கண்டி நாயக்க வம்சங்களை நாடுகடத்திய சிங்கள ஆங்கிலேய கூட்டுச் சதி

இலங்கை கண்டி அரசின் இறுதி காலக்கட்டத்தில், சிங்கள ஆதரவு அமைச்சர்களில் ஒரு பிரிவினருக்கும், மதுரை நாயக்கர்கள் வழிவந்த கண்டி மன்னனுக்கும் பிளவு ஏற்பட்டது.
 
தென்னிந்தியாவைச் சேர்ந்த கண்டி நாயக்கர்கள் சிங்களவர் அல்ல, பௌத்தத்திற்கு எதிரானவர் என்று எல்லோருக்கும் பொய் பரப்புரை செய்து, அரண் போல இருந்த கண்டி ராஜ்யத்தின், ரகசிய பாதைகள அந்நியர்களுக்கு காட்டிகொடுத்தனர். போருக்கு பிறகு, சிங்களவருக்கு நாடு கிடைக்கும் என்று நினைத்த பொழுது, முழு ஆட்சி அதிகாரத்தையும் ஆங்கிலேய அரசு கைப்பற்றியது. இலங்கையின் பெரும் அரசாக திகழ்ந்த கண்டியை ஆங்கிலேயருக்கு போரில் தாரைவார்த்துக் கொடுத்து, தங்களின் முழு சமூக, பொருளாதார, சிங்கள தன்னாட்சி, பௌத்த சமய அதிகாரத்தையும் மொத்தமாக ஆங்கிலேயரின் துரோகத்தால் இழந்தனர்.
 
கண்டி அரசின் படை பாதுகாப்பு ரகசியங்களை தெரிவித்து, கண்டி அரசுக்கு, துரோகத்தை செய்த “எஹலபொல நிலமே ” என்ற அமைச்சர், “தான் தான் கண்டியின் அடுத்த அரசன்” என்ற தொனியில் குதிரையில் பெருமையுடன் வளம் வர, அவரை பிடித்து 1818 ஆம் ஆண்டு மொரிஷியஸ் தீவுக்கு நாடு கடத்தி, சிறையில் அடைத்து கலாராவல் ஆங்கிலேய அரசு கொன்றது.
 
சிங்களத்தில் Kanda Udarata Givisuma எனப்பட்ட Kandyan Convention எனப்படும் இந்த பிரகடனத்தின் முக்கிய அம்சம் நாயக்கர்களும், அவர்களின் வம்சாவளிகளும் இனி நேரடியாக இலங்கை அரசியலில் ஈடுபடக் கூடாது. கண்டி அரசை, இலங்கை ஆளும் உரிமையை கோரக்கூடாது. அனைத்து ஆண் வாரிசுகளும், ஆண் குடும்ப உறுப்பினர்களும் நாடுகடத்தப்படவேண்டும் என்பது.
 
அதனால், இவரோடு தொடர்புடையவர்கள், மற்றும் நாயக்கர்கள் எனக் கருதப்பட்ட சுமார் ஆயிரம் பேர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு, வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர். 1815 தோடு சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு, நாயக்கர்களுக்கும் இலங்கை அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 
படம் 1: சிங்களவர்களால் கைது செய்யப்பட்டு, தமிழகத்திற்கு நாடு கடத்தப்படும், கண்டி அரசின் அரசின் கடைசி மன்னன் கண்ணுசாமி நாயக்கர் என்ற விக்கிரம ராஜசிங்கே.
 
படம் 2: அவரை அந்நியவர் எனக்கூறி காட்டிகொடுத்து ஆங்கிலேயர்களால் பதவியில் அமர்த்தப்பட்ட சிங்கள ஆட்சியாளர்ககளின் பிற்கால புகைப்படம். படத்தின் ஆண்டு: 1905