Description
புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட கோட்பாட்டு விளக்கத்தின் மீது ஏராளமான மக்கள் ஆர்வம் கொண்டனர். அன்றைய தினத்திலிருந்தே பௌத்த சமயம் என்றால் என்ன, அதைப்பற்றிய இலக்கியங்கள் எவை? அவை எங்கே கிடைக்கும்? என்று அவர்கள் பௌத்த மதம் குறித்த அனைத்தையும் அறிந்துகொள்ள ஆசை கொண்டனர். பெரும் ஆர்வம் இந்திய மக்களிடையே உண்டானது. பௌத்த சமயத்தினர் எப்படி வழிபட்டனர் என்று விளக்குகிற புத்தகங்கள் இருக்கின்றனவா எனச் சிலர் பேரார்வத்தோடு கேட்டனர்.
‘தயவுசெய்து பௌத்த சமயத்தின் வழிபாட்டு முறையைப் பற்றி எங்களுக்கு ஏதாவது சொல்லிக்கொடுங்கள்’ எனத் தொடர்ந்து என்னிடம் வலியுறுத்தி வந்தனர்.
1950 ஆம் ஆண்டு நான் இலங்கைக்குச் சென்றபோது இதற்கு முன்னுரிமை கொடுத்து பௌத்த சமய வழிபாட்டுப் பாடல்களை சேகரித்தேன். என்னுடைய நண்பரான குணதிலகேவிடம் இந்தப் பாடல்களை இசைவடிவத்தில் ஒலிக்கச் செய்து பதிவு செய்தேன். இந்தியாவுக்குத் திரும்பி வந்த பிறகு இங்கிருக்கும் பௌத்த பிக்குகளின் துணையுடன் நான் அதை மேலும் மேம்படுத்தினேன்.
இந்தப் புத்தகத்தில் ஏறக்குறைய எல்லாப் பாடல்களையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.
– டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர்