Description
கள்ளர், மறவர், அகமுடையர் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ள தென்னிந்திய கல்வெட்டுகள் பற்றிய விவரங்களை விரிவாகத் தொகுத்துத் தந்திருக்கிறார் நூலாசிரியர். பல்லவர் காலக் கல்வெட்டுகளில் தேனி மாவட்டம் புலிமான் கோம்பைக் கல்வெட்டைக் கொண்டு, வைகை அணையையொட்டி கூடலூர் பகுதியில் ஆநிரை கவரும் கள்வர், மறவர் குலத்தோர் நெடுங்காலம் வாழ்ந்ததைச் சுட்டுகிறார். திருவெள்ளறைக் கல்வெட்டிலுள்ள சாத்தன் மறவனையும் குறிப்பிடுகிறார். சோழர் காலக் கல்வெட்டுகளில் 10- ஆம் நூற்றாண்டுப் பழுவேட்டரையர் கல்வெட்டு ஒன்றில் ‘வெள்ளாளர், கைக்கோளருடன் மறவர்’ என்பதும் சாதியாகவே குறிக்கப்படுகிறது. மகாபலியைச் சேர அரசர் , அவரை அசுரனாகச் சித்திரித்தல் கட்டுக்கதை எனக் குறிப்பிட்டு, சான்றாக ஜம்பை சிவன் கோயில் கல்வெட்டை எடுத்துக் காட்டுகிறார்.