Description
சமயத்தின் முந்தைய வடிவங்களில் ஒன்று மந்திரம். வேட்டைச் சமூகத்தில் தொடங்கி வேளாண் சமூகம் வரை மந்திரச் சடங்குகள் உருப்பெற்று வளர்ந்தன. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த சமூகங்களிலும் இவை முற்றிலும் மறைந்துவிடவில்லை. மனித சமூக வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ள மந்திரமும் மந்திரச் சடங்குகளும் குறித்து மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல் என்ற இரு அறிவுத் துறைகளின் துணையுடனும் ஆழமான கள ஆய்வின் அடிப்படையிலும் இந்நூல் ஆராய்கிறது.