தொல்காப்பிய ஆய்வு / Tolkāppiya āyvu

300

தமிழிலக்கணம் பலரால் எழுதப்பட்டிருப்பினும் அவற்றுள் தொல்காப்பியமே சிறந்த இலக்கண நூலாகும் என்பது வெள்ளிடைமலை. இலக்கண விளக்க நூலார், “இலக்கணமாவது தொல்காப்பியம் ஒன்றுமே; செய்யுளாவது திருவள்ளுவர் எழுதிய திருவள்ளுவம் ஒன்றுமே” என்று உணர்த்தியிருப்பதைக் கருதினால் தொல்காப்பியம் ஒப்பு உயர்வற்ற இலக்கண நூலென்பது நன்கு விளங்கும்.

தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் தமிழகத்தின் பலபொருட் கருவூலமாக விளங்குகின்றது. தொல்காப்பியத்திலிருந்து தமிழகத்திற்கேயன்றி எல்லா உலகத்திற்கும் வேண்டிய பல நல்ல பொருள்களை அறிஞர் ஆராய்ந்து உணர்ந்துகொள்ள முடியும்.

பல்வேறு சிறப்புகள் கொண்ட தொல்காப்பியத்தில் விளக்கம்பெற வேண்டிய பகுதிகள் பல உள்ளன. அப்பகுதிகளைத் தேர்ந்தெடுத்து விளக்கம்பெற வைப்பதாகத் ‘தொல்காப்பிய ஆய்வு’ என்னும் இந்த நூல் அமைந்துள்ளது.

Out of stock

Add to Wishlist
Add to Wishlist

Additional information

Weight0.4 kg