஆசிரியர்கள் காஞ்சிபுரம் என்றும் சீர்காழி, சிதம்பரம், ஆகிய இடங்களாக இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால், இந்த இடம் வேலூருக்கு மேற்கே உள்ள பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள விரிஞ்சிபுரம் என்றும் கூறுகிறார்கள். திருவரங்கம், திருவானைக்கா, கண்ணனூர் ஆகிய இடங்களில் இருந்த கோவில்களும் கொள்ளையடிக்கப்பட்டது என, கோயிலொழுகு என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது. இதேநூலில் ஸ்ரீரங்கநாதர் உருவச்சிலையும் மாலிக்காபூர் எடுத்து சென்றதாக அறியமுடிகிறது. சுந்தரபாண்டியனை தோற்க்கடிப்பதற்காக மதுரை நோக்கி சென்ற மாலிக்காபூர் அந்த கோவிலை எடுத்ததாக தெரிகிறது. அலாவுதீன் கில்ஜிக்கு பிறகு சுல்தான் பதவிவகித்த முபராக்ஷா ஆட்சியில் குர்கான் என்ற படைத் தலைவனும் தென்னாட்டின் மீது படையெடுத்து மக்களை மிகவும் கொடுமைபடுத்தினான்.
துக்ளக் சுல்தான்கள் ஆட்சியில் தென்னிந்தியாவின் மீது படையெடுப்பு:
கில்ஜி சுல்தான்களின் ஆட்சியில் தேவகிரி, வாரங்கல், துவாரசமுத்திரம், மதுரை முதலிய நாடுகள் நாட்டரசுகள் கப்பம் கட்டுவதற்கு ஒப்புக் கொண்டபோதும். சுல்தான்களின் ஆட்சி முடிந்து கியாஸ்உத்தின் துக்ளக், சுல்தான் பதவியை வகித்த போது மீண்டும் தென் இந்தியாவின் மீது படையெடுப்பு நடத்தப்பட்டது. வாரங்கல் நாட்டு இரண்டாம் பிரதாப ருத்ரன் திறை செலுத்த மறுத்ததால் கியாஸ்உத்தின் மகன், உலுக்கான் என்பவனை வாரங்கல் நாட்டின் மீது படையெடுக்கும் படி ஆணையிட்டான். கி.பி 1321 ஆம் ஆண்டு உலூக்கான் வாரங்கல் கோட்டையை முற்றுகையிட்டு, இம்முடிவு வெற்றி பெறாமல் போய்விட்டது.
ஆகையால் தேவகோட்டைக்கு பின்வாங்கிச் சென்று. பின்னர் மீண்டும் வாரங்கலில் முற்றுகையிட்டார். ஐந்து திங்கள் வரை பிரதாப ருத்ரன் எதிர்த்து போரிட்ட போதிலும் இறுதியில் அடிபணிய வேண்டிய நிலை வந்தது. வாரங்கல் முற்றுகை முடிந்த பிரதாப் உருத்திரனும், கைதியாகி டெல்லிக்கு அழைத்துச் செல்ல படுகையில் போகும் வழியில் இறந்து போனதாக அறியமுடிகிறது. வாரங்கல் கோட்டை இடிக்கப்பட்டு நகரமும் கொள்ளையடிக்கப்பட்டது. காகதீய நாடும் துக்ளக் அரசோடு சேர்க்கப்பட்டது.
முகமது துக்ளக் இரண்டாவது முறையாக தமிழ்நாட்டின் மீது படையெடுத்து 1327 ஆம் ஆண்டு திருவரங்கம் கோவில் சூறையாடப்பட்டது. துக்ளக் சுல்தான் படையெடுப்பால் பாண்டிய நாடும் உள்ளாகி பராக்கிரம பாண்டிய தேவனும், கைதியாக டெல்லி நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான் என கல்வெட்டு வழி அறிய முடிகிறது. தேவகிரி, வாரங்கல், பாண்டியநாடு போன்ற பகுதிகளை முகமது துக்ளக் 1325 இல் சுல்தான் பதவிக்கு வந்தபோது தன் பேரரசோடு சேர்த்து கொண்டார். இவர்களின் பேர் அரசோடு 23 மாகாணங்களில் இந்த மூன்று மாகாணங்களும் அடங்கியிருந்தது.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு ஆளுநரும் நியமிக்கப்பட்டு தேவகிரிக்கு மாலி்ச்சாடா பகாவுதீன் கரஷாப் என்பவரும், பாண்டி நாட்டுக்கு ஜலாலுதீன் அகசன்ஷா என்பவரும் ஆளுநராகப் பணியாற்றினார். துவார சமுத்திரம், கம்பிளி நாடும், தன் ஆளுகைக்கு உட்பட்டதாக தெரியவில்லை் தம்முடைய பேரரசு மதுரை வரையில் பரவி இருந்ததால் 1327 ஆம் ஆண்டு தன்னுடைய தலைநகரை தில்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார். தலைநகரத்தை மாற்றி மீண்டும் டெல்லிக்கே மக்களை போகும்படி செய்ததும், செப்பு நாணயங்களை அச்சடித்தும், தேவையற்ற போர்களில் ஈடுபடுத்தியதாக பல செயல்கள் முகமது தொடரின் இறுதி காலத்தில் பெருங்கலகமாக உண்டாக்கின. சாசர் என்ற இடத்தில் தேவகிரிக்கு தலைவராக இருந்த பகுதியில் கார் ஷாப் என்பவர் முதன்முதலில் கலகம் செய்ததாக தெரிகிறது. முகமதுவிற்கு திறை செலுத்த மறுத்ததும், டெல்லி அரசுக்கு உரிமை கொண்டாடிய தாகும் கூறுகிறார்கள்.
அதனால் முகமது துக்லக் தேவகிரி நாட்டில் மற்றொரு ஆளுநராக பதவி வகித்து, மசூர்அயுரிஜா என்பவருக்கு பகாவுதீன் கலகத்தை அடக்கி அமைதியை நிலைநாட்டும் படி ஆணையிட்டார். இவர் கோதாவரி நதிக்கரையில் நடந்த போரில் தோல்வியுற்று, உயிருக்கு பயந்து கம்பளி நாட்டை ஆண்ட கமளிராயனிடம் சரணடைந்தான். கம்பளிராயன் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில், தேவகிரி ராமச்சந்திர தேவருக்கும், துவாரசமுத்திர அரசனாகிய மூன்றாம் வால்லான தேவனுக்கும் நடந்த போர்களில்,தேவகிரி அரசருடன் சேர்ந்து கொண்டு அவருக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
இஸ்லாமிய ஆட்சியை தென்னாட்டில் பரவுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு. கிருஷ்ணா,துங்கபத்திரை ஆறுகளுக்கு இடைப்பட்ட இடங்களிலும், பல்லாரி மாவட்டங்களில் அடங்கிய பகுதிகளிலும், கும்மாட்டா, கம்பிலி என்ற பாதுகாப்புள்ள இடங்களிலும் கோட்டை கொத்தளங்களை அமைத்தார், அதன் மூலம் பெரும் புகழ் பெற்றார். டெல்லி சுல்தானியர் அரசிற்கும், கம்ளிராயனுடைய நாட்டிற்கும், கிருஷ்ணா நதி வடக்கு எல்லையாக அமைந்தது. இந்த கம்பளிராயனிடம் சரணடைந்த கார்ஷாப் தன்னை காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டார். கம்பளிராயனும். காப்பாற்றுவதாக வாக்களித்தார். கார்ஷாப் என்பவரை சிறையில் இடுவதற்காக கும்மாட்டா கோட்டையையும், கம்பிலிராயனின் தலைநகரமாகிய ஆணை குந்தியையும் இரண்டு முறை முற்றுகையிட்ட போதும் வெற்றி அடையவில்லை. இத்தோல்வி கேள்வியுற்ற துக்ளக் தாமே நேரில்வந்து சேனை நடத்தி கும்மாட்டா கோட்டையை கைப்பற்றினார். பின்னர் கம்பளிராயனும், கார்ஷாவும் ஆனேகுந்தி கோட்டைக்குள் புகுந்து கொண்டனர். பின்னர் ஆணை குந்தியையும் முகமது துக்ளக்கின் சேனைகளால் முற்றுகையிடப்பட்டது.
துக்ளக் முகமதுவின் சேனைக்கு எதிராக தம்மால் போரிட முடியாமல். கம்பளிராயன் கார்ஷாவை அழைத்து ஆனைக்குந்தியை விட்டு தப்பித்து, துவார சமுத்திரத்தில் மூன்றாம் வல்லான தேவனிடம் சரணடையும் படி கூறிவிட்டு. தன் மனைவி மக்களோடு எல்லோரும் தீக்குளித்து சாகும்படி செய்து, தாமும் தமது வீரர்கள் பலருடனும் சேர்ந்து துக்ளக் முகமதின் சேனையுடன் போர் புரிந்து வீர சொர்க்கம் அடைந்தார். இதன் மூலம் டெல்லி பேரரசுடன் கம்பளி நாடும், ஆனைக்குந்தியும் இணைக்கப்பட்டது. ஆனைக்குந்தியில் போரிட்டு இறந்தவர்கள் தவிர, மற்றவர்களை கைது செய்யும்படி சுல்தான் ஆணையிட்டார். கார்ஷாப் தப்பித்துச் சென்று சமுத்திரத்தில் வல்லாள தேவனிடத்தில் சரணடைந்த செய்தியை கேட்டு ஹொய்சாள நாட்டின் மீதும் படையெடுத்தான்.
மூன்றாம் வல்லாளதேவன் கம்பளி ராயன் செய்தது போன்று, கார்ஷாப்பை காப்பாற்றுவதற்காக தன் நாட்டை உயிரை விட்டது போல அவனும் விட விரும்பவில்லை. பகாவுதீன் கைது செய்யப்பட்டு துக்ளக் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. சுல்தான் அவனைக் கொல்லும் படி உத்தரவிட்டான். அவன் உடலை துண்டு துண்டாக வெட்டி அரிசியுடன் சேர்த்து மனிதப் புலால் உணவாக யானைகளுக்கு வைக்குமாறு உத்தரவிட்டார். யானைகள் அதை முகர்ந்தும் கூட பார்க்க வில்லை. பின்னர் அந்த புலவுச்சோறு சிறு சிறு பொட்டலங்களாக கட்டப்பட்டு பகாவுதீன் உறவினர்களு அனுப்பப்பட்டது என அறியமுடிகிறது.
பகாவிதீன் இறந்த பிறகு மூன்றாம் வல்லாலன் துக்ளக்கிடம் அடிபணிந்து, திரை செலுத்துவதற்கு ஒப்புக்கொண்டதாக கூறுகிறது. இதற்கு முன்பு டெல்லி பேரரசுகளுக்கு அடங்காத துவார சமுத்திரம்,ஆனைகுந்தி,கம்பளிநாடு ஆகிய நாடுகள் புதுடெல்லிக்கு அடிப்பணிந்த்து. கம்பிலி நாட்டை பிடித்தும் துவாரசமுத்திரத்து மூன்று வல்லான தேவனிடம் போரிடும் பகாவுதீன் சிறைப்படுத்தி கொலை செய்வித்த பிறகு. முகமது துக்ளக் 1329 ஆம் ஆண்டு டெல்லிக்கு திரும்பியதாக அறிய முடிகிறது. அந்த ஆண்டிலிருந்து விஜயநகரம் அமைக்கப்பெற்ற 1336 ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் தக்காணத்தையும், தென் இந்தியாவையும்,வட இந்தியா இஸ்லாமிய ஆட்சியில் இருந்து விடுவித்து சுதந்திர இந்து ஆட்சி ஏற்படுவதற்கு ஒரு இயக்கம் தோன்றியது.
அலாவுதீன் கில்ஜியால் முதலில் தொடங்கப்பட்ட பின்னர் முகமது துக்ளக் ஆட்சி காலம் வரையில் நடைபெற்ற இஸ்லாமியப் படையெடுப்புகளால், தென்னிந்தியாவின் முக்கிய சமயங்களாகிய சைவ, வைணவ கோயில்களை சேர்ந்த மடாலயங்களும் கொள்ளையடிக்கப்பட்டு. அவற்றில் இருந்து வெளிவந்த செல்வங்கள், பொருட்கள் வட இந்தியாவிற்கு யானைகள், ஒட்டகங்கள், குதிரைகள் மீது ஏற்றி அனுப்பப்பட்டது. இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் மூலம் இதை அறிய முடிகிறது.
மாலிக் காபூர் தென்னிந்தியாவில் செய்ய வேண்டியவை என்ன என்று சில வார்த்தைகள் கூறியுள்ளார். அல்லா ஒருவர் தான் உண்மையான கடவுள் அவர் இன்று வேறு தெய்வம் இல்லை அவருக்கு உருவம் இல்லை என்ற உண்மையை எல்லோரும் உணரவேண்டும். இவ்வுண்மையை தென்னிந்திந மக்கள், அரசுகள் உணர்த்த நடந்து கொள்ள வேண்டும், விரும்பாமல் போனால் அவர்கள் தலைவணங்கி சுல்தானுக்கு கப்பம் செலுத்த வேண்டும். இரண்டு காரியங்களும் செய்ய அவர்களுக்கு விருப்பமில்லையானால் அவர்களுடைய உடலுக்கும், தலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் செய்து விடுவேன்.
இக் கூற்றில் இருந்த இஸ்லாமிய மதத்தைப் பரவச் செய்ய வேண்டும் என அவர் நினைத்தார் என்பது தெரியவருகிறது. இஸ்லாமியக் கொள்கைகளைப் பரவச் செய்வது மட்டுமல்லாமல் இந்துக்களுடைய வேதங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள் முதலியவற்றை சுருதிகளும், வடமொழி, தெலுங்கு, தமிழ், கன்னடம் இரு மொழிகளில் மக்களிடையே பரவாத படி தடுத்தார். பசுவையும் அந்தணர்களும் கொலை செய்வதும், பெண்களை கற்பழிப்பதும் முக்கிய கொள்கைகளாக இஸ்லாமிய தலைவர்கள் கருதினர். இந்தத் தீய செயல்களால் இந்து சமயமும் சைவ வைணவ கோவில்களில் மறைந்து தென் இந்திய கலாச்சாரம், பண்பாடு சீரழிந்து விட்டது போல் தோன்றியது. இவ்வித அழிவில் இருந்த மக்களை காப்பாற்றுவதற்கு ஒரு புதிய சைவ சமய இயக்கம் ஆந்திர நாட்டிலும், கன்னடத்திலும் தோன்றியது. இவ்வியக்கத்தினை. புரோலையா நாயக்கர்,காப்பையா நாயக்கர் என்ற இருவர் தலைமை ஏற்றனர். மேலும் இவர்களுக்கு உதவியாக 75 நாயக்கமார்களும் இருந்தனர் என்றும் கூறுகிறார்கள்.
1331 ஆம் ஆண்டிற்குள் வடக்கே மகா நதி தீரத்தில் இருந்து, தெற்கில் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள குண்டலகாமம் எனும் இடம் வரை, ஆந்திர நாட்டின் கடற்கரைப் பிரதேசத்தில் இருந்த இஸ்லாமிய ஆட்சி மறைந்தது. அதே சமயத்தில் சாளுக்கிய மரபைச் சார்ந்தவனும்,ஆரவீட்டு அரசை அடிகோலிய சோமதேவன் என்ற தலைவன். ஆந்திர நாட்டின் மேற்கு பகுதியில் இஸ்லாமிய ஆட்சியை அழிப்பதற்கு தயார் செய்தான். கர்னூல்,ஆனைகுந்தி,இராய்சூர்,முதுகல் ஆகிய இடங்களை தன்வசப்படுத்தினார். கம்பளியில் ஆட்சி செலுத்திய மாலிக் முஹம்மது இஸ்லாமிய தலைவனுக்கு எதிராக கலகம் செய்து. துக்ளக் முகமதுவின் மேலாண்மையை முதலில் ஒப்புக் கொண்ட ஹொய்சாள மன்னனாகிய மூன்றாம் வல்லாளதேவன் நாட்டின் மீது படையெடுத்தான்.
இவ்விதமாக தீவிரமான எதிர்ப்புகளுக்கு இடையில் இஸ்லாமிய ஆட்சியை நிலைநிறுத்த முடியாது என உணர்ந்த, மாலிக் முஹம்மது டெல்லியில் ஆட்சி புரிந்த முகமது துக்ளக்கிற்க்கு பின் வருமாறு செய்தி அனுப்பினான். என் வசம் ஒப்படைக்கப்பட்ட நாட்டுமக்கள் எல்லோரும், எனக்கு எதிராக கலகம் செய்கின்றனர். அரசுக்கு சேர வேண்டிய வரிகளை கொடுக்க மறுத்து நான் வசிக்கும் கோட்டையை முற்றுகையிட்டு, உணவுப் பொருட்களும் நீரும் கிடைக்காமல் செய்து விட்டனர். எனக்கு உதவி செய்வார் ஒருவரும் இல்லை என்னை காப்பாற்றுங்கள். இந்த செய்திகளை கேட்டு துக்ளக் தம்முடைய அமைச்சர்களை அழைத்துக் கொண்டு.
இக்கஷ்டமான நிலையில் செய்யக்கூடியது என்ன என்று அறிந்து கொண்டு. அவர்கள் முன்பு கம்பி நாட்டை ஆண்ட கம்பளி தேவருடைய அலுவலர்கள் 6 பேர் சிறையில் இருப்பதே கூறி, அவர்களில் தகுதியுள்ள ஒருவனிடம் நாட்டை ஒப்படைக்கலாம் என கூறினர். கம்பிளியிருந்து கைதிகளாக கொண்டு வரப்பட்ட ஹரிஹரன், புக்கன் என்ற சகோதரர்கள் இருவர். இவ்விருவரும் கம்பிளிராயனுடைய அமைச்சராகவும், கருவூல அதிகாரியாக இருந்தனர் என்று கேள்வியுற்று. இவ்விரண்டு பேரிடமும் நாட்டை ஒப்படைத்து செய்ய தகுந்த செயல் செய்து முடிவிற்கு வந்தார்.
இவ்வாறு கைதிகளாக இருந்த ஆறு பேர்களும் விடுதலை செய்யப்பட்டு, அரிஹரன் கம்பள நாட்டு அரசனாகவும், புக்கன் கருவூல அதிகாரியாக அமர்த்தப்பட்டு. பின்னர் தக்க பாதுகாப்புடன் இவ்விருவரும் டெல்லியிலிருந்து ஆனைக்குந்தி நாட்டின் ஆட்சியை மேற்கொண்டனர். கலகம் செய்த மக்களும் மனம் வந்து இவ்விருவரையும் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். மாலிக் முஹம்மது ஆட்சிப் பொறுப்பை விட்டு நீங்கியதை குறித்து மகிழ்ச்சி அடைந்து. ஆனைகுந்தியை விட்டு டெல்லிக்கு சென்றான்.
விதமாக நூனிஸ் என்பவருடைய வரலாற்றில் இருந்து அறிய முடிகிறது. ஆனால் இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் ஹரிஹரனும் இஸ்லாமிய சமயத்தை சார்ந்து இருக்கும் படி வற்புறுத்தப் பட்டனர் என்று கூறுகிறார்கள். ஆனால், நூனிஸ் என்பவருடைய வரலாற்றுக் குறிப்புகளில் இச்செய்தி காணப்படவில்லை. ஆனால் இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களிடம் இந்தியா பரம்பரைச் செய்தி ஒப்புக்கொள்ளும் ஒரு செய்தி என்னவென்றால், விஜய நகரம் என்ற புதிய அரசையும் நகரத்தை ஹரிகரனும்,புக்கனும் தோற்றுவித்தனர் என்பதாகும். ஹரிஹரன், புக்கன் இருவரும் ஆந்திர,இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் கன்னட இனத்தை சேர்ந்தவர்கள் என்றும் விளங்கவில்லை. சங்கம வம்சத்தில் ஐந்து புதல்வர்களில் முதலாம் இருவராக ஹரிகரனும்,புக்கனும் முதலில்ஆனைகுந்திக்கு தலைவராக பின்னர், விஜயநகரப் பேரரசு தோன்றுவதற்கு காரணமாக இருந்தனர் என்று அறியமுடிகிறது.
தென்னிந்தியாவில் மற்ற பகுதிகளில் துக்ளக் பேரரசின் நிலைமை
இஸ்லாமிய ஆட்சியை முழுவதும் அழிப்பதற்காக புரோலைய நாயக்கருக்கு பிறகு காப்பைய நாயக்கர் என்பவர் ஆந்திர நாட்டில் இருந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். அதில்,
- தென் இந்திய தேசிய இயக்கம் நிலையானதாக இருக்க, அன்னிய நாட்டு இஸ்லாமியர்களும், இஸ்லாம் சமயத்தை தழுவிய இந்திய முஸ்லிம்களும், இவ்வியக்கத்தை அழித்து விடாமல் இருக்க. வாரங்கல் நாட்டிலும் இஸ்லாமிய ஆதிக்கம் நிலை பெற்றிருக்கும் பல முயற்சிகளை காப்பைய நாயக்கர் கை கொண்டதாக தெரிகிறது.
- மூன்றாம் வல்லாலன் தேவனுடைய உதவியால் வாரங்கலில் ஆளுநராக பதவி வகித்த மாலிக்மாக்புல் என்பவரை தோற்கடித்து. அவர் வாரங்கலை விட்டு தேவகிரிக்கு சென்று பின்னர் டெல்லிக்கு சென்று விட்டதாகவும், இச்செயலால் தெலுங்கானா நாடும், இஸ்லாமிய ஆட்சியில் இருந்து விடு பட்டதாகவும். பின்னர் மூன்றாம் வல்லாளதேவன், காப்பைய நாயக்கரும் சேர்ந்து. தமிழ்நாட்டில் தொண்டைமண்டல பகுதியான ஏகாம்பரநாதர் சம்புவராயருக்கு உதவி செய்து சம்புவராய அரசை தோற்றுவித்ததாக நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கூறுகிறார்.
- ஆனால் சம்புவராயர் தலைவராகிய வென்று மண்கொண்ட சம்புவராயர் பிறர் உதவியின்றி தொண்டை மண்டலத்திலிருந்து, இஸ்லாமிய படைகளை வென்று வென்று மண்கொண்டான் என்ற பட்டத்தை வைத்துக் கொண்டார்.
- ஏனென்றால், வட ஆற்காடு மாவட்டத்தில் கீழ்மின்னால் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டு. இக்கிராமத்தில் இஸ்லாமிய படைகளைத் துரத்தி விட்டு அதை அஞ்சினான் புகலிடம் ஆக வென்று மண்கொண்டான் செய்ததாக கூறப்படுகிறது. படை வீடு என்ற இடத்தை தலைமையிடமாக கொண்ட வென்று மண்கொண்டான் ராஜ கம்பீர ராஜ்யம் என்ற சிற்றரசு ஏற்படுத்தினான். இது வடக்கு பகுதியில் யாதவராயர்கள் என்னும் குறுநில தலைவர்கள் திருப்பதியை தலைமைநிடமாக கொண்ட சிற்றரசை அமைத்தான்.
