Sale!

நடுநாட்டில் சமணம் முனைவர் த.ரமேஷ்

Original price was: ₹225.Current price is: ₹214.

Add to Wishlist
Add to Wishlist

Description

நடுநாட்டில் சமணம்

ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் உளுந்தூர்ப்பேட்டை வட்டம் எல்லைக்கிராமம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். தமது சிறுவயது முதற்கொண்டு முண்டியம்பாக்கத்தில் வாழ்ந்து வருகிறார். வே.தண்டபாணி – த.பரமேஸ்வரி அம்மாள் ஆகியோர் இவரது பெற்றோர்களாவர். விழுப்புரம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை வரலாறு பயின்ற இவர், முதுகலை வரலாறு மற்றும் முதுகலை தத்துவயியல் ஆகியவற்றை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வழியாக சென்னை பலகலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது விழுப்புரம், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், வரலாற்றுத்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் பனைமலைக் கலைக்கோயில், நடுநாட்டுச் சமணக் கோயில்கள், சோழர்கலையில் திருநாவலூர், சிறுவங்கூர் வரலாறு, சிறுவந்தாடு வரலாறு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தற்போது வசந்த் தொலைக்காட்சியில் மண் பேசும் சரித்திரம் நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட தொடர்களில் வரலாற்று சிறப்பு மிக்க பகுதிகளின் தொன்மையையும், வரலாற்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவரது கடின உழைப்பும், கடுமையான கள ஆய்வும் இந்நூலுக்கு வழிவகுத்தன.

Additional information

Weight0.25 kg