தலித்துகளும் நிலமும் – Dalitukalum Nilamum

110

Add to Wishlist
Add to Wishlist

Description

இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்த சாதிப் பிரிவினைகளுக்கு மாறாக வலங்கை-இடங்கை என்ற வேறுபட்ட சமூக அமைப்பைப் பின்பற்றி வந்த தமிழ்நாட்டிலும் வடஇந்திய நடைமுறை திணிக்கப்பட்டது. அதனால் வடமாநிலங்களில் இருந்த மோசமான நிலையைப் போலவே தமிழ்நாட்டிலும் புறநிலைச் சாதியினர் வைக்கப்பட்டிருந்தனர் என்பதுபோன்ற நம்பிக்கை சமூகத்தில் பரப்பப்பட்டது.

இங்கே நிர்வாகம் செய்யவந்த பிரிட்டிஷ் அதிகாரிகளும் அதையே நம்பித் தமது கொள்கைகளை வகுத்தனர். அதன்காரணமாக அதுவரையில் தமிழ்நாட்டில் நடைமுறையிலிருந்த வலங்கை – இடங்கை என்ற கிடைமட்டமான (horizontal) சாதியமைப்புமுறை கைவிடப்பட்டு ஆதிதிராவிட மக்களை சமூக அடுக்கில் கீழே வைத்துப் பார்க்கும் குத்து நிலையிலான (vertical) சாதி அமைப்பு முறை முழுமையாகத் திணிக்கப்பட்டது.

அதனால் வலங்கை சாதியினர் பட்டியலில் இடம் பெற்று பல சிறப்புத் தகுதிகளைப் பெற்றிருந்த பறையர் சமூகத்தினர்மீது அவர்களுக்கு இல்லாத சமூக இழிவுகள் சுமத்தப்பட்டு அவர்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். இந்தப் பின்புலத்திலேயே பறையர்கள் நிலமற்றவர்கள் ஆக்கப்பட்ட வரலாற்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

Additional information

Weight0.250 kg