மதுரை சுல்தானிய அரசு
. துக்லக் பேரரசின் 23 மாகாணங்களில் பாண்டிய நாடும் ஒன்றாக ஆனது. ஏனென்றால், 1327 ஆம் ஆண்டு பாண்டிய நாட்டின் மீது துக்ளக் படையெடுத்து வெற்றி பெற்றதால் தான். இந்த மாகாணத்திற்கு ஜலாலுதீன் என்பவன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1330,33,34 ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட முகமது துக்ளக்கின் நாணயங்கள் மதுரையில் கிடைக்கப்பட்டது. ஆகையால் 1330 ஆம் ஆண்டு வரை ஜலாலுதீன் பேரரசுக்கு அடங்கி ஆட்சி செய்ததாக அறியமுடிகிறது. கர்ஷாப் என்ற தேவ கிரிய ஆளுநர் சுதந்திர ஆட்சி பெற முயன்றதும், ஏகாம்பரநாதர் சம்புவராயன் தொண்டை மண்டலத்தில் தன்னாட்சி பெற்றதையும், கேள்வியுற்ற ஜலாலுதீன் துக்ளக் அரசுக்கு எதிராக கலகம் செய்து தன் பெயரில் நாணயங்களை அடித்து. இறைமை அதிகாரங்களை கைக்கொண்டான். 1335ஆம் ஆண்டு ஜலாலுதீன் தன் பெயருடன் கொண்ட நாணயங்களை, அவ்வாண்டு முதல் மதுரை சுல்தான் அரசு தோன்றியது என அறியமுடிகிறது.
சையாஉதீன் பரானியும், முகமது காசிம் பெரிசாவும் இந்த ஜலாலுதீனை அகசன் ஷாவைச் சையது ஹாசன், சையது ஹீசேன் என்று அழைத்தனர். மதுரையில் ஜலாலுதீன் சுதந்திரமடைந்த்தை கேள்வியுற்ற முகமது துக்ளக் ஒருசேனையை அனுப்பி, அவரை தண்டிக்க நினைத்த போது அக்காரியம் நடைபெறவில்லை. நம்முடைய பேரரசின் பல பகுதிகள் கலகங்கள் தோன்றியமையால் எல்லா பகுதிக்கும் சென்று கலகத்தை அடக்குவது எப்படி என்று தெரியவில்லை. ஜலாலுதீனுடைய மகன் இப்ராஹிம் என்பவர் முஹம்மதிடம் கருவூல அதிகாரியாக அலுவல் பார்த்தார். தகப்பனுடைய அடங்காதனத்தால் மகனுடைய உயிருக்கு உலை வைத்தது. இப்ராஹிம் கைது செய்யப்பட்டு இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்டான். மொராக்கோ நாட்டில் இருந்து துக்ளக் முகமதுவின் அரசுக்கு வந்த இபன்பதூதா என்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் ஜலால்உதீனுடைய மருமகன் ஆவார்.
ஜலாலுதீன் அகசன்ஷா 5 ஆண்டுகள் சுல்தான் பதவி வகித்த பிறகு, அலாவுதீன் உதாஜி என்ற இஸ்லாமிய பிரபு ஒருவரால் கொலை செய்யப்பட்ட உயிரிழந்தார். அலாவுதீன் உதாஜி ஓராண்டு காலம் மதுரை சுல்தானாக ஆட்சி செய்தான். மதுரை சுல்தான் அரசை எப்படியாவது அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி திரிந்த மூன்றாம் வல்லாளதேவன் தீவிர முயற்சியை மேற்கொண்டான். அலாவுதீனுக்கும் மூன்றாம் வல்லாள தேவனுக்கும் திருவண்ணாமலைக்கு அருகில் போர் நடந்தது. அப்போரில் வல்லாளன் வாலுக்கு பலியானார் என்று எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் கூறுகிறார். உதாஜி இறந்த பின்பு மதுரையில் இருந்த இஸ்லாமிய பிரபுக்கள் அவருடைய மருமகன் குத்புதீன் என்பானை சுல்தானாக ஏற்றுக்கொண்டனர்.
இருப்பினும் பிரபுக்கள் வெறுக்கத்தக்க வகையில் குத்புதீன் தன்னுடைய வாழ்க்கை நடத்தியதால். அவன் பதவி ஏற்ற 40 நாட்களுக்குள் உயிர் இறக்கும்படி ஆகிவிட்டது. அவனுக்கு பின்பு கியாத்உதீன் தமகன்ஷா என்பவன் மதுரையில் சுல்தானாக பதவி ஏற்றான். அவன் சாதாரண போர் வீரராக இருந்து பின்னர் பதவியைக் கைப்பற்றினார். இபன்பதூதா வின் கூற்றுகளில் இருந்து இந்த கியாத்உதீன் என்பவன் ஈவிரக்கமற்ற கொடுங்கோல் மன்னன் என்று அறியமுடிகிறது. திருச்சிக்கு அருகிலுள்ள கண்ணனூர் குப்பத்தில் தங்கியிருந்த இஸ்லாமிய படைகளுக்கும், மூன்றாம் வல்லாளன் தேவனுக்கும் பெரும் போர் நடந்தது.
கண்ணனூர் முற்றுகை 6 மாதங்களுக்கு மேல் நீடித்தது. மூன்றாம் வல்லாளன் வெற்றி பெறும் நிலையில், இஸ்லாமிய வீரர்களின் வார்த்தையை நம்பி தன்னுடைய கவனக்குறைவால் உயிரிழக்க நேரிட்டது. கியாத்உதீன். வல்லாளனுடைய சேனைகள், மற்ற செல்வங்கள் போன்றவற்றை கைப்பற்றினான். அநியாய முறையில் அவனைக் கொலைசெய்தான். வயதுடைய தலையற்ற உடல் மதுரை நகரத்தின் சுவர் ஒன்றில் தொங்க விடப்பட்டு இருந்தது நான் பார்த்தேன் என இபன்பதூதா கூறுகிறார். தென்இந்தியா இஸ்லாமிய ஆட்சியில் இருந்து விடுபட்டு சுதந்திரம் அடையவேண்டும் என்று பெரும் தியாகம் செய்து உயிர் இருந்தார்.
கியாத்உதீனுக்கு பெரிய வெற்றி கிடைத்த போதும், இவற்றுக்குப் பிறகு நீண்ட நாட்கள் உயிரோடு இருக்கவில்லை. கண்ணனூரில் இருந்து மதுரைக்கு திரும்பி சென்று அவருடைய குடும்பத்தினர் விஷபேதியால் இறந்தனர். இரண்டு வாரங்கள் கழித்து கியாத்உதீனும் இறந்து போனான். அதுக்கு பிறகு டெல்லியில் துக்ளக் முகமதுவின் தொண்டனாக இருந்த, நாசரருதீன் என்பவன் மதுரை சுல்தானகம் பதவி ஏற்றான். தான் சுல்தான் பதவி அடைவதற்கு உதவியாக இருந்தவர்களுக்கு பொன்மாரி பொழிந்து. தன் பதவியை நிலை உள்ளதாக ஆக்கிக்கொள்ள முயற்சி செய்தான்.
அப்போது மதுரையில் தங்கியிருந்த இபன்பதூதாவிற்க்கு 300 பொன் நாணயங்களும், விலையுயர்ந்த ஆடைகளும் இனாமாகக் கொடுத்தார். இந்த நாசர்உதீன் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி புரிந்து, தன்னுடைய உறவினர் ஒருவரை கொன்று விட்டு, பின்னர் அவனுடைய மனைவியை மணம் செய்து கொண்டான். கி.பி 1344 முதல் 1456 வரை மதுரையை ஆண்ட சுல்தான் களுடைய நாணயங்கள் கிடைக்கவில்லை. நாசர்உதீனுக்கு பிறகு குர்பத்ஹாசன்கங்கு மதுரையில் சுல்தானாக பதவி ஏற்றான். இவன் சுல்தான் பதவி வகிப்பதற்கு ஏற்ற திறமையற்றவன் என்று, தன்னுடைய பதவிக்கு பெரிய தோல்வியைத் தேடித் தந்தான். 1352 ஆம் ஆண்டில் விஜயநகர அரசனாகிய முதலாம் புக்கன் மதுரை நோக்கிப் படையெடுத்துச் சென்று இவன் ஆட்சி அழித்ததாக கோமல் செப்பேடு கூறுகிறது.
இருப்பினும் மதுரை சுல்தான் அரசு உடனே அழிந்துவிடவில்லை. 1371 ஆம் ஆண்டில் முதலாம் புக்கதேவராயருடைய மகன் குமாரகம்பணன் என்பவர் எவ்வாறு மதுரையில் சுல்தான் பதவி வகித்த பக்ருதீன் முபாரக்க்ஷா என்பவனை வென்று, மதுரை மண்டலத்தை விஜயநகர அரசுடன் இணைத்தார் என்பதை பல வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது.
விஜயநகரத்தின் தோற்றம்
. சங்கம வம்சத்து ஹரிஹரனும், புக்கனும் விஜய நகரத்தை எவ்வாறு அமைத்தனர், பின் எவ்வாறு பேரரசாக வளர்ச்சி அடையும்படி செய்தார்கள் என்றும். இவர்கள் கன்னட இனமா இல்லை, ஆந்திர இனத்தை சேர்ந்தவர்களா என்று ஆராய்ச்சியாளர்கள் பலரும் வாதம் புரிகின்றனர். ஒரு மறைந்து போன பேரரசு என்ற விஜயநகர வரலாற்று நூலின் வழியே இராபர்ட்சிவல் என்பவர், இந்நகரம் அமைவதற்கு ஏழு வகையான வரலாற்று உண்மைகளை தொகுத்துக் கூறுகிறார். அதிலிருந்து முடிவாக பல செவிவழிச் செய்திகளை ஆராய்ந்து. ஹரிஹரனும், புக்கனும் குரும்பர் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வாரங்கல் நாட்டு அரசனிடம் அலுவல் பார்த்தார்கள்.
1323 ஆம் ஆண்டு வாரங்கல் கோட்டை, துக்ளக் முகமதுவால் அழிவுற்ற பிறகு, ஆணை குந்தி கம்பலிராயனிடம் அலுவலில் அமர்ந்தனர். 1327 ஆம் ஆண்டு பகாவுதீன் என்ற இஸ்லாமிய தலைவனுக்கு புகலிடம் அளித்து. அவனுக்காக கம்பலிராயன் உயிர் நீத்த பிறகு. மாலிக்நிபி என்பாரிடம் ஆனைக்குந்தியும், கம்பலி நாடும் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அந்த நாட்டு மக்கள் மாலிக்நிபி என்பவனுக்கு அடங்காமல் கலகம் செய்தனர். ஆகையால், டெல்லி சுல்தான் ஆகிய முகமது துக்ளக் அஹிகரன், புக்கன் என்பவரிடம் அதிகாரத்தை ஒப்படைத்து அரசராகவும், அமைச்சராகவும் பதவி வகித்தார், என்று இராபரட் சிவெல் தனது கருத்தை முன்வைக்கிறார்.
ஹரிஹரன், புக்கன் ஆகிய இருவரும் கன்னடர்களா, ஆந்திரர்களா என்பதை பற்றி கூறவில்லை. அவ்விருவரும் முதலில் இஸ்லாமிய சமயத்தை சார்ந்து, பின்னர் மாதவ வித்தியாரணுடைய போதையினால் இந்து சமயத்தில் சேர்ந்தவர் என்றும் கூறவில்லை. இவைகள் விஜயநகர வரலாற்றை எழுதுவதற்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்படும் நூனிஸ் நூலிலும் இதை பற்றி குறிப்பிடவே இல்லை. ஆனால் சிவெல்லுக்கு பின் விஜயநகர வரலாற்று கல்வெட்டுகள், இலக்கிய சான்று மூலம் இந்திய வரலாற்று அறிஞர்கள் விஜயநகரத்தை அமைத்த ஹரிஹகரன், புக்கன் என்ற இருவரும் ஆந்திர்ரா, கன்னடியர் என்று கேள்வி எழுப்பினர். அவர்களில் ஈராஸ் பாதிரியார், பி.ஏ. சாலட்டூர், பி.தேசாய், திரு சத்தியநாதய்யர் முதலியோர் அரிகரன் புக்கன் என்று இருவரும் கன்னட இனத்தை சேர்ந்தவர்கள் என்றும், மூன்றாவது, நான்காவது தேவர்களுக்குப் பின் ஹொய்சாள நாட்டிலும், மற்ற பகுதிகளிலும், விஜயநகரப் பேரரசை பரவும்படி செய்தனர் என்றும் கூறுவர்.
இவர்களுக்கு முக்கிய ஊன்றுகோலாக இருப்பது முகமது காசிம் பரிஸ்டான் வரலாறு செய்தி ஆகும். அதில் மூன்றாம் வல்லாளதேவன் தன்னுடைய நாட்டின் வடக்கு எல்லையை இஸ்லாமி படையெடுப்புகளில் இருந்து, காப்பதற்கும் துங்கபத்திரா நதியின் தென்கரையில் தன்னுடைய மகன் வீரவிஜய வல்லாளன் என்பவனுடைய பெயரில் விஜயநகரத்தை அமைத்தார் என்று கூறியுள்ளார்.இந் நகரமே பிற்காலத்தில் விஜயநகர பேரரசாக வளர்ச்சி அடைந்தது. விருபாட்சபுரம்,ஹோசப் பட்டணம்,விந்தியா நகரம், விஜய நகரம் என்ற பலபெயர்களில் இப்போது ஹம்பி என்று வழங்கப்படும் இடத்தைக் குறிக்கிறது.
1339 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட ஹொய்சால கன்னடக் கல்வெட்டு ஒன்று, மூன்றாம் வல்லாளதேவன் விருபாட்சபுரத்திலிருந்து மகிழ்ச்சியுடன் ஆட்சி செலுத்தியதாக கூறுகிறது. ஹம்பி விருபாட்சர் கோயிலில் காணப்படும் சாசனத்தில் அந்நகரம் ஹொய்சாள நாட்டில் அமைந்துள்ளதாக கூறுகிறது. 1348 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட ஹரிஹரனுடைய சாசனத்தில் வித்யா நகரம் அவருடைய தலை நகராகக் கருதப்பட்டது. முதலாக புக்கதேவன் ஹொய்சாள வம்சத்தையும், அரசையும் தாங்குவதற்கு தோன்றிய தூண் போன்றவர் என்றும், 1352 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. சங்கம வம்சத்து அரசர்கள் தொடக்கத்தில் ஹம்பியில் உள்ள விருபாட்சர் கோயிலை தங்களுடைய குல தெய்வக் கோயிலாக கருதினர். அவர்களின் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் விருபாட்சர் என்ற பெயரே இறுதியில் எழுதப்பட்டது. இது போன்ற சில யூகங்களை வைத்து சங்கம வம்சத்து ஹரிஹரனும், புக்கனும் கன்னட அல்லது கர்நாடக இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது.
பல கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் சங்கமனுடைய புதல்வர்கள், ஹொய்சாள மன்னர்களுக்கு அடங்கி ஆட்சி செய்தவர்கள் என்று கூறுகிறது. முதலாம் புக்கன் ஹொய்சாள மன்னர்களிடம், மகாமண்டலேசுவர்ராக இருந்ததையும் கூறுகிறது. மதுரை தலவரலாறு என்ற நூலில் குமார கம்பண்ணன் மைசூர் ஹொய்சாளவம்சத்து அரசர்கள் என்றும் அழைக்கப்படுகிறான். மூன்றாம் வல்லாளதேவனும், வாரங்கல் கிருஷ்ணப்ப நாயக்கரும் சேர்ந்து, இஸ்லாமிய படையெடுப்புகளை முறியடிப்பதற்கு திட்டங்களை வகுத்தனர் என்று பெரிசா கூறுகிறார். சங்கம் வம்சத்து அரசர்கள் ஹொய்சாள மன்னர்களுடைய வாரிசுதாரர்கள் என்று தங்களை கருதினார்கள்.
ஆனால், இது போன்ற கொள்கைகளை மறுத்து ஹரிகரன், புக்கன் கன்னட நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்றும்,மூன்றாம் வல்லாள தேவனுக்கு வீரவிஜய விருப்பாட்ச என்ற மகனே இல்லை என்றும், விஜயநகரம் அவர்களால் அமைக்கப் படவில்லை என்றும் வாதித்து. வேறு ஒரு கொள்கையை பல வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அவர்களில் முக்கியமாக திரு, வெங்கடராமன் ஐயா, நீலகண்ட சாஸ்திரி, J,D.M டெரட், என்.வெங்கடராமன் ஐயா போன்றோர் ஆவர். விஜயநகரப் பேரரசின் தோற்றம் என்ற நூலில் முதலாம் ஹரிகரனுடைய பாட்டன் புகராயலு உடையார், 1314 ஆம் ஆண்டு ஆந்திர அரசனான இரண்டாம் பிரதாப ருத்திரனுக்கு அடங்கி, நெல்லூர் மாவட்டத்தின் ஒரு பகுதியில் குறுநில மன்னனாக ஆட்சி செய்தான். அவருடைய தகப்பன் தான் சங்கமன் 5 மக்கள் இவனுக்கு இருந்தனர் என்ற செய்தியை தவிர, வேறு எந்த செய்தியும் கிடைக்கவில்லை.
1344 ஆம் ஆண்டில் ஆந்திரப் பகுதியில் ஆட்சி செலுத்திய கான்யாநாயக் என்பவருக்கு, முதலாம் ஹரிகரன் நெருங்கிய உறவினன் என்பதும் அறிய முடிகிறது. கம்பலி நகரத்தை முஹம்மது தம் வசப்படுத்திய பிறகு ஹரிகரன், புக்கன் என்ற இரு சகோதரர்களும், இஸ்லாமிய சமூகத்தில் சேரும்படி வற்புறுத்தப் பட்டனர். பின்பு அவ்விருவரும் கம்பளி நாட்டிற்கு தலைவராகவும், அமைச்சராகவும் அமர்த்தப்பட்டனர். ஆனைகுந்தி என்ற இடத்தைத், தலைநகராகக் கொண்டு தொடக்கத்தில் காம்பிலி நாட்டை ஆண்டுவந்தனர். 1344 ஆம் ஆண்டிற்கு முன் இஸ்லாமிய சமயத்தை விட்டு விஜயநகரத்தை அமைத்து மாதவவித்யாதரன் ஒருவருடைய அருள் பெற்று ஆட்சி செலுத்தினர் என்று கூறுகிறவிட்டு.
அது மட்டுமல்லாது, ஹரிஹரனும் புக்கனும் தங்களுடைய கொடியில், ஹொய்சாள மன்னர்களுடைய அரசு சின்னங்கள் ஆகிய புலி உருவத்தையும், கண்ட பேரண்ட பச்சியையும் கொள்ளாது, காகதீயர்களுடைய உருவமாக்கிய வராக உருவத்தையும், தலைகீழாக நிறுத்தப்பட்ட வாலின் உருவத்தையும் சூரிய, சந்திர, பிம்பங்களை கொண்டு வரைந்துள்ளனர். காகதீய மன்னர்கள் அமைத்த நாயகதான முறையையும், வராகன் என்ற நாணயத்தையும், அரசியல் முறையில் பல அம்சங்களையும் மேற்கொண்டனர்.
ஆகையால் விஜயநகரம் தோற்றுவித்த சங்கமம் வம்சத்தினர், ஆந்திர இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுவார். நீலகண்ட சாஸ்திரியாரும், சோமசேகர சர்மாவும் இவர் இக்கூற்றை ஆதரிக்கிறார்கள். ஹொய்சாளர்களை பற்றி ஆங்கிலத்தில் எழுதிய JDM டெரட் என்பவர் இக் கொள்கையை வலியுறுத்தி பின்வருமாறு கூறுகிறார். மூன்றாம் வல்லாள தேவனுடைய மகன் விஜயன் என்பவனுடைய பெயரில் விஜய நகரம் அமைக்கப்பட்டது என்று நம்ப தக்க ஒன்று.ஏனென்றால் சென்னபசவராய காலம் ஞானம் என்ற நூலில் கூறப்பட்டதை பெரிஷ்டாவும் கூறுகிறார். விஜயநகரம் மூன்றாம் வல்லாளனால் அமைக்கப்பட்டது என்றும் கூறுவார். தேவனுக்கு விஜயன் என்ற மகன் இருந்ததற்கு ஏற்ற வரலாறு ஆதாரங்கள் கிடையாது. இராபரட் சிவெல் கூறியுள்ள ஏழு வகையான ஆதாரங்களில் பெரும்பாலானவை வாரங்கல் நாட்டு காகதீய அரசனுடன் சம்பந்தமுடையவர்கள் எனக் கூறுகின்றன. கம்பிலி தேவனுடைய அரசவையில் இவர்கள் கருவூல அதிகாரியாக இருந்தவர் என்று உறுதியாகிறது.
ஹரிகரனும்,புக்கனும்,கன்னடியர்களா,ஆந்திரர்களா என்பதை கல்வெட்டு உதவியுடனும், இலக்கிய உதவி கொண்டும் செய்ய முடியாது. ஏனென்றால் இவ்விருவரும் இவ்விரு கலாச்சாரத்தையும் போற்றியதால். விஜயநகர அரசானது திராவிட மொழியையும்,கலாச்சாரத்தையும், கலைகளையும் நன்கு போற்றி வளர்த்து.
விஜயநகரம் அமைக்கப்பட்ட இடம்:
வரலாற்று ஆசிரியர்கள் பலர் விஜயநகரம் 1336 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்றும், அது அந்த நகரத்தை அமைத்தவர்கள் கன்னடியர்களா,ஆந்திரர்களா என்ற கருத்து பலவாறு நிகழ்கிறது. இந்நகரமெங்கு அமைக்கப்பட்டது, எப்போது அமைக்கப்பட்டது என்ற கேள்வி இன்றும் நிலவுகிறது. தற்போதுள்ள துங்கபத்திரா நதியின் குறுக்கே அணைக் கட்டு கட்டப்பட்டுள்ளது. அந்த நதியின் நீர் ஒரு பெரிய சமுத்திரம் போன்றும் ஹாஸ்பெட் என்ற ஊரில் தேங்கியுள்ளது. ஹாஸ்பெட் என்ற ஊர் ஜோசப் பட்டினம் என்று தற்போது அழைக்கப்படுகிறது. ஹாஸ்பெட்டுக்கு ஐந்து மைல் தூரத்தில் விஜயநகரத்தின் அழிவுச் சின்னங்கள், துங்கபத்திரா நதியின் தென்கரையில் உள்ள ஹம்பி என்ற இடத்தில் காணப்படுகிறது. வடக்கு கரையில் ஹம்பியில் காணப்படும் அழிவுச் சின்னங்கள் எதிர்புறமாக ஆணைக்குந்தி எனும் ஊர் அமைந்துள்ளது. ஆனைகுந்திக்கு கிழக்கு பக்கத்தில் துங்கபத்திரையின் தென்கரையில் ஊர் அமைக்கப்பட்டுள்ளது. கம்பெனிக்கு தெற்கே துறை வாடி, குமாட்டா என்ற இடங்கள் உள்ளது.
நூனிஸ் என்பவர் தன்னுடைய வரலாற்றில் விஜயநகரத்தை அமைப்பதற்கு ஒரு காரணத்தை கூறியுள்ளார். ஆனைகுந்தி என்ற இடத்தை ஆதாரமாகக் கொண்ட விஜயநகரப் பேரரசு வளர்வதற்கான சில உண்மைகள் தெரிகிறது. ஹரிஹரன் , புக்கன் ஆனைகுந்தியில் தங்கள் ஆட்சியை நடத்திய போது, துங்கபத்திரை நதியைக் கடந்து அதற்கு தென்கரையில் உள்ள காடுகள் நிறைந்த இடத்தில் வேட்டையாட செல்வர். வேட்டை நாய்களைக் கொண்டு விலங்குகளை விரட்டிப் பிடித்து வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டனர். அவர்களுடைய வேட்டை நாய்கள் புலிகளையும், சிங்கங்களையும் விரட்டும் தன்மை கொண்டது. இருப்பினும் ஒரு நாள் அந்த வேட்டை நாய்களுக்கு எதிராக சிறிய முயல் ஓடி வந்து, அந்த வேட்டை நாய்களுக்கு அஞ்சி ஓடாமல் எதிர்த்து நின்று போரிட தொடங்கியது. வேட்டை நாய்களும் முயலுக்கு அஞ்சி பின் வாங்கியது.
