Description
“எனக்கும் கீழக்காடுவெட்டிதான்.எங்கத்தோட்டங்களுக்கு அழகுமுத்துக் குடும்பம் வேலைக்கு வரும். அழகுமுத்து மருமகனா? தெரியாமப் போச்சிதே… ச்சே… தெரிஞ்சிருந்தா சோறுவாங்கித் தின்னிருக்கமாட்டனே” “ஏந்தம்பி?சோறு நல்லாத்தானே இருந்துச்சி” “நா சோறு வாங்கித் தின்னத ஊர்ல யாருக்கிட்டயும் சொல்லிரக்கூடாது.என்னையக் காறித் துப்புவானுங்க… பரிகாசம் பண்ணுவானுங்க.” அங்கிருந்து திருநெல்வேலி ரயில் நிலையம்வரைக்கும் உத்தமனோடு பேசிக்கொள்ளவில்லை அவன். ரயிலை விட்டுக் கீழே இறங்கியதும் தன்னிடம் ஒருவார்த்தைகூட சொல்லிக்கொள்ளாமல் அவன் வேகமாக நடைபோட்டதன் காரணமும் இப்போதுதான் புரிந்தது உத்தமனுக்கு. – ‘தெரிந்தவன்’ சிறுகதையிலிருந்து.