சிறுகதை எழுதுவது எவ்வாறு?
எழுதுவோர் பலருக்கும் சிறுகதை எழுதும் ஆர்வம் இருப்பதால் சிறுகதை உத்திகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாம் என்று தோன்றுகிறது. அதற்கு முன் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். நான் ஏதோ பெரிய எழுத்தாளன், கணக்கற்ற சிறுகதைகள் படித்து அவற்றை விமரிசன நோக்கில் ஆராய்ந்தவன் என்று நினைத்துக்கொண்டு இந்தக் காரியத்தில் இறங்கவில்லை. ஏதோ எனக்குத் தெரிந்தை, நான் படித்தவற்றை, உத்திகள்…