இந்த அதிசயத்தை கண்ட அரிகரன், புக்கன் சாதாரணமான முயலால், எப்படி வல்லமை பொருந்திய வேட்டை நாய்களை எதிர்த்து போர் புரியமுடிந்தது. அதனிடம் ஏதோ ஒரு சக்தி உள்ளது என்று கருதினர். பின்பு ஆணை குந்தியை திரும்பும்போது துங்கபத்திரை ஆற்றின் கரையில் முனிவர் ஒருவரை கண்டு முயலின் தன்மை கூறினார். அந்த முனிவர் அந்த இடத்தை காட்ட சொன்னார். அவ்விடத்தில் புதியதோர் நகரை அமைத்து அதற்கு விஜய நகரம் என்ற பெயரிடுமாறு அவர் கூறினார். பின்னர் பாமினி சுல்தான்கள் உடைய தலைநகரமாகிய பீடார் நகரத்திற்கும், தமிழ்நாட்டில் பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மு நாயக்கர் அரண்மனை அமைப்பதற்கும். இதே போன்ற கதைகள் வழக்கத்தில் இருந்தது. ஆனால் வேட்டை நாய்க்களை முயல் துரத்தியடித்த இடத்தில் கோட்டை கொத்தளங்களை அமைத்தல். அதை ஒருவராலும் பிடிக்க முடியாது என்பதாக இருக்கலாம்.
இது இந்து சமயத்தை போற்றி காப்பாற்றுவதற்காக விஜயநகரம் தோன்றியது என்றும் உண்மையை மறக்க முடியாது. அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்த முனிவர் மாதவ வித்தியாரண்யராக தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அவர் துங்கபத்திரை நதிக்கரையில் வரலாற்றுப் பெருமை, இதிகாச பெருமையை நன்கு அறிந்தவர், விஜயநகரம் தோன்றுவதற்கு இவ்விடமே சிறந்த இடமாகும் என்றும் கூறினார். ஏனென்றால், இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன், அனுமன் ஆகிய சிறந்த வீரர்கள் வசிஸ்த கிஷ்கிந்த என்ற இடமே விஜயநகரம் அமைக்கப்பட்ட இடம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
துங்கபத்திரா நதியின் வடகரையில் உள்ள ஒரு சுனைக்கு பம்பாசரஸ் என்ற பெயர் வழங்கப்பட்டது. ஸ்ரீராமன் சீதையை தேடிக் கொண்டு வந்த போது இந்தப் பம்பாசரஸ் குளக்கரையில் தங்கிய பின் அனுமனையும், சுக்ரீவனையும் கண்டு அவருடன் நட்பு கொண்டதாக கிஷ்கிந்தையை இவ்விடம் ஆகும். இது நகரைச் சூழ்ந்த மலைகள், ரீஷியமுக பர்வதமும், மதங்க பர்வதம், மலைய வந்த குன்று போன்றவை ராமாயண இதிகாசத்தில் வழங்கப்படும் பெயர்கள் ஆகும். வாலி, சுக்கிரீவன் அனுமன் ஆகிய மூவரும் வசித்த இடம் ஆதலால், மற்ற வானர வீரர்கள் இருந்த இடங்கள் ஆகும். அங்கு காணப்படும் வானர வீர்ர்கள் இதிகாச வீரர்களின் வழியில் வந்தவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
இக்கிராமங்களில் ஆஞ்சநேயரை வழிபடும் தெய்வமாக கொண்டிருக்கின்றனர். அந்த சிதறிக்கிடக்கும் கருங்கற்கள் இலங்கை செல்வதற்கு ஆணை அமைப்பதற்காக வானரங்கள் அமைக்கப்பட்டது என்றும் கருதுகிறார்கள். ஆதலால் இந்த இடம் சிறந்த இதிகாசமாக இராமாயணத்தோடு தொடர்புடையதாகவும், மதத்தில் சைவ, வைணவ சமயங்களில் உணர்ச்சி மேம்பட்டால் இவ்விடத்தை வித்யாரண்யர் விசயநகராக அமைக்கும்படி கூறி இருக்கலாம் என்றும், முயலானது வேட்டை நாய்களை விரட்டி அடித்தது போன்று இந்த அரசர்கள் இஸ்லாமிய படைகளை விரட்டியடித்து வெற்றி பெற வேண்டும் என்பதும் , இது அவருடைய கணிப்பாகும் என்றும் கூறுகிறார்கள்.
விஜயநகரம் தோன்ற இவ்விதிகாச சான்றுகளும் காரணமாக இருந்தது. விஜயநகர நாரத்தை வடநாட்டு இஸ்லாமியர்கள் உடைய குதிரை படைகளின் தாக்குதலில் இருந்து, படையெடுப்புகளில் இருந்து பாதுகாப்பதற்கு ஏற்ற இடமாக வித்யாரண்யர் எண்ணியிருக்கலாம். விஜய நகரத்துக்கு அருகில் துங்கபத்திரை நீரோட்டம் மிக வேகமாக இருந்ததாலும், சூழலியலும், கற்பாறைகள் நிறைந்து உள்ளதாலும், இஸ்லாமியர்களிடம் குதிரைப் படைகள் எளிதில் கடந்து வர முடியாது. இப்பகுதியில் மழை மிக குறைவாக இருந்தபோதும் மழை இல்லாமல் வளரக்கூடிய முட்செடியில் கொடிகளும் அதிகமாக உள்ளது. மக்களை விழுங்கிவிடும் முதலைகளும் நிரம்பியிருந்தன.
இதுபோன்ற இடர்பாடுகளையும், குன்றுகளையும், நிறைந்த இடங்களை கடந்து விஜயநகரத்தின் விரோதிகள் எளிதில் அகற்ற முடியாது என்ற எண்ணத்தோடு விஜயநகரம் தோன்றியது. அது மட்டுமல்லாது, விஜயநகரத்தை சூழ்ந்துள்ள இடங்கள் பழைய கற்களாக, புதிய கற்கால மக்கள் தங்கள் வாழ்க்கையை தொடங்கிய இடங்களாக எண்ணினர். தென் இந்திய வரலாற்றின் தொடக்கத்தில் வாழ்ந்த சாதவாகனர், பின்னர் சாளுக்கியர், இராட்டிரகூடர், யாதவர்கள் முதலிய இந்திய அரச வம்சத்தினர் உடைய ஆட்சியில் துங்கபத்திரை நதியானது வெற்றி அடங்கி இருந்தது.
வரலாற்றுச் சிறப்பு கொண்ட இந்த இந்துக்களின் வெற்றிக்கு அறிகுறியாக காணப்படும் விஜயநகரம் சிறந்த இடமாக கருதப்படுகிறது. சங்கம வம்சத்து அரசர்கள் வளத்தோடு இருந்த இடத்தை தேர்ந்தெடுக்காமல், இந்தஇடத்தை தேர்ந்தெடுத்து அவர்களின் உழைப்பால் பாலைவனத்தை சோலைவனமாக மாற்றியது சிறந்த எடுத்துக்காட்டாகும். ஆதிசங்கராச்சாரியார் இந்த நாட்டின் ஒற்றுமையை அத்வைத தத்துவத்தின் பெருமையையும் எடுத்துக்காட்ட, ஐந்து இடங்களில் ஐந்து மடாலயங்களை அமைத்தார். அவைகளில் இமயமலைச் சாரலில் அமைக்கப்பட்ட ரிஷிகேசம் என்னும் இடம் இந்தியாவில் சிரசையும், துவாரகை, ஜெகநாதபுரம் போன்ற இடங்களில் அமைக்கப்பட்டவை ஆகும். இரண்டு தோள்களையும் சிருங்கேரி, காஞ்சி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டவை என அறிஞர்கள் கூறுவர். இந்த ஐந்தும் ஒன்றாக கருதப்படும், சிருங்கேரி மடத்தின் தலைவராக விளங்கியவர் மாதவ வித்யாரண்யர் ஆவார். ஹரிகரனுக்கும், புக்கனுக்கும் கிடைத்த நற்பண்பு இவராலே. 1346 -47 ஆம் ஆண்டில் சங்கம சகோதரர்கள் அனைவரும் சேர்ந்து சிருங்கேரி மடத்திற்கு தானம் வழங்கியுள்ளனர். ஆதலால் தென்னிந்தியா முழுவதும் இஸ்லாமிய ஆட்சி பரவி விடாமல் தடுப்பதற்கு இந்து சமயத்தின் கோயில்களை , கலாச்சாரங்களை பேணிக்காக்க. அரச வம்சங்கள் அழிவுற்ற நிலையை காப்பாற்ற விஜயநகர அரசானது தோன்றியது.
சங்கம வம்சத்து தூண்கள்
மூத்தவன் ஹரிஹரன்
மூன்றாம் வல்லாளதேவனுக்கு அடங்கி ஆட்சி செய்த, சங்கமனுடைய புதல்வர்களான ஹரிஹரன், புக்கன், கம்பணன், மாரப்பன், முத்தப்பன் காணப்படுகின்றன என்பது கல்வெட்டுச் சான்றுகள் வழி அறியமுடிகிறது. முதலாம் புக்கன் ஹொய்சாளர்களுக்கு அடங்கிய மகாமண்டலேசுவரர் என அழைக்கப்பட்டான் .புக்கனின் மகன் குமார கம்பணன் ஹொய்சாள மன்னர்களுடைய வாயிற்காவலன் என்று மதுரை தல வரலாறு என்னும் நூல் கூறுகிறது. மூன்றாம் வல்லாளதேவனும் , வாரங்கல் நாட்டு கிருஷ்ணப்ப நாயக்கரும் சேர்ந்து, இஸ்லாமிய ஆட்சியை அழிப்பதற்கு முயற்சிகள் பல செய்தனர் என்று பெரிட்ஷாவும் கூறுகிறார்.
மூன்றாம் வல்லாளன் 1343 ஆம் ஆண்டில் கண்ணனூர்- குப்பம் என்னும் இடத்தில், மதுரை சுல்தான் கியாத்உதீன் என்பவரால் அநியாயம் கொலை செய்யப்பட்டார். அவருடைய மகன் நான்காம் வல்லாளன் திருவண்ணாமலையில் வாழ்ந்து சந்ததி இல்லாமல் இறந்துபோனான் என்று அருணாசல புராணம் கூறுகிறது. ஆகையால் மூன்றாவது, நான்காவது வல்லாள தேவர்கள் இறந்த பிறகு தங்களுடைய புதல்வராகிய அரிகரன், புக்கன் அவர்களுடைய வாரிசுகள் ஆயினர். திருவண்ணாமலையில் தங்கி அரசு ஆண்டது மூன்றாம் வல்லாளதேவன் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது.
இன்று காணப்படும் திருவண்ணாமலையில் உள்ள, அருணாசலேஸ்வரர் கோவில் பிரகார மதில் மூன்றாம் வல்லாளன் தேவன் தன் மகனுக்கு முடிசூட்டி விட்டு, மதுரை சுல்தான்கள் போரிடுவதற்கு சென்ற காட்சி சிற்பங்களாக பல இடங்களில் செதுக்கப்பட்டுள்ளது. அதனால் வடக்கு எல்லையில் கலகம் நேராதவாறு மூன்றாம் வல்லாளன், முதலாம் ஹரிஹரனை ஹோசப் பட்டணத்தில் மகாமண்டலீஸ்வரனாக நியமித்தான். 1340 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்றில், முதலாம் ஹரிஹரனுக்கு அடங்கி, குறுநில மன்னன் ஒருவன் வாதாபி நகரத்தின் ஒரு கோட்டை அமைத்ததாக காணமுடிகிறது. அரபி கடற்கரையோரமாக ஆட்சி செலுத்திய ஜலாலுதின் முகம்மது எனும் இஸ்லாமிய தலைவன் முதலாம் ஹரிஹரனுக்கு அடங்கி இருந்தான் என்று இபன்பதூதா கூறியுள்ளார்.
தம்முடைய தம்பி முதலாம் புக்கனுக்கு இளவரசு பட்டம் சூட்டி, அனந்தபூர் மாவட்டத்தில் குத்தி எனும் கோட்டையை பாதுகாக்கும் படி செய்தான். முதலாம் கம்பணர் உதயகிரிக்கு ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். மூன்றாவது தம்பியாக மாரப்பன் கொங்கண நாட்டை கடம்பர்களிடம் இருந்து கைப்பற்றினார். சந்திரகுத்தி, ஷிமோகா போன்ற இடங்களில் இவருடைய ஆட்சி நிலவியது. மதுரை சுல்தான் அரசின் மீது முதலாம் புக்கன் படையெடுத்தான் என்பதை தஞ்சை மாவட்டத்தில், மாயூரத்திற்க்கு அருகில் உள்ள கோமல் என்ற ஊரில் கிடைத்த, செப்பேட்டின் வழி அறியமுடிகிறது. இது 1350 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாகவும் கூறுகிறது. பிரோஸ்ஷா என்ற வரலாற்று எழுதிய ஷாம்சி-சிராஜ்-அபிப் என்ற வரலாற்று ஆசிரியர், புக்கன் என்ற இந்து தலைவன், குர்பத்ஹாசன் என்ற மதுரை சுல்தான் மீது படையெடுத்து வந்தான் என கூறுகிறது.
இந்த படை எழுச்சி கோமல் செப்பேட்டில் கூறப்பட்டதாகும். ஆனால் மக்களுடைய படையெடுப்பால் தமிழ்நாடு முழுதும் அவருடைய ஆட்சியில் அடங்கவில்லை. 1346 ஆம் ஆண்டு சிருங்கேரி சங்கர மடத்திற்கு சங்கமம் சகோதரர்கள் சேர்ந்து அளித்த சாசனத்தில், முதலாம் ஹரிகரன் மேற்குக் கடலில் இருந்து கிழக்கு கடற்கரை வரையும் ஆட்சி செலுத்தினான் என்று கூறுகிறது. அதுமட்டுமல்லாது, நூனிஸ் வரலாற்றாசிரியர் குறிப்பில் முதலாம் ஹரிஹரன் தேவராயோ என்று அழைத்து, 7 ஆண்டு ஆட்சி செலுத்தி நாட்டில் அமைதி நிலை நாட்டினார் என்று கூறுகிறார்.
பெரிஷ்டா, டபடாபா என்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள், பாமினி ராஜ்ய தலைவனான அலாவுதீன் ஹாசன் கங்குவிற்க்கும், முதலாம் ஹரகரனுக்கும், கடும் போர் நடந்தது, அப்போரில் பின்னர் தோல்வியுற்றார் என்றும் கூறுவார்கள். ஆனால் அப்போரையும்,பாமினி சுல்தானுடைய வெற்றியும் உறுதியா என்ற எந்த ஆதாரமும் இல்லை. முதலாம் ஹரிகரன் 7 ஆண்டு அரசாண்டார் என்ற நூனிஸ் கூற்று உண்மை இல்லை. ஏனென்றால், இவர்களுடைய கல்வெட்டு 1355 ஆம் ஆண்டுவரை கிடைத்துள்ளன.
இளையவனான புக்கன்
முதலாம் ஹரிகரனுக்கி பின்பு விஜயநகர அரசுரிமையை இளையவனான புக்கன் பெற்றான். தன் அண்ணன் ஆட்சியில் அடங்காப் பல நிலப்பகுதிகளை இவன் வென்கான் என நூனிஸ் விரிவாக கூறுகிறார். ஆனால், முதலாம் புக்கன் கலிங்க நாட்டையும், வென்று அடிமைப் படுத்தினார் என்று கூறுவது உண்மை இல்லை. ஏனென்றால், முதலாம் புக்கன் காலத்தில் பாமினி சுல்தானை அரசாண்டவர் முதலாம் முஹம்மது ஆவார்.
இவ்விரு நாடுகளுக்கும் பெரிய போர் தோன்றியது. பாமினி சுல்தான் தனக்கு தெலுங்கானா நாட்டிலிருந்து கிடைத்த ஓர் அரியணையில் அமர்ந்து ஒரு திருவிழா கொண்டாடியதாகவும், அத் திருவிழாவில் இன்னிசை அமைத்தவர்களுக்கு விஜயநகர பேரரசு சன்மானம் செய்ய வேண்டும் என்று ஒரு தூதனை அனுப்பியதாகவும் பெரிஷ்டா கூறுகிறார். புக்கன் அத்தூதுவனை அவமானப்படுத்தி அனுப்பினான். முகமது காசிம் பெரிஷ்டா, புக்கனை கிஷன்ராய் என்று அழைத்தார் என வரலாற்று ஆசிரியர்களை மிகவும் குழப்பியதாக அறிய முடிகிறது.
புக்க தேவன் தம்முடைய தன் பெரும் படையோடு துங்கபத்திரை நதியைக் கடந்து முதுகல்கோட்டையை முற்றுகையிட்டான். பாமினி அரசன் முதலாம் முகமது விஜயநகர படைகளுடன் பெரும் கோபம் கொண்டு போரிட்டபோது, புக்கன் தன்னுடைய குதிரை படைகளோடு அதோனி கோட்டைக்குள் புகுந்து அதனை சுற்றியுள்ள இடங்களை அழிக்கும்படி, மக்களை கொன்று குவிக்கும் படியும் உத்தரவிட்டான். 1367 ஆம் ஆண்டு கெளத்தால் எனும் இடத்தில் பாமினி சுல்தானுக்கும், விஜயநகர சேனைத் தலைவன் மல்லிநாதருக்கும், பெரிய போர் நிகழ்ந்தது. மல்லிநாதனை, பெரிஷ்டா ஹோஜிமால்ராய என்று கூறுகிறார்.
இப்போரில் மல்லிநாதர் தோல்வி கண்ட பின்பு புக்கனின் சேனைகளை விஜய நகரத்துக்குள் புகுந்தபடியால், அந்த நகரத்தை பாமினி படைகள் முற்றுகையிட்டனர். நகரத்தை சுற்றி வாழ்ந்த மக்கள் ஈவு இரக்கமில்லாமல் கொலை செய்யப்பட்டனர். புக்கதேவன் இசை வல்லுநர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டதாக பெரிஷ்டா கூறுகிறார். முகமது 1375 ஆம் ஆண்டு இறந்த பிறகு அவருடைய மகன் முஜாஹித்ஷா துங்கபத்திரை நதிக்கும், கிருஷ்ணா நதிக்கும் இடையில் இருக்கக்கூடிய இடைப்பட்ட நாடு, பாமினி ராஜ்யத்திற்க்கு உடையது என்று கூறி, மற்றொரு போரை தொடங்கினான்.
விஜயநகரத்தின் செல்வத்தையும், கோட்டை கொத்தளங்களையும், எடுத்துக்கொண்டு அந்த நகரத்தின் மீது படையெடுத்தான். நகரம் மிக பாதுகாப்போடு இருந்ததால் அதை முற்றுகையிட அஞ்சி படைகளுடன் கோட்டைக்கு வெளியே போரிட்டான், புக்கராயனை விஜய நகரத்திலிருந்து சேதுபந்தன ராமேஸ்வரம் என்ற இடம் வரை துரத்தி சென்று. பின்னர் அங்கிருந்து மீண்டும் துரத்தியதாக பெரிஷ்டா கூறுகிறார். இதில் உண்மை உள்ளதா என்று தெரியவில்லை.
சேதுபந்தனம் ராமேஸ்வரத்தில் ஒரு மசூதி கட்டியதாகவும், கூறப்படுகிறது. பின் மீண்டும் விஜயநகரத்தை முற்றுகையிட்டு அதில் வெற்றி பெறாமல் முகாஜித் உயிர் தப்பி தன் நாட்டிற்கு திரும்பிச் சென்றான். இப்போருக்கு பின் விஜயநகரத்தின் வலிமையை பெரிஷ்டா , “பாமினி சுல்தான்கள் வாளின் வன்மையால் விஜயநகர அரசர்களை அடக்க முயன்றபோது செல்வத்திலும்,நாட்டின் பரப்பிலும், அதிகாரத்திலும் விஜயநகர அரசர் மேன்மை பெற்று இருந்ததனர்” எனக் கூறுவதால், இதிலிருந்து முதலாம் புக்கன் ஆட்சியில் விஜயநகரம் மிக சிறப்போடு இருந்ததை அறிய முடிகிறது.
தமிழ்நாட்டில் பரவிய விஜயநகர ஆட்சி
தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் சம்புவராய மன்னராட்சியும், தெற்கு பகுதியில் மதுரை சுல்தான் ஆட்சியும், முதலாம் புக்கன் ஆட்சிக்கு முன் நிலவியது. இந்த இரு நாடுகளையும் வென்று விஜயநகர அரசோடு சேர்த்தது முதலாம் புக்கனுடைய மகனான கம்பண உடையாரான குமார கம்பணர் ஆவார்.. குமார கம்பணர் தேபாயி என்ற அரசிக்கு பிறந்தவர். கோலார் என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டின்படி குமார கம்பணர் முல்பாகல் ராஜ்ஜியத்திற்கு மகாமண்டலேசுவரராக நியமிக்கப்பட்டு. சம்புவராயர் உடைய நாட்டையும், மதுரை சுல்தான் உடைய நாட்டையும் வென்று விஜயநகர அரசர் சேர்க்கும்படி முதலாம் புக்கன் ஆணையிட்டார் என்று கூறுகிறது.
குமார கம்பணர் சம்புவராயர் உடைய ராஜ கம்பீர ராஜ்யத்தையும், மதுரை சுல்தான் அரசையும் வென்று அடக்கியதற்கும், தமிழ்நாட்டை விஜயநகர மகாமண்டலீஸ்வரனாக ஆட்சி புரிந்ததாக வரலாற்று ஆதாரம் உள்ளது. குமாரகம்பணின் முதல் மனைவி கங்கா தேவியார் எழுதிய மதுரா விஜயம் என்ற நூலிலும், ராஜநாத திண்டிமன் என்பவர் எழுதிய சாளுவ அப்யூதயம் என்ற நூலிலும், இலக்கிய வரலாற்று ஆதாரங்களாகும். சம்புவராயர் ஆட்சி காலத்திலும், குமாரகம்பண மன்னருடைய ஆட்சி காலத்திலும், பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களும் மிகவும் உதவுகிறது.
ராஜநாராயணன சம்புவராயர் உடைய 69 கல்வெட்டுகளும் குமார கம்பணர் உடைய 132 கல்வெட்டுகளும் சித்தூர், செங்கற்பட்டு, வடஆற்காடு தென்ஆற்காடு, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், ராமநாதபுரம் போன்ற மாவட்டத்தில் கிடைக்கிறது. இதுபோன்ற ஆதாரங்களின் வழியே தமிழ்நாட்டில், குமார கம்பணர் வெற்றி சிறப்பாக இருந்திருக்கும் என யூகிக்க முடிகிறது. செங்கற்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு போன்ற மூன்று மாவட்டங்களும் சம்புவராயர் உடைய ஆட்சியில் இருந்தது.
விரிஞ்சிபுரம், படைவீடு, காஞ்சிபுரம் ஆகிய இடம் சம்புராயருடைய முக்கிய நகரமாகும். ஏகாம்பரநாதர் சம்புவராயரும், அவருடைய மகன் ராஜ நாராயண சம்புவராயரும், இப்பகுதியில் இருந்த இஸ்லாமிய படைகளை வென்று ராஜ கம்பீர ராஜ்யம் என்ற நாட்டை அமைத்தனர். 1363 ஆம் ஆண்டு குமார கம்பணர் முல்பாகல் அல்லது காண்டகானனம் என்ற இடத்தில் தம்முடைய சேனையை தமிழ்நாட்டை நோக்கி படையெடுக்கும் செய்தனர். பாலாற்றை கடந்து விரிஞ்சிபுரம் என்ற இடத்தை கைப்பற்றி, படை வீட்டில் அமர்ந்து இருந்த ராஜ நாராயண சம்புவராயர் உடைய கோட்டையை முற்றுகையிட்டார்.
