ஓவியத்தில் கலைஞர்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் வண்ணங்கள்
காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பழுப்பு மற்றும் காவி நிறத்தைப் பயன்படுத்தி வரைந்த சுவரோவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த தொடக்கக்கால உருவ ஓவியங்கள் ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவ்வோவியப் பின்னணி பச்சை நிறத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளது. அவை ஓவியர்களின் திறமையையும், பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியம் வரைவதற்கான பண்டைய கலையையும், படிப்படியாக இடைக்கால கோயில்களில் கட்டப்பட்ட சுவர்களில் காட்டுகின்றன.”
தமிழகப் பகுதியில் உள்ள சமண ஒவியங்களில் காணப்படும் வண்ணங்கள் (திருமலை, ஆர்மாமலை மற்றும் திருப்பருத்திக்குன்றம்) சிறப்புக்குரியவை. சமணம் வெவ்வேறு குணங்களை நிறங்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. அடர்சிவப்பு (பத்மம்), கிச்சிலி – ஆரஞ்சு (பிடா) மற்றும் வெள்ளை (சுக்லா) ஆகியன தூய ஆத்மாக்களின் நிறங்களாகக் கருதப்படுகின்றன. அங்கு கருப்பு (கிருஷ்ணா), கருநீலம் (நிலா) மற்றும் சாம்பல் நிறம் ஆகியன பொல்லாத ஆத்மாக்கள் ஆகும். தமிழகப் பகுதியில் உள்ள சமண அடையாளமாக உள்ள ஒவியங்கள் மூன்று நுட்பங்களைக் கொண்டு வரையப்பட்டுள்ளன. சுவரோவிய நுட்பம் தொரப்பாடியில் பயன்படுத்தப்பட்டுக் காணப்படுகிறது. சித்தன்னவாசல், ஆர்மாமலை, பெரமந்தூர், திருப்பருத்திக்குன்றம், திருமலை,கன்னலம் மற்றும் வீடூர் ஆகிய இடங்களில் கெட்டிவண்ண பூச்சு நுட்பம் கவனிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பெரமந்தூரில் உள்ள சந்திர நாதர் கோயிலிலும் சோழவண்டிபுரத்தில் உள்ள கல்லாப்புலியூரிலும்நீர் வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள ஓவியங்கள் மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு போன்ற வண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இதேபோன்ற ஓவியங்கள் திருமலையில் காணப்படுகின்றன. இது தொடக்கக்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களாகும். இரு வகை வடிவமைக்குக் கூறுகளும் நோக்கங்களும் ஒன்றுக்கொன்று பெரிய அளவில் ஒத்திருக்கிறது.
ஏழாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் சித்தன்னவாசல் மற்றும் ஆர்மாமலை ஓவியங்களுக்கிடையே ஒற்றுமைகள் இருந்ததோடு அவை குறிப்பிட்ட காலகட்டத்தில் சமண மதத்தின் பண்பாட்டுப் பரவலைக் காட்டுகின்றன. இந்த அமைப்புகளுக்கு இடையில் தாமரை இலைகள், கொடிகள் மற்றும் பறவைகள் அனைத்து இடங்களிலும் ஓவியங்களாகக் காட்டப்பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் ராட்டிர கூடர்கள், பல்லவர்கள், சோழர்களின் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டதால் ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட கலாச்சார பெருமையை விளக்கும் அளவில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.”
புடைப்புச் சிற்பங்கள் மேல் குழைவுக்காரையைத் தடவி அதன் மேல் ஓவியம் தீட்டும் முறை பல்லவர் காலத்திலேயே தொடங்கியது. சிற்பத்தை எளிதாக்குவதற்குச் சமமான மேற்பரப்பு இல்லாதபோது செதுக்குவதை எளிதாக்க இம்முறையைப் பயன்படுத்தினர். இந்த நடைமுறைகள் பாண்டியர்களின் காலத்திலும் தொடர்ந்தன. சிங்க்ளேர் ஸ்டீவன்சன் கோயில்களில் ஓவியந்தீட்டுதல் மற்றும் வண்ணம் அடித்தல் ஆகியன நவீன மோகம் என்று கூறினார்.” டி.என்.இராமச்சந்திரன், சின்கிளேர் ஸ்டீவன்சன் கருத்துக்களுக்கு எதிராக வாதிட்டார். மேலும் மேலைநாட்டுக் கலை அறிஞர்கள் மற்றும் கலைத்திறனாய்வாளர்கள் ஓவியங்கள் குறித்த தப்பெண்ணத்தை மட்டுமே சுட்டிக்காட்டினர் என்று கூறினார். திருப்பருத்திக்குன்றத்தின் இசை மண்டப ஓவியங்களின் ஓவியங்களைப் பற்றிக் குறிப்பிட்டு, சிங்க்ளேர் ஸ்டீவன்சன் அவர்கள் தமிழ் வரலாறு மரபின்மீது தவறாக முன்வைத்தக் கருத்துக்கு எதிராக டி.என். இராமச்சந்திரன் வாதிட்டார். கோயில் வளாகங்களுக்குள் இருந்த ஓவிய நடைமுறை, பல்லவர்களின் காலத்திலிருந்து பாண்டியர்கள் வரை தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் அழகியல் காரணங்களால் தொடர்ந்தது. (நூலிலிருந்து)
தமிழ்நாட்டில் காலனியக்கால வண்ணஓவியங்களும் அய்ரோப்பியர்களும் உள்ளூர்க் கலைஞர்களும்
விலை: 275 /-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/tamilnadtil-kalaniyakala-vannakalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers