தொப்புள் இது உண்மையான தமிழ் சொல்லா ? | #Heritager

தொப்புள் இது உண்மையான தமிழ் சொல்லா ? அதற்கு நிகரான தமிழ் சொல் என்ன.

பாலூடிகளில் மனிதருக்கும், சிம்பன்சி வகை குரங்குக்கும் மட்டுமே, தொப்புள் என்ற அமைப்பு உள்ளது. மற்ற பாலூடிகளுக்கு அந்த வடு மறைந்து விடுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை, தொப்பைக்கு உள்ள இருப்பதால் அதன் தற்போதைய பெயர் வந்திருக்கலாம். ஆனால்,

“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்
தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்”

என்பது மதுரை வீதியின் வடிவழகை திருமாலின் தொப்புளில் மலர்ந்த தாமரை போன்ற வடிவுடைய மதுரை என அதன் தெருக்களின் அமைப்பை பரிபாடல் கூறுகிறது.

ஆம், தொப்புளின் உணமையானத் தமிழ் பெயர் “கொப்பூழ்” என்பது ஆகும்.

இன்று மட்டுமல்ல பண்டை காலம் தொட்டே, பாலின சின்னமாக கருதப்படும் தொப்புளினை, தமிழ் இலக்கியங்கள் கொப்பூழ் என்றே குறிப்பிடுகிறது.

கொப்பூழ் என்பதின் சொல் விளக்கமாக “கொப்புளம்” என்பதில் இருந்து தோன்றியிருக்கலாம். அதாவது வீங்கிய புண், காயம் என்பது ஆகும். பிறந்த பின் தொப்புள் கோடி அறுத்த பிறகு அது கொப்புளம் போல வீங்கும் உள் அடங்குவதால் அப்பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கொப்பூழ் எனபது மருவி தொப்புள் ஆனது.

இன்னும் குமரியைச் சேர்ந்தவர்கள் கொப்புள், கொப்புலி என்றே தொப்புளினை அழைக்கிறார்கள் என்பது நண்பர்கள் சகாய மனாே, தாமரைச் செல்வன் அளித்த தகவல்.

இதனை,

“நங்கை சீறடி நீர்க்கொப்பூழி னறியன தொடர்ந்து சென்று”

(கம்பரா. தைல. 53).

என பெண்ணின் பாதத்தில் நீர் நிறைந்த கொப்புளம் ஏற்பட்டதாக கம்பராமாயணம் குறிப்பிடுகிறது.

பொது மகிளிர் மட்டுமே அன்று தொப்புள் தெரிய சேலை கட்டும் வழக்கம் அனுமதிக்கப்பட்டதால், அது பாலின இச்சை சின்னமாக கருதப்படுகிறது (?) என அறிஞர்கள் கருதுகின்றனர். சாஸ்திரங்களும், கொப்பூழ் தெரிய ஆடை அணிவதை தடை செய்கிறது.

சங்க இலக்கியங்கள் முதல் கம்பராமாயணம் வரை தலைவியின் வருணனையில் முன்னழகும், பின்னழகும் பற்றி கூறினாலும் கொப்பூழ் பற்றி வர்ணித்து கூறுவதில்லை. அனால் ஆடல் மகளிருக்கும், பொது மகளிருக்கு அவ்வாறு கூறப்படுகிறது.

சரி, ஏன் இந்த தொப்புள் ஆராய்ச்சி என்று கேட்கின்றீர்களா?

அறிவியல் ரீதியில், தொடும் நபரை பொறுத்து உடலின் மற்ற பகுதிகள் போலவே, கொப்பூழும், தொடு உணர்வு மிக்க பகுதி ஆகும். மேலும், அதிகம் தீண்டப்படாத பகுதி என்பதால் சினமாவில் காட்டப்படுவதை போன்றே மற்ற பகுதகளை விட கூச்சம் அதிகம் உள்ள பகுதியாக கருதப்படுகிறது. இதனால் கொப்பூழ், பாலின இச்சை பொருளாக காண்பிக்கப்படுகிறது.

“நீர்ப் பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டு என உணரா உயவும் நடுவின்”

எனும் பொருநராற்றுபடையில் நீரிடத்துத் தோன்றும் சுழிபோன்ற இலக்கணம் பொருந்திய கொப்பூழ் என பாடினியின் கொப்பூழின் அழகை புலவர் வருணிக்கின்றார்.

பல கலாச்சாரங்களில் தொப்புள் ஆழத்தை பொறுத்து பெண்ணின் கருவுறுதல், Fertility கணிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கருவுறும் தன்மையை, பாலின இச்சையோடு இணைத்து கொப்பூழ் பிரபலப்படுத்தப்படுகிறது.

ஆனால், சமூகத்தில் பாலின ஈர்ப்பு சின்னமாக கட்டப்படும் தொப்புள், என்பதற்கு பதிலாக கொப்பூழ் என்றால் அதன் பொருள் வேறுபட்டதாக உள்ளது. கரு வளர முக்கிய உறுப்பான தொப்புள் கொடி அறுந்த பிறகு, பிறப்பால் ஏற்படும் வாழ்க்கையின் முதல் வடு, கொப்புளம் என்பதை தந்தை ஆனா பின்பு தான் ஒரு ஆணாக அதனை உணரமுடிகிறது.

கொப்பூழ் என்ற பிறப்பின் வடு, ஒரு பாலின இச்சை சின்னமாக சமூகம் நமக்குள் கட்டாயப்படுத்தி புகுத்தும் கருத்தாகும்.

#Heritager