பல்லவர் காலக் கல்வெட்டுகள்
மண்டகப்பட்டு :
பழங்காலத்தில் கோவில்களைப் பெரும்பாலும் மண், சுட்ட செங்கல், மரம் ஆகியவற்றில் அமைக்கும் வழக்கம் இருந்தது. இதை மாற்றி குடைவரைக் கோவில்களாகக் கட்டத்தொடங்கியது இடைக்காலத்தில் இருந்த பல்லவர்களும் பாண்டியர்களும் தான். அதிலும் மகேந்திரவர்ம பல்லவன் பல கோவில்களை இப்படிக் கட்டியிருக்கிறான். அவன் அமைத்த முதல் கோவிலான மண்டகப்பட்டு கோவிலில் இதை ஒரு கல்வெட்டு மூலம் குறிப்பிட்டிருக்கிறான். பல்லவ கிரந்தத்தில் அமைந்த சமஸ்கிருதக் கல்வெட்டு.
ஏதத் அநிஷ்டகம் அதருமம
லோகம் அசுதம் விசித்ர சித்தேந
நிர்ம்மாபிதந் நிருபேண பிரமே
ஸ்வர விஷ்ணு லக்ஷிதாயதநம்
அதாவது செங்கல், மரம், உலோகம், சுதை ஆகியவை இல்லாமல் மும்மூர்த்திகளான பிரமன், ஈஸ்வரன், விஷ்ணு ஆகியோருக்காக லக்ஷிதாயதநம் என்ற இந்தக் கோவில் விசித்திரசித்தனால் அர்ப்பணிக்கப்பட்டது என்பது இதன் பொருள். விசித்திர சித்தன் என்பதும் மகேந்திரனின் சிறப்புப் பெயர்களில் ஒன்று. அதே போல் லக்ஷிதன் என்பதும் அவனுடைய இன்னொரு பெயர். இப்படித் தன் பெயராலேயே இந்தக் கோவிலை அவன் அமைத்திருப்பது ஒரு சிறப்பு. அக்காலத்தில் மூம்மூர்த்திகளையும் சேர்ந்து வழிபடும் வழக்கம் இருந்தது என்பதும் இக்கோவிலால் தெரியவருகிறது. இப்படிப் பல வகைகளில் தமிழகக் கோவில் கலையில் திருப்புமுனையாக அமைந்தது மண்டகப்பட்டு.
திருக்கழுகுக்குன்றத்தில் அருகிலுள்ள வல்லம் என்ற ஊரில் மூன்று பல்லவர்காலக் குடைவரைகள் உள்ளன. அதில் இரண்டு சிவபெருமானுக்கும் ஒன்று விஷ்ணுவுக்கும் அமைக்கப்பட்ட குடைவரைகள். இங்கே பல்லவர்களின் தமிழ்க்கல்வெட்டுகள் உள்ளன. விஷ்ணுவின் குடைவரைக்கோவில் இருபுறமும் துவாரபாலகர்களும் நடுவில் கரிராஜ வரதர் என்ற பெயர்கொண்டு பெருமாளும் அருகே கொற்றவையும் கொண்டு விளங்குகிறது. அதில்
பல்லவ போத்தரையர் மகள்கொம்மை தேவகுலம்’
என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று இருக்கிறது. தேவகுலம் என்றால் கோவில். ஆக, இந்த விஷ்ணுகோவிலைக் கட்டியவர் பல்லவ மன்னனின் மகள் கொம்மை என்பவராவார். ஆதாரபூர்வமாக, இளவரசி ஒருவர் கட்டிய முதல் கோவில் இதுவாகத்தான் இருக்க முடியும். அடுத்து சிவன் கோவிலில் உள்ள தூண்கள் ஒன்றில் ‘பாகபிடுகு லலிதாங்குரன்’ என்ற மகேந்திரவர்மனின் சிறப்புப் பெயரும், இன்னொரு தூணில்
‘சத்துரும் மல்லன் குணபரன்
மயேந்திரப்போத்தரெசரு அடியான்
வயந்தப்பிரி அரெசரு மகன் கந்தசேனன் செயிவித்த தேவகுலம்
என்றும் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்துருமல்லன், குணபரன் ஆகியவையும் மகேந்திரனின் விருதுப்பெயர்களாகும். இந்தக் கோவிலைக் கட்டியவன் மகேந்திரனின் அடியானாக இருந்த வயந்தப்பிரி அரசன் (வசந்தப்பிரியராஜன்) கந்தசேனன் என்ற செய்தியும் இதிலிருந்து தெரியவருகிறது.
