சிலப்பதிகாரமும் கண்ணகி வழிபாடும் – ப. ஜெயகிருஷ்ணன்

210

நாகரிகத்தின் வெளிப்பாடே கலையாகும். இயல், இசை, நாடகம், கூத்து, கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல்வேறு கலைகள் மற்றும் கலைஞர்கள் வாழ்வு சிறந்து விளங்கியமையைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. சிலம்பின் அரங்கேற்று காதை தமிழர்தம் இசைக்கலை, நாட்டியக் கலை,கூத்துக் கலைக்கும் சிறந்த சான்றாகும். கலைக்கூத்தில் வேத்தியல், பொதுவியல் என இருவகை இருந்தமையைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

Add to Wishlist
Add to Wishlist

Description

சிலப்பதிகாரத்தில் கூத்து மரபு :
நாகரிகத்தின் வெளிப்பாடே கலையாகும். இயல், இசை, நாடகம், கூத்து, கோயிற்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை எனப் பல்வேறு கலைகள் மற்றும் கலைஞர்கள் வாழ்வு சிறந்து விளங்கியமையைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. சிலம்பின் அரங்கேற்று காதை தமிழர்தம் இசைக்கலை, நாட்டியக் கலை,கூத்துக் கலைக்கும் சிறந்த சான்றாகும். கலைக்கூத்தில் வேத்தியல், பொதுவியல் என இருவகை இருந்தமையைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
மாதவியின் நாட்டியத்தில் அவிநயம், தலைக் கோல் பட்டம், நாட்டிய அரங்கம், திரைச்சீலைகள் குறித்துத் துல்லியமாக விளக்குகிறது சிலப்பதிகாரம். மாதவி ஆடிய பதினொரு வகைக் கூத்துக்களும், கோவலன் முன் நின்றாடிய காட்சிவரி, தேர்ச்சிவரி, புறவரி முதலான எண்வகை வரிக்கூத்துக் களும் தமிழர்தம் கூத்துக்கலைக்குச் சிறந்த சான்றுகளாகும்.
இளங்கோவடிகள் அரகேற்றுகாதையில் ஆடல் ஆசிரியனின் இலக்கணத்தையும், மாதவியின் நாட்டியம் குறித்தும் செவ்வென எடுத்துரைக்கிறார். மேலும் இசையாசிரியனின் இலக்கணத்தையும் இசைக் கருவிகளின் தாள முறைகளையும் விளக்கமாகக் கூறியுள்ளார். இளங்கோவடிகள் காலத்திற்கு முன்னரே இசை, நாட்டியம், ஆடல் போன்றவற்றிற்கான சிறந்த நூல்கள் இருந்தமையை அவருடைய மொழியிலிருந்து அறிய முடிகிறது.
மாதவி ஆடிய பதினொரு வகை ஆடல் :
1. கொடு கொட்டி
2. பாண்டரங்கக் கூத்து
3. அல்லியம் கூத்து
4. மற் கூத்து
5. துடிக்கூத்து
6. குடைக் கூத்து
7. குடக் கூத்து
8. பேடிக்கூத்து
9. மரக்கால் கூத்து
10. பாவைக் கூத்து
11. கடையக் கூத்து

Additional information

Weight0.4 kg