பாறை ஓவியங்களில் தாய்த்தெய்வம்
சங்க இலக்கியத்தில் அணங்கு என்ற சொல் பல பொருள்களில் வழங்கப்பெற்றுள்ளன. சங்ககாலம் முதல் இடைக் காலம் வரை திகண்டு ஒரே மாதிரியான பொருளிலேயே வழங்கப்பெற்றுள்ளது. அவையாவன வருத்தம், இறந்துவிடுதல், நோய் அச்சம், கொலை, தெய்வம்,மையல் நோய், தெய்வ மகள், வருத்திக் கொல்லும் தெய்வ மகள், தெய்வத்துக்கொப்பான மாதர், வெறியாட்டு, பேய், அழகு, வடிவு, குட்டி, சண்டாளன் ஆகியவை.
இவற்றில் பல பொருட்கள் குறிஞ்சி நிலத்தொடு தொடர்புடைய பழக்கவழக்கங்களை அடிப் படையாகக் கொண்டது அல்லது நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும் அணங்குடை பௌவம், அணங்குடை பகழி அணங்குடை பாம்பு என்று சங்க இலக்கியம் கூறும். இந்தக் குறிப்புகள் அணங்கு என்பது அச்சம் தருகின்ற அல்லது வருத்தம் தருகின்ற என்ற பொருளில் வழங்கப்பெறுகின்றன.
மேலே கூறப்பெற்ற பொருள்களில் இறப்பு, கொலை, வருத்திக் கொல்லும் தெய்வ மகள், பேய் ஆகிய பொருட்கள் குறிப்பிடத் தக்கவை. இந்தப் பொருட்கள் தாய்த்தெய்வத்தின் ஆற்றலையும், கடுகாட்டோடு தொடர்புடைய இறப்பையும் சுட்டி நிற்கின்றன. ஒரு வகையில் ஆவி வழிபாட்டுடன் தொடர்புடையவை. ஆவி வழிபாடு பற்றி ஸ்பென்ஸர், தர்க்கைம் போன்றோர் ஆய்வு செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பழங்குடியினர் இறந்துபட்டவனுடைய உயிர் மரப் பொந்துகளிலும், மலை உச்சிகளிலும் தங்கியிருக்கும் என்று நம்பி னார்கள். அந்த ஆவிகளுக்குப் பலியிட்டு வழிபட்டால் வாழ்வில் வளம் கிடைக்கும் என்று நம்பினர். அந்த ஆவிக்குரியோரை ஓவியமாக வரைந்து வழிபட்டனர். அந்த வழிபாடு சுடுகாட்டோடு தொடர்புடைய பெண்தெய்வ வழிபாடாகவும் மாறியது.
அணங்குடை மலைக்குகையும் சமணப் பள்ளியும் தமிழகத்தில் திருமலை (சிவகங்கை), கழுகு மலை, நெகனூர்பட்டி மலை, ஆழியாற்று ஆதாளி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் சுயணப் படுக்கை உள்ள குகைகளில் தொல்பழங்கால ஓவியங்கள்வரையப்பெற்றுள்ளன.
அண்மையில் திருவண்ணாமலைக்கருகில் உள்ள மலைக் குகையில் சமணப் படுக்கையுடன் தொல்பழங்கால ஓவியங்களும் வரையப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பெற்றுள்ளது. இதனைக் கண்டுபிடித்தவர் பேராசிரியர் சேகர் ஆவார் (தற்போது முதல்வர்).
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் சதீஸ் அவர்களால் பர்வத மலை அடிவாரத்தில் 300 அடி உயரத்தில் உள்ள குகையில் பெண்தெய்வ உருவம் ஒன்று கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. இதற்கு அவ்வூர் மக்கள் கன்னி ஆத்தா கோயில் என்று அழைக்கின்றனர். ஊர் மக்கள் அக்குகைக்குச் செல்வதற்கு அஞ்சுகின்றனர்.
அந்தக் குகையில் முதலாம் இராஜராஜனின் சமஸ் கிருத கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதனால், இராஜராஜன் காலம் வரை அக்குகை புண்ணியத் தலமாகக் கருதப்பெற்றுள்ளது என்று கருத முடியும். பாறை ஓவியங்கள் சிலவற்றில் பெண் உருவங்கள் வரையப்பெற்றுள்ளன. இது பெரும்பாலும் தொல்பழங்காலத் தாய்தெய்வ வழிபாட்டின் எச்சமாகக் கொள்ளலாம்.
பண்டையத் தமிழ்ச் சமூகம் – கோ.சசிகலா (ஆசிரியர்), ர.பூங்குன்றன் (ஆசிரியர்)
விலை: 200/-
Buy this book online: https://www.heritager.in/product/pandai-thamizh-samoogam/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in
Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/Jq4WbvrezuyCvlLgb8igza
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia
தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு
#books #tamilbookstore #Heritager wwww.heritager.in
Buy History and Heritage Related book online:
Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/