Description
ஐம்பது¸ அறுபது¸ எழுபதுகளில் இஸ்லாமியத் தமிழ் இதழ்களில் கதை¸ கட்டுரை¸ புதினம் என எழுதிக் குவித்த மஹதி (இயற்பெயர் சையத் அஹமத்) “முதுபெரும் எழுத்தாளர்” என்று பாராட்டப்பட்டவர்.
இஸ்லாமியரின் நாகரிகம்¸ பண்பாடு ஆகியவற்றின் பெருமையை எடுத்துரைப்பதும் முஸ்லிம்களிடையே வந்து புகுந்த அனாச்சாரங்கள்¸ மூடநம்பிக்கைகளைக் களைவதும் அவரது எழுத்தின் நோக்கமாக இருந்தது.
மஹதியின் அன்னையார் அஸீஸா பேகம் ஆற்காட்டு நவாப் முகமதலியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். கவிக்கோ அப்துல் ரகுமான் இவருடைய புதல்வராவார்.
அறிஞர் மஹதியின் “முஸ்லிம்கள் ஆண்ட இந்தியா” என்னும் இந்நூல் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் சிலருடைய பெருமைகளை எடுத்துரைக்கிறது. திப்பு சுல்தான்¸ ஒளரங்கஸேப் பற்றி வரலாற்று நூல்களில் காணப்படும் பொய் புரட்டுகளை அம்பலப்படுத்துகிறது