வெற்றிக் கதவின் திறவுகோல் – மு. மகேந்திர பாபு

140

Add to Wishlist
Add to Wishlist

Description

தம்பி மு.மகேந்திர பாபுவைப் பெரும்பாலும் அவரின் செயல்வழி அறிந்தவையே அதிகம். ஓர் ஆசிரியராக இருந்து அவர் பள்ளிப் பிள்ளைகளிடம் காட்டிய அன்பும் அவர்களின் வளர்ச்சியில் காட்டிய அக்கறையும் தொடக்கத்தில் நான் அறிந்தவை. அதன் தொடர்ச்சியில்தான் ஒரு நல்லாசிரியருக்கான தகுதிப்பாட்டோடு அவரது எழுத்துலகத்தையும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

முனைவர் இ.பேச்சிமுத்து

ஆளுமை மேம்பாடு. தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுதல். உயர் விழுமியங்கள், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு போன்ற பல பொருண்மைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பாக ‘வெற்றிக் கதவின் திறவுகோல்’ என்ற இந்நூலினை எழுதியுள்ளார் திரு.மகேந்திர பாபு.

முனைவர் ம.திருமலை

தன்னம்பிக்கை தொடர்பாக நிறைய நூல்கள் நாள்தோறும் வெளியாகின்றன. சுற்றுச்சூழலைக் காப்பதன் அவசியம் தொடர்பாகவும் கட்டுரை, ஆய்வு நூல்கள் வெளியாகின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு, இந்த நூலில் தன்னம்பிக்கைக் கட்டுரைகளும் உண்டு. சூழலியல் கட்டுரைகளும் உண்டு என்பது தனிச்சிறப்பு.

Additional information

Weight0.25 kg