Description
இந்த நாட்டின் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படைகள் பற்றிய ஆழமான புரிதல், மாற்றுக் கருத்துகளை மதித்து, உரையாடல் எனும் பண்பட்ட ஜனநாயக விழுமியத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை, சக மனிதர்கள் மீதான உண்மையான கரிசனம் இவை அனைத்துமே அம்பேத்கர் என்னும் ஒப்பற்ற ஆளுமையின் தனித்துவமான அம்சங்களாகிவிட்டன. ஆம், அவரின் ஆளுமையே அவரது அரசியல்; அவரது ஆளுமையே அவரது தத்துவம்; அவரின் ஆளுமையே அவரது சமூகப் பார்வை. இந்த தேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவரது ஆளுமையால் இன்னும் எண்ணிலடங்கா மக்கள் அவரிடம் ஈர்க்கப்படுவதற்கான காரணமும் அதுவே .