Description
தமிழ்ச் சமூக வரலாற்றில் காலத்துக்குக்காலம் இந்தியப் பண்பாட்டுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் வெவ்வேறு சமயங்களின் ஊடாட்டம் நிகழ்ந்து வந்துள்ளதைக் காணலாம். அவ் ஊடாட்டமும் பரவுகையும் தமிழ்ச் சமூக அசைவியக்கத்தில் பெருமாற்றங்களை ஏற்படுத்தி வந்துள்ளன. குறிப்பாக, தொடக்க காலத்தில் தமிழ்ச் சமய மரபுகளுடன் இந்தியப் பெரும் பண்பாட்டுக்குள்ளிருந்து வைதீக, அவைதீக மதங்களின் ஊடாட்டமும் இணைவும் ஏற்பட்டன. அதேபோல இந்தியப் பண்பாட்டுக்கு வெளியிலிருந்து வந்த, உலகின் இருபெரும் மதங்களாகிய இஸ்லாமும் கிறிஸ்தவமும் அடுத்தடுத்த கால கட்டங்களில் தமிழ்ச் சூழமைவில் மற்றுமொரு மடை மாற்றத்தைத் திறந்துவிட்டன. இவ்வாறு உள்நுழைந்த சமயங்கள் யாவும் தமது சமயச் சிந்தாந்தக் கொள்கைகளுக்கு இணங்க தமிழ்ச் சூழலில் நிலைபெற்றுள்ளதோடு ஒவ்வொரு சமயமும் பூர்வீக தமிழ்ப் பண் பாட்டிலிருந்தும் ஏனைய மதங்களின் பண்பாட்டுக் கூறுகளிலிருந்தும் தேவையானவற்றை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்தவகையில் கிறிஸ்தவம் தமிழ்ச் சூழலுடன் ஊடாடி உருவாக்கிய தமிழ்க் கிறிஸ்தவப் பண்பாட்டை ஈழத்தின் போர்த்துக்கேயர் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதாக இந்நூல் அமைந்துள்ளது