Description
உணர்வை உலுக்கும் உதாரணங்களை உணர்ச்சிவசப்படாமல், காலந்தோறும் பெண்ணுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கோபப்படாமல் ஒரு தேர்ந்த ஆய்வாளரின் நிதானத்துடன் மேற்கோள் காட்டி நிரூபிப்பது இந்தப் புத்தகத்தின் பலம். – வாஸந்தி, இந்தியா டுடே, ஏப்ரல் 1998 தமிழ்ப் பெண்ணைக் குழந்தை நிலை முதல் வரும் பல்வேறு சமூகநிலைகளில் வைத்துப் பார்த்து இறுதியில் துறவுடன் நிறைவு செய்யும் இந்த நூலின் மிகுந்த பலமாக அமைவது, வடமொழி வழி தெரியும் நடவடிக்கைகளையும் விவரித்தும் விவாதித்தும் செல்வதே. ஆசிரியருக்கு சமஸ்கிருத பாளி நூல்களில் உள்ள தாடனம் நன்கு புலனாகிறது. – கார்த்திகேசு சிவத்தம்பி, தாமரை, டிசம்பர் 97