தீர்ப்புகளின் காலம் – அபிமானி

150

Add to Wishlist
Add to Wishlist

Description

‘ரொம்ப நாள் மனசிலே வச்சிருந்த கருமிசம் சாமி. எம்மொவள இப்படித்தானய்யா கொன்னுருப்பானுவ? அன்னைக்கி நாங்க எப்படித் துடிச்சொம் தெரியுமாய்யா? எம்மொவா கலகண்டரமாப் பேசி சிரிச்சி வெளையாடிக்கிட்டிருந்தப் புள்ள. ராத்திரி அவளுக்குக் கண்ணாளம்…அதுக்கு மின்னாடியே அவள வல்லடியா தூக்கிட்டுப்போயிக் கதறக்கறக் கொதறி எடுத்துக் கொன்னுப்புட்டானுவ. அன்னைக்கி முடிவுப்பண்ணொம், அந்த மூணுபேரையும் எங்கக் கையாலக் கொல்லணுமின்னு. மத்தவிய எல்லாரையும் எம்மொவா பழி வாங்கிட்டதாவச் சொன்னாவா. பாக்கியிருந்த இவம்தாம் எங்கக் கைக்குக் கெடச்சான்.” ”செஞ்சாலும் செய்வப்பா. அப்புராணிகளத்தான் நம்பக்கூடாது. இருந்தாலும் எச்சரிக்கையா இருக்கணும் மாப்ள. அவனுவ பாம்பு மாரி…. வெசத்த வாய்க்குள்ள ஒதுக்கியே வச்சிருப்பானுங்க. சமயம் வரும்போ அவனுவ சண்டியத்தனத்தக் காட்டிப்புடுவானுங்க” ”நம்மத் தெய்வான அக்கா நமக்குப் பாதுகாப்பு தந்துகிட்டிருப்பா மச்சான்.” “பெரிய வீரன் சூரன்னுகிடுவானுங்க.” “ஒரு மயிரும் கெடையாது. சும்மா பாவ்லா”

Additional information

Weight0.25 kg