பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை

புதுச்சேரி நகரத் தமிழ் வணிகர்களும், ஆசியா மற்றும் பிரான்சுடன் ஏற்பட்ட துணி வணிகமும்

சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில் வணிகர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.’ மேலும் மணிமேகலை காப்பியத்தில் வர்த்தக நடவடிக்கைகளைக் கையாளும் தமிழ்ச் செட்டிகளையும், வைசிய வணிகர்களைப் பற்றியும், துணி வணிகர்களை அருவை வாணியர் என்றும் அழைக்கப்பட்ட தகவல்களும் பதிவாகியுள்ளன. அவர்கள் செய்த தொழில் சார்ந்த சமூக பிரிவுகளாக இருந்தனர். இந்தச் சமூகத்தில் இருப்பவர் எவரும் பிற மணக்கலப்பு செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இடைக்கால வரலாற்றில் தமிழ்ச் சமூகம் மாற்றம் கண்டது. வலங்கை மற்றும் இடங்கை என்ற இரு முக்கியப் பிரிவுகளாக ஒரு இனக்குழுவிற் குள்ளேயே மண உறவும், மற்றொரு பிரிவில் கலப்பு மணம் செய்து கொண்டும் பிரிந்து இருந்தனர். இவ்வலங்கை இடங்கைப் பிரிவினரின் 98 சாதிகளைப் பற்றி சொல்லப்பட்டிருந்தாலும் தெளிவான கல்வெட்டுச் சான்றுகள் இல்லை. இடைக்காலத்தில் 18 தொழிற்சாதியினரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.* தமிழகத்தில் வலங்கைப் பிரிவில் செட்டிகள், செட்டி புத்திரர்கள் (செட்டிகளின் மகன்கள்) என்ற வணிகக் குழுவைப் பற்றி 11ஆம் நூற்றாண்டு கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.” இடங்கை சாதிப்பிரிவினர் நகரத்தார் (நகர் வணிகர்கள்) என அழைக்கப்பட்டனர்.

வலங்கைப் பிரிவினரில் வேளாளர்களை காணியாளர்கள் (நிலச் சொந்தக்காரர்) என்றும், முதலியார்கள் என்றும் அழைத்தனர். 56 தேசங்களில் முதலியார்கள் குறித்து 1597ஆம் ஆண்டு கல்வெட்டில் கூறப்பட்டு உள்ளது.’ தெலுங்கு மொழி பேசும் கோமுட்டி சாதியைச் சேர்ந்தவர்கள் நெசவாளர்களிடமிருந்து நெய்யப்பட்ட துணிகளை வாங்கி வலங்கைப் பிரிவைச் சேர்ந்த தமிழ் மொழி பேசும் செட்டி களிடமும், முதலியார்களிடமும் விற்றனர். தெலுங்கு பேசும் தேவாங்க நெசவாளர்கள் (செட்டிகள் எனவும் அழைக்கப்பட்டனர்), கவரைச் செட்டியார்கள் மற்றும் பேரி செட்டியார்கள், புதியதாக இத்துணி வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இவர்கள் தமிழகப் பகுதியிலிருந்து கிழக்கிந்திய நிறுவனங்களுக்கு துணிகளை வழங்கினார். இதனால் இப் புதியவர்களின் வருகையால் வழக்கமான பரம்பரை வணிகர்களிடையே வர்த்தகப் போட்டி ஆரம்பமானது. வெள்ளாளச் (வேளாளர்) செட்டிகள், வாணியச் செட்டிகள் என்ற செட்டியார்களின் உட்பிரிவு சாதியினர் வலங்கையைச் சேர்ந்தவர் ஆவர். இடைக்காலத்தில் பணக்கடன் கொடுப்பவர்களாகவும், பணத்தை மாற்றித் தருபவர்களாகவும் செயல் பட்ட இத்தமிழ்ச் செட்டியார்கள் இத்துணி வணிகத்திற்கு புதியதாக வணிகம் செய்ய ஆரம்பித்தனர். வேளாளச் செட்டியார்கள் முன்பு வேளாண்மை பணிகள் செய்து உழுது அவர்களுக்குள் நிலப் பரிவர்த்தனை களுக்கு உத்திரவாதம் அளித்து வந்தவர்களாக வாழ்ந்து வந்தனர்.

புதுச்சேரியில் பல வெள்ளாளச் செட்டிகள் (நல்லதம்பி செட்டி, கந்தப்ப செட்டி, பெருமாள் செட்டி, காசி செட்டி ஆகியோர்) நிலங்களை குத்தகைக்கு விட்டு இதனுடன் வணிகத்திலும் ஈடுபட்டு வந்தனர். பிரெஞ்சு ஆவணங்களின்படி இந்தச் செட்டிகளுக்கு புகையிலை மற்றும் வெற்றிலைத் தோட்டங்கள் வாயிலாக புதுச்சேரி நகரத்திலும், அரியாங் குப்பம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டுக்கு நிலவருவாயாக 5,800 பகோடாவிற்கு சமமான தவணைகள் கிடைத்தது.ஜேக்கப் மோசல் (நாகப்பட்டினத்தில் 1724ஆம் ஆண்டு டச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் உதவியாளராக இருந்தவர்) வேளாளச் செட்டிகளின் நடைமுறை சட்டங்கள் குறித்து எழுதியுள்ளார். இவர் 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக தங்கியிருந்த போது இந்த பலம் வாய்ந்த தமிழ்ச் செட்டிகள் நடத்திய வணிகத் தொழில் குறித்து தெரிய வந்திருக்கிறது. ஆனந்தரங்கப் பிள்ளையின் தமிழ் நாட்குறிப்பில் கூட இந்த தமிழ் பேசும் வாணியர் என்று அழைக்கப்பட்ட செட்டிகள் முதலில் எண்ணெய் வணிகம் செய்து, பின்னர் அடிப்படை பொருள் வணிகத்தில் ஈடுபட்டு, பின்னர் கோமுட்டி செட்டிகளுடன் துணி வணிகத்தில் கூட்டு சேர்ந்து கொண்டனர் என்று தெரிய வருகிறது.
(நூலிலிருந்து)

பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை(1674-1793) – எஸ்.ஜெயசீல ஸ்டீபன்
விலை: 390 /-
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Buy this book online: https://www.heritager.in/product/frenchiyar-aatchiyil-puthucherry-makkal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908

Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers