சோழர் கால கல்வெட்டுகள்
சோழர் காலத்து மறவர் கல்வெட்டுகள்:
பல்லவர் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவன் ஆதித்த சோழன், அவன் அபராஜித பல்லவனையும், முத்தரையனையும் போரில் வென்று சோழநாட்டையும் பல்லவ நாட்டையும் கைப்பற்றினான்.
சங்க இலக்கியங்கள் தொடங்கி பிற்கால சோழர்கள் வரை மறவர்கள் பெரும்பான்மையாகச் சோழப் பேரரசில் பணியில் படைமறவர்களாகவும் தளபதிகளாகவும் பழுவேட்டரையர், இருக்குவேளிர், வாணர், வன்னாடு உடையார், மலையமான், தொண்டைமான், சேதிராயர், இன்னும் எத்தனையோ பலதரப்பட்ட பெருந்தரம் கொண்ட அரசர்களாகவும் சிறுதரத்து போர்வீரர்களாக வாழ்ந்தனர்.
சங்க இலக்கியங்களில் பெரும்பானவைகளில் சோழர்களை “மறவர் பெருமான்” என்றும் ஒட்டகூத்தர் மனுநீதி சோழனையே மறவன் என அழைப்பதாகக் கூறுகிறது.
சோழர் மறைவுக்குப் பின்பும் செம்பி நாடு என்ற ஒரு நாடே இராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தான் இருந்துள்ளது. தஞ்சை பகுதியிலோ வேறு வட தமிழகத்திலோ இல்லை
கீழ் செம்பிநாடு, வடதலை செம்பி நாடு என்ற பெயரில் இரு நாடுகள் இராமநாதபுரத்தில் மட்டுமே உண்டு.
பழையன், பண்ணன் முதலியோர் சோழன் மறவர்களாவர் எனச் சங்க இலக்கியம் கூறுகிறது.
பழுவேட்டரையர் சேரர் குல மறவர் கல்வெட்டுகள்:
இவனின் சோழர் நாட்டு மறவர் கல்வெட்டுகளிலே நாம் முதலில் பார்ப்பது பழுவேட்டரையர்கள். இவர்கள் அரியலூர், திருச்சி பகுதியில் உள்ள கீழபழுவூர் மேல பழுவூர் என்ற ஊரினை ஆண்ட அரையர்கள்.பழுவூர் அரையர்கள் பழுவேட்டரையர்கள் என மாறியது. இவர்கள் சேர மன்னன் வம்சத்தைச் சார்ந்தவர்கள் என்பது அன்பில் சுந்தர சோழன் செப்பேடுகள் கூறுகிறது. சேர மன்னன் பழுவேட்டரையன் ஸ்தானு ரவி மகளை முதலாம் பராந்தக சோழன் மணந்தான் என அன்பில் செப்பேடுகள் கூறுகிறது.
பழுவேட்டரையர் என்ற சேர மறவர் மரபு முதலாம் விசயாலயசோழர் காலத்தில் தொடங்கி முதலாம் இராஜேந்திர சோழர் காலத்தில் முடிந்து விட்ட ஒரு மறவர் அரசு.
ஆனால் இன்றைக்கு சிலர் தாங்கள் தான் பழுவேட்டரையர் என்ற கூறுவது நகைப்பிற்குரியது…பழுவூர் அரையர்கள் பழுவேட்டரையர் மன்னர்கள் பட்டியல்:
1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்
இதுதான் கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவைப் பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான்.
கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம்தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.
”முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவூரை ஆண்டுகொண்டிருந்த பழுவேட்டரையர் யாரென்பது உறுதியாகத் தெரியவில்லை. வேறு சான்றுகள் ஏதுமற்ற நிலையில் இவரைக் கண்டன் மறவனாகவே கொள்ளலாம். உத்தமச்சோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் மன்னராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று, முதலாம் இராஜராஜர் காலத்தில் மன்னுபெரும் பழுவூரில் திருத்தோற்றமுடையார் கோயிலைச் செங்கல் திருப்பணியாய் எடுப்பித்து, முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுடன் வரலாற்று நீரோட்டத்திலிருந்து மறையும் கண்டன் மறவனுடன் பழுவேட்டரையர் மரபும் ஒரு முடிவுக்கு வருகிறது. முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம்ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்.” என்று பழுவூர் – அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்.
மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி ‘பெரிய பழுவேட்டரையரையும்’, ‘சின்னப் பழுவேட்டரையரையும்’ எங்கிருந்து எடுத்தார் என்று?
(நூலிலிருந்து)
கல்வெட்டுகளில் மறவர் வரலாறு-நெ.துரை அரசன்
விலை: 550/-
வெளியீடு: காவ்யா பதிப்பகம்
Buy this book online: https://www.heritager.in/product/kalvettuklil-maravr-varalaru/
To order on WhatsApp: wa.me/919786068908
Call to Order: 097860 68908
Social Media Handles:
Website: Buy online: www.heritager.in
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
WhatsApp Group: https://chat.whatsapp.com/BtGFngVdk3WFo89Ok1aEN4
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு உள்ள தமிழ் நூல்கள்:
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/
#books #tamilbookstore #Heritager #tamilbook #tamilbooks #tamilbookstagram #tamil #tamilnovel #tamilbookstore #tamilreaders #tamilstory #bookstagram #tamilstorybooks #tamilpoet #indianreaders #tamilwriters #tamilkavithai #tamilquotes #books #tamilbooklovers