திண்டுக்கல் மாவட்டக் குடைவரைக் கோயில்கள் – பதிவும் ஆய்வும்
இந்தியாவின் வடபகுதியில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் புத்த சமயத்திற்காகத் தொடங்கப்பட்ட குடைவரைக் கோயில்கள் பின்னர் தொடர்ந்து வந்த காலங்களில் பல்வேறு சமயநிலைகளுக்கு உட்பட்டு கி.பி ஐந்து, ஆறாம் நூற்றாண்டுகளில் தமிழகத்தினை வந்தடைந்தது. தமிழகத்தில் பல்லவர்களே குடைவரைக் கலையினைத் தொடங்கி வைத்தனர் என்றும், பாண்டியர்களே இக்கலையினைத் தொடங்கி வைத்தனர் என்றும் இருவேறு கருத்துக்கள் ஆய்வாளர்களிடையில் இன்றளவிலும் நிலவி வருகின்றன.
இருப்பினும், அக்காலகட்டத்தில் பேரரசுகளாக விளங்கிய பிற்காலப் பல்லவர், முற்காலப் பாண்டியர் காலகட்டங்களில் தமிழ்நாட்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட குடைவரைக் கோயில்கள் குடைவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவற்றுள் இப்பேரரசினைச் சார்ந்த சிற்றரசர்களின் குடைவரைக் கோயில்களும் அடங்கும். பொதுவாகக் கோயில்கள் அனைத்தும் அந்தந்தச் சமூகத்தின் சமய வெளிப்பாடாகவே இருக்கும். குடைவரைக் கோயில்களும் இதற்கு விதிவிலக்கன்று
தமிழ்நாட்டில் பக்தி இலக்கியக் காலகட்டத்தில் தோற்றுவிக்கப் பட்ட இக்குடைவரைக் கோயில்கள் சம்பிரதாயத்திற்கு எதிரான மற்றும் வழக்கமான கட்டிடச் சிற்பக் கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப் படாமல் அமைக்கப்பட்ட புதிய உருவங்கள் என்பதனால் அக்காலச் சமய இலக்கியங்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
தங்களது நாட்டை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பிற நாடுகளின்மீது தங்களது ஆதிக்கத்தினைச் செலுத்துவதற்காகவுமே மன்னராட்சிக் காலங்களில் பெரும்பான்மை போர்கள் நடத்தப் பட்டிருக்கின்றன. போர்களில் வெற்றிபெற்ற அரசானது தோல்வி யடைந்த அரசின் நாட்டில் தங்களது ஆட்சியினைச் செலுத்துவதுடன் தாங்கள் பின்பற்றிய சமயங்களையும், அச்சமயங்கள் சார்ந்த கலைகளையும் புகுத்திவிடுகின்றன. சங்க காலத்திற்குப் பின்னர் இந்நிகழ்வானது மிக அதிகமாகவே நிகழ்ந்திருக்கின்றது. பக்திஇலக்கியக் காலங்களும் இதற்கு விதிவிலக்கன்று இதன் அடிப்படையில் கொங்குநாட்டில் உள்ள இக்குடைவரைக் கோயில்களும் தான், அணுகப்படுகின்றது
கொங்கு நாடும், எல்லைகளும் :
கொங்கு நாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. “I பூந்துறை நாடு, 2.தென்கரைநாடு, 3.காங்கேயநாடு, 4.கொன்கலூர் நாடு, Sஆறைநாடு, 6வாரக்கநாடு, 7.திருவாவினன்குடி, 8.மணநாடு, 9.தலையநாடு, 10.தட்டயநாடு, 11.பூவாணியநாடு, 12அரையநாடு, 13. ஒருவங்க நாடு. 14வடகரைநாடு, 15.கிழங்குநாடு, 16.நல்லுருக்காநாடு, 17 வாழவந்திநாடு, 18.அண்டநாடு, 19.பெங்காலநாடு, 20.இராசிபுரநாடு, 21.காவடிக்காநாடு, 22ஆனைமலைநாடு, 23.காஞ்சிக்கோயில்நாடு, 24.குறுப்புநாடு”
“கொங்கு நாட்டின் கிழக்கு எல்லையாக கோட்டக்கரை, மதுரைக்கரை, குழித்தலை ஆகியவையும், தெற்கு எல்லையாக-பழனி மலை, பன்றிமலை ஆகியவையும், மேற்கு எல்லையாக-வெள்ளியங்கிரி, வாளையாறு, பாலக்காடு, மலையாளம் ஆகியவையும், வடக்கு எல்லையாக -பாலமலை, பெரும்பாலை, தலைமலை ஆகியவையும் கூறப்பட்டுள்ளன.’
தற்போது, இந்நான்கு எல்லைகளுக்குள், கோவை,ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், பழனி போன்ற பகுதிகள் அடங்கியுள்ளன.
கொங்குநாட்டுக் குடைவரைக் கோயில்கள் :
தமிழ்நாட்டில் பல்லவ, பாண்டிய நாட்டிற்குள்ளேயே, பெரும் பான்மையான குடைவரைக் கோயில்கள் அமைந்துள்ள போதிலும் கொங்குநாட்டுப் பகுதியில் ஒருசில குடைவரைக் கலைகளே காணப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் அதியர் மன்னர்கள் உருவாக்கிய அதியேந்திரவிஷ்ணுகிருகம், 2. அதியநாத விஷ்ணுகிருகம் என்ற இரண்டு குடைவரைக் கோயில்களும், கரூர் தான்தோன்றி மலையில் முற்றுப்பெறாத இரண்டு குடைவரைக் கோயில்களும் காணப்படு கின்றன. வையாவி நாடு, அண்டநாடு போன்றவைகள் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியாகிய அக்காலத்தியக் கொங்குநாட்டின் தென் எல்லைகளாக விளங்கிய நாடுகள் ஆகும் ‘அண்ட நாட்டில்’ உள்ள நிறைவடையாத மூன்று குடைவரைக் கோயில்கள் உள்ள இடமே “கூத்தம்பூண்டியான்வலக’ என்னும் பகுதியாகும்.
கூத்தம்பூண்டியான்வலசு குடைவரைக் கோயில்கள் :
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் பொருளூர் அருகில் உள்ள இவ்வூரில் ‘ஆல்பெருமாள்மலை’ என்றழைக்கப்படும் மலைத்தொடரின் அடிவாரத்தில் வடக்குப்புறம் இரண்டு குடை வரைக் கோயில்களும், தென்புறம் ஒரு குடைவரைக் கோயிலும் முழுமை பெறாமல் காணப்படுகிறன. (நூலிலிருந்து)
வரலாற்று வெளிச்சத்தில் திண்டுக்கல் – பூர்ணா
விலை: 90/-
வெளியீடு: NCBH
Buy this book online: https://www.heritager.in/product/varalaatru-velichchaththil-dindigul/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers