Description
இந்துமதம் நிறுவனமயமாக்கப்பட்ட மற்ற மதம் போன்று செயல்பட்டதில்லை. அதனால் தான் இது மதமல்ல, வாழ்க்கை முறை என்றார்கள்.
வைதிக சனாதன நூல்கள் வாயிலாக உள்ள கருத்துகளுக்கும், தங்களை இந்துக்கள் என நம்பிக்கொண்டிருக்கும் பெருவாரியான மக்களின் நம்பிக்கைகளுக்கும் உள்ள விசயங்கள், மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசங்களாக உள்ளன. காரணம் வைதிக சனாதன நூல்களை ஆழ்ந்து ஊன்றிப் படிக்கிறவர்கள் இல்லை. நூல்களின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் இருப்பது ஒரு காரணமாய் இருக்கலாம்.
எந்த ஒரு முன் முடிவும் இல்லாமல் வைதிக சனாதன நூல்களை வாசிக்கிறவர்களுக்கு, இந்த நூல் மூலம் பல விடயங்கள் எளிதில் விளங்கும்.