Description
அறிவுத் திறமும் செயல் திறமும் அவரது ஆளுமைக்கான அடையாளங்கள். கொள்கை வலிவும் கோட்பாட்டுத் தெளிவும் அவரது அரசியல் வெற்றிக்கான அடித்தளங்கள். உரிமைக் களமும் போர்க்குணமும் அவரது பாதுகாப்புக்கான கேடயங்கள். மொழி நுட்பமும் வினைத் திட்பமும் அவரது பகையை வெல்லும் ஆயுதங்கள். அவர்தான் அய்யன் திருவள்ளுவனின் ‘அறவாழி அந்தணர்’ கலைஞர். தோழர் ரவிக்குமார் பார்வையில் அதனை உறுதிப்படுத்தும் படைப்பே ‘கலைஞர் காலம்’ எனும் இத்தொகுப்பு.
தொல்.திருமாவளவன்
நிறுவனர்- தலைவர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
காலத்தைத் தோற்கடித்த கலைஞர் என்ற தலைப்பில் அவர் உயிரோடு இருந்தபோது எனது நூலொன்றை வெளியிட்டேன். கழுத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக அவர் பேச முடியாத நிலை ஏற்பட்ட பிறகும் அவர் மறைவெய்திய நாளிலும் அதன் பின்னரும் நான் எழுதிய ஐந்து கட்டுரைகளை இங்கே தொகுத்துத் தந்திருக்கிறேன்.டெக்கான் க்ரானிக்கிள் ஆங்கில நாளேட்டில் வெளியான கட்டுரை ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளது.
கலைஞர் அவர்கள் ஏற்படுத்திச் சென்ற வெற்றிடம் வெறும் அரசியல் சார்ந்ததல்ல, இலக்கியம், பண்பாடு என அது மிகவும் பெரியது. ஒருவர் மட்டுமே நிரப்பக்கூடியதல்ல அது. திமுக என்ற அரசியல் இயக்கமும், சமத்துவத்தின் மீது நம்பிக்கைகொண்ட ஜனநாயக சக்திகளும் இணைந்து அதைச் செய்யவேண்டும்.
-ரவிக்குமார்