Enjoy Free Shipping on Orders Above ₹5,000! Dismiss

சித்திரமேழிப் பெரியநாட்டார், தெண்டைமண்டல வேளாளர்களும் ஆந்திர ரெட்டியார்களும்

சித்திரமேழி பெரிய நாடு என்னும் வேளாண் மக்களின் அமைப்பு ஒன்று தமிழகத்தில் 11 ஆம் நூற்றாண்டில் அரசியலில் பெரும் பங்கு வகித்தனர் இவர்களைப் பற்றிய முன்னோடி ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. இல்வமைப்பு அரசியல் பொருளாதாரம் சமயம் சமூக அமைப்பில் பெரும்பங்கை வகித்தன. இன்றைய தமிழகத்தின் வடபகுதியான தொண்டை மண்டலத்தில் முதலில் தோன்றிய இவ்வமைப்பு பின்னர் தமிழகம் முழுவதுமாக தங்களது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கினர். தொல்லியல் அடிப்படையில் தொண்டைமண்டலம் தொன்று தொட்டு பழமையான தொல்லியல் எச்சங்களையும் மனித நாகரிகத்தையும் முதன்மையாக் கொண்டு விளங்கி வருவதால் படிப்படியாக நாகரிகத்தில் மிளிர்ந்து புதிய கற்காலத்தில் வேளாண்குடிகளாக மாறுகின்றனர்.

ஏறக்குறைய இப்பகுதியில் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பழங்கற்கால எச்சங்கள் மண்டலத்தின் தொண்டை பழைய பாலாற்றுப் படுகையில் கிடைப்பதாலும் தொடர்ந்து வரலாற்றுக்கு முற்பட்ட பண்பாட்டுக்கூறுகள் கிடைத்திருப்பதாலும் மனித நடவடிக்கைகள் மிளிர்ந்த பண்பாட்டுக்கூறுகளை இப்பகுதி பெற்றுத்திகழ்ந்தது. புதிய கற்காலத்தில் வேளாண் சமூகமாக உருவாகிய தமிழ் இனம் இப்பகுதியில் காடுதிருத்தி நாடாக்கி வேளாண்மைக்கு உட்பட்ட பண்பட்ட நிலங்களை உருவாக்கினர். அவ்வகையில் சமூக அமைப்பும் பல முன்னேற்றங்களைக் கொண்டு விளங்கியதுடன் அரசு என்பது உருவாக்கும் காரணிகளில் ஒன்றான நாட்டுப்பிரிவுகளாக, கோட்டங்கள் தமிழகத்தில் தொண்டைமண்டலத்தில் தொடங்கின. 24 கோட்டங்களாகப் இக்கோட்டங்களே உருவாக தொண்டைமண்டலம் பிரிக்கப்பட்டன. பிற்காலத்தில் சோழப்பேரரசன் முதலாம் இராஜராஜன் வளமான சோழ நாட்டுப்பகுதியிலும் தென்பகுதியிலும் வளநாடுகள் பிரிப்பதற்கு காரணமாக அமைந்தன காலத்திலும் தொண்டை மண்டலம் வளநாடுகள் அற்ற கோட்டங்களாகவே செயல்பட்டன.

அவ்வகையில் வேளாண்சமூகம் தன்னிச்சையாக செயல்பட்ட இவ்வேளாண் சமூகம் தொண்டை மண்டல வேளாளர் எனப்படும், இன்றைய முதலியார் வகுப்பினராக இன்றளவும் தொடர்ந்து இப்பகுதியில் வாழ்ந்துவருகின்றனர்.

வேளாண்குடிகள் பரவல்

சோழர் காலத்தில் வேளாண்மை பெரிதும் விரிவடைந்த நிலையில் இக்குடிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடிபெயரத் தொடங்கினர் இதனை அரசும் ஆதரித்தது. அவ்வாறு நற்குடி 48000 குடிகள் இப்பகுதியில் இருந்து சோழமண்டலத்திற்கும் கொங்குமண்டலத்திற்கும் குடிபெயர்ந்ததா தொண்டைமண்டல சதகமும் கொங்குமண்டல சதகமும் சோழமண்டய சதகமும் குறிப்பிடுகின்றன. மெக்கன்சியின் பல குறிப்புகளில் இவ்வாறான குடிபெயர் குறித்து பல சான்றுகள் உள்ளது மேலும் கொங்குப்பகுதியில் கிடைத்துள்ள செப்புப்பட்டயங்களும் கல்வெட்டுகளும் இதுகுறித்து பெரிதும் பேசுகின்றன.

அவ்வகையில் இன்றைய திருவண்ணாமலை வேலூர் செங்கம் திருப்பத்தூர் திருக்கோயிலூர் பகுதியில் இருந்து தொண்மைக் குடிகளான வேளாளர்கள் பல பகுதிகளுக்குக் குடியேறினர். இந்தகு முயற்சிக்கு பெரிதும் ஊக்கமளித்த திருக்கோயிலூர் சடையப்பவள்ளலின் பாடல்களை கம்பர் பாடியுள்ளமை இன்றளவும் கொங்குப் பகுதியில் வாழுகின்ற வேளாண் மக்களால் திருமணங்களில் பாடப்பட்டு வருகின்றது. எனவே தொண்டை மண்டலம் தொண்மைமிகு வேளாண்மக்களைக் கொண்ட பகுதியாக இருந்தமையால் இப்பகுதியில் அவர்களின் சமூக அமைப்பான சித்திரமேழி பெரியநாட்டார் அமைப்பு தோன்றி வளர்ந்ததில் எவ்வித இடர்பாடும் தோன்றவில்லை.

இன்றையகாலகட்டத்தில் இவ்வமைப்பை சில சமூகத்தினர் தங்களின் அமைப்பாக கருதுவது சான்றுகளற்ற வரலாற்றுத் தவறுகளாகவே விளங்கி வருகின்றது. எனவே இக்கட்டுரை திருவண்ணாமலைப் பகுதியில் சித்திரமேழி பெரிய நாட்டாரின் பங்களிப்பும் அவர்கள் திருவண்ணாமலைக் கோயிலுக்கு அளித்த பங்கினைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது

சித்திரமேழி பெரிய நாட்டார் தோற்றம்

சித்திரமேழி பெரிய நாட்டார் குறித்து பல்வேறு ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். சித்திரமேழி பெரியநாட்டார் குறித்து குறிப்பிடும் தொன்மையான கல்வெட்டு இரண்டாம் இராஜேந்திர சோழன் காலத்தில் பொஆ மு.1057 ஆம் ஆண்டுதிருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு அருகிலுள்ள சாமரைப்பாக்கம் கல்வெட்டாகும்.

சித்திரமேழி பெரியநாட்டார் பங்களநாட்டில் இருந்த தேவதான நிலங்களுக்கு அரசு அதிகாரிகள் விளைப்பாட்டம், பாட்டம் ஆகிய வரிகளை விதிக்கின்றனர். இவ்வூரில் உள்ள வேளாளர்கள் ஏற்கனவே பங்கள நாட்டின் தேவதான ஊர்களின் உள்ள நிலங்களில் உரிமையுடையோராய் உரிமைபெற்று அரசின் சில வரிகளில் இருந்து விலக்கு பெற்று அனுபவித்து கோயிலின் பூஜைகளுக்கு எவ்வித இடர்பாடுமின்றி இறை செலுத்திவருகின்றனர். முதலாம் இராஜாதிராஜன் காலத்தில் வரிக்கொடுமை காரணமாக வேளாளர்கள் தங்களது கொடையை கோயிலுக்கு அளிக்க இயலாமல் ஊரைவிட்டு வெளியேற முடிவு செய்கின்றனர்.

