Description
இந்த ஆய்வு நூலை எழுதிய திரு.செ.மா.கணபதி அவர்களின் களஆய்வுக் கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தகுந்தது தந்தத்தாலான ஒரு பொருளாகும். நான் இதனை நேரில் பார்த்தேன். ஒரு மிகப்பெரிய பாரி நாயனத்தின் பெருவங்சியத்தின் ஊதுவாய் சீவாளி போன்று இருக்கிறது அது. புதைகுழிப் பொருட்களில் தந்தத்தாலான பொருள் கிடைப்பது தமிழ்நாட்டில் இதுவே முதன் முறை என நான் நம்புகிறேன். அது போலவே, அவர் , கண்டுபிடித்துள்ள நின்ற கோலத்தில் மூத்ததேவியின் (ஜேஷ்டா தேவியின்) சிற்பமும் தனித்த பாராட்டுக்குரியது. வெங்கலராசன் கதை என்ற நாட்டார்கதைப் பாடல் குறிப்பிடும் மன்னன் விட்டலராயனே என்று மிகச்சரியாகக் கணக்கிட்டு சொல்கிறார் இந்நூலாசிரியர்.