ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம் – Adhidravidarai Ondrinaivom

60

Add to Wishlist
Add to Wishlist

Description

சாதிப் பெருமித உணர்வை ஊட்டி எஸ்சி பட்டியலில் இருக்கும் சில சாதிகளைத் தனது பிடிக்குள் சனாதனிகள் கொண்டுவந்துள்ளனர். இதர சாதிகளுக்கு எதிரான வெறுப்பை உமிழும்படி அவர்களை வற்புறுத்துகின்றனர். அதன்மூலம் எஸ்சி மக்களுக்கு இடையே மோதலைத் தூண்டுகின்றனர்.

இந்த சதியை முறியடிக்கும் நோக்கில்தான் தமிழ்நாட்டின் எஸ்சி பட்டியலில் ஏற்கனவே கூறுபடுத்தப்பட்ட 14 சாதிகள் போக மீதமுள்ள 60 சாதிகளை ஆதிதிராவிடர் என்ற சாதி கடந்த அடையாளத்தின்கீழ் ஒரே பெயரில் அழைக்க வேண்டுமெனக் கோருகிறோம். சனாதன சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல் தலித்துகளைக் காப்பாற்றுவதோடு அவர்களின் எண்ணிக்கைப் பலத்தைப் பாதுகாப்பதாகவும் ‘ஆதிதிராவிடராய் ஒன்றிணைவோம்’ என்ற முழக்கம் அமைந்துள்ளது.

ஆதிதிராவிடர் என்பது ஒரு சாதியின் பெயர் அல்ல, அது சாதி கடந்த அடையாளம் என்பதையும், அந்த அடையாளத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டியதன் தேவையையும் இந்த நூல் தெளிவுபடுத்துகிறது.

சாதியைக் கடப்போம்!
சனாதனத்தைத் தோற்கடிப்போம்!

Additional information

Weight0.250 kg