சம்புவராய மன்னனும் தோல்வியுற்று விஜயநகர அரசுக்கு கப்பம்கட்ட ஒப்புக்கொண்டான். சம்புவராய நாட்டின் ஆட்சியை கைப்பற்றி பல சீர்திருத்தங்களை செய்தான். குமார கம்பணன் காஞ்சியில் இருந்த போதே தமிழன்னை அவருடைய கனவில் தோன்றி மதுரையில், கொடுங்கோல் ஆட்சி புரிந்த சுல்தானை வென்று, தமிழ் நாட்டைக் கைப்பற்றும் படி செய்ய வேண்டும் என்று, கங்காதேவியினுடைய நூலான மதூர் விஜயம் கூறுகிறது. இஸ்லாமியர்கள் உடைய படையெழுச்சிகளாலும், மதுரை சுல்தான்களின் ஆட்சியாலும், தமிழ்நாட்டில் பல அவல நிலை ஏற்ப்பட காரணமாக இருந்தது.
சிதம்பரம் ஆனது மதுரை சுல்தான்கள் உடைய ஆட்சியால் புலிகள் வசிக்கும் காடாக மாறியது. திருவரங்கம் நாதருடைய ஆலயம் இடிந்த நிலையில் உள்ளது. ஆதிசேஷன் உடைய படங்கள்தான் அரங்கநாதனின் மீது வெயிலும் மழையும் படாமல் காப்பாற்றினார். அக்காலத்தில் கஜசூரனை வென்று அவருடைய தோலை ஆடையாக உடுத்திக் கொண்ட சிவபெருமான், கூடிய தளமாக திருவானைக்கா கோவில் கொண்டுள்ள பெருமான் எவ்வித ஆடை மற்று காணப்படுகிறார். இது போன்று பல தேவாலயங்கள், கற்ப கிரகங்களும், மண்டபங்களும், கோபுரங்களும் இடிந்து விழுகின்றன. இதன்மீது முற்ச் செடிகள், கொடிகள், மரங்கள் அவற்றை இடிந்து விழுகின்றனர்.
நெய்வைத்தியம் இல்லாமல் மூடிக் கிடக்கும் பல கோவில்கள் எல்லாம் சீரழிந்த நிலையில் உள்ளது. இந்த ஆலயங்கள் பரதநாட்டியம் நடந்தபொழுது ஒலித்த முழவு முதலிய கருவிகளின் இசைக்கு பதிலாக நரிகளின் ஊளை சத்தம் காவிரி நதியின் நீர் கரையை உடைத்துக்கொண்டு, நீர் பாசனத்துக்கு உருவாகாமல் வீணாகிறது. யாகங்கள் செய்வதால் தோன்றும் புகை பரவிய கிராமங்களில் பசுவதையும், குரானை ஓதும் கொடிசத்தம் நடைபெற்றது.
மதுரை நகரை சுற்றிய மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு, அவற்றிக்கு பதிலாக கூர்மையான மரங்கள் நடப்பட்டு. அதன் உச்சியில் மக்களுடைய தலைகள் கோர்க்கப்பட்டு தென்குலைகள் போல் தொங்கவிடப்பட்டது. தாமிரபரணியில் மக்கள் குளிப்பதால் அவர்கள் அணிந்த சந்தனத்தின் மூலமாக அதன் தண்ணீர் வெண்மை நிறமாக இருந்தது. ஆனால், இப்போது பசுக்களையும், அந்தணர்களையும் கொலை செய்தால் தாமிரபரணி நீர் செந் நிறமாக மாறிவிட்டது. இதுபோன்று தமிழ்நாட்டின் நிலையானது துன்பம் அளிக்கும் படி உள்ளதால், மதுரையை ஆண்ட சுல்தான் உடைய ஆட்சியை அழிக்கும் படி தமிழன்னை அருளியதாக கங்காதேவி தன் நூலில் கூறுகிறார்.
இந்த செய்தி புராணக் கதை போல் இருந்தாலும் தமிழ் நாடும், தமிழ் மக்களும் ஆண்டு அனுபவித்த துன்பம் பலவாறாக இருக்கின்றது. சம்புவராயர் நாட்டை தன் வசப்படுத்திய பிறகு குமார கம்பணர் கொங்கு நாட்டையும், விஜயநகர ஆட்சிக் கீழ் என்ற செய்தி இரு கல்வெட்டில் வழி கிடைக்கிறது. பின்னர் குமார கம்பணர் 1371 ஆம் ஆண்டு மதுரை மீது படையெடுத்து. அப்போதைய மதுரை சுல்தான் பக்ரூதீன் முபராக்ஷா என்பவரை தோற்கடித்து. சுல்தானை போரில் உயிரிழந்ததாகவும். மதுரையும் அதை சார்ந்த இடமும் ராமேஸ்வரம் வரையும் விஜயநகர அரசுடன் இணைக்கப்பட்டது.
குமார கம்பணனின் அலுவலர்கள்
குமார கம்பணன் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து சம்புவராய நாடு, கொங்கு நாடு, மதுரை போன்ற நாடுகளை கைப்பற்ற துணைபுரிந்த பல அலுவலர்கள் இருந்தனர். அவர்களில் சோமப்ப தண்டநாயக்கர், கண்டாரகுளி, மாறிய நாயக்கர், ஆணைக்குந்தி விட்டப்பர், சாளுவ மங்கு,கோபனாரியா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மதுரை, திருவரங்கம் திருவானைக்கா தில்லை போன்ற தலங்களில் நித்திய நைவைத்திய வழிபாடுகள் திருவிழாக்கள் மீண்டும் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கிடைத்த பல கல்வெட்டுகள் குமார கம்பணர் உடைய ஆட்சி முறையையும், கோவில்களும், மடாலயங்களில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களையும், எடுத்துக் கூறுகின்றன.
குமார கம்பணரால் வென்று அடக்கப்பட்ட ராஜ கம்பீர ராஜ்ஜியம், பாண்டியராஜன் என்ற இரு ராஜயங்களுக்கும் அவர் மகாமண்டலேசுவரராக முதலாம் புக்கரால் நியமிக்கப்பட்டார். குமார கம்பணர் 1374 ஆம் ஆண்டு முதலாம் புக்கருக்கு முன்பே உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கிடைத்த கல்வெட்டின் படி குமார கம்பணர் 1374 ஆம் ஆண்டு வரை உயிரோடு இருந்ததை அறிய முடிகிறது. அவருக்குப்பின் அவர் மகன் ஜம்மண உடையார் என்பவர் தமிழ்நாட்டின் மகாமண்டலேசுவரராக பதவி ஏற்றார்.
வரலாற்றுக்கு பிறகுதான் முதலாம் புக்கன் பரமேஸ்வரன், பூர்வ, பச்சிம,கமுத்,திராதிபதி என்ற பட்டங்களை புரிந்துகொண்டான். நூனிஸ் என்பவர், கலிங்க நாட்டையும் முதலாம் புக்கர் கைப்பற்றினார் என்று கூறியதில் உண்மை இல்லை. எனென்றால் 1368 ஆம் ஆண்டு மைசூர் நாட்டில் வைணவர்கள், சமணர்கள் ஆகிய இருவருக்கும் சமய வேறுபாடு இருந்தது அதை அமைதியான முறையில் புக்கர் தீர்த்து வைத்தார். இவ்விரு சமயங்களை பின்பற்றியவர்களும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்றும், ஒரு சமயத்தை சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த துன்பத்தை, மற்றொரு சமயத்தவர்கள் தங்களுடைய துன்பமாகவே கருத வேண்டும், என்று கூறி அவர்களுடைய வேற்றுமைகளை நீக்கும் படி உத்தரவிட்டார்.
புக்கனுடைய ஆட்சிக் காலத்தில்தான் விஜயநகர அரசின் நிலைமை பற்றி, பெரிஷ்டா கூற்றுகள் இந்நகரின் பெருமையை உணர்த்துகிறது. அதிகாரத்திலும் சரி, செல்வத்திலும் சரி, நிலப்பரப்பிலும் சரி, விஜயநகர அரசர்கள் பாமினி சுல்தான்களைவிட பெரிதும் சிறப்புமாக விளங்கினர். மேலைக் கடற்கரையில் உள்ள கோவா, பெல்காம் முதலிய இடங்கள் அவர்களுக்குச் சொந்தமானவை. துளுநாட்டின் முழு பாகமும் அந்த நாட்டை சேர்ந்த இருந்தது. விஜயநகர அரசில் பெருவாரியான மக்கள் வாழ்ந்தனர். மக்களும் கலகம் செய்யாமல் வாழ்க்கை நடத்தினர். மலையாளம், இலங்கை முதலிய நாட்டு அரசர்கள் ஆண்டு தோறும் கப்பம் செலுத்தியதும், தங்களுடைய பிரதிநிதிகளை விஜயநகர அரசர் நியமித்தனர்.
இரண்டாம் ஹரிஹரன்
இரண்டாம் ஹரிஹரர் உடைய ஆட்சியின் பொழுது விஜயநகரப் பேரரசு நன்கு வளர்ச்சி அடைந்தது. முதல் புக்கனுக்கு பின் அவருடைய மூன்றாவது மகனான இந்த இரண்டாம் ஹரிகரன் பட்டம் ஏற்று, 1,390 ஆம் ஆண்டுகளில் இவ்இளவரசன் வாரங்கல் நாட்டின் மீது படையெடுத்தான். இந்த படை எழுச்சியால் பெரும் பயன் கிடைக்கவில்லை. ஆனால் பாங்கல் எனும் இடம் கைப்பற்றப்பட்டது. பின்னர் தெலுங்கானா நாட்டில் விஜயநகரப் பேரரசு பரவுவதற்கு இந்த இடம் வசதியாக இருந்தது என எண்ணினான்.
விஜயநகர அரசின் வடமேற்கு பகுதியில் கோவா, செளல்தபோல் முதலிய இடங்களிலும், விஜயநகர அரசு பரவியது. கிருஷ்ணா நதி பேரரசின் வடக்கு எல்லை ஆனது. கொண்டை வீடு என்ற இடத்தை தலைநகரமாக கொண்ட ரெட்டிகளிடமிருந்து. கர்நூல், குண்டூர், நெல்லூர் போன்ற இடங்கள் விஜயநகரப் பேரரசுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது. 1378 ஆண்டு மதுரை நாட்டின் தென்பகுதியில் கலகம் செய்த அலாவுதீன் சிக்கந்தர்ஷா என்ற சுல்தான் அடக்கப்பட்டான். அவருடைய மதுரை சுல்தான்கள் ஆட்சி முற்றிலும் அழிந்தது.
தமிழ்நாட்டில் இரண்டாம் ஹரிகரனுடைய கல்வெட்டுக்கள் 30க்கும் மேற்பட்டவை காணப்படுகிறது. அவைகளில் செங்கற்பட்டு மாவட்டத்தில் மட்டும் 15 காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நல்லூர் ஸ்ரீ சைலம் ஆகிய இரண்டு இடங்களில் இருந்து கிடைத்த செப்பேடுகளும், இரண்டாம் புக்கரின் பல விருதுகளை தொகுத்துக் கூறுகிறது. 1399 ஆம் ஆண்டு வரை பெற்ற நல்லூர் செப்பேடுகளில்,
வீரப் பிரதாபம் பொருந்தி வரும் அரசர்களுக்கெல்லாம் அரசராகிய வரும் ஆகிய பூர்வபச்சிம, உத்திர தட்சிண சதிர்சமுத்திராதிபதி அரியண்ண உடையார் என்று புகழப்பட்டு உள்ளார். வேதங்களுக்கு பாஷ்யம் எழுத உதவி செய்தவர் என்றும், வேத மார்க்கத்தை உலகில் நிலைக்க பெரும்பணி செய்தவர் என்றும் கூறப்பட்டு உள்ளார்.
இந்த உத்திரசமுத்திராபதி என்ற தொடர் ஆர்டிக் சமுத்திரத்தை குறிக்கிறதா என ஆராய்ந்தால். அந்த தொடர் விஜயநகரப் பேரரசின் வடக்கு எல்லையாக அமைந்த கிருஷ்ணா நதியினையே குறிப்பதாக தெரியவரும். ஏனெனில், கடல் போல என்றும் வற்றாத ஜீவநதியாக கிருஷ்ணா இங்கு வடதிசை கடல் என கூறப்பட்டுள்ளது. ஸ்ரீசைலம் செப்பேடுகள் வட மொழியில் எழுதப்பட்டுள்ளன. அவர் இரண்டாம் அரிஹரன், மல்லிகார்ஜுன தேவருடைய கோயிலின் முக மண்டபத்தை கொண்ட செய்தியைக் கூறுகிறது. செப்பேடு வழி ராஜவியாசன், ராஜவால்மீகி என்ற விருதுகள் காணப்படுகிறது.
சைவம், வைணவம்,சமணம் என்ற மூன்று மதமும் விஜயநகரப் பேரரசனில் ஒற்றுமையாக சேர்ந்து மக்கள் பாரபட்சமின்றி இருந்தனர் என்பது தெரியவருகிறது. ஸ்ரீசைலம், அகோபிலம், திருப்பதி, சிதம்பரம், ஸ்ரீரங்கம் முதலிய சைவ, வைணவ ஆலயங்களும், பல ஆலயங்களும் ஹரிஹரதேவர் ஆட்சியில் பலவிதமாக நன்கொடையைகள், கட்டளைகள் வழங்கப்பட்டது. நூனிஸ் என்பவர் எழுதிய வரலாற்றில், ஹரிஹர தேவராயர் என்னும் பெயரை புரியாரிதேவராயோ என்று எழுதியுள்ளார். நானார்த்த ரத்தின மாலை எழுதிய இருக்கப்பர் , இரண்டாம் ஹரிகஹருடைய சேனைத் தலைவராகவும், அமைச்சராகவும் பணியாற்றினார். 1422 ஆம் ஆண்டு வரையில் அவர், விஜயநகரப் பேரரசுக்கு அமைச்சராக விளங்கினார் என்று கூறப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் கிருஷ்ணா நதிக்குத் தெற்கே உள்ள, தென்னிந்திய நிலப்பகுதி முழுவதும் விஜயநகரப் பேரரசின் சேரப்பட்டது. 8 ராஜ்யங்களாக இப்பேரரசு பிரிவு பட்டது.
ராஜ்யம். தலைநகரங்கள்
- துளு ராஜ்யம். – பரகூர், மங்களூர்
- மலை ராஜ்யம். – வனவாசி
- உதயகிரி ராஜ்யம். – நெல்லூர், உதயகிரி
- பெனுகொண்டா ராஜ்யம். – பெனுகொண்டா
- முலுவி இராஜ்யம். – முல்பாகல்
- ராஜ கம்பீர ராஜ்யம். – காஞ்சி
- சோழ ராஜ்யம். –தஞ்சாவூர்
- பாண்டிய ராஜ்ஜியம். –மதுரை
இரண்டாம் ஹரிஹர தேவராயர், மல்லதேவி என்ற பெண்யை அரசியாக கொண்டார் என்றும், அவள் யாதவ குல அரசனாகிய ராம தேவனுடைய கால் வழியில் வந்தவர்கள் என்றும், கல்வெட்டு வழி அறியமுடிகிறது. தமிழ்நாட்டில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இரண்டாம் ஹரிஹர ராயருக்கு விருப்பண்ண உடையார்,புக்க உடையார், தேவராயர் இருந்ததாகவும், அவர்களில் மூத்தவன் ஆகியவை விருப்பண்ண உடையார் 1377 முதல் 1400 ஆண்டு வரை, தமிழ்நாட்டில் மகாமண்டலேசுவர்ராக ஆட்சி செலுத்தியதாக அறியமுடிகிறது. ஆலம்பூண்டி, சொரைக் காவூர் என்னும் இரண்டு இடங்களில் கிடைத்த செப்பேடுகளிலிருந்து பல வரலாற்று உண்மைகளை அறிய முடிகிறது.
ஆலம்பூண்டி செப்பேட்டில் விருப்பண்ண உடையார், தொண்டை மண்டலம், சோழ மண்டலம், பாண்டிய நாடு, இலங்கை முதலிய நாடுகளிலிருந்து திறை பொருட்களைத் திரட்டி, தம்முடைய தகப்பனிடம் கொடுத்ததாக அறிகிறோம். சொரைக்காவூர் செப்பேடுகளில் விருபண்ண உடையார் ராமேஸ்வரத்தில் துலாபார தானம் செய்து சிறப்புற்று இருந்ததாகவும், ஆயிரம் பசுக்களை அந்தணர்களும் தானம் அளித்தாகவும் கூறப்பட்டது. திருவரங்கம், தில்லை ஆகிய இரண்டு கோவில்களிலும் விமானங்களை பொன்னால் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது உண்மையான செய்தியா என்று கூறமுடியவில்லை அறிய முடியவில்லை. இது போன்ற செய்திகள் செப்பேடுகளிலிருந்து 1377 ஆம் ஆண்டிலிருந்து 1400 ஆம் ஆண்டு வரை விருப்பண்ண உடையார் ஆட்சியில் வரையப்பட்ட இருபத்தொரு கல்வெட்டுக்கள், அக்காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பல விதமான தான தருமங்கள் செய்ததை பற்றி கூறுகிறது. திருவண்ணாமலை கோவிலில் காணப்படும் கல்வெட்டில் குமாரகம்பண்ணரின் நினைவாக, ஐந்து அந்தணர்கள் வேத பாராயணம் செய்வதற்கு பிரமதேயம் நிலம் விட்டது பற்றி கூறுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் வழுவூர் கோவிலில் காணப்படும் கல்வெட்டு, விருப்பண்ணுடையார் ஆட்சியில் உழவு தொழில் வளம் பெற வேண்டி குடிமக்கள் பெற்ற சலுகை பற்றி கூறப்படுகிறது. குமார கம்பணர் உடைய மஹா பிரதானியாக சோமய்யதண்ட நாயக்கரும், பிரதானிவிட்டப்பர் மகன் அன்னப்ப செளண்டப்பரும், விருப்பண்ண உடையாருக்கு ஆட்சியாளர்களாக இருந்தனர். அன்னப்பர் என்பவர் திருவரங்கம் கோயிலுக்கு ஆயிரங்கால் மண்டபத்தை பழுது பார்த்து, ஸ்ரீரங்கநாதருக்கு ஒரு திருவாசிகை செய்து வைத்ததாக ஒரு கல்வெட்டு கூறப்படுகிறது.
விருப்பண்ண உடையாருக்கு பின்பு வந்த இரண்டாம் புக்கன் என்ற புக்கண உடையார். தமிழ்நாட்டில் 4 ஆண்டுகள் மகாமண்டலேசுவரர் ஆக இருந்தார். தன் தகப்பன் இரண்டாவது ஹரிஹர தேவருக்குப் பின்பு விஜயநகர பேரரசு பதவியை ஏற்றார். இரண்டாம் புக்கனின் ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகள் சுமார் 30க்கும் குறையாமல் தமிழ்நாட்டில் காணப்படுகிறது. 1336 ஆம் ஆண்டிலிருந்து 1404 ஆம் ஆண்டு வரையில் முதலாம் ஹரிகரன், முதலாம் புக்கன், இரண்டாம் ஹரிஹரன் ஆகிய மூன்று அரசர் காலத்தில் விஜயநகரம் தோற்றுவிக்கப்பட்டு, பின்னர் ஒரு பேரரசாக மாறியது.
வடக்கே கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து ராமேஸ்வரம் வரை பரவி இருந்தது. அதனால் சங்கமம் வம்சத்து முதல் மூன்று மன்னர்கள் பல செயற்கரிய செயல்களைச் செய்தனர். அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்பிலிருந்து, தென்னாட்டிற்கு ஏற்படும் துன்பங்களை நீக்கி நிலையான ஒரு அரசு அமைத்தனர். மீண்டும் இஸ்லாமிய படையெடுப்புகள் அடிக்கடி ஏற்படாதவாறு பல வகையில் தயார் நிலை செய்தனர். இஸ்லாமியபடையெழுச்சிகளால் துன்ப முற்ற ஹொய்சாளர்கள் ,காகதீய வம்சத்து அரசர்கள், சம்புவராய மன்னர்கள், தெலுங்கு நாட்டின் ரெட்டி இனத் தலைவர்களும், சங்கம வம்சத்து அரசர்களுடன் ஒன்றிணைய முன்வந்தனர். மூன்றாம் வல்லாளனால் தொடங்கப் பட்ட சுதந்திர இயக்கம், ஸ்ரீ சங்கராச்சாரிய மடாலயத்தின் உதவியாலும், ஹரிஹரன், புக்கன் ஆகிய சங்க வம்சத்து தலைவர்கள் முயற்சியாலும், பெரும்பயன் கிட்டியது. துக்ளக் முகமதுவின் பேரரசு கொள்கையையும், செய்யத் தகாத செயல்களும், விஜயநகரம், விஜய நகரப் பேரரசு தோன்றுவதற்கு காரணங்களாக இவை காணப்பட்டது.
இரண்டாம் புக்கன் முதலாம் தேவராயன்
. நீலகண்ட சாஸ்திரியார் அவர்களின் கருத்துப்படி 1404 ஆம் ஆண்டு இரண்டாம் ஹரிஹரன் இறந்த பிறகு விஜயநகர அரசர்கள், விருப்பண்ண உடையார், புக்கண்ண உடையார், முதலாம் தேவராயர் ஆகிய மூவரும் போரில் ஈடுபட்டார்கள் என்றும், முதலில் விருப்பண்ண உடையார் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருக்க வேண்டும் என்றும், இவர் கூறுகிறார். ஆனால், விருபாட்சனை நீக்கிவிட்டு, இரண்டாம் புக்கன் அரசுரிமை எய்தி 1404– 1406 வரை அரசாண்டார். இறுதியாக மூன்றாவது மகனாகிய முதலாம் தேவராயர் அரசு கைப்பற்றி, 1406 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விஜயநகரப் பேரரசராக முடிசூடிக் கொண்டார்.
இந்த இரு அரசர்களுடைய ஆட்சி காலத்தில், விஜயநகரத்தின் சிறப்புகள் முன்னரை விட வலிமை செய்தது. பலவாறு மதில் சுவர்களும் கோட்டை கொத்தளங்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் ஆட்சியில் மிகவும் பயனுள்ள மற்றொரு வேலையும் முடிவு பெற்றது. துங்கபத்திரா நதியின் குறுக்கே அணை ஒன்று கட்டப்பட்டு 15 மைல் நீளமுள்ள கால்வாய் மூலமாக, விஜய நகரத்துக்கு நீர்ப்பாசன வசதி செய்யப்பட்டது. இந்த மன்னர்களால் அமைக்கப் பட்ட அணைக்கட்டு மறைந்து விட்ட போதிலும். இன்று விஜயநகர கால்வாய் மூலமாக துங்கபத்திரையின் அணையில் இருந்து தண்ணீர் பாய்கிறது. இக்கால்வாய் கருங்கல் பாறை நிரம்பிய இடங்களை உடைத்து, மிக்க பொருள் செலவில் கட்டி அமைக்கப்பட்டதாகும்.
முதலாம் தேவராயர் ஆட்சியின் தொடக்கத்தில் பாமினி சுல்தானாகிய பிரோஸ்ஷாவுடன் அற்ப காரணத்திற்காக, பெரும் போர் உண்டாயிற்று என்று கூறுகிறார்கள். முதுகல் கிராமத்தில் வாழ்ந்த ஒரு குடியானவனின் மகள் பெர்த்தா என்பவளின் அழகை ஓரந்தவணன் மூலமாக கேள்வியுற்று. அவளை அடைவதற்கு முதுகல் என்ற இடத்தையும் முற்றுகையிட்டதாகவும், அதற்கு பதிலாக பிரோஸ்ஷா விஜய நகரத்தின் மீது படையெடுத்ததாகவும் கூறுகிறார்கள். முதுகல் என்று இடம் விஜயநகர மன்னர்கள் ஆட்சியில் அப்போது இருந்தது. ஆகையால் தன்னுடையநாட்டு குடிமக்களுக்கு தேவராயன் துன்பம் அளித்து இருக்க முடியாது.
பெரித்தா என்ற பெண் விஜயநகர அரசரை மணந்துகொள்ள, மறுத்ததாக கூறுவதும் நம்பத்தகுந்த்தன்று. ஏனென்றால், விஜயநகர அரசர்களும், பாமினி சுல்தான்களும் இயற்கையாகவே பொறாமை உள்ளவர் என்ற காரணமாக இப்போர் தொடங்கி இருக்கலாம். பாமினி சுல்தான்கள் உடைய படைகள் தோல்வியுற்ற போதிலும், வீணான உயிர்சேதம் ஏற்படுவதை தடுப்பதற்கு இரு நாடுகளும் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டதும். அதன்படி விஜயநகர அரசர் முதலாம் தேவராயருடைய மகள் ஒருத்தியை பாமினி சுல்தான் மணந்துகொள்ள திருமணம் நடைபெற்றது, என்று பெரிஷ்டா கூறுகிறார். ஆனால், திருமண சடங்குகளை முடித்த பிறகு பாமினி சுல்தான் கோபம் கொண்டு மீண்டும் போர் தொடங்கினார் என அறியமுடிகிறது. இதனால் பெரிஷ்டாவின் இந்த கதை வரலாற்று உண்மை என்று சொல்ல முடியவில்லை.
பிரோஸ்ஷாவுடன் சேர்ந்துகொண்டு, விஜயநகரப் பேரரசின் கிழக்குப் பகுதியில் கொண்ட வீட்டு பகுதியையும், கிருஷ்ணா, கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியையாண்ட ரெட்டிமார்கள் ஆகியோர் தேவராயாருக்கு எதிராக ஒரு முக்கூட்டு உடன்படிக்கையை எழுப்பினர்கள். இதை எதிர்த்து ராஜ மகேந்திரன் பகுதியை ஆண்ட, கட்டய்ய வேமன் என்ற ரெட்டி தலைவனை தேவராயர் தன் பக்கம் சேர்த்துக் கொண்டார். மீண்டும் பாமினி சுல்தானுக்கும், தேவராயருக்கும் போர் நடந்தது. 1419 ஆம் ஆண்டு நடந்த போரில் விஜய நகரப் படைகள், பாமினி சுல்தானுடைய படைகளையும் அவருடைய நண்பர்கள் உடைய சேனைகளையும், சேர்த்து தோற்கடித்து பெரிய வெற்றியை கைப்பற்றியது.
இப்போரில் நடைபெற்ற சண்டையில் தேவராயருடைய மகன் வீரவிஜயனும், அமைச்சர் இலக்குமி தரனும் பெரும் பங்காற்றினர். முதலாம் தேவராயருடைய மகன் வீரவிஜயராயருக்கு வீரபுக்கன்,விஜய புக்கன், வீர விஜய பூபதி என்ற பல பெயர்கள் கல்வெட்டுகளில் உள்ளது. ஆகையால் சில வரலாற்றாசிரியர்கள் இவரை இரண்டாம் புக்கனின் மகன் என கருதினர். திருவண்ணாமலை கோவிலில் உள்ள கல்வெட்டில், ‘பூர்வ, தட்சிண,பச்சிம,சமுத்திராபதி உடையார் ராஜாதி ராஜ ராஜபரமேஸ்வர ஸ்ரீவீர தேவராய மகாராயருடைய குமாரன் ஸ்ரீவீரவிஜயபூபதி என்று கூறுவதால், இவருடைய மகன் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
1408 ஆம் ஆண்டிலிருந்து வீர விஜய பூபதி தொண்டை மண்டலம், சோழ மண்டலம் போன்ற அனைத்திற்கும் மகாமண்டலேசுவராக பணியாற்றினார். அவருடைய ஆட்சியில் பொறிக்கப்பட்ட 25 கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சை, திருச்சி போன்ற மாவட்டங்கள் உள்ளது. 1422 ஆம் ஆண்டு முதலாம் தேவராயர் ஆட்சிக்குப் பிறகு அவருடைய முதல் மகன் ராமச்சந்திர ராயர் என்பவன் சில திங்களுக்கு ஆட்சிபீடத்தில் அமர்ந்து, பின்னர் மறைந்து விட்டார். பின்பு, அவருடைய தம்பி வீர விஜய பூபதி 1422 முதல் 1426 வரை விஜயநகரப் பேரரசாக பதவி வகித்தார்.
விஜயநகரத்தில் முதலாம் தேவராயர் ஆட்சி
. இத்தாலியில் இருந்து இந்தியாவிற்கு வந்த நிகோலோ காண்டி எனும் இத்தாலியர் விஜய நகரத்தை பற்றி, முதலாம் தேவர் அவருடைய ஆட்சியின் இறுதி, அந்நகரத்தின் பெருமையும், மக்கள் கொண்டாடிய திருவிழா, அவர்களுடைய வாழ்க்கையின் சில அம்சங்கள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். நிகோலோகாண்டி கூர்ஜர நாட்டிலுள்ள காம்பேயில் இறங்கி 20 நாள் தங்கியிருந்து, பிறகு பரகூர் என்ற இடத்திற்கும், எழில்மலை பிரதேசத்திற்கும் வந்தார். பின்னர் உள்நாட்டில் பயணம் செய்து விஜய நகரத்துக்கு வந்து சேர்ந்த இவர். விஜயநகரத்தை பிஸ்னகாலியா என்று அழைத்தார். விஜயநகரம் சிறிதும், பெரிதுமாக குன்றுகள் இடையில் அமைந்தும், இந்நகரத்தின் சுற்றளவு அறுபது மைல் இருக்கும்.
இந்த, நகரத்துக்கு அமைக்கப்பட்ட கோட்டைச் சுவர்கள் குன்றுகளோடு சென்று இணைகிறது. குன்றுகளின் சரிவுகளிளும், பள்ளத்தாக்குகளிளும், நகரத்தின் பகுதியில் அமைந்துள்ளது. ஆதலால், நகரத்தின் பரப்பளவு அதிகமாகிறது. இந்த நகரத்தை பாதுகாக்க 90 ஆயிரம் வீரர்கள் இருப்பதாக அறிய முடிகிறது. விஜய நகரத்தில் வாழும் மக்கள் பல முறை திருமணம் செய்து கொள்கிறார்கள். கணவன்மார் இறந்தால் மனைவியாரும் அவருடன் சேர்ந்து உயிரிழக்கிறார்கள். இந்த நாட்டு அரசர் இந்தியாவில் உள்ள மற்ற நாடுகளுடன் மிக செல்வமும், அதிகாரமும் கொண்டவராகக் காணப்படுகிறார்.
இந்த அரசர் 12,000 மனைவியை கொண்டுள்ளதாகவும், அவர்களில் 4000 பேர் அரசனை பின் தொடர்ந்து, அவர் எங்கு சென்றாலும் செல்கிறார்கள் என்றும், அரண்மனையில் உள்ள சமையல் அறையில் வேலை பார்க்கின்றனர். அவர்கள், அரண்மனையிலுள்ள சமையலறைகளில் வேலை பார்க்கின்றனர். சுமார் 4000 பெண்டிர் சிறந்த ஆடை அணிகளை அணிந்து குதிரையின் மீதமர்ந்து பிரயாணம் செய்கிறார்கள். மீதமுள்ள பெண்கள் பல்லக்குகளில் அமர்ந்து ஆண் மக்களால் சுமந்து செல்லப்படுகிறார்கள். அரசன் இறந்தால் தாங்களும், உடன்கட்டை ஏறி உயிர் வாழ வேண்டும் என்ற நிபந்தனை பெயரில், 2000 அல்லது 3000 பெண்டிர் அரண்மனையிலேயே அனுமதிக்கப்படுகின்றனர்.
இவ்விதம் உடன்கட்டை ஏறி உயிர் விடுவதை கெளரவமான செய்யலாக கருதினார்கள். ஒவ்வொரு ஆண்டிலும் சில மாதத்தில், தாங்கள் வணங்கும் தெய்வங்களின் உருவ சிலைகள் 2 தேர்களின் மீது வைத்து, மக்கள் பின்தொடர்ந்து வர இழுத்துச் செல்கிறார்கள். இத்தேர்களின் மீது பல தேவரடியார்கள் அலங்காரம் செய்து கொண்டு, உட்கார்ந்து பல இன்னிசைகளை செய்கிறார்கள். சில மக்கள் தேர் சக்கரங்களில் விழுந்து உயிர் துறப்பதை தெய்வங்கள் விரும்புகின்றனர் என எண்ணினார்கள். சிலர் தங்கள் உடலோடு கழிகளைக் கட்டிக்கொண்டு, தேரின் ஒரு கயிற்றில் தொங்கி செல்கிறார்கள். ஆண்டில் மும்முறை இந்த நாட்டு மக்கள் பெரிய திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். ஒரு சமயம் ஆண்களும், பெண்களும், முதியோர்களும், இளைஞரும், ஆறுகளிலும், குளங்களிலும், குளித்து புத்தாடைகள் அணிந்து மூன்று நாட்களுக்கு, விருந்து, நடனம், இசை போன்ற பொழுதுபோக்கில் காலத்தை கழிக்கிறார்கள்.
மற்றொரு திருவிழாவில் கோவில்களிலும், வீடுகளிலும், கடைகளிலும் நல்லெண்ணெய் விளக்குகளை பொருத்தி இரவும், பகலும் எரிய விடுகின்றார்கள். மூன்றாவது திருநாள் ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. மூன்றாவது திருவிழாவின் போது பலவிதமான வேடிக்கைகள் நடைபெறுகிறது. இன்னொரு விழாவில் மக்கள் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள்நீர் தெளித்து விளையாடுகிறார்கள். அரசனும், அரசியும்கூட இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாது விஜயநகரத்தில் 15 நாட்கள் பயணம் செய்தபோது, வடக்கே உள்ள ஒரு வைர சுரங்கத்தில் வைரங்கள் கிடைத்தது பற்றி கூறினார்.
விஜயநகரத்தில் வழக்கத்தில் இருந்த நாணயங்கள், பீரங்கிகளில் உபயோகப்படுத்தும் கல் குண்டுகளை பற்றியும் கூறுகிறார். விஜய நகரத்து மக்கள் அயல் நாட்டவர்களை பரங்கிகள் என்று அழைக்கிறார்கள். தங்களுக்கு மாத்திரம் ஞானக் கண் என்றும், மூன்றாவது கண் உண்டு என்றும், மற்ற நாட்டு மக்களை விட தாங்கள் எல்லா வகையிலும் சிறந்தவர்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். காம்பே நகரத்து மக்கள் மாத்திரம் காகிதத்தை உபயோகப் படுத்தினார்கள். மற்றவர்கள் பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதினார்கள். பிறரிடம் கடன் வாங்கித் திருப்பிதர முடியாதவர்களை கடன் கொடுத்தவர்களுக்கு அடிமையாக்கும் வழக்கம் இருந்தது.
வீர விஜயராயர்
முதலாம் தேவராயர் இறந்த பிறகு அவருடைய மகனான விஜய ராயர் என்பவர் விஜயநகரப் பேரரசின் அரியணையில் அமர்ந்தார். நூனிஸ் தன்னுடைய வரலாற்று நூலில், ஆறு ஆண்டுகள் வீர விஜய ராயர் ஆட்சி புரிந்தார் என்றும், அவர் ஆண்ட ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க செயல்கள் ஒன்றும் செய்யவில்லை என்றும் கூறுகிறார். தன் தகப்பனின் ஆட்சி காலத்தில் முல்பாகல் ராஜ்யத்திற்கு மகாமண்டலேசுவரராக பதவி வகித்தபோது, தண்டபள்ளி செப்பேடுகள் வரையப்பட்டன. இச்செப்பேடுகள் விஜய ராயர் தம்முடைய குருவாகிய கிரியாசத்தி என்பவருக்கு கிரியாசத்தி புரம் என்ற பிரமதேயத்தை வழங்கிய செய்தி கூறப்படுகிறது.
1404 முதல் 1424 ஆம் ஆண்டு வரை வரையப்பட்ட கல்வெட்டுகளில் தமிழ்நாட்டிலும், முல்பாகலிலும் அமைச்சராக பணியாற்றியது கூறப்படுகிறது. இந்த அரசன் ஆட்சியில் பாமினி சுல்தான் அகமதுஷா என்பவர் விஜய நகரத்தின் மீது படையெடுத்து, பல நாச வேலைகளை செய்தார் என்பது தெரிகிறது. துங்கபத்திரை நதியைக் கடந்து பாமினி படைகள் விஜயநகரத்தை முற்றுகையிட தொடங்கியதாகவும், விஜய ராயர் தம்முடைய கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது பாமினி வீரர்கள் அவரை சூழ்ந்து கொண்டதாகவும் கூறுவார்.
விஜயராயர் பாமினி வீரர்களிடம் இருந்து தப்பித்து, ஒரு கருப்பந் தோட்டத்திற்குள் புகுந்து சாதாரண வீரனைப் போல் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி எந்த அளவு உண்மை என்று அறியமுடியவில்லை. பாமினி படைகள் விஜயநகரத்தை முற்றுகையிட்டு, நகரத்தின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்த மக்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டால் அதற்காக அகமதுஷா தன்னுடைய வீரத்தை தானே புகழ்ந்து வெற்றி விழா கொண்டாடுவது வழக்கம் என பெரிசா கூறுகிறார். கோவில்கள் இடிக்கப்பட்டு அதிலிருந்து விக்ரகங்கள் உடைத்து எறியப்பட்டது. ஆலயங்களுக்கும், கல்வி சாலைகளுக்கும் பலவிதமான சேதங்களும் ஏற்பட்டது. அழிவு செயல்களை கட்டுப்படுத்துவதற்கு விஜய ராயர் பாமினி சுல்தான்களுடன் அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார். அவர்கள் விரும்பியபடி கப்பம் கட்டுவதாக ஒப்புக்கொண்டதாகவும் பெரிசா குறிப்புகளில் அறியமுடிகிறது.
இரண்டாம் தேவராயர்
கஜவேட்டை கண்டருளிய தேவராயர் என்று இரண்டாம் தேவராயர் கல்வெட்டுகளில் வழங்கப்படுகிறது. இந்த தொடரின் பொருள் என்னவென்று தெளிவு இல்லை. ஆதலால், இருவிதமான பொருள் கூறப்படுகிறது. ஒன்று யானைகளை ஒத்த வலிமை பொருந்திய பகையரசர்களை வென்றவர் என்றும், மற்றொன்று காட்டில் உள்ள யானைகளை வேட்டையாடி பிடித்து தன் சேனையில் வைத்துக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. இவருடைய ஆட்சியின் தொடக்கத்தில் பெத்த கோமதி வேமன் என்பவருடைய சிற்றரசாகிய கொண்ட வீடு ராஜ்ஜியத்தை வென்று, தம்முடைய பேரரசோடு சேர்த்துக்கொண்டார். இதனால் கலிங்க தேசத்து தென்எல்லைக்கும், விஜயநகரப் பேரரசின் வட எல்லைக்கும் இடையில் ரெட்டி அரசர்களால் ஆளப்பட்ட ராஜமகேந்திர சிற்றரசு அமைந்திருந்தது.
1435 ஆம் ஆண்டு கலிங்க நாடு கபாலீஸ்வரர் கஜபதி என்ற வீரமிக்க அரசனின் ஆட்சிக்கு உட்பட்டது. அவர் ராஜமகேந்திரன் மீது படையெடுக்கவே, அந்நாட்டு சிற்றரசன் இரண்டாம் தேவராயரின் உதவியை நாடினான். விஜயநகரப் படைகள் ராஜ மகேந்திர அரசனாகிய வீரபத்திரனுக்கு, உதவியாக அனுப்பப்பட்டான். கபீலீஸ்வரக் கஜபதியின் படையெடுப்பிலிருந்து ராஜமகேந்திரன் விடுவிக்கப்பட்டான். இரண்டாம் தேவராயர் ஆட்சியில் விஜயநகரப் பேரரசு திருவிதாங்கூரில் உள்ள கொல்லம் வரை பரவியது. ஆனால், கள்ளிக்கோட்டை அரசனாகிய சாமொரின், இரண்டாம் தேவராயர் அடங்கவில்லை என்று, விஜய நகரப் படைகள் தன் நாட்டையும் வென்று விடும் என்ற பயத்துடன் சாமொரின் இருந்ததாகவும் அப்துல் ரசாக் கூறுவார்.
தேவராயர் காலத்தில் தெற்கே இலங்கைத் தீவில் இருந்து, வடக்கே குல்பர்கா வரையில் விஜயநகரப் பேரரசு பரவியிருந்தது என்று கூறுவார். கொல்லம், இலங்கை, பழவேற்காடு,பெகு,டெனாசரிம், போன்ற நாடுகள் மற்றும் பல நாடுகளும் தேவராயருக்கு கப்பம் செலுத்தின என்று நூனிஸ் கூறுகிறார். பெகு,டெனாசரிம் என்பன பர்மாப் பகுதியைச் சேர்ந்த்து. ஆகையால், இவை திரை அளித்ததா என்பது ஆராயப் படவேண்டிய ஒன்று. தேவராயர் ஆட்சிக் காலத்தில் பாமினி நாட்டின் சுல்தானாக இரண்டாவது அலாவுதீன், தம்முடைய முன்னோர்களின் வழக்கம்போல விஜயநகர மன்னரிடம் திறைப்பொருளைப் பெறுவதற்கு போர் தொடுத்தார். அவனுடைய தம்பி முகமது என்பவர் விஜய நகரத்தின் மீது படையெடுத்து பல அழிவு வேலைகளை செய்தார். இரண்டாம் தேவராயரும் பெரும் போரின் அபாயங்களை உணர்ந்து சந்து செய்து கொண்டார்.
அமைதி உடன்படிக்கையானது விஜயநகரப் பேரரசின் போது ஏற்ப்பட்டு, ராணுவ அமைப்பில் 1436 ஆம் ஆண்டு பல மாற்றங்களை செய்வதற்கு அடித்தளமாய் அமைந்தது. தேவராயர் தம்முடைய அமைச்சர்களை கலந்து பாமினி அரசர்கள், விஜய நகரத்து சேனையைகளை சுலபமாக வெற்றி பெறுவதற்கான காரணம் என்னவாக இருக்கும், என்று ஆராயும் படி கேட்டுக்கொண்டார். அவர்களும் தங்களுக்குள் சில ஆலோசனைகளை கூறினர்.
- பாமினி தேசத்து படைகளில் குதிரைப்படைகள் சிறந்த பயிற்சி பெற்று விளங்குகிறது
- குதிரைப் படைகளைக் கைதேர்ந்த இஸ்லாமிய வீரர்கள் நடத்துகின்றனர்.
- பாமினிப் படையில் உள்ள வில்வீரர்கள் குறி தவறாது அம்புகளை செலுத்தும் முறையில் பழக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற காரணங்களை பார்த்து, தேவராயர் விஜயநகர படைகளை சீர் திருத்தி அமைக்கும் பணியில் தன் கவனத்தை செலுத்தினார். சிறந்த குதிரைகளை வாங்கி அவற்றை இஸ்லாமிய குதிரை வீரர்களை கொண்டு பழகும் படியும், இஸ்லாமியர்களையும் சேனையில் பெருமளவு சேர்த்துக் கொண்டார். இஸ்லாமிய வீரர்களுக்கு தனியாக தங்கும் இடம் அமைத்து, அரசருடைய அரியணைக்கு முன்பு குர்ஆன் புத்தகத்தின் படி ஒன்று வைக்கப்பட்டது. ஏனென்றால் இஸ்லாமிய வீரர்கள் அரசனுக்கு மரியாதை செலுத்தும் பொழுது, தங்களுடைய சமய வேதமாகிய குர்ஆனை அலட்சியம் செய்யவில்லை என்ற கொள்கை பின்பற்றப் பட்டது. வில்வீரர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இவ்விதமாக இஸ்லாமிய வீரர்களை தம்முடைய சேனையில் சேர்த்துக் கொண்டதில், இரண்டாம் தேவராயர் வழிகாட்டியாக இருந்தார் என்று கருதமுடியாது. இவருக்குமுன் மூன்றாம் தேவராயர் அதே வழிமுறையை பின்பற்றினார்.
பாரசீகநாட்டுத் தூதுவராகிய அப்துர்ரசாக்கும், போர்த்துகீசிய வரலாற்று ஆசிரியரான நூனிஸ் என்பவரும், இரண்டாம் தேவராயருக்கு எதிராக நடந்த ஒரு சதித்திட்டத்தை பற்றிக் கூறுகிறார்கள். தேவராயருடைய தம்பி ஒருவன் ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்து அவ்விருந்து நடைபெறும் சமயத்தில், இரண்டாம் தேவராயரை கொலை செய்ய முயன்றதாக கூறுகிறார். ஆனால்,நூனிஸ் இரண்டாம் தேவராயர் என்பவரை அவருடைய மகன் பீனராயர் என்பவரை, அவரின் உறவினன் ஒருவன் கொலை செய்ய முயன்று வெற்றியும் பெறுகிறார் என கூறுகிறார். இந்த இரு கருத்துகளின்படி எது உண்மை என்று அறியமுடியவில்லை. நூனிஸால் கூறப்பட்ட பீனராயரும், இரண்டாம் தேவராயரும் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். இரு வேறு நபர்கள் என்பதும் ஆராய்ந்து பார்க்கவேண்டிய ஒன்று.
இதுபோன்ற சதித் திட்டம் உண்மையாகவே நடந்திருந்தால், அது பாமினி அரசனாகிய இரண்டாவது அலாவுதீனால் ரகசியமாக, இரண்டாவது தேவராயரை கொலை செய்வதற்கென்றே ஏற்பாடு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால் அப்துல் ரசாக்கின் வாக்கின்படி இரண்டாம் தேவராயர் கொலை செய்யப்படவில்லை. அரண்மனையில் குழப்பமே தோன்றியது. அக்குழப்பம் மிகுந்த சமயத்தில் இரண்டாம் அலாவுதீன் படைஎடுத்து, இராய்ச்சூர் பகுதியை தன் வசப்படுத்த முயன்றார். தேவராயரும் பெரும்பொருள் கொடுத்து அமைதி உடன்படிக்கை செய்து கொண்டார். தேவராயரின் கல்வெட்டுகள் பேரரசின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இவருடைய ஆட்சி காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல 90க்கு மேல் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் இவருடைய ஆட்சியில், தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் எவ்விதமான தான தர்மங்கள், சீர்திருத்தங்கள் செய்யப்பட்டது என்பது பற்றி குறிக்கப்படுகிறது. தேவராயர் காலத்தில் விஜயநகர பேரரசு உன்னத நிலையை அடைந்தது என கூறலாம். அவருடைய அமைச்சர்களான இலக்குமிதரன், அவருடைய தம்பி மாதணன் என்ற இருவரும் அரசனுக்கு பெரும் துணையாக பேருதவி செய்து பேரரசை காப்பாற்றினார் என்று கூறலாம்.
இரண்டாம் தேவராயர் ஆட்சியில் விஜயநகரத்தின் நிலை
பாரசீக நாட்டு தூதராகிய அப்துல் ரசாக் 1443 ஆம் ஆண்டு இரண்டாம் தேவராயர் உடைய அரசவைக்கு வந்தார். விஜய நகரத்தில் தங்கியிருந்த பொழுது நாட்டு மக்களையும், அங்கு நடைபெற்ற வரலாற்றுச் செய்திகளையும், நகரத்தின் அமைப்பு பற்றி தான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் எழுதினார். அவரால் எழுதப்பட்ட பாரசீக நாட்டு வரலாற்றில் உள்ள ஒரு பகுதியில் விஜயநகரத்தின் இயற்கை அமைப்பு, ஆட்சிமுறை, மக்களுடைய வாழ்க்கை நிலை, போன்றவைகள் விரிவாகவும், தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது. கள்ளிக் கோட்டையில் சாமொரினுடைய அரசவையில் அப்துல் ரசாக் தங்கியிருந்தபோது விஜய நகரத்துக்கு வரும் படி இரண்டாம் தேவராயரால் அழைக்கப்பட்டார்.
இந்தப் பேரரசருடைய அழைப்பிற்கு இணங்கி கள்ளிக்கோட்டையிலிருந்து கடல் மார்க்கமாக மங்களூரில் இறங்கி, அங்கிருந்து பெட்னூர் வழியாக விஜய நகரத்துக்கு வந்து சேர்ந்தார். மங்களூரில் பெரிய அரண்மனைகளை போன்ற இல்லங்களையும், வெண்கலத்தாலான கோவில் ஒன்றையும் தாம் கண்டதாக கூறினார். வானளாவிய மலைகளையும், காடுகளையும் கடந்து பெட்னூர் என்ற இடத்திற்கு வந்தேன். பெட்னூரிலும் அரண்மனை போன்ற இல்லங்களும், சிறந்த உருவச் சிலைகள் அமைந்த ஆலயங்களும் இருந்தது. விஜய நகரத்துக்கு அப்துர் ரசாக் வந்து சேர்ந்தவுடன் இரண்டாம் தேவராயர் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய பல வேலை ஆட்களை நியமித்து, அழகமைந்த இல்லம் ஒன்றில் தங்கி இருக்கும்படி செய்தார்.
இரண்டாம் தேவராயர் உடைய பேரரசு இலங்கை தீவில் இருந்து வடக்கே குல்பர்கா வரை பரவியிருந்தது. இப்பேரரசின் இரும்பும் அலைகளை ஒத்த ஆயிரக்கணக்கான யானைகளை காணமுடியும். விஜயநகரப் பேரரசில் 11 லட்சம் போர் வீரர்கள் உள்ளனர். இப்பேரரசின் தலைவருக்கு ராயர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டு வந்தது. இவருடைய அதிகாரங்கள் பல இவரை போன்று மட்டற்ற அதிகாரங்களை உடைய வேறொரு அரசரை இந்திய நாட்டில் காண முடியாது.
அப்துல் ரசாக் விஜய நகரத்தைபலவாராக வர்ணிக்கிறார். விஜய நகரத்தை போல ஒரு நகரத்தை என்னுடைய கண்களால் இதற்கு முன்பு நான் கண்டதில்லை. உலகத்தில் இதற்கு ஈடாக ஒரு நகரம் இருந்தது என்றும் நான் கேள்விப்பட்டது இல்லை. ஏழு கோட்டைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைக்கப்பட்டு. ஒவ்வொரு மதில் சுவர் ஒன்றால் சூழப்பட்டுள்ளது. முதலாவது மதில் சுவர் முன் ஓராள் உயரம் உள்ள கருங்கற் பலகைகள் புதைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்களைக் குதிரைப்படை, காலாட்படை போன்ற எந்த படைகளும் எளிதில் கடந்து செல்லாதவாறு, கருங்கற்களால் புதைக்கப்பட்டுள்ளது. நகரத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஏழாவது அரணிற்குள் விஜயநகர அரசனுடைய அரண்மனை அமைந்துள்ளது.
தெற்கு வடக்கில் இந்த அரண்களின் அகலம் 2 பரசாங்குகள் இருக்கும். முதல் மூன்று கோட்டைகளின் இடைவெளிகளில் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், வீடுகளும் நிரம்பியுள்ளது. மூன்றாவது அரணிலிருந்து 7-வது அரண் அமைந்துள்ள பகுதிகளில் கணக்கற்ற மக்களோடு, கடை வீதிகளும்,கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை பக்கத்தில் 4 கடை வீதிகள் உள்ளன. ஒவ்வொரு கடைவீதியின் நுழைவு வாயிலிலும் வளைவான விதானங்கள் அமைந்துள்ளது. இந்த விதானங்களின் அடிப்பாகத்தில் மக்கள் நுழைந்து சென்று உட்கார்வதற்கு உரிய வரிசை படிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
அரசன் அமர்ந்திருக்கும் சபா மண்டபம் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. கடைவீதிகள் நீளமாகவும், அகலமாகவும் உள்ளது. மணம் நிறைந்த ரோஜா மலர்கள் நகரங்கள் எங்கும் விற்கப்படுகிறது. இந்நகரத்து மக்கள் ரோஜா மலர்களை தங்களுடைய உணவிற்கு அடுத்தபடியாக விரும்புகிறார்கள். பொருளுக்கு ஏற்றவாறு கடைவீதிகள் காணப்படுகிறது. ஆடைகளும், அணிகலன்களும் தனித்தனி வீதிகளில் விற்கப்படுகிறது. வியாபாரிகள் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் முதலியவற்றை எந்தவித அச்சமுமின்றி வியாபாரம் செய்கிறார்கள். கடைவீதிகளின் ஓரங்களிலும், அரண்மனையின் பகுதிகளிலும் காணப்படும் கால்வாய்களில், தெளிவான தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது.
விஜயநகரத்தில் அமைதியை நிலைநாட்டி குற்றங்கள் நடைபெறாதவாறு பாதுகாவல் செய்ய போலீஸ் தலைவரின் கண்காணிப்பில் 12,000 காவலாளிகள் இருந்தனர். இந்த போலீஸ் அலுவலர்களுக்கு அந்த நகரத்து விலை மகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகையிலிருந்து ஊதியங்கள் கொடுக்கப்பட்டன. அந்த நகரத்தில் வாழ்ந்த விலைமாதர்களின் ஆடை அலங்காரங்களும், அவர்கள் ஆடவர்களை மயக்கி தங்கள் வசப்படுத்தும் சாகசங்களும், வார்த்தைகளால் விவரிக்க முடியாதது ஆகும் என்று கூறுகிறார். அரசனுடைய அந்தப்புரத்தில் எழுநூற்றுக்கும் மேற்பட்ட அரசிகளும், ஆசைநாயகிகளும் இருந்தனர்.
அரண்மனையின் இடப்பக்கத்தில், அரண்மனைப்போல் தோற்றமளித்த திவான்கானா என்ற காரியாலயம் இருந்தது. இக்கட்டிடத்தின் மத்தியில் ஒரு நீதி மன்றம் நடைபெற்றது. இம்மன்றத்தில் திவான் அல்லது தண்டநாயகர் அமர்ந்து குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று நீதி வழங்கி வந்தனர். பீயஸ் என்ற போர்த்துக்கீசியர் கிருஷ்ணதேவராயரை நேரில் கண்டு அவருடைய தோற்றத்தை விவரிப்பது போல், அப்துல் ரசாக் இரண்டாம் தேவராயருடைய தோற்றத்தை பலவாறாக விவரிக்கிறார். அரசர்களுக்கு உரிய எல்லா இயல்புகளும் சூழ்ந்து, மிகப் பெரிய சபையில் இரண்டாம் தேவராயர் அமர்ந்திருந்தார். அவருடைய இருக்கையின் இரு புறங்களிலும் பல அலுவலாளர்கள் வட்ட வடிவமாக அமர்ந்திருந்தனர்.
வழவழப்பான பச்சை நிற ஆடைகளை அணிந்துகொண்டு அரசர் அமர்ந்திருந்தார். அவருடைய கழுத்தில் முத்துக்களும், நவரத்தினங்களும் வைத்து இழைக்கப்பட்ட கழுத்தணி காணப்பட்டது. அரசர் மாந்தளிர் போன்ற நிறத்துடன் உயரமாக, சதைப் பற்று அதிகம் இல்லாமல் இருந்தார். அவரின் முகத்தில் வயது சென்றதற்க்கான அடையாளங்கள் காணப்பட்டன. ஆனால், தாடியும் மீசையும் காணப்படவில்லை. பிறரை வசியப்படுத்தும் முகத்துடன் காணப்பட்டார். அப்துர் ரசாக் விஜய நகரத்துக்கு வந்து தங்கியிருந்த போது மகாநவமி அல்லது தசரா திருவிழா நடந்ததை நேரில் கண்டு பலவாறாகக் விவரிக்கிறார். மகாநவமி திருவிழாவைக் கொண்டாடுவதற்கு முன் விஜயநகரப் பேரரசில் வாழ்ந்த மகாமண்டலேசுவரர்களும், அமரநாயக்கர்களும், தண்டநாயக்கர்களும் முக்கியமான அலுவலாளர்களுக்கும் ஓலைகள் போக்கப்பெற்றன.
இந்த அலுவளாலர்கள் அரண்மனை முன் கூடியிருந்தனர். நன்றாக அலங்கரிக்கப்பட்ட ஓராயிரம் யானைகளை கொண்டு வந்திருந்தனர். யானைகள் நின்று கொண்டிருந்த அகலமான இடம் மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்டது. யானைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காட்சிகளை கடலில் அலை வீசுகின்ற காட்சிக்கு ஒப்பிடலாம். இந்த இடத்துக்கு வலப்பக்கத்தில் மூன்று அல்லது நான்கு மாடிகள் கொண்ட கூடாரங்கள் பல அமைக்கப்பட்டிருந்தது. இக்கூடாரங்களும் வெளிப்புறங்களில் பலவிதமான நிறங்கள் கொண்ட படகுகளும், சிலைகளும் வைக்கப்பட்டு இருந்தது. இந்தக் கூடாரங்கள் சுழன்று சுழன்று புதிய தோற்றங்களை அளித்து மக்களுக்கு களிப்பூட்டியது.
இதுபோன்ற யானைகள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு எதிர்ப்புறத்தில் 9 கூடாரங்கள் கொண்டதாக அமைக்கப்பட்ட, அரண்மனை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. ஒன்பதாவது கூடாரத்தில் அரசனுடைய அரியணை வைக்கப்பட்டிருந்தன. ஏழாவது கூடாரத்தில் அப்துள் ரசாக்கிற்க்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அரசர் இருந்து கூடாரத்திற்கும் மற்றக் கூடாரங்களுக்கும் இருந்த இடைவெளியில் இசை வல்லுநர்களும், கதாகாலேட்சேபம் செய்பவர்களும் நிரம்பியிருந்தனர். அரசருடைய அரியணைக்கு எதிரே நன்கு அலங்காரம் செய்யப்பட்ட ஆடல் மகளிர் திரை மறைவில் நின்று கொண்டிருந்தனர். யானைகளை பழக்கிப் பலவித விசித்திர செயல்களை செய்யும் கழற் கூத்தர்கள் இருந்தனர். மகாநவமியின் முதல் மூன்று நாட்களில் பலவித வாண வேடிக்கைகள், மல்யுத்தங்கள், சிலம்பு விளையாட்டுகளும், காலை முதல் மாலை வரை நடைபெற்றது. மூன்றாவது நாள் அப்துல் ரசாக் அரசாணை காணமுடிந்தது.
விஜயநகர அரசர் அமர்ந்திருந்த அரியணை தங்கத்தால் செய்யப்பட்ட விலை உயர்ந்த நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இருந்தது. அரியணைக்கு முன் மெத்தை வைத்து தைக்கப்பட்ட சதுரமான மேஜை ஒன்று இருந்தது. இம்மெத்தையின் மீது மூன்று வரிசைகளில் முத்துக்கள் இணைக்கப்பட்டிருந்தன. மூன்று நாட்களுக்கு இந்த மெத்தையின் மீது அரச உட்காருவது வழக்கம். மகாநவமி திருவிழா முடிந்த பிறகு, அரசருடைய கூடறத்தில் அமைக்கப்பட்டிருந்த 4 மேடைகள் எனக்கு காட்டப்பட்டன.
இந்த நான்கு மேடைகளில் நான்கு பக்கங்களிலும், தங்கத்தாலான தகடுகள் வைத்து, நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இருந்தது. இந்த தங்கத் தகட்டின் கனம் உடைவாள் தகட்டின் கனத்தை கொண்டிருந்தது. தங்கத்தினாலான ஆணிகள் கொண்டு தகடுகள் பொருத்தப்பட்டு இருந்தது. இம் மேடைகளில் ஒன்றின் மீது பெரிய அரியணை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அரசாங்க ஆவணங்கள் எல்லாம் பத்திரமாகவும், இலாக்காக்களுக்கு ஏற்றார் போலவும் இருந்தது என்றும், ஆவணங்கள் பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டது என்றும், அப்துல் ரசாக் கூறுகிறார். கொலை குற்றம் செய்த கொடியவர்கள் மதம் கொண்ட யானையின் முன் எறியப்பட்டு கொல்லப்பட்டனர். மக்கள் எப்போதும் வெற்றிலை பாக்கை மென்று கொண்டிருந்தனர். இந்த வெற்றிலை பாக்கு போடுவதால் விஜயநகர அரசர்கள் பெருவாரியான அரசிளங் குமரிகள் தங்கள் அரண்மனையில் வைத்து சமாளித்தனர் எனவும் கூறுவார்.
சங்கம வம்சத்து அரசர்களின் வீழ்ச்சி
1446 ஆம் ஆண்டு மே மாதம் இரண்டாம் தேவராயர் இறந்த பிறகு, அவருடைய மகன் இரண்டாம் விஜயராயர் சிறிது காலம் ஆட்சி செய்தார். இவருக்கு பின்பு, இவருடைய மகன் மல்லிகார்ஜுனராயன் என்பவர் 1447 ஆம் ஆண்டு அரியணையில் அமர்ந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் 18 ஆண்டுகள் விஜயநகர அரசு பலவித இன்னல்களுக்கு ஆளானது. அந்நியப் படையெடுப்புகளும், உள்நாட்டு பூசல்கள் போன்றவையும் மல்லீகார்ச்சுனருடைய அரசியலை சீர்குலைய செய்தது. அரசருடைய திறமையற்ற ஆட்சியால், அன்னியப் படையெடுப்புகள் விஜயநகர பேரரசின் கட்டுப்பாட்டை மொத்தமாக குலைத்தது
கபலீஸ்வரர் கஜபதியின் படையெடுப்பு:
கலிங்க நாட்டின் அரசன் நான்காம் பானுதேவனிடத்தில் அமைச்சராக பணியாற்றியவர் கபலீஸ்வரர் கஜபதி. இவன் அந்த அரசனை நீக்கிவிட்டு 1435 ஆம் ஆண்டு தம்முடைய சூரிய வம்ச ஆட்சியை வன்முறை மூலமாக நிலை நாட்டினான். 1437 ஆம் ஆண்டு இரண்டாம் தேவராயரின் ஆட்சியின் போது, விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்தான். ஆனால், இரண்டாம் தேவராயர் மல்லப்ப உடையார் என்ற சேனைத் தலைவரின் தலைமையில், ஒரு சேனையை அனுப்பினார். அந்த சேனைப் படை கபலீஸ்வரர் கஜபதியின் சேனையை முறியடித்து விரட்டிவிட்டது.
இந்த தோல்வியை வெற்றியாக மாற்றுவதற்கு, இரண்டாம் தேவராயருக்கு பின், மல்லிகார்ஜுனர் ஆட்சியில் பாமினி சுல்தான் இரண்டாவது அலாவுதீனுடன் நட்பு கொண்டு, மீண்டும் விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்தார்.இந்த படையெடுப்பு 1447 ஆம் ஆண்டில் நடந்தது என்று திரு.N. வெங்கடராமன் கூறுகிறார். கங்காதாசப் பிரதாப விலாசம் என்ற வடமொழி நாடகத்தில் “மல்லிகார்ஜுனன், சிங்கமொன்று குகையில் இருந்து கிளம்பி யானையைத் தாக்குவது போல் கபலீஸ்வரர் கஜபதியின் சேனையை தாக்கி வெற்றி கொண்டார்” என்று கூறப்படுகிறது. ஆனால், பிரதாபருத்ரா கஜபதியின், அனந்தவரம் கல்வெட்டில் கபாலீஸ்வர கஜபதி விஜய நகரத்தை கைப்பற்றி. அந்த நகரத்து அரசன் திறை கொடுக்கும்படி செய்தார் என்று கூறப்படுகிறது. இந்த இரு கூற்றுகளில் எது உண்மை என்று நம்மால் அறிய முடியவில்லை. இதில் மல்லிகார்ஜுனன் வெற்றி பெற்றிருக்க வாய்ப்பும் உண்டு.
இந்த வெற்றிக்கு பிறகு, மல்லிகார்ச்சுனன் தன்னுடைய அரசியலை நன்கு நடத்தாமல் அவல வாழ்க்கை நடத்த தொடங்கினார். இந்த அரசருடைய மடிமையால் கபிலீஸ்வர கஜபதி மீண்டும் இந்நகரின் மீது படையெடுத்தார். ராஜமகேந்திரம், கொண்டவீடு, உதயகிரி முதலிய இடங்கள் கபாலீஸ்வர கஜபதியின் ஆட்சிக்கு உட்பட்டது. ஆந்திரநாட்டின் கிழக்குக் கடற்கரைப் பிரதேசம் முழுவதும், கபிலீஸ்வரன் தம்முடைய ஆட்சியில் கொண்டுவந்தார் என்று திரு. R.D பானர்ஜி கூறுகிறார்.
கோபிநாத மகாபத்திரன் என்ற சேனைத் தலைவரின் உதவிகொண்டு கர்நாடக தேசம் என்னும் பூமி தேவியைப் வசப்படுத்தி, அவளுடைய செல்வத்தையெல்லாம் அனுபவித்தான். அதுமட்டுமல்லாது, காஞ்சி மாநகரை கைப்பற்றினான் என்று கூறப்படுகிறது.
ஒட்டியன் கலாபை என்னும் கலிங்க தேசப்படையெடுப்பு:
தென் ஆற்காடு மாவட்டத்தில், முன்னூர் என்ற கிராமத்தில் பெருமாள் கோவில் காணப்படுகிறது. இந்த கோயிலில் உள்ள சாசனத்தில் கபலீஸ்வரர் கஜபதியின் மகனாகிய குமார ஹம்வீரதேவன், 1464ஆம் ஆண்டு வழுதிலம்பற்று, உசாவடி, சந்திரகிரி, திருவாரூர் திருமலாப்பள்ளி போன்ற இடங்களை கைப்பற்றி ஆட்சி செய்து. முன்னூர்க் கோவிலுக்கு, ஹம்வீர யோகம் என்ற தர்மகட்டளை ஒன்றை ஏற்படுத்தினர் என்று கூறப்படுகிறது. திருக்கோவிலூரை சுற்றியுள்ள சில கிராமங்களில் கிடைக்கும் கல்வெட்டுக்கள், ஒட்டியர்கள் என்ற கலிங்க நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் படையெடுத்து வந்து, கோவில்களை அழித்து மக்களை கொள்ளையடித்து சென்றனர் என்று கூறப்படுகிறது.
விஜயநகர பேரரசை சேர்ந்த தமிழ்நாட்டில் திருகோவலூர் வரை, ஒட்டியர்கள் படையெடுத்து வந்தனர் என்பதும், திருவாரூர், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களையும் கைப்பற்றினர், என்ற கூற்றில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. இந்த ஓட்டியன் கலாபை அல்லது கலிங்கதேசத்து படையெடுப்பு, 1463 ஆம் ஆண்டு மல்லிகார்ச்சுனருடைய ஆட்சியில் உருவானதாகும். திருக்கோவிலூருக்கு அருகில் உள்ள இடையாறு, அரகண்டநல்லூர், நெற்குணம் ஜம்பை முதலிய இடங்கள் மிகுந்த துன்பத்திற்கு தள்ளப்பட்டது.
ஆனால், அப்பொழுது சந்திரகிரியில் விஜயநகர மகாமண்டலேசுவரராயிருந்த சாளுவ நரசிம்மர் இந்த ஓட்டியப் படைகளை தமிழ்நாட்டை விட்டு துரத்தி, மீண்டும் விஜயநகர ஆட்சியை நிலை நிறுத்தானார். இந்தச் செய்திகளால் மல்லிகார்ச்சுன ருடைய ஆட்சியில் விஜய நகர மத்திய அரசாங்கம் செயலற்ற நிலையில் காணப்பட்டது. மல்லிகார்ச்சுனர் ‘கஜவேட்டை கண்டருளிய மும்முடி தேவராயன்‘ என்ற பட்டத்தை கொண்டதாகவும் அறியமுடிகிறது. அதுமட்டுமல்லாது, ஜோதிட நூலில் மிகத் திறமை கொண்டதாகவும் தெரிகிறது. மல்லிகார்ச்சுனர் 1465 ஆம் ஆண்டு வரை அரசாண்டு பின்னர் இறந்து விட்டதாக அறிய முடிகிறது.
இரண்டாம் விருபாட்சராயர்
மல்லிகார்ச்சுன்னுக்கு ராஜசேகரன் என்ற மகன் இருந்த போதிலும், அவரின் இளமையை காரணம் காட்டி, அவரின் சிற்றப்பன் பிரதாப தேவராயருடைய மகன் விருபாட்சன் என்பவன், வன்முறை வழியில் அரியணையைக் கைப்பற்றிக் கொண்டதாக நாம் பார்த்தோம். 1465ஆம் ஆண்டு வரையப்பட்ட ஸ்ரீசைலம் செப்பேடுகளில், இரண்டாம் விருப்பாட்சன் தன்னுடைய வாளின் வலிமையால் விஜயநகரப் பேரரசை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. பிரபன்னாமிர்தம் என்ற வடமொழி நூலில், விருபாட்சன் தனக்கு எதிராக இருந்த தாயத்தார்களை எல்லாம் கொலை செய்துவிட்டு, விஜயநகரப் பேரரசின் அரியணையை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. ஆகையால், விருப்பாட்சன் அதர்ம வகையில் அரசை கைப்பற்றியதாக பார்க்கிறோம்.
இவனால் கொலை செய்யப்பட்டு, அகாலமரணம் அடைந்த தாயத்தார்களுடைய ஆவிகள் எல்லாம், பிசாசுகளாகி அவனுக்கு தூக்கம் இல்லாமல் செய்தன. எட்டூர் நரசிம்மாச்சாரியர் என்பவர் ராமாயணத்தை இந்த பிசாசுகள் இருந்த இடத்தில் இரவில் பாராயணம் செய்து, அவை நற்கதி அடையும்படி செய்தார். இதைக் கேள்வியுற்ற விருபாட்சன் எட்டூர் நரசிம்மாச்சாரியாரைத் தன்னுடைய குல குருவாக கொண்டு ராமாயணத்தையும், ராமனையும் தெய்வங்களாக கொண்டாடினான். இதற்கு முன் பின்பற்றிய சைவ சமயத்தை விட்டு, வைணவ சமயத்தினை பின்பற்றினான். விஜயநகர மன்னர்கள் உடைய அரசு சின்னத்தில் ஸ்ரீவிருபாட்சா என்று எழுதுவதை விடுத்து, ஸ்ரீ ராமா என்று எழுதப்பட்டது.
