தென் தமிழ்நாட்டில் உருக்கு ஆலை – கோட்டாறின் கதை
இயற்கையாகவே திருவிதாங்கூர், குறிப்பாகத் தென் திருவிதாங்கூர் தாது வளங்களுக்குப் பெயர் பெற்றதாகும். கன்னியாகுமரியிலும் மணவாளக்குறிச்சியிலும் உள்ள கடற்கரையில் படிந்துள்ள கனரக இயற்கைத் தாதுக்களாகிய மானோசைட் (Manosite), இல்மெனைட் (Ilmenite), ரூட்டில் (Rutile), சிற்கோம்ப் (Zircomb), ទាល់ीम (Sillimanite), शाल (Garnet) ஆகியவை உலகப் புகழ்பெற்றவையாகும். கன்னியாகுமரிக்கு அருகில் கிடைக்கும் சிப்பி வகைகள் பொதுவாக வீடு கட்டுவதற்கு…