பாண்டிய நாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல் கி.பி. 600 – கி.பி. 1400 – முனைவர் வெ.வேதாசலம்

1,000

Add to Wishlist
Add to Wishlist

Description

தொல்லியல், கலை, வரலாறு, கல்வெட்டு ஆய்வாளரும், தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் நீண்ட காலம் பணிபுரிந்தவருமான வெ.வேதாசலம் எழுதிய நூல். பாண்டிய நாடு, சோழ நாடு, நடுவில் நாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு போன்ற பெரு நாடுகளின் உள்ளகத்தே எவ்வாறு பல சிறு நாடுகள் தோன்றின, பல ஊர்கள் சேர்ந்து எப்படிச் சிறு நாடுகளாக உருவெடுத்தன, அந்த ஊர்களை எப்படி வேளாண்குடிகள் தோற்றுவித்தன, அந்த ஊர்களை யார் நிர்வகித்துவந்தனா், நாட்டார், நாடாள்வார், கிழவன், கிழவோன், கிழான், கிழார் போன்றவர்கள் யார், ஊர்களில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் எவை போன்ற பல கேள்விகளுக்கான பதிலை இந்நூல் மிக விரிவாகவும் சுவைபடவும் எடுத்துரைக்கிறது. பல நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் பொதிந்துள்ள வரலாற்றை ஆராய்ந்து, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாண்டிய நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து களப்பணி செய்ததன் விளைவாக இந்நூல் உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் சமூக வரலாற்றை அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு வைரச் சுரங்கம்!

Additional information

Weight0.25 kg