இந்த வரலாறு வைணவ சமயம் விஜயநகரப் பேரரசின் முக்கிய சமயமாக மாற காரணமாக இருந்தது என்று கூறலாம். இந்த அரசன் தன் ஆட்சி காலம் முழுவதிலும், அரசியல் காரியங்களில் கவனம் செலுத்தாது மயக்கபொருளை உண்டும், குடித்தும், சிற்றின்பத்தில் தன் காலத்தைக் கழித்தான். குடிகளின் நலன்களை சிறிதும் எண்ணாமல் தன் சுகபோகங்களை அனுபவிப்பதில் கண்ணும் கருத்தாக இருந்தான். ஆதலால், இவனுடைய மூதாதையர்களால் அமைக்கப்பட்ட, விஜயநகர பேரரசின் பெரும்பகுதியை இழக்க வேண்டிய நிலை உண்டானது, என்று நூனிஸ் தன் நூலில் கூறுகிறார். இது போன்ற காரணங்களால் பாமினி சுல்தான் ஆகிய மூன்று முகமது என்பவர், விஜயநகர பேரரசை சேர்ந்த கோவா, செளல்தபோல் என்ற இடங்களையும், கைப்பற்றிக் கொண்டான். உதயகிரி, கொண்ட வீடு என்ற அரணமைந்த இடங்களை கலிங்க நாட்டு கஜபதி அரசன் கைப்பற்றினான். மேற்கு கடற்கரை பகுதியில் வாழ்ந்த துளுவ, கொங்கணத் தலைவர்களும், மத்திய அரசாங்கத்திற்கு அடங்காமல் கலகம் செய்தனர்.
புவனேகவீரன் காஞ்சிபுரத்தை கைப்பற்றல்:
தமிழ்நாட்டின் சில பகுதிகளை மல்லிகார்ச்சுன ராயன் காலத்தில், கபிலீஸ்வரர் கஜபதியின் மகன் ஹம்வீரதேவன் திருக்கோவலூர் வரையில், படையெடுத்து வந்து கைப்பற்றியது போல். 1469 ஆம் ஆண்டு மதுரைக்குத் தெற்கில் விஜயநகர பேரரசிற்கு அடங்கிய இருந்தவர்களும், வாணர் குலத்தைச் சேர்ந்த தலைவர்களும், விருபாட்சனுக்கு எதிராக கலகம் செய்தனர். இந்த கலகத்திற்கு தலைமை வகித்தவன் புவனேகவீரன் சமர கோலாகலன் என்பவன் ஆவான். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் 1469 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று, புவனிக்கவச நல்லூர், சமரகோலாகல நல்லூர் என்ற பாண்டிய நாட்டு கிராமங்களை ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தானம் வழங்கப் பட்ட செய்தியைக் கூறுகிறது.
இன்னொரு கல்வெட்டு காஞ்சிபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களும், புவனேக வீரனுடைய ஆட்சியில் அடங்கிய இருந்ததாக கூறுகிறது. புவனேக வீரன் என்ற வாணர் குலத் தலைவனுக்கு மூவார்ய கண்டன், ராஜமீசுர கண்டன், சமர கோலாகலன்,வீரகஞ்சுகன்,, வீரப் பிரதாபன் திருமால் இருஞ்சோலை நின்றான்.மாவலி வானாதிராயன் என்ற பட்ட பெயர்களும் வழங்கினர். தன்னுடைய கல்வெட்டுகளில் வடுகர்களை தோற்கடித்ததாகவும், காஞ்சிபுரத்தை கைப்பற்றியதாகவும், கூறிக்கொண்டு உள்ளான். விருப்பாட்சனைப் பேரரசனாக ஒப்புக்கொள்ளாமல் வடக்கு திசையில், இப்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் உள்ள நிலப்பகுதியில் சுதந்திர ஆட்சி அமைத்தான்.
1462 முதல் 1475 ஆண்டு வரையில், புதுக்கோட்டைப் பகுதியில் விருபாட்சனுடைய கல்வெட்டுகள் காணப்படவில்லை. ஆதலால், தமிழ்நாட்டில் இருந்த சிற்றரசர்கள் பலர், விருபாட்சன் உடைய தலைமையை உதறித் தள்ளி, தங்களுடைய சுதந்திர ஆட்சி அமைத்தனர் என்று எண்ண முடிகிறது. ஆனால், சந்திரகிரியில் மகாமண்டலலீசுரனாக இருந்த சாளுவ நரசிம்மர், இந்த புவனேக வீரனுடைய கலகத்தை அடக்கி மீண்டும் காஞ்சிபுரத்தை கைப்பற்றியதாக அறிய முடிகிறது.
காஞ்சிபுரத்தை கொள்ளையடித்த பாமினி சுல்தான் மூன்றாம் முகமது:
கபலீஸ்வரர் கஜபதி இறந்த பின்பு அவரின் மகன்களாகிய ஹம்வீரதேவன், புருஷோத்தமன் என்ற இருவரும், கலிங்க நாட்டில் அரசுரிமைக்காக போட்டியிட்டனர். பாமினி சுல்தானாகிய மூன்றாம் முகம்மதுவின் உதவியை நாடித், தனக்கு உதவி செய்தால், தன் தகப்பன் கபிலீஸ்வர கஜபதி பாமினி நாட்டில் இருந்து கைப்பற்றிக் கொண்ட இடங்களையும், மற்றும் கோதாவரி, கிருஷ்ணா நதிகள் இடையே உள்ள வளமான இடங்களையும், சுல்தானுக்கு அளிப்பதாக கூறினார். மூன்றாம் முகமது இந்த தருணத்தை கைவிடாமல் அவனுக்கு உதவி செய்ய முன்வந்தார்.
கிருஷ்ணா – கோதாவரி நதிகளுக்கு இடையில் உள்ள நிலப்பகுதியை பாமினி சுல்தான் தன் வசப்படுத்திக் கொண்டால், விஜயநகர பேரரசிற்கு அது பேராபத்தாக முடியும். இந்த சிக்கலான அரசியல் உறவுகளை உணர்ந்து கொள்ள விருபாட்சனால் முடியவில்லை. இருந்தாலும் சாளுவ நரசிம்மனின் இந்த சிக்கலை நன்கு அறிந்துகொண்டு ஹம்வீரதேவனுக்கும், மூன்றாம் முகமதுவிற்கும் எதிராக புருஷோத்தம கஜபதி உதவி அளிக்க முன்வந்தான். ஆதலால், 1471 ஆம் ஆண்டில் கிருஷ்ணா – கோதாவரி இடைப்பட்ட நிலப்பகுதியை பாமினி சுல்தான், கஜபதி அரசர்கள், சாளுவ நரசிம்மர் ஆகிய மூன்று பெரிய அரசியல் தலைவர்கள் போரிட்டு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
சாளுவ நரசிம்மர், ஹம்வீரதேவன், புருஷோத்தம கஜபதி ஆகிய இருவருக்கும் இடையில், சமரசம் பேசிப் பாமினி சுல்தானாகிய மூன்றாம் முகமதுவை போரில் ஈடுபடாமல் செய்துவிட்டார். கொண்ட வீடு என்ற இடத்திலிருந்த பாமினிசேனை கலகத்தில் ஈடுபட்டது. சேனைத் தலைவன் இறந்துபோநான். இவ்விதம் சாளுவ நரசிம்மர் தமக்கு எதிராக இருப்பதை அறிந்த மூன்றாம் முகமது விஜயநகரப் பேரரசு மீது படையெடுத்தான். இந்த படை எழுச்சி பற்றி முகமது காசிம் பெரிஷ்டாவும், பர்ஹாலிமாசிரின் ஆசிரியராக டபடாபாவும், இருவேறு விதமான வரலாற்று உண்மைகளை கூறுவார்.
இருந்தாலும், அவ்விருவரும் மூன்றாம் முகமது, தமிழ் நாட்டில்உள்ளதான, விஜயநகரப் பேரரசிற்க்கு அடங்கிய காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்து, அங்கிருந்து சில பெரிய கோவில்களில் காணப்பட்ட பெருஞ்செல்வத்தை, தன் வசப்படுத்திக் கொண்டார்கள் என்று கூறுகிறார்கள். சாளுவ நரசிம்மனும், அவனின் சேனைத் தலைவனாகிய ஈஸ்வர நாயக்கரும், மூன்றாம் முகமது காஞ்சிபுரத்திலிருந்து திரும்புகையில் கண்டுக்கூர் என்ற இடத்தில் எதிர்த்து, அவன் வாரிக் கொண்டு வந்த செல்வங்களை தங்கள் வசப்படுத்திக் கொண்டான். இங்கு கூறப்பட்டது போல், விருபாட்சனுடைய ஆட்சி காலத்தில் உள்நாட்டுக் கலகங்கள், அயல்நாட்டுப் படையெடுப்புகள் என்பன பல ஏற்பட்டது. விஜயநகர பேரரசு சீர்குலைந்து சிதைந்து போய்விடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
மேலைக் கடற்கரையோரத்தில் குதிரை வாணிகம் செய்வதற்க்கு வந்தார்கள் என்றும், பாட்கல் என்ற இடத்தில் தங்கியிருந்த இஸ்லாமிய வியாபாரிகளை கொலை செய்ததனால் அவர்கள் விஜயநகரப் பேரரசில் குதிரைகளை இறக்குமதி செய்ய மறுத்து பாமினி நாட்டிற்கு சென்று விட்டனர். இதுபோன்ற செய்ய தகாத காரியங்களை செய்ததால், அவனுடைய மகன்களில் இருவரில் மூத்தவர், தன் தகப்பனை கொலை செய்துவிட்டான். தன் தகப்பனைக் கொன்ற பாவத்திற்கு கழுவாயாக, தான் அரசுரிமை வகிக்க தகுதி அற்றவன் எனக் கூறி தன்னுடைய அரசியல் உரிமையை கைவிட்டான். ஆதலால்,பெத்தேராயன் என்ற இரண்டாவது மகன் தன் தகப்பனுக்கு பிறகு விஜயநகர மன்னனாக முடிசூட்டிக் கொண்டான். இந்த பெத்தேராயனை நீக்கிவிட்டு சாளுவ நரசிம்மன் அரச பதவியை ஏற்றுக்கொண்டார். அச்செயலே சாளுவ புரட்சி என வரலாற்றில் கூறப்படுகிறது.
சாளுவ நரசிம்மன்
விஜயநகர வரலாற்றில் அதிகமாக பேசப்படும் சாளுவர்கள் வைஷ்ணவ சமயத்தை சேர்ந்தவர்கள் என்பதை அறியமுடிகிறது. மகாவிஷ்ணுவின் எதிரிகளாக கூறப்படும் சல்வர்கள் என்ற தென்னிந்திய இனத்தவர்களில் இருந்து இவர்கள் வேறுபட்டவர், துளுவ நாட்டில் வாழ்ந்த ஜைன சாளுவர்களிலிருந்தும் இவர்கள் வேறுபட்டவர். சாளுவ என்னும் சொல் மிகக் கூர்மையான பார்வையுடன் வேகமாக பறந்து சென்று, தன்னுடைய இரைக்காக வேட்டையாடும், ராசாளி என்னும் பறவையைக் குறிக்கும். குமார கம்பணருடன் தமிழ்நாட்டில் படையெடுத்து வந்து சம்புவராயர் உடனும், மதுரை சுல்தான் உடனும், போர் புரிந்து வெற்றி பெற்ற சாளுவ மங்கு என்பவரின் வழிவந்த சாளுவ நரசிம்மன்.
மதுரை சுல்தான் பக்ருதீன் முபராக் ஷாவின் படைகள் மீது ராசாளி பறவை போல் பாய்ந்து படைகளை சின்னாபின்னமாக்கி வெற்றி கண்டதால், குமார கம்பணர் அவருக்கு சாளுவ என்ற அடைமொழி கொடுத்தது அறிய முடிகிறது. இந்த பட்டத்தை அடைந்த சாளுவ மங்கு முதலில் குமார கம்பணரின் ஓலை நாயகமாக அளுவல் பார்த்த போதிலும் பின்னர், மற்றவர்களை விட சிறந்ததொரு பதவியை வகிக்க முன்வந்தார்.
சாளுவ நரசிம்மரால் எழுதப்பட்ட இராம அப்யூதயம் என்ற நூலும், பில்லால மாரி பீன வீரபத்திரரால் எழுதப்பட்ட, சாளுவ நரசிம்மருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட சாளுவ அப்யூதயம் எனும் நூலும், சாளுவ மங்குவின் முன்னோர்களின் வரலாற்றை பற்றி கூறுகிறது. இந்த இரு நூலிலும், கல்யாண புரத்தில் வாழ்ந்த குண்டா என்பவர் சாளுவ வம்சத்தின் முதல்வராக கூறப்பட்டுள்ளார். தங்கள் வசப்படுத்திக் கொண்டு குண்டாவையும், அவருடைய மகன் மங்குவையும், நாட்டை விட்டு ஓடும்படி செய்ததாகவும். பின்னர் விஜயநகரத்தை அமைத்த சகோதரர்களுடன் கூடிக்கொண்டு ஹரிகரன், புக்கன் அவர்களுக்கு அடங்கி மானியக்காரராக வாழ்க்கை நடத்தினார், என்றும் அறிய முடிகிறது.
சாளுவ நரசிம்மனின் தகப்பனாகிய சாளுவ திப்பன் என்பவர், இரண்டாம் தேவராயருடைய மூத்த சகோதரியை மணந்து, பிறகு சந்திரகிரி ராஜ்யத்திற்கு மகாமண்டலேசுவர்ராக நியமிக்கப்பட்டார். இந்த பதவி அவர்களுடைய குடும்பத்தினருக்கு பரம்பரை பதவியாக மாறியது. 1450 ஆம் ஆண்டில் சாளுவ நரசிம்மன் தன் தகப்பனுக்கு பிறகு சந்திரகிரியில் மகாமண்டலேசுவரர் பதவி ஏற்றான். 1457 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட சாசனத்தில் மகா அரசு என்று கூறப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஜில்லாநகர் என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டில், மகாமண்டலேசுவரர் மேதினி மீசுரகண்ட நரசிம்ம தேவர் தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்தினார் என்று கூறப்படுகிறது. இன்னும் இவருடைய கல்வெட்டுகள், விஜயநகரப் பேரரசின் மத்திய பகுதிகளிலும், கிழக்கு பகுதிகளிலும் காணப்படுகிறது.
சாளுவ நரசிம்மர் 44 ஆண்டுகள் அரசு புரிந்ததாகவும், தமக்கு முன்னிருந்த சங்கம வம்சத்து அரசர்கள் இழந்த, நிலப்பகுதிகளை எல்லாம் திரும்ப பெற்றதாகவும் நூனிஸ் தன் நூலில் கூறுகிறார். இருப்பினும், கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக் காலத்தைப் பற்றி நன்கு ஆராய்ந்து எழுதிய ஒருகந்தி ராமச்சந்திரய்யா என்பவர், சாளுவ நரசிம்மர் 1452 முதல் 1492 வரையில் 40 ஆண்டுகள் பதவி வகித்தார் என்றும், இந்த 40 ஆண்டுகளில் 1452 முதல் 1482 வரை 30 ஆண்டுகளுக்கு சந்திரகிரி ராஜ்யத்திற்கு மகாமண்டலேசுவர்ராக இருந்தார் என்றும், பின்பு 1492 ஆம் ஆண்டு வரை விருபாட்சனுக்கு பிறகு விஜயநகர பேரரசராக பதவி வகித்தார் என்றும், உறுதிபடக் கூறுகிறார்.
சாளுவ நரசிம்மருடைய அதிகாரம் படிப்படியாக வளர்ச்சியடைந்ததை பற்றி இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்களாகிய பெரிஷ்டா, டபடாபா ஆகிய இருவரும் கூறுகின்றனர். கர்நாடக பிரதேசத்திற்கும், தெலுங்கானா நாட்டிற்கும் இடையில் இருந்த விஜயநகரப் பேரரசின் நிலப்பகுதிகளை தம் வசப்படுத்திக் கொண்டு, பல அரண்மனைகள் கைப்பற்றி ஆட்சிபுரிந்த, பெரிய வல்லமை பொருந்திய அரசன் என்று பெரிஷ்டா கூறுகிறார். தெலுங்கானத்தையும், விஜயநகரப் பேரரசையும், ஆண்ட அரசர்களில் மிக வல்லமையும், அதிகாரமும் கொண்டவர். இரும்பு மலையை ஒத்த யானைப்படைகளையும், அலெக்சாந்தர் அமைத்த கோட்டைகள் போன்ற அரண்களையும் உடையவர் என்று கூறுகிறார்.
இதன்மூலம் விஜயநகரப் பேரரசை காப்பாற்றுவதற்கு சாளுவ நரசிம்மன் தகுந்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்ததை, இதன் மூலம் அறிய முடிகிறது. தமிழ்நாட்டில் திருக்கோவலூர் பகுதியில் தங்கியிருந்த கலிங்கபடைகளை துரத்தி, உதயகிரியை கஜபதி அரசர்களிடம் இருந்து கைப்பற்றி, விஜயநகர அரசை சாளுவ நரசிம்மர் காப்பாற்றினார். அவர் உதயகிரியில் கலிங்கபடைகளின் எதிர்ப்பை சமாளித்துக் கொண்டு இருந்தபோது, பாண்டிய நாட்டிலிருந்து பாணர்குல தலைவனாகிய புவனேகவீரன் காஞ்சிபுரத்தில் மீது படையெடுத்து, அந்த நகரத்தை கைப்பற்றிய செய்தியை பற்றி பார்த்தோம்.
சாளுவ நரசிம்மர் உதய கிரியில் இருந்து சந்திரகிரிக்கு திரும்பினார்
சாளுவ அப்யூதயம் என்ற நூலில் புவனேகவீரன் சமரகோலாகலனைக், காஞ்சிபுரத்தில் இருந்து பின்வாங்கும் படி செய்தார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வெற்றியில் நாகம நாயக்கர், ஆரவிட்டி புக்கர்,துளுவ ஈஸ்வர நாயக்கர் போன்ற தலைவர்கள் சாளுவ நரசிம்மருக்கு மிக உதவியாக இருந்தனர். 1487 ஆம் ஆண்டில் பாமினி சுல்தான் மூன்றாம் முகமது காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களை கொள்ளையடித்து திரும்பிச் செல்லும் வழியில், கண்டுக்கூர் என்ற இடத்தில் வழிமறித்து. சாளுவ நரசிம்மரும் ,அவருடைய சேனைத்தலைவர் ஈஸ்வர நாயக்கரும், அக்கொள்ளை பொருட்களை மீட்டனர். வராக புராணம், பாரிஜாதாபகரணமும் என்ற இரு நூல்களிலும் இந்தச் செய்தி காணப்படுகிறது.
சாளுவ புரட்சி:
விஜயநகரப் பேரரசன் விருபாட்சன் உடைய செயலற்ற தன்மையைக் காட்டும் விதமாக, இவன் ஆட்சி காலத்தில் கலிங்க நாட்டிலிருந்து ஓட்டியர்கள் திருக்கோவலூர் வரை, படையெடுத்து வந்த பல நாச வேலைகளை செய்ததும், வாணர்குல தலைவனான புவனேகவீரன் காஞ்சிபுரத்தை கைப்பற்றியதும், பாமினி சுல்தான் முகமது காஞ்சிபுரத்து கோவில்களை கொள்ளையடித்ததும் நன்கு அறியமுடிகிறது. சாளுவ நரசிம்மர் இது போன்ற தீவிரமான செயல்களை மேற் கொள்ளாமல் இருந்திருந்தால், விஜயநகரப் பேரரசு அழிந்து போயிருக்கும். விருபாட்சன் 1485 ஆம் ஆண்டு இறுதி வரை ஆட்சி பீடத்தில் இருந்தான். இவனுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் தன்னுடைய தகப்பன் மீது பெரும் கோபம் கொண்டு அவனை கொலை செய்துவிட்டான். தகப்பனை கொலை செய்த காரியத்திற்காக தன் பதவியையும், அரசு உரிமையையும் மறுத்து விட்டான்.
விருபாட்சன் உடைய இளைய மகன் பெத்தேராயன் என்ற பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவருடைய அமைச்சர்களும், நாயன்மார்களும் அவனுடைய அண்ணனை கொலை செய்து விடும்படி ஆலோசனை கூறினர். அவர்களுடைய அறிவுரையின் படி, பெத்தேராயன் தன்னுடைய தமையனை கொலை செய்துவிட்டான். பெத்தேராயனும் தன்னுடைய தகப்பனைப் போலவே சிற்றின்பங்களில் தன்னுடைய காலத்தை கழித்து. அரசு காரியங்களில் கவனம் செலுத்தாது, வீண் செயல்களில் ஈடுபட்டான். விஜயநகரப் பேரரசு எந்த வகையிலாவது காப்பாற்ற வேண்டும் என்று சாளுவ நரசிம்மர் பெரிதும் அக்கறை காட்டிக் கொண்டார்.
விருபாட்சனின் மகன் பெத்தேராயன் அரசனாக இருந்தால், பேரரசு சீரழிந்து போகும் என்று உணர்ந்து அறிந்த சாளுவ நரசிம்மர். அரச பதவியைத் தாமே எடுத்துக் கொள்வதற்கு ஏற்ற வழியை செய்தார். பேரரசில் முக்கியமான தலைவர்கள், மகாமண்டலேசுவரர்களையும் தன்வசப்படுத்திக் கொண்டு விஜய நகரத்தை கைப்பற்றி, பெத்தேராயனை நகரைவிட்டு துரத்துவதற்கு ஏற்ற தலைவனை தேர்ந்தெடுத்தான். சாளுவபுரட்சி பற்றி நூனிஸ் தன் நூலில் மிக தெளிவாக கூறி உள்ளதை அறியலாம். சாளுவ நரசிம்மனின் சேனைத் தலைவன் விஜயநகரத்தை நோக்கிப் படையெடுத்தபோது, அரண்மனையை காப்பாற்ற அங்கு ஒருவரும் இல்லை. பெத்தேராயனின் சில ஏவலாளர்கள், சாளுவ நரசிம்மர் உடைய படையெடுப்பை பற்றி அறிவித்தபோது, அது போன்று ஒன்றும் நடைபெறாது என கூறி இருந்தான்.
நரசிம்மர் உடைய சேனைத் தலைவன் அரண்மனைக்குள் தன் படைகளுடன் நுழைந்து, அந்தப்புரத்தில் உள்ள சில பெண்களைக் கொன்று, அரசனையும் கொள்ள முயன்றான். பெத்தராயன் தன்னுடைய அரண்மனை, உறவினர், என எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒருவரும் அறியாத ஓர் இடத்துக்குச் சென்றான்.
சங்கம வம்சத்துக் கடைசி அரசன் அரண்மனையை விட்டு ஓடிய பிறகு, சேனைத் தலைவன் அந்த அரசனைப் பின் தொடர்ந்து கைது செய்யவில்லை. நகரத்தையும் அரண்மனையிலிருந்த கருவூலங்களையும், கைப்பற்றிய செய்தியைச் சாளுவ நரசிம்மருக்கு அறிவித்தார். அன்று முதல் சாளுவ நரசிம்மர் விஜயநகரப் பேரரசராக பதவி ஏற்றார். இந்த சாளுவ புரட்சி எந்த ஆண்டில் நடைபெற்றது என்பதை, ஓ. ராமச்சந்திரய்யா என்பவர் இரு கல்வெட்டுக்களை எடுத்துக்கொண்டு கூறுகிறார். முல்பாகல் என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டில், ‘சங்கமம் வம்சத்தின் கடைசி அரசராகிய தேவராய மகாராய விருபாட்ச பிரவிட தேவ மகாராயர்,’ 1485 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆட்சி செய்ததாக கூறப்படுகிறது. 1486 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதி எழுதப்பட்ட கல்வெட்டில், “ஸ்ரீமன் ராஜாதி ராஜ ராஜ பரமேஸ்வர பிரவுட பிரதாப சாளுவ நரசிங்க ராயர் விஜயநகரத்திலிருந்து ஆட்சி செய்தார் என்றும்”, தும்கூர் என்ற இடத்தில் கிடைக்கிற சாசனம் கூறுகிறது.