திருச்சிராப்பள்ளி :
திருச்சிராப்பள்ளியில் உள்ள பல்லவர் குடைவரை லலிதாங்குர பல்லவேஸ்வர க்ருஹம். இதை நிர்மாணித்தவனும் மகேந்திரபல்லவன் தான். அவனுடைய சிறப்புப் பெயர்களின் ஒன்று லலிதாங்குரன். சைவ சமயத்தைத் தழுவுவதற்கு முன் அவன் சம சமயத்தைப் பின்பற்றினான். சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசருக்குப் பல தொல்லைகள் கொடுத்தான். அதன் பின் அவருடைய முயற்சியால் சைவத்திற்கு மாறினாள். இப்படிப் பெரியபுராணம் கூறும் வரலாற்றுக்கான ஆதாரத்தைத் தானே இங்கே உள்ள கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறான் மகேந்திரன். கங்காதரர் சன்னதியில் உள்ள கவித்துவம் நிறைந்த இந்தக் கல்வெட்டின் தமிழ் வரிகள் பின்வருமாறு:
1. சிறந்த மலைகளின் உச்சியில் உள்ள அற்புதமான கற்கோயிலில் குணபர மன்னன் ஸ்தாணுவை (சிவனை) நிலைநிறுத்தி,
அவனுடன் சேர்ந்து உலகங்களில் நிலையானவன் (அதாவது அழியாதவன்) ஆனான் ”
2. கிரிசன் என்ற அவனது (சிவனுடைய) பெயருக்கு ஏற்ற வகையிலும்,மலைகளின் மன்னனுடைய மகளின் கணவன் என்பதை உண்மையாக்கும் வகையிலும் கீரிசனுடைய கோவிலை இந்த மலையில் சத்ருமல்லன் கட்டினான்”
3. ஹரனானவன் (சிவன்) அவனிடம் ‘பூமியில் (தரையில்) உள்ள ஒரு கோவிலில் நின்றுகொண்டு நான் எப்படிச் சோழர்களின் பெரும் ஆற்றலையும் காவிரி நதியையும் பார்க்க முடியும்? என்று கருணையுடன் கேட்க, மனுவை ஒத்த விதத்தில் ஆட்சி செய்யும் குணபரன் மேகங்களைத் தொடும் விதத்தில் இந்த மலைக்கோயிலை உருவாக்கினான்’
4. ‘இப்படியாக சிரா என்ற மலையின் உச்சியிலே இணையற்ற சிவனுடைய சிற்பத்தைப் பொறித்தபிறகு மகிழ்ச்சியுடன் சிவனைத் தன் மனதில் நிலைநிறுத்திய புருஷோத்தமன் உயர்ந்து விளங்கிய அந்த மலைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுத்தான்’
மறுபக்கம் :
1. நதிகளின் மேலே ஆசைகொண்ட இறைவனான சிவபெருமான், எங்கே கண்ணுக்கு இதமான நீரோட்டத்தைக் கொண்டவளும் பூக்கள் நிறைந்த தோட்டங்களால் சூழப்பட்டவளும் அழகிய குணங்களை உடையவளுமாகிய காவிரியிடம் காதல் வயப்படுவானோ என்ற அச்சத்தின் காரணமாக மலையரசனின் மகள் (பார்வதி) தனது தந்தையின் குடும்பத்தை விட்டு வெளியேறி இந்த மலையில் நிரந்தரமாக வசிக்கிறாள், இந்த நதியைப் பல்லவரின் (அரசனின்) அன்பான நதி என்று அழைக்கிறாள்’
2. எந்த அறிவைக்கொண்டு குணபரன் என்னும் அரசன் மாற்று வழிபாடுகளிலிருந்து திரும்பி லிங்கத்தை வழிபட்டானோ அந்த அறிவு உலகம் முழுவதும் இந்த லிங்கத்தால் நெடுங்காலம் பரவட்டும்’
3. இந்த மலை சோழ ராஜ்யத்தின் கிரீடத்தையும், ஹரனுடைய இந்தக் கோயில் அந்தக் கிரீடத்தின் உச்சியில் உள்ள மணியையும், அதன் மகிமை சிவனுடைய மகிமையையும் ஒத்திருக்கிறது’
காஞ்சிபுரம் :
காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவன் இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற பெயரைப் பூண்ட ராஜசிம்மவர்ம பல்லவன். கழற்சிங்கன் என்ற பெயரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவனாகவும் இவன் போற்றப்படுகிறான். நாயன்மார்களின் வரலாற்றை விவரிக்கும் பெரிய புராணத்தில் ஒரு சுவையானநிகழ்வு குறிப்பிடப்பட்டுள்ளது. சைத்தியது நாள் ணோவிலைக் கட்டடி நிகழ்த்த ராஜசிம்மன், கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தான். அத சமயம் திருநின்றவூரில் பூசலார் என்ற நாயன்மார் வாழ்ந்துவந்தார். அவருக்கும் சிவபெருமானுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதற்குத் தகுந்த பொருள் வசதி இல்லாததால், தன் மனத்திற்குள்ளேயே சிவனுக்குக் கோவில் கட்ட ஆரம்பத்தார். படிப்படியாக கருவறை, சுற்று மண்டபங்கள், விமானம் எல்லாவற்றையும் மனத்திலே எழுப்பி அதற்கான கும்பாபிஷேகத்திற்கும் நாள் குறித்தார். அந்த நாள் மன்னன் கைலாசநாதர் கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்யக் குறித்திருந்த அதே நாள் தான்.
தன்னுடைய பக்தரான பூசலார் கோவில் கும்பாபிஷேகத்திற்குக் குறிப்பிட்ட நாளில் தான் செல்லவேண்டியிருப்பதால், கும்பாபிஷேகத்திற்கு வேறு நாளைக் குறிக்கும்படி சிவபெருமான் மன்னன் ராஜசிம்மனிடம் அசரீரியாகச் சொன்னார். அதைக்கேட்டு ஆச்சரியமடைந்த மன்னனும் கும்பாபிஷேக நாளை மாற்றி அமைத்தது மட்டுமல்லாமல், பூசலாரை தேடிச்சென்று அவரையும் கௌரவித்தான் என்கிறது பெரிய புராணம். இது போன்ற புராண நிகழ்வுகளை அகச்சான்றாக அதாவது நேரடியாகக் கல்வெட்டுகளில் பொறித்து வைப்பது அபூர்வமான விஷயம். இங்கே ராஜசிம்ம பல்லவன் அதைச் செய்திருக்கிறான். பன்னிரண்டு ஸ்லோகங்களைக் கொண்ட இந்தக் கல்வெட்டில் உள்ள ஒரு ஸ்லோகம்.
‘துஷ்யந்தப்ரமுகை: ஸ்ரீருதாம்பரகதா வாணீ ஸ்ரீரம் வினா
க்ஷமானாதை: ஸுரத்ரும்வபிர்ய்யதி க்ருதே கண்வாதிபி: ஸ்வீக்ருதை:
தன்னாஸ்ரீசர்யமிதம் புன: கலியுகே தூரீபவத்ஸத்குணே ஸோம்ரௌஷீதிதி தாம் கிரம்மிதமஹோ விஸ்மாபனம் ஸ்ரீபர:
என்று சொல்கிறது. இதன் பொருள்.
‘கிருதயுகத்தில் கண்வர் முதலிய முனிவர்களால் ஆதரிக்கப்பட்ட, தேவர்களை நேரில் காணும் வாய்ப்புப் பெற்றவர்களான துஷ்யந்தன் போன்ற அரசர்கள் வானிலிருந்து அசரீரியைக் கேட்டதில் ஆச்சரியமில்லை. ஆனால் இந்த ஸ்ரீபரன் என்ற அரசன் நற்குணங்கள் குறைந்திருக்கும் இந்தக் கலியுகத்தில் அப்படிப்பட்ட அசரீரியைக் கேட்டான் என்பது அல்லவா பெரும் ஆச்சரியத்திற்கு உரியது’ அப்படிப்பட்ட பெருமை உடையவனாக ராஜசிம்மபல்லவன் இருந்திருக்கிறான்.
சேர சோழ பாண்டிய பல்லவர் காலக் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் – எஸ். கிருஷ்ணன்
விலை: 170/-
வெளியீடு:சுவாசம் பதிப்பகம்
Buy this book online: https://heritager.in/product/cherar-chola-paniyas-pallavas-kala-kalvettukalum-seppukalum/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers