Description
இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் ‘கோட்டாறு’ என்ற சிறிய பகுதியைப் பற்றி வரலாற்று, சமூகவியல், பொருளாதாரப் பார்வையில் எழுதப்பட்டது இந்த நூல். கோட்டாறு 2000 ஆண்டுகள் பழமையானது. இதன் வரலாறு 1818 வரை தொடர்ச்சியாகக் கிடைக்கிறது; பண்டைய வர்த்தகத் தளங்களில் இதுவும் ஒன்று. இன்றும் (2018) இதன் நீட்சி தொடருகிறது. இந்தக் காலகட்டங்களில் ஆரம்பகாலப் பாண்டியர், சோழர், நாயக்கர் எனப் பலரின் படையெடுப்பால் இப்பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறது. சாதி, மதரீதியான மாற்றங்களும் இந்நகரைப் பாதித்துள்ளன. இவற்றை விரிவாக முதல்முறையாக அபூர்வமான சான்றுகளுடன் விளக்குகிறது இந்நூல்.