இதனால் தங்களுக்கென ஓர் அமைப்பை பங்களநாட்டில் இருந்த வேளாளர்கள் உருவாக்கி அரசுக்கு எதிராக ஊரில் கூடுகின்றனர். இக்கூட்டத்திற்கு பங்கள நாட்டு வகை செய்கின்ற அலுவலர் பஜாஜபிடாரர் என்பவரும் வருகை புரிகின்றார். இவர் அரசு அலுவலர்கள் கொண்டுவந்த ஏற்களவே மறுத்தோடு அல்லாமல் சித்திரமேழி பெரியநாட்டாரின் தீர்மானத்திற்கும் ஆதரவு தருகின்றார். அதன்படி மேற்படி வரிகளை சித்திரமேழி பெரிய நாட்டார் வரி தருவதில்லை என முடிவு செய்கின்றனர்.‌

வேலூர், திருவண்ணாமலை, சித்தூர், திருப்பதி, பகுதிகளில் முதன் முதலில் உருவானவேலாளர் அமைப்பான சித்திரமேழி பெரியநாட்டார் படிப்படியாக தமிழகத்தின் தென்பகுதியிலும் மேற்கும் பகுதியான கொங்குநாட்டிலும் ஆணையை தங்களது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கிய இவ்வமைப்புக்கென தனியாக மேழித் கொடியும் மெய்க்கீர்த்தியும் தனியான படைப்பிரிவுகளும் தோன்றத்தொடங்கின.

இவர்களது “மெய்க்கீர்த்தி ஸ்ரீமத்பூதேவிபுத்ரஸ்ய சார்வரின குலோத்பல சர்வலோக ஹிதார்தாய சித்திர மேழஸ்ய சாசனம்” என தொடங்கும் திருக்கோயிலூர் கல்வெட்டில் பூமிதேவியின் மக்களாகவும் செந்தமிழ் வடகலை தெரிந்த நீதியில் சிறந்து விளங்குபவர்களாகவும். இவர்கள் புகழப்படுகின்றனர் சித்திரமேழி பெரியநாட்டார் எனும் வேளாளர்களின் ஆதிக்கம் விஜய நகரகாலத்திற்குப் பின்பும் தமிழகத்தின் பல பகுதிகளில் தலைத்தோங்கி இருந்தது.

பழைய ஒருங்கிணைந்த வடஆர்க்காடு மாவடத்தில் இன்றளவும் வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற முதலியார் பட்டத்தை உடையவர்களே சோழர் காலத்தில் சித்திரமேழி பெரியநாட்டார் என்னும் அமைப்பை உருவாக்கியவர்கள் என்பது திருவண்ணாமலையில் அம்பர் சுவாமிகள் மடத்தில் உள்ள கல் வெட்டின் மூலமும் அம்மடத்தில் இன்றளவும் வழிவழியாக தொடர்புடைய தொண்டை மண்டல வேளாளர்கள் இருப்பதில் இருந்தும் அறிய முடிகிறது.

இவர்களே ஆத்திரப் பகுதியில் வேளாண்மையில் ஈடுபட்டுள்ள ரெட்டியார் என்னும் பட்டம் கொண்டவர்கள் என்பதை நெல்லூரில் கிடைத்த குலோத்துங்க கோழரின் 1197 ஆம் ஆண்டு கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. இவர்கள் பெரியநாட்டு விஷையத்தார் சித்திரமேழி வழங்கப்பட்டனர். வேளாண்குடிகள் வழங்கப்பட்டதுடன் பெரியநாட்டார் எனவும் இந்தகு புகழ்பெற்ற திருவண்ணாமலை கோவிலுக்கும் பெருந்தொண்டு ஆற்றி உள்ளனர், என்பதை திருவண்ணாமலையில் கிடைத்த செப்பேட்டின் மூலம் அறிய இயலும்.

– கட்டுரை‌ முனைவர் சு. இராஜவேலு
திருவண்ணாமலை வரலாறு

சித்திரமேழிப் பெரியநாட்டார் – ஒருங்கிணைந்த வேளாளர் வரலாறு

ஆசிரியர்: பேராசிரியர் சு. இராசவேலு

Buy: https://heritager.in/product-tag/chitrameli-periyanattar/