இந்து – சைவம் – வைணவம் – ஓர் அறிமுகம் – ப. அருணாசலம்

300

Add to Wishlist
Add to Wishlist

Description

மனிதன் நல்வழிப்படும் மார்க்க நெறியே சமய நெறியாகும். பிற சமயங்கள் ஒரே தலைவரை தங்களின் சமய முதல்வராக ஏற்றுக்கொள்ள, இந்து சமயமோ ஒரே நெறியை வலியுறுத்துகிறது. அந்த நெறி பரந்தது. அந்த நெறியில் சென்று வெற்றியடைந்த அனைவரையும் இந்து சமயம் தலைவராக ஏற்றுக் கொள்கிறது, வணங்குகிறது.

இந்தியப் பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்து இந்திய மக்களிடையே தோன்றிய ஞானியர்களால் வளர்க்கப்பட்டு வந்ததே இந்து சமயம். பல வேற்றுமைகளிடையே தெளிந்த ஒற்றுமையை வலியுறுத்தும் அதேநேரம், வேறுபாடுகளையும் அது ஏற்றுக் கொள்கிறது.

இந்த நூல் இந்து சமய ஞானியர்கள், அவதாரபுருஷர்கள், அவர்களின் கருத்துகளில் இழையோடும் தத்துவ விசாரணைகள், வாழ்நெறிகள், தரும சாத்திரங்கள், இதிகாசங்களான இராமாயணம், பாரதம், புராணங்கள், பகவத் கீதை உள்ளிட்ட இந்திய பண்பாட்டின் அடித்தளத்தில் இருந்து இந்து சமயத்தின் நீதிநெறி, பக்தி மார்க்கத்தை நீர்வழிப்படுஊம் தன்மைபோல் ஆற்றுப்படுத்துவதைக் காண்கிறோம்.

இந்து சமயத்தின் அடிப்படையான நூல்கள் பல வடமொழியிலிருந்தாலும், பல்வேறு மொழி இனத்தவரின் பணிகளாலேயே இந்து சமயம் மக்களிடம் வேரூன்றி மக்கள் சமயமாக வளர்ந்துள்ளது என்கிறார் நூலாசிரியர். தமிழ் மரபையும் விவரித்துள்ளார்.

இந்து சமயக் கருத்துகளின் மூல நூல்கள், பொதுப் பண்புகள், நெறிகள், சமய அமைப்புகள், விழாக்கள், சடங்குகள், தத்துவக் கோட்பாடுகள் என விசாலப் பார்வையுடன் விளங்கும் இந்நூல், சைவ சமயத்தின் அடிப்படை நூல்கள், சிவ வழிபாடு, அடியார் வழிபாடு, சைவ சமயக் குரவர்கள், அவர்களின் சித்தாந்தக் கோட்பாடு, அதேபோல் வைணவ சமய அடிப்படை நூல்கள், பாகவத தருமம், திருவாராதனம், வைணவக் குரவர்கள், அவர்களின் சித்தாந்தக் கோட்பாடுகள் என விரிவான பார்வையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

Additional information

Weight0.25 kg