ஆகையால், இந்த இரண்டு தேதிகளுக்கு இடையில் தான் சாளுவ புரட்சி நடைபெற்றிருக்க வேண்டும். சாளுவ நரசிம்மர் தம்முடைய தற்பெருமையையும், சுயநலத்தையும், கருதி விஜயநகரப் பேரரசை கைப்பற்றவில்லை. இருப்பினும், விருபாட்சனும, அவனுடைய மகன் பெத்தேரானும் வலிமையற்ற அரசர்களாக இருந்தார்கள், பேரரசு வீழ்ந்து விடும் தருவாயில் இருந்த போது, சாளுவ நரசிம்மர் உற்ற இடத்தில் உதவும் நபராக நின்று பேரரசை காப்பாற்றினார். அவருக்கு உதவியாக இருந்தவர் நரச நாயக்கர் என்ற தலைவராவார். பேரரசின் நலத்தையும், அதில் வாழ்ந்த மக்களின் நலத்தையும், கருதி இந்த அரசியல் புரட்சியை சாளுவநரசிம்மர் நடத்தி வைத்தார்.
விஜயநகர ஆட்சியைக் கைப்பற்றிய பின் பாமினி சுல்தான் உடைய அமைச்சர் காசிம்பரீத் என்பவருடன் நட்பு கொண்டு, பீஜப்பூர் சுல்தானிடம் இருந்து ராய்ச்சூர், முதுகல் ஆகிய இடங்களையும் நரசிம்மன் கைப்பற்றினான். புருஷோத்தம கஜபதியின் ஆளுகைக்கு உட்பட்ட, கொண்ட வீடு என்ற இடத்தையும் திரும்ப பெறுவதற்கு பல முயற்சிகளைச் செய்தார். பாணர்குல தலைவனாகிய புனேகவீரனை அடக்கி, பாண்டிய நாட்டில் விஜயநகர ஆட்சி நிலைக்கும் படி செய்தார். அவருடைய பல வெற்றிகள் கல்வெட்டுகளிலும், அவருடைய காலத்தில் எழுதப்பட்ட இலக்கியத்திலும், கூறப்பட்டுள்ளதை நாம் அறிகிறோம். விஜயநகர பேரரசிற்கு நரசிம்ம ராஜ்யம் என்ற பெயர் வழங்கும்படி செய்து, சாளுவ நரசிம்மர் புகழடைந்தார்.
போர்த்துக்கீசியர்களுடன் நட்புக்கொண்டு, அரேபிய நாட்டு குதிரைகளையும் பெரும் விலை கொடுத்து வாங்கி, தம்முடைய குதிரைப் படையை வலிமை அடையும்படி செய்தார். இருப்பினும், தம்முடைய இறுதிக் காலத்தில் இராய்சூர், கொண்ட வீடு, உதயகிரி என்ற மூன்று இடங்களையும் கைப்பற்ற முடியாமல் கவலையடைந்தார். மரணத் தருவாயில் இருக்கும் பொழுது நரச நாயக்கர் என்னும் துளுவ வம்சத்து தலைவனை அழைத்து, இரண்டு குமாரர்களையும், அவருடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்ளும்படி, காப்பாற்றும் படியும், அவ்விருவரும் அரசியல் நடத்துவதற்கு உரிய தகுதியுள்ள ஒருவருக்கு பேரரசை வழங்கப்படும் உத்தரவிட்டார்.
இராய்சேர், உதயகிரி, கொண்ட விடு என்று மூன்று முக்கியமான இடங்களை எப்படியாயினும் கைப்பற்ற வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். ஏழு ஆண்டுகள் தான் நரசிம்மராவ் ஆட்சி புரிந்ததாக அறியமுடிகிறது. வைணவ சமயத்தைச் சார்ந்தவராக இருப்பினும் மற்ற சமயங்களை பின்பற்றுவோரிடம் சமயப்பொறை உடன் நடந்து கொண்டார், என்று அறியமுடிகிறது. இராமாயணத்தின் கதாசங்கிரகமாகிய ராம அப்யூதயம் என்ற வடமொழி நூல், சாளுவ நரசிம்மரால் எழுதப்பட்டது. தெலுங்கு மொழியில் வல்ல ராஜநாத திண்டிமர், பீன வீரபத்திரர் என்ற இரு கவிகள் நரசிம்மரால் ஆளாக்கப்பட்டனர். 1491 ஆம் ஆண்டு வரை சாளுவ நரசிம்மர் ஆட்சியில் இருந்ததாக அறிய முடிகிறது.
நரச நாயக்கரின் ஆட்சி:
விஜயநகர வரலாற்றில் ஒரு தெளிவற்ற தன்மை யோடு இரு மரபுகளை காணமுடியும். ஒன்று சாளுவர், மற்றொன்று துளுவர். சாளுவர் என்ற பட்டம் சாளுவ நரசிம்மர் உடைய முன்னோர்களில் ஒருவராகிய மங்கு என்பவருக்கு குமாரகம்பணரால் வழங்கப்பட்டது என்பதை அறிந்தோம். மங்கு சந்ததிகளுக்கு உட்பட்டே இப்பட்டம் வழங்கப்பட்டன. சாளுவ வம்சத்தை சேர்ந்தவர்கள் பாமினிராஜ்யத்தில் இருந்த கல்யாண புறத்திலிருந்து, விஜய நகரத்துக்கு வந்தவர்கள் ஆவர். சாளுவ நரசிம்மரும், அவருடைய மகன் இம்மடி நரசிம்மரும், சாளுவ மரபைச் சார்ந்தவர்கள் ஆவர். துளுவர் என்ற மரபுப் பெயரை திம்மராஜனும், ஈஸ்வர நாயக்கரும், அவருடைய மகன் நரச நாயக்கருக்கும் மேற்கொண்டனர்.
இந்தத் துளுவ வம்சத்து தலைவர்களும், நரசிங்கர் அல்லது நரசிம்மர் என்ற பெயரையும், சாளுவ என்ற பட்டத்தையும், தங்களுடைய பெயருக்கு முன் வைத்துக் கொண்டனர். இதனால், சாளுவ வம்சத்து நரசிம்ம தேவர்களுக்கும், துளுவ வம்சத்து நரசிம்ம தேவர்களுக்கும், வேற்றுமை பற்றி அறியாது வரலாற்று ஆசிரியர்களும், மாணவர்களும் பலவாறு குழப்பம் கொள்வதும் உண்டு. விஜயநகர வரலாற்றில் காணப்படும் நான்கு நரசிம்மர்களில் முதலில் இருவரும், சாளுவ நரசிம்மரும், இம்மடு நரசிம்மரும் சாளுவ வம்சத்தினர் ஆவார்.
அவர் பின்னர் வந்த நரச நாயக்கரும் அவருடைய மகன் வீரநரசிம்மரும் துளுவ பிரிவை சேர்ந்தவர்கள் ஆவர். மற்றும் சாளுவ, துளுவ அரசர்களுக்கு அடங்கிய அமைச்சர்களும், மகாமண்டலீசுவர்களும் கூட சாளுவ என்ற பட்டத்தையும் மேற்கொண்டனர். எடுத்துக்காட்டாக, கிருஷ்ணதேவராயரின் அமைச்சருக்கு சாளுவதிம்மர் என்ற பெயர் வழங்கப்பட்டது. அச்சுதராயர் உடைய ஆட்சியில் சோழ மண்டலத்தில் ஆட்சிபுரிந்த செல்லப்பர் என்பாருக்கு சாளுவ நாயக்கர் என்ற பெயர் வழங்கப்பட்டது. துளுவர்களுக்கும், சாளுவர்களுக்கும் இடையே திருமண உறவு இருந்ததாக தெரியவில்லை.
சாளுவ வம்சத்து தலைவராகிய சாளுவ நரசிம்மருக்கு, 1491 ஆம் ஆண்டு இறுதிக் காலம் நெருங்கியது. அவருடைய மகன்களாகிய திம்மன், நரசிம்மன் ஆகிய இருவரும் அரசுரிமை பெற்று ஆட்சி செலுத்த கூடியவ வயது அல்ல. ஆதலால், விஜயநகரப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பையும், தம்முடைய குமாரர்களை பாதுகாக்கும் கடமையும், நரச நாயக்கரிடம் ஒப்படைத்தார். தம்முடைய இறுதிக் காலத்தில் சாளுவ நரசிம்மர் அமைச்சராகிய நரச நாயக்கரை தம்முன் அழைத்து, “விஜயநகரப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பையும், மக்கள் இருவரையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன். நான் இந்த பேரரசை வாளின் வன்மையால் பெருமுயற்சி செய்து பாதுகாத்தேன். அரண்மனையிலுள்ள எல்லாவித செல்வங்களும், இராணுவமும் உங்களுடையது என்று நீங்கள் கருதவும். என்னுடைய குமாரர்கள் ஆட்சி பெறுவதற்குரிய வயது வந்த பிறகு இருவரில் திறமை உள்ளவர்களுக்கு, முடி சூட்டவும்.
உதயகிரி, கொண்டவீடு, இராய்ச்சூர் என்ற மூன்று இடங்களையும் எப்படியாவது விஜயநகர பேரரசின் கீழ் இணைக்க வேண்டும். அந்த காரியத்தை முடிக்க எனக்கு அவகாசம் இல்லை. ஆதலால், பேரரசையும் அரசாங்கத்தின் செல்வங்கள் மற்றும் என் மகன்களையும் உங்களிடத்தில் அளித்துள்ளேன்” என்று கூறியதாக நூனிஸ் தன்நூலில் கூறுகிறார். சாளுவநரசிம்மர் இறந்த பிறகு நரச நாயக்கர் அவருடைய முதல் மகன் திம்மனை அரசனாகவும், தாம்பகர ஆளுநராகவும் பதவி ஏற்றுக்கொண்டு, விஜயநகரப் பேரரசை ஆட்சி புரிந்தார்.
, சாளுவ நரசிம்மனின் மகன் திம்மன் பெயரளவில் அரசனாக இருந்தான். அரசியல் அதிகாரங்களை உண்மையில் செலுத்தியவர் நரச நாயக்கர் தான். மகாபிரதானி,காரியகர்த்தா, ரக்ஷாகர்த்தர்,சுவாமி என்ற பெயர் அவருக்கு வழங்கப்பட்டது. விஜயநகரத்தில் நவரத்தின அரியணையில் அமர்ந்து அவர் ஆட்சி நடத்தினார். நரச நாயக்கருக்கு இதுபோன்ற பதவியும், அதிகாரமும், கிடைத்தது சில தலைவர்களுக்கு பொறாமையாக இருந்தது. அந்த பதவியிலிருந்து அவரை விளக்க வேண்டும் என்று பெரும் முயற்சியில் ஈடுபட்டார்கள். திம்மரசன் என்ற நாயக்க தலைவனை சாளுவ நரசிம்மரின், முதல் மகனாகிய அரசிளங்குமாரனை கொலை செய்துவிட்டு, நரச நாயக்கர் தான் அந்த செயலை செய்வதற்கு தன்னை தூண்டியதாகவும் பறை சாற்றினான்.
. உண்மையில் நரச நாயக்கருக்கு அக்கொலையில் எந்தவித சம்பந்தமும் இல்லை. தன்னுடைய நாணயத்தையும், அரசு விசுவாசத்தையும் நிலைநாட்டுவதற்கு, இரண்டாவது அரசன் இம்மடி நரசிம்மனை அரியணையில் அமர்த்தி, முன்பு போலவே ஆட்சி நடத்தினான். திம்மப்பன் என்ற அரசனை கொலை செய்த திம்மரசன் என்ற தலைவனை தண்டிக்க விரும்பினார் ஆனால், நரச நாயக்கரால் அவ்வாறு செய்ய முடியவில்லை. ஏனென்றால், அவனுக்கு உதவியாக இருந்து பல தலைவர்கள் கலகம் செய்வதற்கு தருணத்தை எதிர்பார்த்து இருந்தனர். இம்மடி நரசிம்மன் என்ற அரசன் தன் அண்ணனை கொலை செய்தவனுக்கு ஆதரவாக இருந்தான் என அறியமுடிகிறது. நரச நாயக்கர் இளவரசனை திம்மரசனுடைய பிடியிலிருந்து விடுவித்து, பெனுகொண்டா எனக்கு ஒன்னும் கோட்டையில் கௌரவமாச் சிறையில் அடைத்து நாட்டில் அமைதியக நிலை நாட்டினார்.
பாமினி சுல்தானுடன் போர்:
தலை நகரத்தில் வந்த கலகத்தை எல்லாம் அடக்கி, தன்னுடைய நிலையை பத்திரப் படுத்தி கொண்டான். அதன் பின்பு நரச நாயக்கர் இராய்ச்சூர் இடத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என திட்டமிட்டான். பாமினி சுல்தானிய அரசும் ஐந்து சிறிய நாடுகளாக பிரிந்து செல்லும் தருவாயில் இருந்தபோது, காசிம் பரீத் என்ற பாமினி அமைச்சர், சுல்தானை தம்வசப்படுத்தி தானே சர்வாதிகாரியாக பதவி வகித்தார். பீஜப்பூர் அரசை ஏற்படுத்திய யூசப் அடில் ஷாவை அடக்க எண்ணினார். நரச நாயக்கரை தமக்கு உதவி அளிக்கும்படி கேட்டுக் கொண்டான். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் ராய்ச்சூரின் மீது படையெடுத்து கோட்டையை கைப்பற்ற முயன்றான். யூசப்அடில்ஷா தோல்வியுற்று, மானவி என்ற கோட்டைக்குள் பதுங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின் அமைதி உடன்படிக்கை செய்து கொள்வது போல நாடகம் நடித்தான், பின்பு நரசநாயக்கரையும், அவருடைய சேனையையும், தோற்கடித்தான். நரச நாயக்கர் மிக்க சிரமத்துடன் விஜய நகரத்துக்கு திரும்ப வேண்டியதாயிற்று. இராய்ச்சூர்,முதுகல் இடங்கள் மீண்டும் பீஜப்பூர் சுல்தானுக்கும் சொந்தமானது.
நரச நாயக்கரின் பிற வெற்றிகள்
ராய்ச்சூர், முதுகல் போன்ற இடங்களை நரச நாயக்கரால் கைப்பற்ற முடியாமல் போனது. இருப்பினும், விஜயநகரப் பேரரசின் மற்ற பகுதிகளில் அவருக்கு பெருவாரியான வெற்றிகள் உண்டானது. மைசூர் நாட்டில் நகர் என்ற இடத்தில் கிடைத்த ஒரு கல்வெட்டில், நரச நாயக்கரின் பல வெற்றிகள் கூறப்படுகிறது. “புதுப்புனல் நிறைந்த காவிரி நதியை கடந்து, ஸ்ரீரங்கப் பட்டணத்தை கைப்பற்றி வெற்றித்தூண்” நாட்டினார். சேர, சோழ நாட்டுத் தலைவர்களையும், பாண்டிய மானாபரணனையும் இவர் வெற்றிகொண்டார்.
துருக்கர்களையும், கஜபதி அரசர்களையும் வெற்றி கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலைவரை உள்ள இடங்களை அடக்கி, விஜயநகர ஆட்சியை பரவச் செய்தார். ஈஸ்வர நாயக்கரின் மகனான நரச நாயக்கர் விஜயநகர ஆட்சியை கைப்பற்றிக் குந்தள நாட்டு அரசனுக்கு துன்பத்தை உண்டாக்கினான். சோழநாட்டு தலைவனை தோல்வியுறச் செய்த மதுரை நகரத்தை கைப்பற்றிய பிறகு, ராமேஸ்வரத்தில் 16 மகாதானங்களை செய்தார் என்று பாரிஜாதாபகரணமி என்ற நூலும் கூறுகிறது. அச்சுதராய அப்யூதயம் எனும் நூலில் நரச நாயக்கர் மதுரையை கைப்பற்றிய மறவபூபகன் என்பவனை வெற்றிக்கொண்டதாகவும், சோழநாட்டில் கோனேட்டி அல்லது கோனேரி ராஜன் என்பவனை வெற்றி கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாமினி சுல்தான் காஞ்சிபுரத்தின் மீது படையெடுத்தபோது, 1485 ஆம் ஆண்டு சாளுவ புரட்சி ஏற்பட்ட போதும், பாணர் தலைவர்கள் மீண்டும் விஜயநகர ஆட்சியை உதறித்தள்ளி சுதந்திரமடைந்தனர். சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளி சீமையை ஆண்ட கோனேரிராஜன் என்பவன் விஜயநகர் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்தான். திருமழபாடியில் கிடைக்கும் ஒரு கல்வெட்டில், இந்த கோனேரிராஜன் பசவசங்கரன் என்பவனுடைய மகன் என்றும், காஞ்சிபுரவரதீஸ்வரன், மகாமண்டலீசுவரப் பட்டுக் கட்டாரி என்ற பட்டப் பெயர்களைக் கொண்டிருந்தான் என்றும் அறிய முடிகிறது.
இந்த கோனேரிராஜன் சாளுவ நரசிம்மனையோ, இம்மரி நரசிம்மனையோ, தன்னுடைய தலைவனாக ஒப்புக்கொள்ளாமல் கலகம் செய்தான். கோயிலொழுகு என்ற வரலாற்று நூலில் இந்தச் சோழ நாட்டுத் தலைவன், “திருவரங்கம் கோயிலில் இருந்து புறவரி காணிக்கை, பரிவட்டம் முதல் வரிகளை வசூலித்தும், வைணவர்களைத் துன்புறுத்தி சைவர்களை ஆதரித்தும் சில கொடுமைகளைச் செய்தான். அவனை அடக்கி விஜயநகர ஆட்சி நிலைபெறச் செய்வதும் நரச நாயக்கன் கடமையானது.
1499 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து, சோழ நாட்டை ஆண்ட கோனேரிராஜனை அடக்கி தமிழ் நாட்டில் அமைதியை, நிலை நாட்டினார் என்றும் கூறப்படுகிறது. பாரிஜாதாபகரணமு என்ற நூலிலும், வரதாம்பிகா பரிணயம் என்ற நூலிலும், கூறப்பட்டுள்ள சோழ நாட்டு அரசன் இந்த கோனேரிராஜனே என்று அறியமுடிகிறது. கோனேரிராஜனை அடக்கிய பின் நரச நாயக்கர், பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகில் சுதந்திர ஆட்சி நடத்திக் கொண்டிருந்த புவனேக வீரன் என்பவனையும் வென்றான்.
இத்தலைவனே மறவபூபகன் என்று கூறப்பட்டு உள்ளான். பின்னர் மதுரையில் இருந்து சேது நாட்டின் வழியாக ராமேஸ்வரத்திற்கு நரச நாயக்கர் சென்றார். நரச நாயக்கர் உடைய படைஎழுச்சிக்குப் பிறகு தான் திருப்பரங்குன்றத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புத்திரெட்டியிலும், விஜயநகர அரசர்கள் உடைய கல்வெட்டுகள் காணப்படுகிறது.
தென்காசி பாண்டியரும் நரச நாயக்கரும்
மதுரை நகரை விட்டு சென்ற பாண்டியர்கள், தென்காசி நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடத்தி வந்தனர். 1422 முதல் 1463 ஆம் ஆண்டு வரை ஜடாவர்மன் அரிகேசரி பராக்கிரம பாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்தான். இவருக்கு மானாபரணன்,மானக்கவசன், அரிகேசரி என்ற பட்டங்கள் வழங்கப் பட்டது. இவருடைய ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் பூமிசை வனிதை என்ற சொற்றொடர் உடன் தொடங்குகிறது. இந்த அரசன் தென்காசியில் அமைத்த விஸ்வநாதர் கோவிலை இன்றும் காணலாம். இந்த கோவிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில், இவ்வரசன் 1463 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார் என்று கூறப்படுகிறது. விஜயநகர வேந்தர்களாகிய இரண்டாம் தேவராயரும், மல்லிகார்ச்சுனராயரும், இவருக்கு சமகால அரசர்கள் ஆவர்.
அரிகேசரி பராக்கிரம பாண்டியனுக்கு பிறகு, குலசேகர ஸ்ரீவல்லபன் என்ற பாண்டிய மன்னன் தென்காசியில் ஆட்சி புரிந்தார். இந்த அரசனின் ஆட்சி காலத்தில் விருபாட்சனும், சாளுவ நரசிம்மரும் விஜயநகரத்தில் ஆணை செலுத்தினர். குலசேகர ஸ்ரீவல்லப பாண்டியனுக்கு பிறகு அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் என்பவன் ஆட்சி புரிந்தான். இவன் 1486 வரை ஆண்டார். பின்னர், ஜடாவர்மன் குலசேகரன் பராக்கிரம பாண்டியன் 1486 முதல் 1499 வரையில் தென்காசியில் ஆட்சி புரிந்ததாக அறிய முடிகிறது. இவருக்கு மானபூஷணன் என்ற விருதுப் பெயரும் வழங்கியதாக தெரிகிறது.
இந்த தென்காசிப் பாண்டிய மன்னன் நரச நாயக்கரிடம் தோல்வியடைந்தான். விஜயநகர அரசருக்கு கப்பம் கட்ட ஒப்புக் கொண்டான் என்று கூறப்படுகிறது. இவன் 1497 ஆம் ஆண்டிலிருந்து 1507 ஆம் ஆண்டு வரையில் விஜயநகரப் பேரரசுக்கு அடங்கி தென்காசியில் ஆட்சி புரிந்தான். இவ்வெற்றியால் தெற்கே கன்னியாகுமரிவரை விஜயநகரப் பேரரசு பரவியது. ஸ்ரீரங்கப்பட்டணத்து அரசன் நஞ்சராஜன் என்பவரும், விஜயநகரப் பேரரசுக்கு எதிராக கலகம் செய்தார். ஆதலால், நரச நாயக்கர் காவிரி ஆற்றின் மீது புதிய பாலம் ஒன்று அமைத்து ஸ்ரீரங்கப் பட்டினத்தை முற்றுகையிட்டு நஞ்சராஜனையும் பணியும் படி செய்தான்.
பின்னர், மேலே கடற்கரையிலுள்ள கோகர்ணம் என்ற இடத்தில் சென்று இறைவனை வணங்கினார். 1497 ஆம் ஆண்டு கலிங்க நாட்டு அரசனை புருஷோத்தம கஜபதி இறந்த பின் அவருடைய மகன் பிரதாபருத்திர கஜபதி விஜயநகரப் பேரரசின் மீது படையெடுத்து வந்தான். ஆனால், நரச நாயக்கர், கலிங்க படைகள் கிருஷ்ணா நதியை கடந்து பேரரசுக்குள் புகாதவாரு அவற்றை தடுத்து வட எல்லையை காப்பாற்றினார். இதுபோன்ற வெற்றிகளை குறித்தே விஜய நகரத்திற்கு அடங்காத பல நாடுகள் எதிர்த்து அழித்து அந்த நாடுகளை பேரரசுக்கு உட்படச் செய்தார் என்று நூனிஸ் தன் நூலில் கூறுகிறார்.